முரசொலி விகடன்

7
முரசொலி விகடன்

பாரம்பரியமிக்கப் பத்திரிகையாக இருந்த ஆனந்த விகடன் தற்போது முரசொலி விகடன் என்று மாறி விட்டது. Image Credit

முரசொலி விகடன்

கடந்த சில வருடங்களாகவே திமுக ஆதரவு பத்திரிகையாக விகடன் மாறியது அனைவரும் அறிந்தது. தற்போது ஆதரவிலிருந்து முழுக்க முரசொலியாகவே மாறி விட்டது.

திமுக அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலிக்கு சற்றும் குறையாமல் தொடர்ந்து பாஜக எதிர்ப்பு செய்திகளைப் பதிவிட்டு வருகிறது.

இதோடு திமுக செய்திகளுக்கு முட்டுக்கொடுத்து வருகிறது.

அண்ணாமலை

திமுகக்கு மிகப்பெரிய தலைவலியாக அண்ணாமலை உள்ளார். இதற்கு முன் இருந்த பாஜக தலைவர்கள் திமுகவை எதிர்த்தாலும் அண்ணாமலை அளவுக்கு எதிர்க்கவில்லை அல்லது அந்த நேரத்தில் அதிமுக முக்கிய எதிரியாக இருந்தது.

ஆனால், அண்ணாமலை Aggressive ஆகச் செயல்படுகிறார். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொண்டுள்ளார்.

அமைச்சர்களால் தூக்கம் போனதாக ஸ்டாலின் கூறினாலும், இன்னொரு காரணம் அண்ணாமலையின் குடைச்சல்.

எந்த ஊழலையும் விட்டு வைக்காமல் ஆதாரத்துடன் வெளியிட்டு நெருக்கடி கொடுக்கிறார்.

கோவை தற்கொலை தாக்குதலில், அண்ணாமலை தலையீடு இல்லையென்றால், இதை ஒன்றும் இல்லாமல் செய்து இருப்பார்கள்.

எனவே, அண்ணாமலையைச் சமாளிக்க முடியாமல் திமுக திணறி வருகிறது.

அண்ணாமலையெல்லாம் ஒரு ஆளா! என்று திமுகவினர் வெளியே கூறினாலும் அவர்கள் உள் மனது கூறும் அவரின் பலம் என்னவென்று.

திமுகவினருக்கு படிக்க எரிச்சலாக இருந்தாலும், கசப்பான உண்மை.

ஊடகங்கள்

90% ஊடகங்கள் திமுக சார்புடையவை என்பது அனைவரும் அறிந்தது. அதில் யார் எவ்வளவு மோசம், பரவாயில்லை என்பதே இங்கே கேள்வி.

துவக்கத்தில் அவ்வப்போது பாஜக எதிர்ப்புச் செய்திகளை விகடன் வெளியிட்டு வந்தது, தற்போது முழு நேர பணியாக்கிக்கொண்டது.

அதிலும் அண்ணாமலையை எவ்வளவு கீழிறக்க முடியுமோ அவ்வளவையும் முரசொலியை விட அதிகம் செய்து வருகிறார்கள்.

கேலி சித்திரம், மீம்ஸ், கிண்டலடிக்கும் கட்டுரை, பொய்யான செய்திகளை உண்மை போலப் பகிர்வது என்று இதே வேலையாக உள்ளார்கள்.

விகடன் என்ற பெயருக்கு இருக்கும் மதிப்பால்! சிலவற்றை வெளியிட முடியாது என்று Timepass என்ற புத்தகத்தை முன்பு அறிமுகப்படுத்தியது.

புத்தகமாக இன்னும் வருகிறதா என்று தெரியவில்லை ஆனால், இணையத் தளமாக உள்ளது.

இதில் அண்ணாமலை மற்றும் பாஜகவை கேவலப்படுத்த வேண்டும் என்றே முழு நேரமாகச் செயல்பட்டு வருகிறது.

முன்பு Timepass கட்டுரைகளை, மீம்களை விகடன் FB யில் பகிராது ஆனால், தற்போது விகடனுக்கும் Timepass க்கும் எந்த வித்யாசமும் இல்லையென்று அனைத்தையும் பகிர ஆரம்பித்து விட்டார்கள்.

