UPI யில் கிரெடிட் கார்டையும் இனி இணைக்கலாம் என்று NPCI அறிவித்துள்ளது. UPI கிரெடிட் கார்டு இணைப்பு பற்றிப் பாப்போம். Image Credit
UPI
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் மிக முக்கியப் பங்காகச் செயலாற்றி வருவது UPI. இதன் அறிமுகத்துக்குப் பிறகு உலக நாடுகள் அனைத்தையும் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மிஞ்சி இந்தியா முதலிடம் பெற்று விட்டது.
அவ்வப்போது இதில் மாற்றங்களை அறிவித்து, குறைகளைக் களைந்து வந்த NPCI நிறுவனம், UPI யில் அடுத்தப் பாய்ச்சலாகக் கிரெடிட் கார்டை இணைப்பதாக அறிவித்துள்ளது.
தற்போதைக்கு NPCI கட்டுப்பாட்டில் உள்ள இந்திய நிறுவனமான RuPay க்கு முதலில் அனுமதி அளித்துள்ளது. பின்னர் Visa, Master Card க்கும் அனுமதி அளிக்கப்படும் என்று கூறியுள்ளது.
UPI கிரெடிட் கார்டு இணைப்பு என்றால் என்ன?
தற்போது கடையில் கட்டணம் செலுத்த (QR Code) நமது வங்கிக்கணக்கின் மூலமாகப் பணத்தைச் செலுத்துகிறோம்.
இதையே கிரெடிட் கார்டு வழியாகச் செலுத்துவதே UPI கிரெடிட் கார்டு வசதி.
வங்கி கணக்கு வழியாகவும் செலுத்தலாம், கிரெடிட் கார்டு இருந்தால், அதன் வழியாகவும் செலுத்தலாம், முழுக்க நமது விருப்பம்.
குறிப்பிடத்தக்க தகவல்கள்
- UPI பயன்படுத்தும் போது கடைகளுக்கு MDR எனப்படும் Merchant Discount Rate (பரிவர்த்தனைக் கட்டணம்) கிடையாது. எனவே, சேவைக் கட்டணம் இல்லாததால் கடைகளில் அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
- ஆனால், கிரெடிட் கார்டுக்கு MDR கட்டணம் 2% – 2.5% வசூலிப்பார்கள். எனவே, கட்டணம் வசூலிக்கப்படுமா இல்லையா என்பதை இன்னும் NPCI கூறவில்லை.
- ஒருவேளை கட்டணம் செலுத்த வேண்டியிருந்தால், கடைகளில் கிரெடிட் கார்டு வசதியைக் கொடுக்கத் தவிர்ப்பார்கள். NPCI பின்னர் இதைத் தெளிவுபடுத்தும்.
- கட்டணமில்லையென்றால், UPI பயன்படுத்தும் சதவீதம் தாறுமாறாக உயரும். கடைகளில் இவ்வசதியையும் அனைவரும் கொடுப்பார்கள்.
- நமது வங்கிப் பணத்தை உடனே பயன்படுத்த வேண்டியதில்லை, 20 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை கிரெடிட் கிடைக்கும்.
- பயன்படுத்தும் தொகைக்கு ஏற்ப Reward Points கிடைப்பது கூடுதல் இலாபம்.
- கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தெரியாதவர்களுக்குத் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திக் கடனாளியாக்கி விடுவதற்கான வாய்ப்புள்ளது.
- RuPay பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை தற்போது குறைவாக உள்ளது. எனவே, Visa Master Card அனுமதிக்கப்படும் போது இதன் பயன்பாடு அதிகரிக்கும்.
- மத்திய அரசு & NPCI நிறுவனம் இந்திய அரசின் நிறுவனமான RuPay அட்டையை வளர்க்க இது போல நடவடிக்கை எடுக்கிறது, நல்ல முயற்சி.
- ஏற்கனவே RuPay வளர்ச்சியால் Visa, Master Card நிறுவனங்கள் கடுப்பில் உள்ளன. எதிர்காலத்தில் UPI வழியாக மேலும் RuPay வளர்ந்தால், இந்நிறுவனங்களுக்குச் சிக்கலாகி விடும்.
- RuPay நிறுவனத்தின் MDR (பரிவர்த்தனைக்கட்டணம்) மற்ற நிறுவனங்களை விடக் குறைவு என்பது பலரை RuPay பக்கம் திரும்ப வைத்து வருகிறது.
