“Blog” பழைய “பன்னீர் செல்வம்” ஆகுமா? :-)

7
Google AdSense

மூச்சை நிறுத்திக்கொண்டு இருக்கும் வலையுலகு மீண்டும் புத்துணர்ச்சி பெற ஒரு வாய்ப்பை கூகுள் அளித்துள்ளது, அது தான் தமிழில் AdSense. Image Credit

AdSense

10 வருடங்களுக்கு மேல் எழுதி வந்தாலும், நான் இதில் இருந்து ₹ 1  கூடச் சம்பாதித்தது இல்லை.

ஒரு தளத்துக்கு எழுதி கொடுத்த வகையில் ஒரு முறை கொடுத்தார்கள் அடுத்த முறை பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டார்கள். 

இதன் பிறகு யாருக்கும் எழுதித் தருவதில்லை.

WordPress தளத்துக்கு மாறிய பிறகு தள வாடகை, டொமைன் கட்டணம் என்ற வகையில் வருடம் ₹ 3500 எனக்குச் செலவு ஆகிறது ஆனால், எந்த வருமானமும் இல்லை.

Read: வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை

என்னைப்போலவே தமிழில் எழுதும் பலருக்கும் இந்த வருத்தமுள்ளது.

சமூகத்தளங்கள் பிரபலமானதால், பெரும்பான்மையானவர்கள் ட்விட்டர் ஃபேஸ்புக் என்று சென்றதால், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலே இதிலே தொடர்ந்து எழுதுகிறார்கள்.

இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில காலங்களில் வலைத்தளங்கள் என்பதே இருக்காது என்ற நிலை தான் தற்போது வரை இருந்தது ஆனால், தமிழ் விளம்பரம் இதற்கு “கமா” வைத்துள்ளது.

விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளதால், பலரும் வலைத்தளத்தில் எழுத ஆர்வம் காட்ட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

சமூகத்தளங்களில் எழுதினால் விரைவில் பிரபலமாகலாம் ஆனால், விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது என்பதற்கான வாய்ப்பு (Pages தவிர்த்து) இல்லை அல்லது மிகக் குறைவு.

எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படலாம்.

Readசென்னையில் நடந்த “Google for தமிழ்”

1000 கோடி

தமிழ்த் தளங்கள் மூலம் வரும் வருமானம் விரைவில் 1000 கோடியை எட்டும் என்று கூறினார்கள்.

இதன் இன்னொரு அர்த்தம் தமிழ்த் தளங்களின் எண்ணிக்கை அதிகளவில் உயரும். தமிழில் எழுதுபவர்கள் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும்.

கப்பல்ல வேலை கிடைக்குதுன்னு சென்று திரும்பப் பழைய வேலைக்கே கவுண்டமணி வருவது போலப் பலர் வலைத்தளம் (Blog) திரும்பி வர வாய்ப்புள்ளது 🙂 .

விளம்பரங்கள்

என் தளத்தில் விளம்பரங்களை வைக்க விடுத்த கோரிக்கையை கூகுள் ஏற்றுக்கொண்டதால், இனி விளம்பரங்கள் என் தளத்தில் இருக்கும்.

கூகுளே “Auto Ads” என்ற தொழில்நுட்பம் மூலம் தானாகவே விளம்பரங்களை நுழைப்பதால், நானாக எதுவும் செய்ய வேண்டிய தேவையில்லை என்பது சிறப்பு.

10 வருடங்களுக்கு மேலாக எழுதுகிறேன், ஒன்றிண்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது ஆனால், எழுத்தின் மூலம் சம்பாதித்தது இல்லை, அது பற்றி யோசித்ததும் இல்லை.

எழுத்தும் உழைப்பு தான், அதை விருப்பமாக செய்து வருகிறேன். எழுத்துக்கான அங்கீகாரமாக விளம்பரத்தைக் கூகுள் கொடுக்கும் போது அதைப் பயன்படுத்த நினைக்கிறேன்.

அதோடு வருமானம் வருவதற்கான மற்ற வழிகளையும் முயற்சித்து வருகிறேன்.

பார்ப்போம், உண்மையிலேயே விளம்பரங்கள் மூலம் வருமானம் கிடைத்தால் நிச்சயம் விவரங்களை உங்களுடன் பகிர்கிறேன் 🙂 .

பிற்சேர்க்கை

விளம்பரங்கள் மூலம் வருமானம் வந்தது ஆனால், அது படிப்பவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதால், தொடர விரும்பவில்லை.

அதோடு தளத்தின் வேகத்தையும் குறைகிறது.

இலாபத்துக்காக இத்தளத்தை நடத்தவில்லை. எழுதுவதன் மீதுள்ள ஆர்வம் காரணமாகவே தளத்தைத் தொடர்கிறேன்.