இதைப்பார்க்கும்போது தோனி படத்தில் பிரகாஷ்ராஜ் முதலில் வெட்கப்பட்டு முகத்தை மறைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருமையாவார். விகடன் நிலைமை இப்படித்தான் உள்ளது.

அதாவது மானம், மரியாதை, பத்திரிகை தர்மம், மனசாட்சி அனைத்தையும் தூக்கி குப்பையில் போட்டு விட்டு, தானும் குப்பையாகி விட்டது.

விற்பனை மந்தம்

ஏற்கனவே விற்பனை சரிந்து ஊழியர்களை விகடன் நீக்கியது. இணையத்திலும் கட்டணத்தைக் குறைக்கிறார்கள். ஆனால், கூட்டம் சேருவதாகக் காணோம்.

விகடனை படிப்பதற்கு முரசொலியையே படித்து விடலாம் என்று நினைத்து இருப்பார்கள்.

தன்னை நடுநிலை என்று காட்ட எப்போதாவது திமுகவை தாக்கி, அதாவது உண்மையைக் கூறி செய்தியை வெளியிடும் போது, மக்கள் ஆதரவு இருப்பதை மறுக்க முடியாது.

அதாவது இன்னமும் விகடன் கூறுவதற்குத் தாக்கமுள்ளது.

இதையெல்லாம் விட்டுத் திமுகவே சரணம் என்று சரணாகதி அடைந்தது காலத்தின் கோலம்.

விகடன் இனி திரும்பப் பழைய பெயரைப் பெற முடியாது. காரணம், ஒரு முறை கெட்ட பெயரைப் பெற்று விட்டால், என்ன செய்தாலும் மக்களின் சந்தேகம் போகாது.

திமுகவுக்காவது இனி விகடன் உண்மையா இருக்கட்டும்.

தொடர்புடைய கட்டுரைகள்

நடுநிலை என்பது சாத்தியமா இல்லையா?

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகிறதா? | FAQ

பிரிட்டனை பொருளாதாரத்தில் இந்தியா தாண்டியது சாதனையா?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

7 COMMENTS

  1. கிரி.. நான் விகடன் உட்பட எந்த பத்திரிக்கையும் படிப்பதில்லை.. இணையத்தில் செய்திகளை படிப்பது மட்டுமே.. முதுகலை கல்லூரி இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படிக்கும் போது இதழியலில் ஒரு பட்டயபடிப்பை பகுதி நேரமாக படித்து முதல் நிலையில் வகுப்பில் முதல் மாணவனாக தேர்ச்சியடைந்தேன்..

    அந்த பருவத்தில் பத்திரிக்கை துறையின் மீது தீவிர காதல்.. என்னுடைய வேலையை கூட பத்திரிக்கை துறையில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சில முயற்சிகள் மேற்கொண்டேன்.. அது சரி வராமல் போனதால் நான் படித்த துறையையே தேர்ந்தேடுத்தேன்.. அப்போது என் குடும்ப சூழலும் கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டும் என்றிருந்ததால் என்னால் நேரம் ஒதுக்கி பத்திரிக்கை துறையை தேர்வு செய்ய முடியவில்லை..

    ஆனால் அந்த ஏக்கம் தற்போதும் உண்டு.. சிறு வயது முதலே பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு..நான் அதிகம் வாசித்த பத்திரிக்கை தினமணி.. அந்த வாசிப்பு பழக்கம் என் தந்தையின் மூலமாக வந்தது.. ராஜிவ் காந்தி இறந்த போது எனக்கு 10 வயது.. அந்த செய்தியை தினமணியில் படித்து விட்டு, இந்தியா டுடே புத்தகத்தில் அந்த நிகழ்வின் புகைப்படங்களை பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது..

