AXIS ACE Credit Card Review

4
AXIS ACE Credit Card

க்களால் விரும்பப்படும் கிரெடிட் கார்டுகளில் ஒன்று AXIS ACE Credit Card.

AXIS ACE Credit Card

ஒவ்வொரு கிரெடிட் கார்டும் ஒவ்வொரு தேவையைப் பொறுத்துப் பெறலாம். AXIS ACE Credit Card கடனட்டை சராசரி நபரின் தேவைகளுக்குப் பொருத்தமாக உள்ளது.

ஏற்கனவே, பல கடனட்டைகளைப் பயன்படுத்தி வந்தாலும், இதில் கூடுதல் பயன் அடைந்துள்ளேன். Image Credit

எப்படிப்பெறுவது?

இக்கடனட்டையைப் பெற தகுதியுடையவராக இருந்தால், இக்கார்டை பெற Google Pay பரிந்துரைக்கும். இதில் விண்ணப்பித்தால் போதும்.

PAN Card அவசியம், இணையம் வழியாகவே KYC செய்து விடுவார்கள்.

இங்கே பரிந்துரைக்கப்படவில்லையென்றால் AXIS தளத்தில் சென்று பெறலாம். அதற்குக் கூடுதல் வழிமுறைகள்.

விதிமுறைகள்

அனுமதிக் கட்டணம் ₹499+ GST. 45 நாட்களில் ₹10,000 செலவு செய்தால், இக்கட்டணம் திரும்பத்தரப்படும்.

ஆண்டுக் கட்டணம் ₹499+ GST. ஒரு வருடத்தில் ₹2,00,000 செலவு செய்தால், ஆண்டுக்கட்டணம் திரும்பத்தரப்படும்.

பயன்கள்

  • Swiggy, Zomato, Ola க்கு 4% தள்ளுபடியுண்டு.
  • ஆண்டுக்கு 4 Select Domestic Airport Free Lounge.
  • DTH, Gas, Broadband, Mobile Bill (Prepaid & Postpaid), Electricity உட்பட Google Pay வழியாகச் செலுத்தப்படும் கட்டணங்களுக்கு 5% தள்ளுபடியுண்டு.
Google Pay வழியாகச் செலுத்தினால் மட்டுமே 5% தள்ளுபடி!
  • இவையல்லாமல் மற்ற தளங்களில், கடைகளில் (உணவகம், பல்பொருள் அங்காடி போன்றவை) செய்யப்படும் (Offline) செலவுகளுக்கு 1.5% தள்ளுபடி.
  • 1.5% தள்ளுபடி சிறப்பானது, ஒன்றும் இல்லாததுக்கு இதில் கிடைக்கும் Cashback குறிப்பிடத் தக்க அளவில் வரும். ஒரு செலவில் ₹1 கிடைத்தாலும் இலாபம் தானே!
  • ஒரு மாதத்தில் எத்தனை செலவுகளைச் செய்கிறோம்! அவற்றை இக்கடனட்டையின் மூலமாகவே செய்தால், கிடைக்கும் இலாபத்தை உணரலாம்.
  • கொஞ்சம் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தினால் போதுமானது.
  • தற்போது அனைவருக்குமே மேற்கூறிய செலவுகள் இருப்பதால், மாதத்துக்குக் குறைந்தது ₹350 Cashback பெற முடியும்.
  • ₹2,00,000 செலவு செய்ய முடியவில்லையென்றாலும், அதிகபட்சம் இரண்டு மாதங்களில் உங்கள் ஆண்டுக்கட்டணத்தைத் திரும்பப் பெற்று விட முடியும்.

மேற்கூறிய தள்ளுபடிகளால் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ₹3,500 சேமிக்க முடியும்.

என்ன கட்டுப்பாடுகள்?

4% & 5% தள்ளுபடிகளில் அதிகபட்சம் மாதம் ₹500 மட்டுமே தள்ளுபடி (Monthly cap). ஒருவேளை Cashback ₹600 வந்தாலும், ₹500 மட்டுமே கொடுக்கப்படும்.

1.5% தள்ளுபடிகளில் கட்டுப்பாடில்லை. Cashback ₹1000 வந்தாலும் கொடுக்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் Cashback தொகை, அடுத்த மாத அறிக்கையில் (statement) கழித்துக் கொள்ளப்படும்.

பின்வரும் செலவுகளுக்கு எந்தத் தள்ளுபடிகளும் (MCC) இல்லை.

  • Gold/Jewelry Purchases
  • Insurance Premium payment
  • Educational Services
  • EMI transactions or purchases converted to EMI
  • Rental Payment
  • Wallet loading transactions
  • Govt fees

Devaluation

தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் கடனட்டைகளை Devaluation செய்து வருகின்றன. ACE கார்டுக்குச் சமீபத்தில் Govt fees தள்ளுபடி நீக்கப்பட்டது.

எடுத்துக்காட்டுக்கு, சொத்துவரி செலுத்தினால், 1.5% தள்ளுபடி கிடையாது.

எதிர்காலத்தில் மேலும் Devaluation செய்யப்படலாம், இது இயல்பானது. மேலும் தெரிந்து கொள்ள –> Credit Card Devaluation என்றால் என்ன?

