இளையராஜா மாபெரும் இசைக் கொண்டாட்டம்

5
Ilayaraja Maaperum Isai Kondattam Singapore இளையராஜா மாபெரும் இசைக் கொண்டாட்டம்

ளையராஜா அவர்களின் இசை நிகழ்ச்சி இளையராஜா மாபெரும் இசைக் கொண்டாட்டம் சிங்கப்பூரில் நடைபெற்றது. Image Credit

இளையராஜா மாபெரும் இசைக் கொண்டாட்டம்

இந்நிகழ்ச்சியில் மனோ சித்ரா மட்டுமே மூத்த கலைஞர்கள் மற்ற எவரும் இதில் பங்குபெறவில்லை. இசைக்கலைஞர்களும் “என்றென்றும் ராஜா” நிகழ்ச்சியின் அளவுக்கு எண்ணிக்கையில் இல்லை.

வயலின் முழுக்க ஹங்கேரி இசைக்கலைஞர்கள் மட்டுமே! இவர்கள் இசைக்குறிப்புகளைப் படித்து வாசித்தார்கள்.

எப்படி நம்ம இசை இவர்களுக்குத் தெரிகிறது? அனைத்துப் பாடல்களையும் கேட்டுப் பயிற்சியில் இருப்பார்களா?

நான் நண்பரிடம் கேட்ட போது இசைக்குறிப்புகள் இருந்தாலே வாசித்து விடுவார்கள் என்றார், இருப்பினும் எனக்குச் சமாதானமான பதிலாக இல்லை.

யாராவது இவர்கள் எப்படி வாசிக்கிறார்கள் என்று கூறுங்க.. ஒரே மண்டை குடைச்சலாக இருக்கிறது. இதே சந்தேகத்தை என்றென்றும் ராஜா பற்றி எழுதி இருந்ததிலும் கேட்டு இருந்தேன்.

இளையராஜா

இளையராஜா பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் இவர் சாதாரண நபர் அல்ல, கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர் என்ற எண்ணம் தோன்றிக்கொண்டே இருக்கும்.

ஏனென்றால், சாதாரண மனிதரால் இது போல இசையமைக்கச் சாத்தியமே இல்லை.

இவரை மிகைப்படுத்திப் புகழ்வதாக நினைக்க வேண்டாம், உண்மையாகவே என்னால் இப்படித் தான் எண்ண முடிகிறது.

எத்தனை எத்தனை பாடல்கள், இசையமைப்பு.. அடேங்கப்பா! ஒரு இசை போல இன்னொரு இசை இருக்காது.

இதெல்லாம் சாதாரணமான விஷயம் என்று நினைக்கிறீர்களா?

மூன்று நாட்களில் மூன்று படங்களுக்குப் பின்னணி இசையமைப்பது என்பது சாத்தியமே இல்லை. இது போலக் கூற எண்ணற்ற செய்திகள் உள்ளன.

காதலின் தீபம் ஒன்று” பாடலை மருத்துவமனையில் (பேச முடியாததால்) விசிலடித்து பாடலை Compose செய்ததாகக் கூறி வியப்படைய வைத்தார்.

குரலிலும் அவரது நடவடிக்கைகளிலும் அவரது வயது நன்கு தெரிகிறது. சிறு தவறு நடந்தாலும் சுட்டிக்காட்டும் இளையராஜாவே தவறாகப் பாடினார்.

தென் பாண்டி சீமையிலே” பாடல் பாடும் போது பார்வையாளராக இருந்த பெண் அழுதார், இவை இவரது நிகழ்ச்சிகளில் வழக்கமானது, உணர்வுப்பூர்வமானது கூட.

நானும் சில இடங்களில் இசையைக் கேட்கும் போது கண் கலங்கினேன்.

புல்லாங்குழல்

புல்லாங்குழல் வாசித்தவர் வித விதமான இசைக்கருவிகளில் வாசித்து அசத்தினார். இவர் ஒருவர் இல்லையென்றால், நிகழ்ச்சியே இல்லையெனும் அளவுக்கு இவரின் பங்கு இருந்தது. அடேங்கப்பா! கலக்கிட்டாரு.

பல இசைக்கருவிகள்

இன்னொருவர், வயதானவராக இருந்தார். அவரும் சிரித்த முகத்துடன் பல்வேறு இசைக்கருவிகளை வாசித்து அசத்தினார்.

என்னென்னமோ இசைக்கருவிகளை வைத்துப் பல்வேறு இசைகளைக் கொண்டு வந்தார்.

இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

பாடியவர்கள்

பாடியவர்களில் எனக்கு மிகப் பிடித்தது மது பாலகிருஷ்ணன், சித்ரா & மனோ.

மதுபாலகிருஷ்ணன் அட்டகாசமாகப் பாடினார். மனோ “ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி” பாடலில் பட்டையைக்கிளப்பி விட்டார்.

அனைவரும் ஒன்ஸ்மோர் கேட்டதால், திரும்பப் பாடி அசத்தினார்கள். நான் ரொம்ப ரொம்ப ரசித்த பாடல்.

