ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

4
ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

னியார் வங்கிகளின் அனுமதிக்குப் பிறகு வங்கி சேவைகளில் பெரும் முன்னேற்றம். வாடிக்கையாளர் சேவை, மின்னணு சேவை என்று அனைத்தும் மேம்பட்டுள்ளது. ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது? என்று பார்ப்போம்.

ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?

ICICI

முதன் முதலில் துவங்கிய வங்கி கணக்கு ICICI. கிளை கோபிசெட்டிபாளையம்.

துவக்கத்தில் பணம் இல்லாததாலும், அந்தச் சமயத்தில் வங்கிப் பரிவர்த்தனை வழக்கமானது இல்லையென்பதாலும், கணக்கு பயன்படுத்தப்படாமலே இருந்தது.

பயன்படுத்தப்படாமல் இருந்ததால், வங்கி கணக்கை முடக்கி விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்ததால், அப்பாவுடன் சென்று கேட்டு திரும்பப் பெற்றேன்.

இதன் பிறகு கடந்த வருடங்களில் பிரச்சனை வந்ததில்லை.

ஒரு முறை பெயர் மாற்றத்தில் வாடிக்கையாளர் சேவையில் தாமதம் ஏற்பட்டதால், சிறு சண்டைக்குப் பிறகு சரி செய்யப்பட்டது. Image Credit

வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மின்னஞ்சல் அனுப்புவது எளிதல்ல. அவர்கள் குறிப்பிட்ட முறையில் மட்டுமே புகார் அனுப்ப முடியும்.

அதாவது, ஒரு மின்னஞ்சல் முகவரிக்குப் புகாரை எளிதாக அனுப்ப முடியாது.

பணப்பரிவர்த்தனை

ICICI (App) செயலியிலேயே அனைத்துப் பணிகளையும் செய்ய முடியும். NEFT, IMPS, UPI பணப்பரிவர்த்தனை அனைத்துமே பிரச்சனை இல்லாமல் இருக்கும்.

குறைந்த பட்ச இருப்பு ₹10,000, ₹5,000, ₹2,000.

HDFC

அலுவலகச் சம்பளக் கணக்குக்காகத் துவங்கியது. அப்போது (2004 வாக்கில்) HDFC வளர்ந்து வரும் தனியார் வங்கியாக இருந்தது.

அப்போது இருந்து தற்போது வரை HDFC வாடிக்கையாளர் சேவை சிறப்பாக உள்ளது. புகார் அளிப்பது எளிது, அதிகபட்சம் ஐந்து நாட்களில் பதில் அளிப்பார்கள்.

இதுவரை தீர்க்க முடியாத பிரச்சனை என்று இருந்ததில்லை. சண்டை போட்டாவது பெற்று விடுவேன் ஆனால், அவ்வாறு நடந்தது மிகக்குறைவான தருணம்.

Personal Banker

இருப்பு, பரிவர்த்தனைகளைப் பொறுத்து (Classic Banking) தனிப்பட்ட முறையில் Personal Banker நியமிப்பார்கள்.

இவரிடம் தேவையைக் கூறினால், செய்து கொடுத்து விடுவார்.

HDFC வங்கி சேவைகளில் குறைகள் இல்லை, இருந்தாலும் புகார் அளிப்பதன் மூலம் சரி செய்து விடலாம்.

இருப்பதிலேயே கடுப்படிக்கும் சேவை என்றால், HDFC App தான்.

வடிவமைப்பு (UI – User Interface) சிறப்பாக இருந்தாலும், ஒவ்வொரு முறையும் PIN Number மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

பாதுகாப்பு என்ற வகையில் சரியானது என்றாலும், நினைவு வைப்பது இம்சையாக உள்ளதால், HDFC App பயன்படுத்துவதில்லை. Google Pay, PhonePe போதுமானது.

பணப்பரிவர்த்தனை

NEFT, IMPS, UPI பணப்பரிவர்த்தனை அனைத்துமே பிரச்சனை இல்லாமல் இருக்கும். UPI பரிவர்த்தனைக்கு Primary வங்கியாக HDFC என் விருப்பமாக உள்ளது.

குறைந்த பட்ச இருப்பு ₹10,000, ₹5,000, ₹2,500.

SBI

தேசிய வங்கியில் கணக்கு இருப்பது நல்லது என்ற எண்ணத்தில் என் தேர்வாக SBI இருந்தது. பலரின் எதிர்ப்புக்கு இடையே இவ்வங்கியில் கணக்கைத் துவங்கினேன்.

SBI வங்கி என்றாலே வாடிக்கையாளர் சேவையைக் கழுவி ஊத்துவார்கள். இதில் மாற்றுக்கருத்தில்லை என்றாலும், தற்போது முன்பு இருந்த அளவுக்கு மோசமில்லை.

இணையத்திலேயே அனைத்துப் பணிகளையும் செய்து விடலாம் என்பதால், வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியம் குறைவு.

இணையத்தில் புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கிறார்கள்.

SBI இணையதள, செயலியின் வடிவமைப்புகள் ICICI & HDFC வங்கிகளைவிடச் சிறப்பு என்று சொன்னால், நம்பித்தான் ஆகணும். எளிமையான UI.

மிக எளிதாகச் சமீப பரிவர்த்தனைகளைப் பார்வையிட முடியும். அதோடு அனைத்து சேவைகளையும் எளிதாகப் பயன்படுத்தலாம்.