பரிந்துரை என்ன?

தாராளமாக வாங்கலாம். நிச்சயம் சேமிப்பைக் கொடுக்கும்.

கடனட்டை பயன்படுத்தத் தெரியவில்லை, முறையாகக் கட்டணம் செலுத்த மாட்டீர்கள் என்றால் வேண்டாம்.

செலவுகள் கட்டுப்பாட்டில் உள்ளன, கட்டணங்களைச் சரியாகச் செலுத்துவீர்கள் என்றால், வாங்குவதில் சந்தேகமே வேண்டாம்.

Google Pay செயலி (App) மூலமாகவே எளிதாகப் பெற முடியும்.

தொடர்புடைய கட்டுரைகள்

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

கிரெடிட் கார்டு UPI எப்படியுள்ளது? FAQ

Merchant Category Codes (MCC) என்றால் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி. நீங்க Axis Airtel credit card யூஸ் பண்ணி பாருங்க. ஏர்டெல் Broadband +Airtel postpaid bill + airtel Prepaid recharge. Airtel thanks ஆப் வழியா பண்ணா 25% Cashback. Maximum ₹300 வரை ஒரு பில் பேமெண்ட்க்கு Cashback வரும். gas bill. Current bill other utility bill payments க்கு 10% Cashback. Airtel app இல் utility பில் பே பண்ணா தான் இந்த 10% cashback கிடைக்கும். Maximum ₹300 இதில் cashback வரும். Swiggy. Bigbasket axis airtel card via பே பண்ணா 10% cashback இதுக்கும் maximum ₹300 வரை Cashback வரும். Others purchase க்கு 1% cashback.
    Domestic airport lounge
    access, 4 times/year.

    Joining fee 500+ GST. But first 30days க்குள்ள கார்டு யூஸ் பண்ணா ₹500 Amazon voucher code வரும்.
    Annual fee 500+GST. YEARLY 2lakh use பண்ணா waiver ஆகும்.
    நான் Airtel broadband. Airtel prepaid use பண்றேன். 25% cashback கிடைக்குது. இந்த மாதம் earn பண்ற cashback அடுத்த பில்லில் பணமாக வரவு வைக்கப்படும். நான் மாதம் 400+ ரூபாய் cashback பெறுகிறேன். Airtel users ஆக இருந்தால் கூடுதல் லாபம். மிக மிக உபயோகமான கிரெடிட் கார்டு. Axis வங்கியில் இந்த கிரெடிட் கார்டு தான் பெஸ்ட்.
    மேலும் தகவலுக்கு: https://www.airtel.in/finance/credit-card/axis-bank.

    https://www.axisbank.com/retail/cards/credit-card/airtel-axis-bank-credit-card/features-benefits#

    Axis airtel best credit card. இதுவரை இந்த கார்டுக்கு Devaluation செய்யவில்லை. பிற்காலத்தில் airtel payments க்கு 25% cashback என்பதை குறைக்கலாம். இதில் வாடிக்கையாளருக்கு செம லாபம். இந்த கார்டு ஒரு வருடத்திற்கு மேல் உபயோகிக்கிறேன். இதுவரை எந்த Devaluation செய்யவில்லை. நீங்க ஏற்கனவே axis credit card உபயோகித்தால் axis customer care இல் அழைத்து இந்த கார்டுக்கு அப்போதே விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே இருக்கும் கார்டை Upgrade அல்லது புதிதாக airtel axis card வாங்கிக்கொள்ளலாம். இதற்கு எந்த documents தேவையில்லை. Phone call லிலேயே அனைத்தும் முடிந்துவிடும். இந்த வசதி எனக்கு தெரிந்து axis மட்டுமே உள்ளது. Axis க்கு tollfree எண் இல்லை. 1860 என்று ஆரம்பிக்கும் கட்டண எண் வாடிக்கையாளர் உதவி மையமே உள்ளது. கூகுளில் தேடி 022-67987700 இந்த நம்பரை கண்டுபிடித்தேன். தேவைபட்டால் உபயோகித்து பாருங்கள்.

  2. இதுவரை நான் அறியாத செய்தி இது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  3. @ஹரிஷ்

    AXIS Airtel Card என் பட்டியலில் உள்ளது. சில மாதங்கள் முன்பு தான் இரு கடனட்டைகள் வாங்கியதால், சிறிது காலத்துக்குப் பிறகு வாங்குவேன்.

    நான் Swiggy, Zomato, Bigbasket அதிகம் பயன்படுத்துவதில்லை. இதில் Offline க்கு 1% என்பதே குறை.

    @யாசின் 🙂

  4. ஆமாம் கிரி. மிக மிக உபயோகமான கார்டு. Airtel user ஆக இருந்தால் அவ்வளவு ஆஃபர் இருக்கிறது இந்த கார்டில். மின்சார கட்டனம் காஸ் கட்டனம் 10% கேஷ்பேக். ஆனால் ஒரு கண்டிஷன். Airtel app வழியாக axis airtel உபயோகித்தால் தான் இந்த கேஷ்பேக் கிடைக்கும். எனக்கு மிக உபயோகமாக உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!