    ஊடகங்கள் ஒரு மாபெரும் சக்தி கொண்டவைகள்.. சரித்திரத்தில் பல பக்கங்களை மாற்றியதில் இவர்களின் பங்கு மிக அதிகம்.. அதுவும் குறிப்பாக மேலைநாடுகளில்.. தற்போதைய தலைமுறையினர்க்கு வாசிக்கும் பழக்கம் முற்றிலும் குறைந்து கொண்டு வருகிறது .. இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் இல்லாமல் போகி விடும்.. கைப்பேசியில் வரும் செய்திகளை மட்டும் உண்மை என இளைய சமூகம் நம்புகின்றனர்.. அந்த செய்தியின் ஆழத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நேரம் ஒதுக்கி அதன் உண்மையை தெரிந்து கொள்வதில்லை..

    விகடன் நிலை குறித்து நீங்கள் கூறியதை படிக்கும் போது வருத்தமாக இருக்கிறது.. அதே சமயம் இந்த அளவிற்கு கீழே இறங்கி விட்டதை எண்ணும் போது வெறுப்பாக இருக்கிறது.. இங்கு எல்லாவற்றையும் தீர்மானிப்பது அரசியல் கட்சிகளும் / அதன் அதிகார பலமும் தான், என்று எண்ணும் போது ஒவ்வொரு முறையும் ஆட்சிகள் மாறும் போது, காட்சிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது..

  2. @யாசின்

    “என்னுடைய வேலையை கூட பத்திரிக்கை துறையில் தான் ஆரம்பிக்க வேண்டும் என்று சில முயற்சிகள் மேற்கொண்டேன்.”

    முன்னரே கூறியுள்ளீர்கள், நினைவுள்ளது.

    “அப்போது என் குடும்ப சூழலும் கட்டாயம் வேலைக்கு சென்றாக வேண்டும் என்றிருந்ததால் என்னால் நேரம் ஒதுக்கி பத்திரிக்கை துறையை தேர்வு செய்ய முடியவில்லை”

    இது போன்ற காரணத்தாலே (Exact same scenario) என்னாலும் நான் விருப்பப்பட்டதை செய்ய முடியவில்லை.

    என்னால் இன்னும் ரயில்வே துறையில் இணையவில்லையே என்ற ஏக்கம் தொடர்ந்து கொண்டே உள்ளது. நாளுக்கு நாள் ரயில்வே துறை வளர்ச்சியைக் காணும் போது நாம் இதில் பங்கு பெற முடியவில்லையே என்ற ஏக்கம் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

    “சிறு வயது முதலே பத்திரிக்கை வாசிக்கும் பழக்கம் எனக்குண்டு..நான் அதிகம் வாசித்த பத்திரிக்கை தினமணி..”

    நானும் அப்பாவின் தூண்டுதலால் நாளிதழ் படிக்கும் வழக்கம் வந்தது. தினமணி என்று தான் நினைக்கிறேன். மந்திரவாதி மாண்ட்ரேக் “கன்னித்தீவு” போல வரும்.

    அதை ஆர்வமாக படிப்பேன்.

    நாளிதழ் படிக்கும் ஆர்வம் இன்றும் அதே அளவில் உள்ளது.

    “கைப்பேசியில் வரும் செய்திகளை மட்டும் உண்மை என இளைய சமூகம் நம்புகின்றனர்.. அந்த செய்தியின் ஆழத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நேரம் ஒதுக்கி அதன் உண்மையை தெரிந்து கொள்வதில்லை..”

    மிகச்சரி

    “இங்கு எல்லாவற்றையும் தீர்மானிப்பது அரசியல் கட்சிகளும் / அதன் அதிகார பலமும் தான், என்று எண்ணும் போது ஒவ்வொரு முறையும் ஆட்சிகள் மாறும் போது, காட்சிகளும் மாறிக் கொண்டே இருக்கிறது..”

    இது தான் நடக்கிறது.

    ஊடகங்கள் தங்கள் மதிப்பை இழந்து வருடங்களாகின்றன.

    விகடன் இந்த அளவுக்குச் செல்லும் என்று கற்பனையிலும் நினைத்ததில்லை.

  3. பாஜகவிற்கு சொம்பு தூக்கலைன்னா அது திமுக ஊடகம். பாஜக புனிதம்.. ஊடகம் திமுக கை கூலி… என்ன ஒரு கண்டுபிடிப்பு.

