ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

5
ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

ன்னய்யா இது ஃபேஸ்புக்குக்கு வந்த சோதனை! ஆமாம் இந்தச் சோதனை வந்தது இந்தியாவில் இல்லை, இங்கிலாந்து அமெரிக்க நாடுகளில். Image Credit

இங்குள்ள இளையவர்கள் தற்போது அதிகமாகப் பயன்படுத்துவது Snapchat செயலி, இரண்டாவது Instagram. அதிலையும் Snapchat வளர்ச்சி அளவுக்கு ஃபேஸ்புக்கோட Instagram இல்லை என்று ஆய்வு கூறுகிறது.

Snapchat

Snapchat பற்றி நம்மில் பலருக்கு தெரியவில்லை என்றாலும் அந்த நிறுவனத்தின் தலைவர் இந்தியர்களைப் பற்றிக் கூறிய விமர்சனம் உங்களுக்கு மறந்து இருக்காது.

Snapchat பணக்கார நாடுகள் பயன்படுத்துவது, இந்தியா போன்ற ஏழை நாடுகளுக்கு அல்ல” என்று பேட்டி கொடுத்தார்.

அப்படியொரு செயலி இருக்கு என்பதையே அறியாமல் இருந்த நம்ம ஆளுங்க கொந்தளித்து, அதை நிறுவித் திரும்ப அதை நீக்கி பதிலடி கொடுத்தார்கள் 😀 😀 .

அடப்போங்கப்பா! ரொம்பப் போர்

இங்கிலாந்தில் ஃபேஸ்புக் பயன்படுத்திய 12 முதல் 24 வயது வரை உள்ள இளையோர் 7 லட்சம் முதல் 6.7 மில்லியன் வரை “என்னது ஃபேஸ்புக்கா! அது எல்லாம் எப்போ லாகின் பண்ணுனோம்னே தெரியல” ன்னு சொல்றாங்களாம்.

ஃபேஸ்புக்கில் கடைய சாத்திய இளையோர்கள் 43% பேர் 2018 ல் Snapchat க்கு நகர்ந்து விடுவார்கள் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இது 2015 ம் ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம்.

அமெரிக்கால 50% இளையோர் மாதத்துக்கு ஒரே ஒரு முறை தான் ஃபேஸ்புக்கில் நுழைகிறார்களாம். என்ன கொடுமை சார்!

தம்பி! இங்க வாங்க தம்பி

ஆனாலும் ஃபேஸ்புக்குல புதிதாகப் பலர் இணைகிறார்கள், யார்ரா அவங்க என்று பார்த்தால்..

தம்பி இந்த ஃபேஸ்புக்கு ஃபேஸ்புக்குனு சொல்றாங்களே.. அதை எப்படிப் படிக்கிறது? அதுல எத்தனை பக்கம் இருக்கும்? பெரிய புத்தகமா இருக்குமா?” ன்னு கேட்கும் வயதானவர்களாம் 😀 .

நண்பர் “அங்கே தாங்க இப்படி.. தமிழ்நாட்டுல ஏகப்பட்ட போராளிகள் இருக்காங்க, அவங்க ஃபேஸ்புக்கை கை விட மாட்டாங்க” என்று கூறினார் 🙂 .

இதையெல்லாம் பார்த்துத் தான் நம்ம “பிரதர் மார்க்” கலவரமாகி அதையும் இதையும் ஃபேஸ்புக்கில் மாற்றிட்டு இருக்காரு போல.

சரி! அப்படி என்னதான் Snapchat ல் இருக்குனு பார்த்தேன்… ம்ஹீம் ஒன்றும் புரியலை. நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன் போல 🙂 .

5 COMMENTS

 1. வெகு நாட்கள் facebook ல் நுழையவில்லை என்றால் “ரொம்ப நாளா ஆளையே காணோம் வந்துட்டு போங்க” அப்டினு மெயில் வருது, அந்த செய்தியையும் சட்டை பண்ணலைனா “கடவுச்சொல் மாற்ற வேண்டுகோள் வைத்தீர்களா இதோ உங்கள் password change request code ——– ” என்று மின்னஞ்சல் வருகிறது. “இந்த வேண்டுகோள் நீங்கள் வைக்க வில்லை என்றால் இங்கு click செய்யவும்” என்று மின்னஞ்சலில் ஒரு வரி இருக்கும் அதில் சென்று click செய்தால் “உங்கள் செய்தி கிடைத்தது இனி நீங்கள் பாதுகாப்புடன் உள்நுழையலாம்” என்று தெரிவிக்கிறது. இது உண்மையிலேயே பாதுகாப்பு குறைபாடா அல்லது ஆளுங்கள எப்படியாவது இழுத்துவந்து பார்க்க வைக்கும் உத்தியா தெரியவில்லை.