நிகழ்ச்சிப் பாடலை ஐந்து முறையும், விக்ரம் திரைப் படப் பாடலை நான்கு முறையும் கேட்டேன் 🙂 🙂 . படத்திலும் இப்பாட்டு எடுக்கப்பட்ட முறை அட்டகாசமாக இருக்கும்.

கமல், டிம்பிள் இருவரும் கலக்கி இருப்பார்கள், இப்போதுள்ள மேம்படுத்தப்பட்ட ஒலியமைப்பில் உள்ள திரையரங்கில் பார்த்தால், தாறுமாறாக இருக்கும்.

சரி விடுங்க.. விக்ரம் பற்றிப் பேசினால்.. பேசிட்டே இருப்பேன் 🙂 .

Readவிக்ரம்

ஒட்டுமொத்தமாக “என்றென்றும் ராஜா” அளவுக்கு நிகழ்ச்சியில்லை. ஒப்பீட்டளவில் தானே தவிர, இந்நிகழ்ச்சியும் சிறப்பாக இருந்தது.

YouTube ல் ஒரே காணொளியாக இல்லாமல், தனித்தனி பாடலாக உள்ளது. இதனால் தொடர்ச்சியாக இல்லாமல், மாறி மாறிப் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

அதோடு இளையராஜா பேசியதும் சில காட்சிகள் துண்டிக்கப்பட்டு விட்டன.

தொடர்புடைய கட்டுரைகள்

இளையராஜா விழா சர்ச்சைகள்

இளையராஜாவும் ராயல்ட்டியும்

“என்றென்றும் ராஜா”

கொசுறு 1

சிங்கப்பூரில் எட்டு வருடங்கள் இருந்தேன் ஆனால், நான் இருந்த போது இது போல ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையென்பது எனக்கு ஏமாற்றம்.

நண்பர்கள் சூர்யா, சரவணன் ஆகியோர் சென்றனர். சூர்யா அதிதீவிர இளையராஜா ரசிகர் 🙂 .

கொசுறு 2

அரங்க அமைப்பு அசத்தலாக இருந்தது, அதோடு பின்னணியில் வந்த வண்ணமயமான காணொளிகள் பாடலின் இசைக்கேற்ப அழகாக இருந்தது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. இளையராஜா ரகுமான் தங்கள் துறையில் செய்த சாதனைகள் என்ன?

    இளையராஜா பாடகர்கள் என்பவர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பி குறிப்பிட்ட நபர்களையே திரும்பத்திரும்ப பயன்படுத்திக் கொண்டிருந்தார். இளையராஜாவுடன் மனவேறுபாடு உருவாகும்பட்சத்தில் (எஸ்பி பாலசுப்ரமணியத்தை ஒதுக்கியது முதல் பல உதாரணங்கள் உண்டு) அந்த நபர்களை பயன்படுத்த மாட்டார். வாத்திய கலைஞர், அதிலும் சிறப்பு இசைக்கு வேண்டுமென்றால் வெளிநாடு வெளிமாநிலங்களில் இருந்து (மிகுந்த பொருட்செலவு தயாரிப்பாளருக்கு) அழைத்து வரப்பட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் ரகுமான் இசைக்கல்லூரி தொடங்கியதுடன், ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களை ஆர்வத்தின் அடிப்படையில் (ரகுமானின்
    அறக்கட்டளை அவர்களின் கட்டணத் தொகையை செலுத்திவிடும்) பயிற்சி கொடுத்து இன்று முன்ணனி இசைக் கலைஞர்களாக மாறிய பலரும் கோலோச்சுக்கொண்டு இருக்கின்றார்கள். இது தவிர தினந்தோறும் புதுப்புது பாடகர்கள் என்று தொடங்கி இந்த துறையில் திறமை இருப்பவர்கள் அனைவருக்கும் வாசலை திறந்து வைத்து விட்டார். அதாவது மோனோபோலி என்ற தன்மையை மாற்றியவர் ரகுமான். திறமை இருந்தால் மேலே வா? என்ற நோக்கத்தில். ஆனால் இளையராஜா தன் வாழ்நாளில் தன் துறைக்கு, தன் ஊருக்கு, உறவினர்களுக்கு தன்னைச் சார்ந்து வாழ்நாள் முழுக்க தன்னுடன் இருந்தவர்களுக்கு என்ன செய்தார் என்பது அவருக்கு மட்டும் (?) தான் தெரியும். வாழ்வின் பிற்பகுதியில் நாம் சமூகத்தில் என்ன எடுத்தோமோ? அதனை சமூகத்திற்கு திரும்பக் கொடுப்பது தான் வாழ்வு முற்றுப் பெறும் என்று அர்த்தம்.