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பார் இலானும் கெடும்.

    உங்கள் கட்டுரையில் திமுக இதை செய்தது, அதை விகடன் சுட்டிக்காட்டவில்லை என ஒரு செய்தி தேடிபார்த்தேன். ஒன்றையும் காணோம்.

    அண்ணாமலையையும், பிஜேபியையும் எள்ளி நகையாடுகிறார்கள், எனவே அது திமுக கைக்கூலி.. என்பதை தான் சுத்தி சுத்தி எழுதிருக்கீங்க.

    //அமைச்சர்களால் தூக்கம் போனதாக ஸ்டாலின் கூறினாலும், இன்னொரு காரணம் அண்ணாமலையின் குடைச்சல்.//
    அதற்கு காரணம் கட்சியின் கொள்கைக்கு மாறாக, விமர்சிக்கதக்க வகையில் அமைச்சர்களின் நடவடிக்கை… அது சமூக ஊடகங்களின் விமர்சிக்கபடுவதால் அதை கூறிப்பிட்டார்.

    //எந்த ஊழலையும் விட்டு வைக்காமல் ஆதாரத்துடன் வெளியிட்டு நெருக்கடி கொடுக்கிறார்.//
    அப்படி எந்த ஊழலை ஆதாரத்துடன் வெளியிட்டார். பொங்கல் பரிசு, டெண்டர் என வெறும் குற்றச்சாட்டை மட்டும் வைத்துவிட்டு நகர்ந்துவிட்ட்டார்.
    அப்படி ஆதாரம் இருந்தால், வழக்கு தொடுக்காமல் வேடிக்கை பார்க்குமா பாஜக. வெறும் வாயை மெல்லும் பாஜகவிற்கு அவில் கிடைத்தால் சும்மா இருப்பார்களா?

    //கோவை தற்கொலை தாக்குதலில், அண்ணாமலை தலையீடு இல்லையென்றால், இதை ஒன்றும் இல்லாமல் செய்து இருப்பார்கள்.//
    கோவை தாக்குதல் பிஜேபிக்கு கிடைத்த அவுல், சும்மா விடுவார்களா. அதை அவர் கையாண்ட விதம் மிகமிக மோசம், தமிழகத்தில் எந்த கட்சியும் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள். பதட்டமான பகுதியில் பந்த் அறிவிப்பு, காவல்துறையில் மதசார்ப்பு என பொய்யான குற்றச்சாட்டு….

    கோவை தாக்குதல், மத்திய அரசின் தோல்வியும் கூட. அவர்களின் உளவு அமைப்பு, NIA என்ன செய்து கொண்டிருந்தது..மாநில காவல்துறை தான் முழு பொறுப்பு என சொல்லும் பாஜகவின் முழு பூசணியை சோற்றில் மறைக்கும் வேலையை செய்ய வேண்டாம்.

    //90% ஊடகங்கள் திமுக சார்புடையவை என்பது அனைவரும் அறிந்தது. அதில் யார் எவ்வளவு மோசம், பரவாயில்லை என்பதே இங்கே கேள்வி.

    துவக்கத்தில் அவ்வப்போது பாஜக எதிர்ப்புச் செய்திகளை விகடன் வெளியிட்டு வந்தது, தற்போது முழு நேர பணியாக்கிக்கொண்டது.

    அதிலும் அண்ணாமலையை எவ்வளவு கீழிறக்க முடியுமோ அவ்வளவையும் முரசொலியை விட அதிகம் செய்து வருகிறார்கள்.

    கேலி சித்திரம், மீம்ஸ், கிண்டலடிக்கும் கட்டுரை, பொய்யான செய்திகளை உண்மை போலப் பகிர்வது என்று இதே வேலையாக உள்ளார்கள்.//
    //இதில் அண்ணாமலை மற்றும் பாஜகவை கேவலப்படுத்த வேண்டும் என்றே முழு நேரமாகச் செயல்பட்டு வருகிறது.//
    வட நாட்டு 90% ஊடகங்கள் பிஜேபி சார்பில் செயல்படுகின்றன, அதை பற்றி வாய் திறக்க மாட்டீர்கள்.

