அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்த பிறகு நடக்கும் சம்பவங்கள் பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. Image Credit
தாலிபான்களை ஆதரிக்கும் கூலிபான்கள்
தாலிபான்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பது உலகே அறிந்தது.
ஆனால், இந்தியாவில் பலர் குறிப்பாகப் போராளிகள், ஊடகங்கள், ஊடகங்களில் பணி புரிபவர்கள் தாலிபான்களைப் புகழ்ந்து முட்டுக்கொடுத்து பேசி வருகிறார்கள்.
தாலிபான்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக் கூறுவதெல்லாம் தேஞ்சு போன ரெக்கார்டை திரும்ப ஓட விடுவது போல, எந்த அறிமுகமும் தேவையில்லை.
இந்திய நிழற்படச் செய்தியாளர் சித்திக்கை கொலை செய்தது சர்ச்சையானதும், ‘எதிர்பாராமல் நடந்து விட்டது‘ என்று தாலிபான்கள் விளக்கம் அளித்தனர்.
உடனே இங்குள்ள ஊடகங்கள் ‘ஆஹா! தாலிபான்கள் எவ்வளவு பெருந்தன்மையானவர்கள்!‘ என்று அவர்களைப் புகழ்ந்து கட்டுரை எழுதினார்கள்.
பின்னர் அவரைச் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொன்ற செய்தி வெளியான பிறகு திருடனுக்குத் தேள் கொட்டியது போலானார்கள்.
சரி! இனியாவது திருந்துவார்கள் என்று நினைத்தால், விதவிதமா தலைப்பு வைத்துத் தாலிபான்களை ஆதரித்து, அவர்களை நியாயப்படுத்தி எழுதி வருகிறார்கள்.
‘வெளியேறிய இந்தியர்களுக்குக் காவலுக்கு வந்த தாலிபான்கள்‘ என்று கட்டுரை!! அவங்க வெளியேறுவதே தாலிபான்களுக்குப் பயந்து தான்!
நல்லவேளை! போகும் போது வாட்டர் பாட்டில், சிப்ஸ், மிக்ஸர், முட்டை பப்ஸ் கொடுத்து அனுப்பினார்கள் என்று கூறாமல் விட்டார்கள்.
இந்திய ஊடகங்கள் குறிப்பாக தமிழக ஊடகங்கள் முட்டு கொடுப்பதைத் தாலிபான்கள் பார்த்தால் ‘யாருப்பா நீங்க‘ ன்னு ஆனந்த கண்ணீரே விட்டு விடுவார்கள்.
பெண்களுக்கு உரிமையைக் கொடுக்கப்போவதாகத் தாலிபான்கள் கூறியதாக இங்குள்ளவர்கள் எழுதிக்கொண்டு இருந்தால், தாலிபான்கள் அங்கே கெக்கேபிக்கேன்னு சிரித்துக்கொண்டு இருக்கும் காணொளி வைரல்.
ISIS
இது போன்ற ஒரு சூழ்நிலையில் ISIS இருந்த போது பலர் அவர்களைப் போராளிகள் என்று இதே போல ஆஹா ஓஹோ ன்னு சமூகத்தளங்களில் புகழ்ந்து பேசி வந்தார்கள்.
அதுவும் கேரள செவிலியர்களை விடுவித்த பிறகு உச்சத்தை அடைந்தது.
ஆனால், ஓரிரு மாதங்களில் அவர்கள் சுயரூபத்தைக் காட்ட இங்கே பேசியவர்கள் கமுக்கமாக இருந்து விட்டார்கள்.
வசனம் பேசியவர்கள் தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பது போலானார்கள்.
தற்போது அதே டைலர் அதே வாடகை கதையாகத் தாலிபான்கள் கதை ஓடிக்கொண்டுள்ளது.
இந்தியாவைக் கிண்டல்

தாலிபான்களை எப்படியோ புகழ்ந்து தொலையட்டும் ஆனால், இந்தியாவைப் பாதுகாப்பற்ற, சகிப்புத்தன்மையற்ற நாடாகச் சித்தரித்து வருகிறார்கள்.
இந்தியாவில் கட்டுப்பாடு, பாதுகாப்பில்லை என்று கதையளந்து வருகிறார்கள். இதுவே செம்ம கடுப்பை ஏற்படுத்துகிறது.