  2. கிரி, இளையராஜா என்ற பெயரை உச்சரிக்கும் போது அது என்னை வேறுஉலகிற்கு கொண்டு செல்லும்.. இந்த வரிகளை தட்டச்சு செய்யும் போது (“காதல் கவிதைகள் படிக்கும் நேரம்”) பாடலை கேட்டு கொண்டு இருக்கிறேன்.. என்றும் நான் சொல்வது போல் ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் ராஜா, ராஜா தான்!!!

    பல லட்சங்கள் செலவு செய்து உலகின் மிக பெரிய உணவகத்தில் சாப்பிட்டாலும், வீட்டில் பாட்டி/ அம்மா / மனைவி யின் கைப்பக்குவம் எங்கும் வராது.. ராஜாவின் இசையும் என்னை பொறுத்தவரை அப்படிதான்!!! இருபது ஆண்டுகளாக கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.. என் மரணம் வரை இந்த பந்தம் தொடரும்..

    இளையராஜவின் இசை நிகழ்ச்சி இதுவரை நான் நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டதில்லை.. (எனக்கு இதுபிடிக்காது).. ஒரே ஒருமுறை மட்டும் நண்பனின் வற்புறுத்தலால் AR ரகுமான் இசை நிகழ்ச்சியை நேரில் காண சென்றேன்..(அதுவே முதலும் கடைசியும்).. ராஜா சாரை பற்றி பேசி கொண்டே செல்லலாம்.. நானெல்லாம் கத்துக்குட்டி அவரை பற்றி பேச..

    தற்போது இணையத்தில் நான் அதிகம் நேரம் செலவிடுவதே, சினிமாவை குறித்து கடந்த 50 ஆண்டுகால நிகழ்வுகளை குறித்து தான்.. கவிஞர் வாலி, சித்ரா லக்ஷ்மணன், வைரமுத்து, பாரதிராஜா, பாக்யராஜ், பிறைசூடன் etc என இன்னும் பலர் மூலம் பல அறிய தகவல்களை கேட்டு வருகிறேன்.. இதில் பாக்யராஜின் மூலம் அறியப்படும் தகவல் மிகவும் நகைச்சுவையாக இருக்கும்..
    பின் வரும் காணொளியை பார்க்கவும்..
    https://www.youtube.com/watch?v=0kx8WlIpxxw

    நான் அடிக்கடி விரும்பி கேட்கும் காணொளி ராஜா சாரை பற்றி தோனி ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் நாசர் பேசியது.. இளையராஜா சாரின் ஒட்டுமொத்த திறமையை சொல்லும் காணொளி..
    https://www.youtube.com/watch?v=563qJOreBqI

  3. @ஜோதிஜி நீங்க கூறிய புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தவில்லை என்பது என்னுடைய கருத்தும் ஆகும். இது குறித்து பின்னர் ஒரு நாள் எழுதுகிறேன்.

    @யாசின் நீங்க கொடுத்த காணொளிகள்.. செமையா இருந்தது. இது குறித்து தனியாகவே பதிவு எழுதுகிறேன். நாசர் விவரித்தது அட்டகாசம் 🙂 .

  4. நீங்க ஒரு பதிவில கேட்டு இருந்தீங்க…பாடலின் நடுவே வரும்(பெரும்பாலும் ஜானகி அம்மாவின் குரலில் வரும்) சிணுங்கல், மற்றும் சில / பல நுண்ணிய விஷயம்.
    எப்படி ராஜா அவர்கள் இது மாதிரி பாட்டுக்கு மெட்டு அமைக்கிறார்..அவரே பாடகரிடம் சொல்லுவாரா / பாடல் எழுதும் போதே வருமா / பாடகர்கள் மெருகேற்றுவார்களா என்பது போல கேட்டு இருந்தீங்க.

    நியாபகம் இருக்கும்னு நினைக்கிறன்.
    இந்த இளையராஜா 75 நிகழ்ச்சில அபப்டி ஒரு சந்தர்ப்பம் வந்தது..திரு.முத்துராமன் நடுல புகுந்து கொள்ளாம இருந்து இருந்த நமக்கு இன்னும் நல்ல தெரிஞ்சு இருக்கும்.

    https://www.youtube.com/watch?v=zsWXLjZJRQM
    5.15 ல பாருங்க…

    //யாராவது இவர்கள் எப்படி வாசிக்கிறார்கள் என்று கூறுங்க.. ஒரே மண்டை குடைச்சலாக இருக்கிறது. இதே சந்தேகத்தை என்றென்றும் ராஜா பற்றி எழுதி இருந்ததிலும் கேட்டு இருந்தேன்.//
    இங்கேய வருவதற்கு முன்பே பயிற்சி எடுத்தார்கள் என்று ஒரு பேட்டியில் பார்த்தேன். எவ்வளவு காலம் என்பது மறந்துவிட்டது.

  5. நன்றி. இதுல பின்னணியில் பாடலின் இசையை ஒலிக்கவிட்ட கிறுக்கன் எவனோ! அவர்கள் பேசுவது புரிய சிரமமாக உள்ளது.. கவனச்சிதறல் ஏற்படுகிறது.

    லூசுப்பயலா இருக்கான் 🙁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here