பணப்பரிவர்த்தனை

இருப்பதிலேயே கடுப்படிக்கும் சேவை UPI தான். SBI யை நம்பி கடைகளில் பணம் செலுத்த நினைத்தால், முக்கியமான நேரத்தில் காலை வாரி விடும்.

குறைந்த பட்ச இருப்பு ₹0. முன்பு ₹3000, ₹2000, ₹1000 என்று இருந்தது.

எந்த வங்கி சிறந்தது?

மூன்று வங்கிகளிலுமே நிறை குறைகள் இருந்தாலும், மூன்றுமே சிறந்த வங்கிகளே!

நான் பயன்படுத்தியவரையில் HDFC –> ICICI –> SBI ஒட்டு மொத்த சேவை, பயன்பாட்டில் சிறப்பானதாக உள்ளது.

2020 வருட சிறந்த வங்கிகளாக ICICI, HDFC & SBI தேர்வாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

SBI குறித்துத் தவறான கருத்து பலரிடையே உள்ளது.

அனைவரும் நினைப்பது போல, SBI வங்கி சேவைகள் மோசமில்லை. வங்கிக்கணக்கு துவங்குவது மட்டுமே பல நடைமுறைகளை, நேரத்தை எடுக்கவல்லது.

வங்கிக்கணக்கை துவங்கி விட்டால், வங்கிக்குச் செல்ல வேண்டிய தேவையே இல்லை. அனைத்தையும் இணையதளம், செயலியிலேயே செய்து விடலாம்.

வங்கிக்கு அடிக்கடி செல்பவர்களுக்கு SBI ஏற்றதல்ல.

வங்கிக்கே செல்லாமல் இணையத்தின் மூலமே அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்பவர்களுக்கு எந்தப்பிரச்சனையும் வராது.

எதற்கு வங்கிக்கு நேரடியாகச் செல்கிறார்கள்?!

விவரம் தெரியாதவர்கள், இணைய சேவை பயன்படுத்தத் தெரியாதவர்கள் வங்கி செல்வதில் நியாயம் உள்ளது.

மற்றவர்கள் எதற்கு அடிக்கடி வங்கி செல்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

கடந்த 20 வருட (*2020) வங்கிப் பயன்பாட்டில் ஒட்டுமொத்தமாக 25 முறை வங்கிகளுக்குச் சென்று இருந்தாலே அதிகம்.

வங்கிகளின் அனுபவமானது ஒருவருக்கொருவர் மாறுபடும்.

ஒருவருக்கு நல்ல அனுபவங்களைக் கொடுக்கும் வங்கி, இன்னொரு நபருக்கு மோசமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.

எனவே, மேற்கூறியவை பொதுவான கருத்தல்ல.

தொடர்புடைய கட்டுரைகள்

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, நான் இரண்டு வங்கி கணக்குகளை மட்டும் தான் பயன் படுத்துகிறேன்.. ஒன்று இங்கு துபையில், மற்றொன்று இந்தியாவில் (Bank of Baroda..) மற்ற வங்கிகளில் கணக்குகள் இல்லாததால் அவற்றின் சேவைகளை பற்றி எனக்கு தெரியவில்லை.. இதுவரை வங்கிகளை பொறுத்தவரை இரண்டு இடங்களிலும் எந்த பிரச்சனையையும் சந்தித்தது இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @யாசின் இரு வங்கிகளைப் பயன்படுத்துவது நல்லது. ஒரு வங்கியில் பிரச்சனை என்றால், மற்ற வங்கியைப் பயன்படுத்த முடியும்.

  3. என்னை பொருத்த மட்டில் HDFC தான் சிறந்தது. அதற்கு சமீபத்திய தரநிலைகள் சான்று. நான் கிரெடிட் கார்டுகள் பயன் படுத்துவதில்லை. அதனால் அது சம்பந்தமான பிரச்சினைகள் எனக்கு வந்ததில்லை. நண்பர் ஒருவருக்கு சில பிரச்சனைகள் வந்ததாக கூறினார். மற்றபடி HDFC ல் குறை கூற ஒன்றுமில்லை. APP ல் மட்டுமே பரிவரித்தனைகள் செய்ததால் பின் மறக்கமால் இருந்திருந்தேன். ஆனால் UI நன்றாக இருப்பது போல் தான் தோன்றுகிறது. Netbanking மற்றும் App மற்றவற்றை விட சிறந்தது . எனக்கும் மூன்றிலும் கணக்கு உள்ளது.
    HDFC பொருத்தவரை 1 முறை மட்டுமே முகவரி மாற்றத்திற்காக நேரில் செல்ல நேர்ந்தது. அதுவும் இப்போது நெட்பேங்கில் மாற்றிக் கொள்ளலாம். மற்றபடி அனைத்து சேவைகளும் இணைய வங்கியிலேயே பெற்று விடலாம். வாடிக்கையாளர் சேவையும் மற்றவற்றை விட சிறந்தது.

  4. HDFC சந்தேகத்திற்கு இடமில்லாமல் சிறந்த வங்கி. என் பரிந்துரையிலும் முதலில் HDFC வாங்கியே உள்ளது (தற்போதைய சூழ்நிலையில் (31 Dec 2020).

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here