இப்படிப் பேசுற எல்லோரையும் அங்குள்ளவர்களை அழைத்து வரச் செல்லும் விமானத்தில் அனுப்பி அங்கேயே விட்டு வந்து விட வேண்டும்.
அங்கே உள்ள ஏதாவது ஒரு கல்வெட்டு பக்கத்துல அமர்ந்து தாலிபான்கள் புகழ் பாடி, பரிசில் பெற்றுக்கொண்டு வாழட்டும்.
தாலிபான்களுடன் இந்துத்வாவை ஒப்பிட்டுப் பாலிவுட் நடிகை ஸ்வராபாஸ்கர் என்பவர் எழுதியது ட்விட்டரில் சர்ச்சையானது.
இவரை அப்படியே அலேக்கா ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பிச் சில நாட்கள் இருந்து வரக்கூறினால் (உயிருடன் திரும்பி வந்தால்) எல்லாம் தெளிவாகி விடும்.
ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு முன்பு இருந்த சிறுபான்மை இந்துக்களில் 1% கூடத் தற்போதில்லை ஆனால், இந்தியாவில் பன் மடங்கு சிறுபான்மையினர் அதிகரித்துள்ளனர்.
பல்வேறு மத மக்களைக் கொண்ட நாடுகளில் சகிப்புத்தன்மை கொண்ட நாட்டை இந்தியா போலக் காண்பது அரிது.
இதில் இந்தியாவைச் சகிப்புத்தன்மை இல்லாத நாடு என்கிறார்கள்!!
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, இவர்கள் புகழும் நாடுகளிலிருந்து பார்த்தால் தான் இந்தியா எப்படி என்று புரியும்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் சகிப்புத்தன்மையுள்ள நாடாக இருந்தால், அங்கேயே சென்று வாழலாமே! இந்தியாவிலிருந்து இருந்து ஏன் கஷ்டப்பட வேண்டும்?!
ஆப்கான் வரலாறு
வரலாறு தெரியாத டுபாக்கூர் போராளிகளுக்குச் சிறு தகவல்.
குஜராத்தின் தென்கோடியில் உள்ள சோமநாத் நகருக்குள் கஜினியின் ஆப்கான் படை புகுந்து, பிரபலமான சோமநாதர் சிவன் கோவிலைச் சூறையாடியது.
திருவிழாக்காகக் கூடியிருந்த பக்தர்கள் எதிர்த்ததால், கஜினியின் ஆணையில் 50,000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.
சிவன் சிலை உடைக்கப்பட்டுக் கோவில் சிதைக்கப்பட்டது.
பலராலும் கொடுக்கப்பட்ட, தங்கம் வைரம், வைடூரியம், இரத்தின கற்கள், முத்து, பவளம், விக்கிரகங்கள் என ஆறு டன் செல்வத்தைக் கொள்ளையடித்து ஆப்கான் (காபூல்) கொண்டு சென்றான்.
இந்தியாவைப் பல நூறு முறை கொள்ளையடித்துச் சென்ற ஆப்கான் மற்றும் மற்ற நாட்டு மன்னர்களின் நாடுகள் தற்போது மோசமான நிலைமையில் உள்ளன.
இந்தியாவில் கொள்ளையடித்து எடுத்துச் சென்று காபூலை மேம்படுத்தினார்கள் ஆனால், தற்போதைய காபூல் நிலைமை என்ன?
காகிதப் புலிகள்
இந்தியாவிலிருந்து கொண்டு இந்தியாவைக் கேவலமாகப் பேசுபவர்களை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது எரிச்சலை வரவழைக்கிறது.
தாலிபான்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் ஃபேஸ்புக், வாட்சப் கணக்குகளை முடக்குவதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
இதற்கே பயந்து பலர் ‘நான் சும்மானாச்சிக்கு சொன்னேன்.. நீங்க சீரியஸா எடுத்துகிட்டீங்க ஹையோ ஹையோ!‘ என்று எழுதியதை நீக்கி வருகிறார்கள்.
இந்தத் தொடை நடுங்கிகள் தான் இந்தியாவை நக்கலடித்து வரும் காகித புலிகள்.