படிப்பதற்கு எளிதாக இருக்க வேண்டும் என்பதே என் முதன்மை விருப்பம்.

கொசுறு

விளம்பரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் தேவை என்றால், கருத்துப் பகுதியில் கேளுங்கள். மிக எளிமையாக இதை செயல்படுத்தலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்

facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?

தமிழ் ஊடகங்களுக்குத் தாழ்மையான வேண்டுகோள்

தமிழ் முக்கியத்துவம் குறைய நீங்களும் ஒரு காரணம்!

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது கடினமா?!

எழுத்தாளர் “சுஜாதா” தரும் எழுத்து ஆலோசனைகள்

படிப்பதில் Skip தெரியும்.. “Skim” தெரியுமா?!

Writer’s Block / கற்பனைத் திறன் / Passion

இங்கு நல்ல மீன்கள் விற்கப்படும்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. கூகுள் ரீடர் சேவை நிறுத்தப் பட்டாலும், இன்னும் பிற ரீடர் மூலம் படிக்கும் ஆட்கள் (என் போல்) நிறைய இருக்கிறார்கள். அவர்களை உங்கள் தளத்திற்கு வர வைக்க என்ன செய்ய போகிறீர்கள்?

  2. தங்கள் தளத்தில் உள்ள விளம்பரங்களை பார்ப்பவர்கள் அதை சொடுக்கினால் மட்டுமே நீங்கள் பயனடைய முடியுமா?

  3. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் உங்கள் பணியை தொடர்ந்து வருவது சிறப்பு!!! எதிர்காலத்திலும் உங்கள் பணி தொடரவேண்டும் என்பது தான் பல நண்பர்களின் எதிர்பார்ப்பு… பின்னுட்டம் ஈடுபவர்களின் எண்ணிக்கை வேண்டுமானால் தற்போது குறைந்து இருக்கலாம்… ஆனால் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்காது என நம்புகிறேன்… GOOGLE இன் முயற்சி உங்களை ஊக்கப்படுத்தும் என எண்ணுகிறேன்… வர வருமானத்தில் 50 % பங்கினை மறக்க வேண்டாம் கிரி… பகிர்வுக்கு நன்றி…

  4. அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டிருந்தபோதும் தங்களைச் சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.

  5. @ஜோதிஜி ஐந்து பேராவது கேட்டால் எழுதலாம் என்று இருக்கிறேன். இல்லையென்றால் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

    @அழகேசன் நீங்கள் Feedly பற்றி கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஆமாம், நான் இன்னும் Full Feed கொடுத்து வருகிறேன். அதனால், உங்களுக்கு Reader மற்றும் மின்னஞ்சலில் என்னுடைய கட்டுரைகள் முழுமையாக வரும். என்னுடைய தளத்துக்கு வர வேண்டும் என்று அவசியமில்லை.

    முன்பு விளம்பரங்கள் இல்லை அதனால் Full Feed கொடுத்தேன், தற்போது விளம்பரங்களுக்கு கூகுள் அனுமதித்து இருப்பதால், எதிர்காலத்தில் Full Feed கொடுப்பதை நிறுத்தினாலும் நிறுத்துவேன்.

    Teaser மட்டும் கொடுத்தால், முழுமையாக படிக்க தளத்துக்கு தான் வந்தாக வேண்டும்.

    தற்போது தளத்துக்கு வர வைக்க Full Feed கொடுக்காமல் Teaser மட்டும் கொடுத்தாலும், பெரியளவில் யாரும் தளத்துக்கு வந்து படிக்க விருப்பப்படுவதில்லை.

    எனவே, குழப்பத்தில் இருக்கிறேன்.

    @சுரேஷ் ஆமாம், இல்லையென்றால் எத்தனை பேர் பார்க்கிறார்கள் என்ற அளவிலும் கிடைக்கும் ஆனால், அது மிக மிகக் குறைவான பணமாக இருக்கும்.

    @யாசின் ம்க்கும் நீங்க நினைக்கும் அளவு எல்லாம் வராதுங்க. தற்போது தளம் வந்து படிப்பவர்கள் எண்ணிக்கை மிகக் குறைந்து விட்டது.

    @நீச்சல்காரன் அடடா! 🙁 நானும் உங்களை பார்த்து இருப்பேனே! உங்களுடைய சந்திப்பிழை திருத்தி இல்லாமல் ஒரு கட்டுரை கூட நான் எழுதியது கிடையாது.

    இதற்கு நன்றி சொல்லவாவது உங்களை சந்தித்து இருக்க வேண்டும். உங்களின் இந்த சேவையை தொடருங்கள், என்னைப் போல பலருக்கு உதவியாக உள்ளது.

  6. தற்போதைய நிலவரப்படி உங்களின் கூகுள் விளம்பர வருமானம் தோராயமாக மாதம் எவ்வளவு கிடைக்கிறது கிரி?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here