State Back Of India நிறுவனம் 5% தள்ளுபடியில் அறிமுகப்படுத்திய SBI Cashback Credit Card எப்படி உள்ளது என்று காண்போம். Image Credit
SBI Cashback Credit Card
SBI வங்கி நிறுவனம் ஏராளமான கடனட்டைகளை அறிமுகப்படுத்தியதில் SBI Cashback Credit Card முக்கிய இடம் பிடித்தது.
காரணம், இதன் 5% தள்ளுபடி அறிவிப்பு.
இணையத்தில் என்ன வாங்கினாலும் 5% தள்ளுபடி என்ற அறிவிப்பை வெளியிட்டது, கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
எனவே, இந்த அட்டையை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், அறிமுகப்படுத்திய சில மாதங்களில் Devalution செய்து எந்தத் தனித்தன்மையும் இல்லாதவாறு ஆக்கி விட்டது.
எவ்வாறு பெறுவது?
- வங்கியில் விண்ணப்பிக்கலாம்.
- SBI இணையத்தில் விண்ணப்பித்துத் தகுதியானவர் என்றால், விண்ணப்பம் ஏற்கப்பட்டு கிரெடிட் கார்டு அனுப்பி வைக்கப்படும்.
- இணைவதற்கு ₹999+ GST கட்டணம்.
- ஆண்டுக்கட்டணம் ₹999+ GST.
- ஆண்டுக்கு ₹2 லட்சம் செலவு செய்தால், ஆண்டுக் கட்டணம் ரத்து செய்யப்படும்.
இணையத்தில் விண்ணப்பித்தே பெற்றேன். விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டது எளிதாக இருந்தது ஆனால், அட்டையைப் பெறுவதற்கு வாழ்க்கையில் இதுவரை அடையாத மன உளைச்சலை அடைந்து விட்டேன்.
Read : கொலை வெறியாக்கிய SBI
பயன்கள் என்ன?
இணையம் வழியாகச் சேவையை, பொருளைப் பெற்றால் 5% தள்ளுபடியுண்டு.
POS இயந்திரம் வழியாகச் செலவு செய்தால், 1% தள்ளுபடி.
Cashback ல் கிடைக்கும் தொகை அடுத்த மாத கட்டணங்களில் கழித்துக்கொள்ளப்படும்.
Cashback மொத்தமாகக் குறிப்பிடப்படுகிறது. ACE AXIS Credit Card போலத் தனித்தனியாக விவரங்களைக் கொடுத்தால், புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.
கட்டுப்பாடுகள் என்ன?
ஒவ்வொரு மாதமும் அதிக பட்சம் (cap) ₹5,000 தள்ளுபடி பெற முடியும். முன்பு ₹10,000 என்று இருந்தது.
Devalution செய்ததில் Domestic Lounge உட்படப் பல சலுகைகள் நீக்கப்பட்டு விட்டன.
எவை நீக்கப்பட்டன?
- Gold/Jewelry Purchase
- Insurance Premium payment
- Fuel
- Utility Bill Payments
- Educational Services
- IRCTC
- EMI transactions or purchases converted to EMI
- Rental Payment
- Wallet loading transactions
- Govt fees
சாதாரண மக்கள் பெரும்பாலும் மேற்கூறிய செலவுகளையே செய்வார்கள். மேற்கூறியதில் பெரும்பாலானவை துவக்கத்தில் Cashback அனுமதிக்கப்பட்டு இருந்தது ஆனால், Devalution க்கு பிறகு இவை தவிர்க்கப்பட்டு விட்டது.
பரிந்துரை என்ன?
குறைந்த பட்சம் ஆண்டுக்கட்டணம் செலுத்துவது Cashback லையே கிடைத்து விட வேண்டும். ஆண்டுக்கட்டணம் கட்டும் அளவுக்குக் கூட (₹999+ GST) Cashback வரவில்லை என்றால், பயன்படுத்துவது வீண்.