இந்தியாவைக் கீழ்த்தரமாக விமர்சிப்பவர்களை நொக்கி எடுத்தால் எல்லோரும் அடங்குவார்கள். NIA அமைதியாக இருப்பதே இவர்கள் அதிகம் பேசக்காரணம்.
கருத்து சுதந்திரம்னு கண்டதையும் பேசிக்கொண்டு இருக்கும் கூலிபான்களுக்கு வாயிலேயே நாலு கொடுத்தால் தான் சரி வரும்.
இந்தியாவில் இருப்பது பாதுகாப்பில்லை, சகிப்புத்தன்மை இல்லைன்னு கூறும் போராளிகள், அவங்க புகழும் நாட்டுக்குப் போகட்டும்! நாங்க நிம்மதியா இருப்போம்.
எங்களுக்கு இந்தியா தான் சொர்க்கம்.
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியாவைக் கிண்டலடிக்கும் சைக்கோ இந்தியர்கள்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, தாலிபான்கள் தூப்பாக்கிகளுடன் கூடிய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஆயுத மற்றும் மக்களின் அடக்கு முறையிலும் ஆட்சி அமைத்த எந்த அரசாங்கமும் நீண்ட நாட்களுக்கு ஆட்சி செய்ததாக வரலாறு இல்லை.மக்களின் ரத்தம் படிந்த சிம்மாதனத்தில் அமர்த்த அரசன் நிச்சயம் வீழ்வான். தாலிபான்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு அழிவார்கள். ரஷ்யாவின் கம்யூனிஸ்ட்களை போல.
என் கணிப்பு சரி என்றால் இன்னும் இருபது ஆண்டுகளில் சீனா அல்லது ரஷ்யா வின் கைகளில் ஆப்கானிஸ்தான் செல்லும்.சகுனி பிறந்த மண்ணின் (காந்தாரம்) வரலாறு அப்படி.
பல குறைகள் இருப்பினும் மக்களாட்சி ஒன்றே இந்த யுகத்தின் சிறந்த தீர்வு.
நாம் தமிழர்களும், சில சிறுபான்மை குழுக்களும் இதை ஆதரிக்காரர்கள் என்று நினைக்கிறேன். போராளிகளுக்கும் தீவரவாதத்திக்கும் வித்தியாசம் அறியாத அற்ப பிறவிகள். நம் தேச தந்தை காந்தி உலகிற்க்கு அளித்த சத்யாகிரக போராட்டம் வழிமுறை மட்டுமே ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கும் நாட்டின் இறையாண்மையை காப்பதற்கும் உதவும். தென் ஆப்பிரிக்கா ஓர் உதாரணம்.
Super 🙂
இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்..
பள்ளி பருவத்தில் படித்த இந்த வரிகளில் உள்ள வார்த்தைகள் ஓவ்வொன்றும் பொக்கிஷங்கள்.. நம் தேசத்தை பற்றி குறை கூறி கொண்டிருக்கும் தற்குறிகளை அந்நிய தேசத்தில் இவர்களுடன் சில பொழுதுகளை கழிக்கும் போது தான் நாம் சொர்க்கத்தில் இருந்து கொண்டு குறை சொல்லி கொண்டிருக்குகிறோம் என்று விளங்கும்..
எல்லா நாடுகளிலும் இருப்பது போல நம் தேசத்திலும் சில பிரச்சனைகள் இருக்கலாம்.. ஆனால் அதற்க்காக நம் தேசத்தை பற்றி மட்டமாக நினைப்பதும், பத்திரிகைகளில் கூப்பாடு போடுவதும் அநாகரிகமான செயல்.. இங்கு இருக்க விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் வெளியேறி விடலாமே!!! குறைந்த பட்சம் மக்கள் தொகையாவது குறையும் ..
ராட்டினம் எவ்வளவுதான் சுற்றினாலும் அதனுடைய நடுக்கம்பு அச்சை விட்டு அகலுவதில்லை. நாங்கள் எங்கேயெங்கே போய் அலைந்தாலும் எங்கள் இதயம் பிறந்த இடத்தை விட்டுப் போவதில்லை..
இணையத்தில் படித்தது : அலிஸ் மன்றோ கூறியது : ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு. பகிர்வுக்கு நன்றி கிரி..
