ICICI வங்கியின் பல கிரெடிட் கார்டுகளுள் ஒன்று ICICI Platinum Chip Credit Card.
ICICI Platinum Credit Card
ஒவ்வொரு வங்கியும் பல்வேறு வகையான கிரெடிட் கார்டுகளை வழங்குகிறார்கள். அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேவையைப் பொறுத்து இருக்கும்.
பயணம், Online Purchase, Entertainment, Fuel என்று பல்வேறு தேவைகளுக்காக வைத்துள்ளன. நம் தேவையைப் பொறுத்து கிரெடிட் கார்டை வாங்கிக்கொள்ளலாம்.
ICICI Platinum Card ஒரு Entry Level Card ஆகும். அதாவது, புதிதாக கிரெடிட் கார்டு பயன்படுத்தத் துவங்குபவர்களுக்கு ஏற்றது. Image Credit
21 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெறலாம். இணையத்திலேயே விண்ணப்பிக்கலாம்.
என்ன சிறப்பு?
- No Joining fee or Annual fee. Lifetime free card.
- 1 reward point per Rs. 100 spent on insurance & utilities, including government transactions.
- 2 reward points per Rs. 100 spent on retail purchases (except fuel).
- Save up to 15% on dining bills at over 2,500 restaurants across the country using your ICICI Credit Card.
- 1% fuel surcharge waiver can be availed on fuel transactions of a maximum ₹ 4,000 at HPCL pumps when the Card is swiped on ICICI Merchant Services swipe machines.
- Reward Points வைத்து அனுமதிக்கப்பட்ட பொருட்கள், Gift Voucher, Movie Voucher போன்றவற்றைப் பெறலாம்.
- சில கிரெடிட் கார்டுகளில் நகை வாங்கினால், Insurance, Govt Utility fee ஆகியவற்றுக்கு Reward Points கிடைக்காது ஆனால், இதில் தற்போது (ஜனவரி 2024) வரை கொடுக்கிறார்கள்.
யார் வாங்கலாம்?
இதுவரை கடனட்டை பயன்படுத்தாதவர்கள், அவசரத் தேவைக்குப் பயன்படுத்துபவர்கள் இதை வாங்கலாம்.
காரணம், ஆண்டுக்கட்டணம், இணைப்புக் கட்டணம் கிடையாது.
Amazon, Flipkart போன்ற தளங்களில் ICICI கார்டுக்கு தள்ளுபடி கொடுக்கும் போது பயன்படுத்த இக்கிரெடிட் கார்டு உதவும். ஆண்டுக்கட்டணம் இல்லையாததால் தேவைப்படுகிறவர்கள் பரிசீலிக்கலாம்.
ICICI Platinum Chip Credit Card கட்டணமில்லா கிரெடிட் கார்டு என்பதால், சலுகைகள், தள்ளுபடி இருக்காது.
மற்ற கிரெடிட் கார்டுகள்
SBI Cashback Credit Card Review
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?
CRED | Credit Card Management App
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி. நான் ICICI SAPPHIRO Credit card உபயோகிக்கிறேன். நான் ஐசிஐசிஐ வங்கி கணக்கு வைத்துள்ளேன். வங்கி பரிமாற்றத்தை வைத்து ஆண்டு கட்டணம் 6000 joining fee 6000 மதிப்புள்ள இந்த கார்டு எனக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக 5 லட்சம் கடன் வரம்புடன் கொடுத்தார்கள். மாதத்திற்கு bookmyshow இல் இருமுறை 2 அல்லது அதற்கு மேல் டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கான பணமே வசூலிக்கப்படும். Airport lounge இருக்கிறது அது எனக்கு அவ்வளவு உபயோகம் இல்லை. மற்றபடி நான் உபயொகமான கிரெடிட் கார்டு icici SAPPHIRO card
+1 இல் என்னவேன்றே தெரியாமல் இந்த கணக்கியல் குரூப்பில் சேர்ந்து ஆர்வமே இல்லாமல் படித்தேன்.. பாதி நாட்களுக்கு மேல் பள்ளிக்கு செல்லவில்லை. ஆனால் வங்கியில் பாடத்தின் மீது எனக்கு அதிக விருப்பம் இருந்தது..காரணம் அதை பயிற்று வித்த ஆசிரியர் திரு.முத்துமாணிக்கம். ரொம்ப எளிமையாக, அழகாக பாடம் நடத்துவார்.
பாடத்தின் நடுவில் பொதுவான பல கேள்விகள் கேட்பார். 80% கேள்விகளுக்கு நான் விடையளிக்க முயற்சி செய்வேன்.. என் ஆர்வத்தை அவரும் ஊக்குவிப்பார். ஒரு முறை கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு இரண்டிற்குமான வேறுபாட்டை மிக அழகாக விளக்கி சொல்லி அவரின் பாராட்டை வகுப்பில் பெற்றேன். +2வில் நான் வங்கியில் பாடத்தில் 186 மதிப்பெண் பெற்றேன்.
கல்லூரி பருவத்தில் நான் வியந்து பார்த்த ஒரு வங்கி..icici வங்கி தான்.. அந்த சமயத்தில் இவர்களது சேவை மற்ற வங்கிகளை காட்டிலும் தரமாக இருக்கும்.. தற்போதைய நிலை எனக்கு தெரியவில்லை. எப்போதும் போல கடனட்டை வாங்க ஆர்வம் இல்லை.. ஆனால் அது குறித்து தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் உண்டு.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ஹரிஷ்
“வங்கி பரிமாற்றத்தை வைத்து ஆண்டு கட்டணம் 6000 joining fee 6000 மதிப்புள்ள இந்த கார்டு எனக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக 5 லட்சம் கடன் வரம்புடன் கொடுத்தார்கள்.”
சிறப்பான சலுகை. இது போன்று அவ்வப்போது கொடுப்பார்கள்.
“மாதத்திற்கு bookmyshow இல் இருமுறை 2 அல்லது அதற்கு மேல் டிக்கெட் எடுத்தால் ஒரு டிக்கெட்டிற்கான பணமே வசூலிக்கப்படும்.”
இதுவும் நல்ல சலுகை. இது போன்ற ஒன்றுக்காக பார்த்துக்கொண்டுள்ளேன்.
AXIS Airtel கார்டு இன்னும் கிடைக்கவில்லை.
@யாசின்
“ஒரு முறை கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு இரண்டிற்குமான வேறுபாட்டை மிக அழகாக விளக்கி சொல்லி அவரின் பாராட்டை வகுப்பில் பெற்றேன்.”
அப்பவே அப்படி 🙂
“+2வில் நான் வங்கியில் பாடத்தில் 186 மதிப்பெண் பெற்றேன்.”
நானும் இதே பாடம் 🙂 .
“கல்லூரி பருவத்தில் நான் வியந்து பார்த்த ஒரு வங்கி..icici வங்கி தான்.”
நான் முதன் முதலில் துவங்கிய வங்கி கணக்கு.
“தற்போதைய நிலை எனக்கு தெரியவில்லை”
தற்போது HDFC க்கு அடுத்த நிலையில் உள்ளது. சிறப்பான சேவை, இலாபம்.
“கடனட்டை வாங்க ஆர்வம் இல்லை.. ஆனால் அது குறித்து தெரிந்து கொள்வதில் அலாதி ஆர்வம் உண்டு.”
நான் கூட இவை பற்றியே உங்களுக்கு பிடிக்காது என்று நினைத்தேன்.