 2. முன்பு தகவலை சாட் மூலம் பறிமாறினார்கள் அதன் பின் பேஸ் புக் அதன் பின் டிவிட்டர் அதன்பின் வாட்ஸப்….இதையெல்லாம் இந்த தலைமுறை முதியவர்களுக்கானது ஒதுக்கிவிட்டு இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட்டை பயன்படுத்துகிறார்கள். இதைல் என் குழந்தையும் அடக்கம். இந்த ஸ்நாப்சாட்டில் செய்தியை வரிகளாக டைப்பண்னுவதர்கு பதிலாக அதை போட்டோ மூலம் சொல்லுகிறார்கள்.அதாவது போட்டோ போட்டு இரு வார்த்தை மட்டும் டைப் பண்ணுகிறார்கள் இதில் உள்ள ப்யூட்டி என்னவென்றால் பெறுநர் அதை பார்த்த சில நொடிகளில் அந்த தகாவல் அழிந்துவிடும் வேண்டுமென்றால் நாம் உடனடியாக் ஸ்கீரின் சாட் செய்து சேமித்து கொள்ளலாம். இதை தவறாக பயன்படுத்தும் பெண் குழந்தைகலும் உண்டு

 3. (சரி! அப்படி என்னதான் Snapchat ல் இருக்குனு பார்த்தேன்… ம்ஹீம் ஒன்றும் புரியலை. நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன் போல)
  இதே தான் எனக்கு Instagram க்கும் தோணுது. அப்படி என்ன இருக்கன்னு நானும் interest ஆ யூஸ் பண்ற மாதிரி நடிச்சேன். ஆனால் எனக்கு Instagram சுத்தமா உபயோகமே இல்ல. அடுத்தவங்க போடுற போஸ்ட், பார்க்கறேன். அதுக்கு தான் எனக்கு யூஸ் ஆகுது. Instagram எதுக்கு? அது எப்படி ப்ரயோஜனம் ஆ யூஸ் பண்றது. நிறைய ஆப் பிரபலங்களுக்கு தான் நல்ல உபயோகமா இருக்கு. Instagram ல நான் photo போட்டு நானே தான் பார்க்க வேண்டி இருக்கு. ?

 4. @someswaran அது உங்களை தொடர்ச்சியாக அவர்களுடன் வைத்து இருக்க நினைக்கும் தந்திரம். நாம் மறந்தாலும் இப்படி செய்து நம்மை இழுப்பார்கள்.

  @மதுரைத்தமிழன் ஓ! இது தான் விஷயமா?! ஃபேஸ்புக்கில் பெற்றோர் கண்காணிப்பு இருப்பதால், இளையோர்கள் பலரும் இதை தேர்வு செய்கிறார்கள் போல.

  தகவலுக்கு நன்றி 🙂 . கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது. நண்பர் ஒருவரும் இது குறித்து கூறினார்.

  @ஹரிஷ் ஹா ஹா ஹா

  “அப்படி என்ன இருக்கன்னு நானும் interest ஆ யூஸ் பண்ற மாதிரி நடிச்சேன்.”

  என்னைப்போல ஒருவர் 🙂

  “நிறைய ஆப் பிரபலங்களுக்கு தான் நல்ல உபயோகமா இருக்கு. Instagram ல நான் photo போட்டு நானே தான் பார்க்க வேண்டி இருக்கு. ? ”

  சூப்பர் 🙂 ஓரளவுக்காவது பிரபலமாக இருந்தால் அல்லது பொண்ணுங்களுக்கு வேணா இது பொருந்தும்.

  நம்ம அதுக்கு சரி பட்டு வரமாட்டோம் போல 🙂 .

 5. (சரி! அப்படி என்னதான் Snapchat ல் இருக்குனு பார்த்தேன்… ம்ஹீம் ஒன்றும் புரியலை. நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன் போல)… உங்களுக்குகே இந்த நிலைமைனா??? என்னை பற்றி சொல்ல தேவையில்லை… பொதுவாக தொழில்நுட்பங்களிலிருந்து விலகி நிற்க தான் ஆசைப்படுவேன்.. இருப்பினும் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் போகி விடுகிறது… பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here