எனவே, என்ன வகையான செலவுகளைச் செய்கிறீர்கள் என்பதைப்பொறுத்து இந்த அட்டையை வாங்கலாம்.
துவக்கத்தில் மிக ஆர்வமாக வாங்கினேன் ஆனால், Devalution செய்த பிறகு கடுப்பாகி ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்தேன்.
இந்த ஆண்டு முடியும் வரை பயன்படுத்துவோம், ₹999 Cashback வரவில்லையென்றால் ரத்து செய்து விடுவோம் என்ற முடிவிலிருந்தேன்.
ஆனால், இன்னும் நான்கு மாதங்கள் உள்ளது. இந்த வருடத்துக்கான ஆண்டுக்கட்டண தொகைக்கு மேல் ₹600 Cashback இதுவரை பெற்று விட்டேன்.
எனவே, ரத்து செய்யும் முடிவைக் கை விட்டு விட்டேன்.
இந்த ஆண்டு ஒரு தேர்வு எழுதியதற்கும், இத்தள Hosting மாற்றியதுக்காகவும் செலவு செய்ததில் ₹1250 வரை Cashback பெற்றேன்.
எனவே, சுற்றுலாவுக்காக இணையத்தில் முன்பதிவு செய்பவர்கள், Swiggy, Zomato மற்றும் இணையம் தொடர்பான பரிவர்த்தனை செய்பவர்கள் இதை வாங்கலாம்.
Devalution ல் குறிப்பிடப்பட்டுள்ள செலவுகளை மட்டுமே செய்பவர்கள் தவிர்த்து விடலாம், பயனில்லை.
எப்போதும் ஒன்றை மனதில் நிறுத்துங்கள்.
கடனட்டைக்கு ஆண்டுக்கட்டணம் இருந்தால், ஆண்டுக்கட்டணத்தை விடக் கிடைக்கும் Cashback அதிகம் என்றால் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இல்லையேல் நட்டமே! எனவே, அக்கடனட்டையை ரத்து செய்வதே நல்லது.
தொடர்புடைய கட்டுரை
Credit Card Devaluation என்றால் என்ன?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி.. எப்போதும் போல இந்த கிரெடிட் கார்டு குறித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் இருப்பினும் அதை வாங்க வேண்டாம் என்ற என் மனநிலையிலிருந்து தற்போது வரை எந்த மாற்றமும் இல்லை. ஒரு வேளை நான் இந்தியா திரும்பிய பின் மாற்றம் நிகழலாம்.
======================
இணையத்தில் விண்ணப்பித்தே பெற்றேன். விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்பட்டது எளிதாக இருந்தது ஆனால், அட்டையைப் பெறுவதற்கு வாழ்க்கையில் இதுவரை அடையாத மன உளைச்சலை அடைந்து விட்டேன்.
======================
இதன் அனுபவத்தை முன்பே ஒரு பதிவில் படித்தது நினைவில் இருக்கிறது..
======================
எனவே, இந்த அட்டையை வாங்கப் பலரும் ஆர்வம் காட்டினார்கள்.
ஆனால், அறிமுகப்படுத்திய சில மாதங்களில் Devalution செய்து எந்தத் தனித்தன்மையும் இல்லாதவாறு ஆக்கி விட்டது.
======================
இது வங்கியின் ஒரு வித வியாபார யுக்தியாக கருதுகிறேன்.
@யாசின்
உங்களுக்கு கார்டில் ஆர்வமில்லை என்பதை அறிவேன் 🙂 . ஒருவகையில் நல்லதே.
“இது வங்கியின் ஒரு வித வியாபார யுக்தியாக கருதுகிறேன்.”
நீங்கள் கூறுவது சரி தான் ஆனால், சரியான சலுகை இல்லையென்றால் பெரும்பாலானவர்கள் ரத்து செய்து விடுவார்கள்.
பயன்படுத்தத் தெரியாதவர்கள் தொடர்வார்கள். நீங்கள் கூறுவது போல வியாபார யுக்தியில் மாட்டுபவர்கள் இவர்களே!