    இங்கேயும் ஊடகங்களை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். மாரிதாஸின் நியூஸ்18 குற்றசாட்டு, அண்ணாமலையின் தலைவரானதும் பேசிய பேச்சு, தமிழக ஊடகங்களுடன் இணை அமைச்சர் முருகன் நடத்திய அலுவலுக சம்பந்தமற்ற கூட்டம்…

    உண்மையில் தமிழக மக்களுக்கு பிஜேபி மீதும் மோடி மீதும் இருக்கின்ற பார்வையே, ஊடகங்களை மாற்றுகின்றன. ஊடகங்கள் அதை பிரதிபலிக்கிறது.

    வட இந்திய ஊடகங்களில் பார்பனிய ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக சமிபத்தில் அறிக்கை வெளியானது. தமிழக ஊடகத்தில் பார்பனிய ஆதிக்கம் இல்லாதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். உண்மையின் உரைகல் தினமலம், மன்னிக்கவும் எழுத்துபிழை தினமலர் என்றுமே பிஜேபி சொம்பு தூக்கி தான். ஓ அது 10%ல வருமோ..
    விலைவாசி உயர்வு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் என பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் போது வட இந்திய ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்? அவர்களும் உங்களை போன்றவர்களாக இருப்பார்களோ, இந்து மத கடவுளையும், நம்பிக்கைகளையும் போற்றி புகழும் ஆட்சியாளர்கள் வேண்டும், மற்ற எந்த பிரச்சனையும் எங்களுக்கு முக்கியமில்லை.

    அண்ணாமலை ஊடகங்களை நடத்திய விதம் மோசம். ஏலம் விடுவது, குரங்கு என திட்டுவது. திமுக ஆர்.எஸ் பாரதி செய்யலையா என கேட்பீர்க்கள், அவர் தார்மீகமாக அடுத்த நாளே மன்னிப்பு கேட்டார், பலமுறை அது குறித்து மன்னிப்பு தெரிவித்துவிட்டார். மன்னிப்பு கேட்டால் சரியாகிவிடுமா என்றால், அண்ணாமலை எங்குமே அது குறித்து வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

    அண்ணாமலை கூச்சமில்லாமல் பொய் சொல்கிறார். முதல்வரின் வெளிநாட்டு பயணம், டெண்டர் விசயத்தில் டெண்டர் கொடுக்கும் முன்பே ஊழல் நடந்ததாக குற்றசாட்டு, லாவண்யா விவகாரம், நீட் தேர்வில் பாஸ் ஆனதாக ஒரு மாணவியை வைத்து நடத்திய நாடகம், காவல்துறையின் மதம் சார்ந்த குற்றசாட்டு, 20000 புத்தகம் படித்தது. 200000 கேஸ் போட்டது…
    EWS எல்லா சாதி, மதத்திற்கும் பொருந்தும் என்ற சமீப பொய் உட்பட…
    https://youturn.in/factcheck/coimbatore-car-blast-annamalai.html
    https://youturn.in/factcheck/intelligence-officers-missionaries-annamalai.html
    https://www.youtube.com/watch?v=8ohWXDeU1Ds
    https://www.youtube.com/watch?v=aW1AsstPLHs
    அண்ணாமலைக்கு

    அண்ணாமலையை விடுங்கள். புனித பிஜேபிக்கு வருவோம், சமீபத்தில் நடந்த பாலவிபத்தில் 170 பேர் பலியான சம்பவத்தில் ஊழல் காரணமா? இல்லை கடவுளின் விருப்பமா?

    அடுத்த கட்சியை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் பணம் எங்கிருந்து வருகிறது? அப்படி செலவழித்து ஆட்சிக்கு வந்து ஊழல் செய்யாமல் மக்கள் பணியாற்றும் அளவிற்கு அவர்கள் தேசபக்தர்கள் என நீங்கள் நம்பலாம். நான் நம்பவில்லை.

    மற்ற கட்சியை சார்ந்தவர்கள், ஊழலுக்கு எதிரான பாஜகவில் சேர்ந்தவுடன் ஊழல் வழக்குகளில் தேக்கம் இருக்கிறதே.. ஏன்?