@மணிகண்டன்
“தாலிபான்கள் அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு அழிவார்கள்.”
இவர்களுக்குள்ளே பல குழுக்கள் உள்ளார்கள். என்ன நடக்கும் என்று போக போகத்தான் தெரியும்.
“இன்னும் இருபது ஆண்டுகளில் சீனா அல்லது ரஷ்யா வின் கைகளில் ஆப்கானிஸ்தான் செல்லும்”
இங்கே லித்தியம் ஏராளம் உள்ளது. எதிர்காலம் லித்தியதை நம்பி உள்ளது. எனவே, சீனா இதன் மீது ஆர்வம் காட்ட இது முக்கியக்காரணம்.
“பல குறைகள் இருப்பினும் மக்களாட்சி ஒன்றே இந்த யுகத்தின் சிறந்த தீர்வு.”
சரியே. சிங்கப்பூர் போல சிறு சர்வாதிகாரம் கலந்த மக்களாட்சி எனக்கு ஏற்புடையது.
“நாம் தமிழர்களும், சில சிறுபான்மை குழுக்களும் இதை ஆதரிக்காரர்கள் என்று நினைக்கிறேன்.”
ஆமாம். இவர்களை எல்லாம் ஆதரிக்க எப்படித்தான் மனது வருகிறதோ!
@யாசின்
“நம் தேசத்தை பற்றி குறை கூறி கொண்டிருக்கும் தற்குறிகளை அந்நிய தேசத்தில் இவர்களுடன் சில பொழுதுகளை கழிக்கும் போது தான் நாம் சொர்க்கத்தில் இருந்து கொண்டு குறை சொல்லி கொண்டிருக்குகிறோம் என்று விளங்கும்.”
மூன்று நாடுகளுக்குச் சென்றுள்ளேன். சிங்கப்பூரில் தொடர்ச்சியாக 8 வருடங்கள் இருந்துள்ளேன் என்கிற முறையில், எனக்கு நம் நாடே சொர்க்கம்.
“எல்லா நாடுகளிலும் இருப்பது போல நம் தேசத்திலும் சில பிரச்சனைகள் இருக்கலாம்.”
பிரச்சனைகள் இல்லாத நாடே கிடையாது. இந்தியாவும் விதிவிலக்கல்ல.
“ஆனால் அதற்க்காக நம் தேசத்தை பற்றி மட்டமாக நினைப்பதும், பத்திரிகைகளில் கூப்பாடு போடுவதும் அநாகரிகமான செயல்.”
யாசின் அதாவது படு மோசமாக பேசுகிறார்கள். மிகக்கேவலமாக நடந்து கொள்கிறார்கள். இதையெல்லாம் சகிக்கவே முடியலை.
எப்படி நம் நாட்டிலிருந்து கொண்டே இப்படி மோசமாக பேசுகிறார்கள் என்று புரியவில்லை.
“இங்கு இருக்க விருப்பம் இல்லாதவர்கள் யாராக இருந்தாலும் வெளியேறி விடலாமே!!! குறைந்த பட்சம் மக்கள் தொகையாவது குறையும்”
இவர்களுக்கு தெரியும், மற்ற நாட்டில் இது போல பேசினால் வாயை உடைத்து விடுவார்கள் என்று.
அங்கே இருந்து எல்லோரும் அழுது கொண்டு வருகிறார்கள் ஆனால், அங்கே உள்ளவர்களை ஆதரிக்கிறார்கள்! மனசாட்சி என்பதே இல்லாதவர்கள்.
“நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.”
உண்மை. சிங்கப்பூர் எவ்வளவு சிறந்த நாடு ஆனால், எனக்கு இந்தியாவில் இருப்பதே மகிழ்ச்சியை தருகிறது.
ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், நம் நாடு எனும் போது தனி உணர்வு.
சிலருக்கு இதெல்லாம் எப்போதும் புரிவதில்லை.
சிங்கப்பூர் போல சிறு சர்வாதிகாரம் கலந்த மக்களாட்சி எனக்கு ஏற்புடையது. — I agree with you Giri. In my experience, Singapore is giving freedom to the people with a control. I truely welcome such government.