    சவப்பெட்டியில் ஊழல் செய்த கட்சி தான் பிஜேபி.. ஊழல் செய்யாத புனிதர்கள் இல்லை.. ஆட்சி மாறும் போது காட்சி மாறும்..

    //ஏற்கனவே விற்பனை சரிந்து ஊழியர்களை விகடன் நீக்கியது. இணையத்திலும் கட்டணத்தைக் குறைக்கிறார்கள். ஆனால், கூட்டம் சேருவதாகக் காணோம்.//
    சமூக ஊடகங்களின் தாக்கத்தாலும், இன்றைய இளைஞர்களின் மனநிலையாலும் பல ஊடகங்கள் தாக்குபிடிக்க முடியவில்லை.. குறிப்பாக அச்சு ஊடகம்.. அதுவும் விகடன் இன்று பெரும்பாலும் புத்தகம் வாங்கி படிப்பதில்லை, ஆன்லைனில் படிப்பது கூட சுருங்கி வருகிறது.. பிளாக் தளம் பெரும்பாலும் வயதானவர்கள் தளமாகிவிட்டது.. ஃபேஸ்புக் கூட…
    உங்களின் IT சார்ந்த கட்டுரைகள் அருமையாக இருக்கும். நிபுணர் ஆன உங்களுக்கு இது புரியும், இருந்தாலும் பிஜேபியை ஆதரிக்காததால் வாசகர் சரிவு என்ற பொய் எதற்கு?

  4. @Ganesh K N உங்களுக்கு ஏற்கனவே கூறி உள்ளேன். என்னைப் பற்றி எதுவுமே உங்களுக்குத் தெரியவில்லை.

    உங்களுடைய எதிர்பார்ப்பை என் மீது திணிக்காதீர்கள்.

    நான் வலதுசாரி ஆதரவாளன், எனவே அதையொட்டியே என் கருத்துகளும் இருக்கும். நான் நடுநிலை கிடையாது, அதே போல நீங்களும் கிடையாது.

    https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

    நீங்கள் நடுநிலையாக இருக்க மாட்டீர்கள் ஆனால், நான் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்!

    அது முடியாது. அது போலப் போலியாக இருக்க வேண்டிய எந்த அவசியமும் தேவையும் எனக்கில்லை.

    உங்கள் கருத்தை வைத்தே தெரிகிறது உங்களுக்கு பாஜக பிடிக்கவில்லை என்று, உங்கள் இடதுசாரி எண்ணத்துக்கு அல்லது பாஜக எதிர்ப்புக்கு ஏற்ப கட்டுரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

    அதற்கு 100% வாய்ப்பில்லை.

    நீங்கள் படிக்க வேண்டிய தளம் விகடன்! என் தளம் அல்ல.

    உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் கடந்த கட்டுரைக்கு கொடுத்தது போல வரிக்குவரி என்னால் பதில் கொடுக்க முடியும்.

    எந்த தயக்கமும் , குழப்பமும் இல்லை.

    முன்முடிவுடன், இன்னொரு சித்தாந்தத்தில் முழுக்க எதிர்நிலையில் இருப்பவருக்கு நான் பதில் கூறுவது நான் சுவற்றில் முட்டிக்கொள்வதற்கு சமம்.

    என்ன விளக்கம் கொடுத்தாலும் இன்னொரு கட்டுரையில் வந்து இதே போல கேட்டுக்கொண்டு இருப்பீர்கள்.

    ஆரோக்கியமான விவாதத்துக்கு என்றுமே தயாராக உள்ளேன், விதண்டாவாதத்துக்கு அல்ல.

    “குறிப்பாக அச்சு ஊடகம்.. அதுவும் விகடன் இன்று பெரும்பாலும் புத்தகம் வாங்கி படிப்பதில்லை, ஆன்லைனில் படிப்பது கூட சுருங்கி வருகிறது.”

    இதற்கு தான் கூறுகிறேன். உங்களுக்கு என்னை பற்றி எதுவும் தெரியவில்லை என்று.

    இக்கட்டுரையில் கொடுத்த சுட்டியை கூட படிக்காமல் இதை கூறி இருக்கிறீர்கள்.

    இதற்கான பதிலை நீங்கள் கூறியதை ஏற்கனவே கட்டுரையாக எழுதி விட்டேன்.

    https://www.giriblog.com/vikatan-sales-has-down/

    “பிளாக் தளம் பெரும்பாலும் வயதானவர்கள் தளமாகிவிட்டது.. ஃபேஸ்புக் கூட…”

    இதற்கும் 2015 ம் ஆண்டே பதிலளித்து விட்டேன். நான் ஒரு practical நபர் கற்பனை உலகில் மிதப்பவன் அல்ல.

    https://www.giriblog.com/blog-ending/

    https://www.giriblog.com/google-adsense-tamil/

    https://www.giriblog.com/youngsters-not-preferred-facebook/

    Blog படிப்பவர்கள் குறைந்து விட்டார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். இது ஒன்றும் அதிசயம் இல்லை.

    இங்கே நான் எழுதுவது என் திருப்திக்காக மட்டுமே, அடுத்தவர்களைத் திருப்தி செய்ய அல்ல.

    எழுதுவது எனக்கு Passion மற்றவர்களைத் திருப்தி செய்யவோ, பணம் சம்பாதிக்கவோ நான் இங்கே எழுதிக் கொண்டு இருக்கவில்லை.

    எனவே, விருப்பமுள்ளவர்கள் தொடர்கிறார்கள் மற்றவர்கள் வேறு பிடித்த தளத்தை படிக்கிறார்கள்.

    “பிஜேபியை ஆதரிக்காததால் வாசகர் சரிவு என்ற பொய் எதற்கு?”

    இதற்கும் ஏற்கனவே பதிலளித்துள்ளேன், கட்டுரை எழுதியுள்ளேன். அதையும் நீங்கள் படிக்கவில்லை.

    https://www.giriblog.com/vikatan-sales-has-down/

    170 ஊழியர்களை பணி நீக்கம் செய்தால், நிறுவனம் இலாபத்தில் சென்று கொண்டு இருப்பதாக நீங்க நம்பலாம், common sense உள்ளவர்களுக்கு புரியும் நான் கூறுவது பொய்யா உண்மையா என்று.

    கணேஷ் நீங்கள் எதிர்பார்க்கும் கட்டுரைகள் இங்கே இருக்காது.

    எனவே, விகடன் போன்ற நீங்கள் நம்பும் நடுநிலையான தளங்களைப் படிப்பதே உங்களுக்கு நல்லது.

    நன்றி.

  5. @panani. பிஜேபி செய்த செய்யும் நல்ல திட்டங்களை ஆதரித்தால் அவர்கள் சங்கி என்றால் சந்தோஷமாக அந்த பட்டத்தை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் இப்போது கோவில் பற்றி பேசினால் ஒரு இந்து இந்து மதம் பற்றி பற்றோடு இருந்தாலே அவனை சங்கி என்று அழைப்பது. இதையே ஒரு இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவர் அவர்கள் மதம் மீது பற்றோடு இருக்க இங்கு சுதந்திரம் உண்டு ஆனால் ஒரு இந்து அவர்கள் மதம் மீது பற்றோடு இருந்து அவர்கள் தெய்வத்தை பற்றி பேசினாலோ எழுதினாலோ அவர்கள் உங்களுக்கு சங்கி. ஆமாம் நாங்கள் சங்கி தான். இந்த சங்கி என்ற சொல்லுக்கு பயந்து எங்கள் மதத்தை விட்டுக்கொடுக்கவோ மத அடையாளங்களை வெளிக்காட்டவோ தயங்கப்போவதி்ல்லை. நாங்கள் அப்படி தான் பிஜேபியை ஆதரிப்போம். உங்களுக்கு எப்படி திருட்டு திமுகவை ஆதரிக்க உரிமை உள்ளதோ அதே போல எங்களுக்கு தேசியத்தை காக்கும் பிஜேபியை ஆதரிக்கும் கடமை உரிமை உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!