- ஒருவேளை கிரெடிட் கார்டு இணைப்பு வெற்றியடைந்தால் எதிர்காலத்தில் POS (Point of sale / Card Swipe) இயந்திரங்களுக்கான தேவை குறைந்து விடும்.
UPI சிறப்புகள்
இந்தியா முழுக்க 26 கோடி UPI பயனாளர்கள் உள்ளனர்.
35% ஆக உள்ள UPI பயன்பாடு இன்னும் ஐந்து வருடங்களில் (2027) 75% ஆக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2022 மே மாதத்தில் UPI வழியாக 594 கோடி பரிவர்த்தனைகளும் (Transactions) 10.4 லட்சம் கோடி பணமும் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலை வருடா வருடம் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது. இதனுடன் UPI கிரெடிட் கார்டு இணைப்பு நடக்கும் போது, UPI வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.
எதிர்காலத்தில் காகிதப் பணத்துக்கான பயன்பாடு மிகக் குறைந்து விடும்.
தொடர்புடைய கட்டுரைகள்
RuPay வளர்ச்சியால் கதிகலங்கும் Master & Visa நிறுவனங்கள்
Tokenization | RBI எடுத்த அதிரடி முடிவு
UPI Payment confirmation Sound Box
PhonePe Google Pay Paytm எது சிறந்தது?
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரெடிட் கார்டு இனைப்புக்காக காத்து கொண்டு இருக்கிறேன். குறிப்பாக Master, Visa இணைப்பு வந்த பிறகு Paytm Postpaid தேவை குறைந்துவிடும்.
கிரி, சும்மா நச்சுன்னு சுருக்கமா தெளிவா சொல்லி இருக்கீங்க!!! ரொம்ப எளிமையா புரியும் படி அழகா இருக்கு.. UPI பொறுத்தவரை இந்தியாவின் வளர்ச்சி அசுர வளர்ச்சி!!! எதிர்காலத்தில் இன்னும் வளர்ச்சி அடையும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை..
கிரெடிட் கார்டு பயன்படுத்தத் தெரியாதவர்களுக்குத் தேவையற்ற செலவுகளை ஏற்படுத்திக் கடனாளியாக்கி விடுவதற்கான வாய்ப்புள்ளது. சரியான எச்சரிக்கை.. (கண்டிப்பாக எல்லோரும் நினைவில் வைத்து கொள்ளவேண்டிய தகவல் இது..) இந்த ஒரே காரணத்துக்காக தான் இன்று வரை கிரெடிட் கார்டு வாங்கவில்லை.. வாங்க தோன்றவும் இல்லை.. இது சரியோ தப்போ தெரியல.. ஆனால் என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை
12 ஆம் வகுப்பின் போது ஆசிரியர் (பெயர் : முத்துமாணிக்கம் சார்) கிரெடிட் கார்டுக்கும் / டெபிட் கார்டுக்கும் வித்தியாசம் என்ன என்று கேட்டார்?? அந்த பருவத்தில் ரேஷன் கார்டை மட்டும் பார்த்த எங்கள் எல்லோரும், பதில் தெரியாமல் விழித்த போது நான் தினசரி செய்தித்தாளை வாசிக்கும் பழக்கம் இருந்ததால் குத்து மதிப்பாக தெரிந்ததை சொன்னேன்.. ஆசிரியர்க்கு உண்மையில் ஆச்சரியம்..VISA CARD / MASTER கார்டு என்று உதாரணம் வேறு!!! கூட படிச்ச பசங்க நான் ஏதோ EUROPE லேந்து வந்தது போல என் பதிலை கண்டு மிரண்டு விட்டார்கள்.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@ஹரிஷ்
“Master, Visa இணைப்பு வந்த பிறகு Paytm Postpaid தேவை குறைந்துவிடும்.”
உண்மை தான்
@யாசின்
“ரொம்ப எளிமையா புரியும் படி அழகா இருக்கு.”
நன்றி யாசின்
“இந்த ஒரே காரணத்துக்காக தான் இன்று வரை கிரெடிட் கார்டு வாங்கவில்லை.. வாங்க தோன்றவும் இல்லை.. இது சரியோ தப்போ தெரியல.. ஆனால் என் நிலையில் எந்த மாற்றமும் இல்லை”
வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனவே, உங்களுக்கு எது சரியோ அதை பின்பற்றுவதே உங்களுக்கு நல்லது.
மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக உடன்பாடில்லாத ஒன்றை செய்து சிக்கலில் விழுவது நல்லதல்ல.
“பதில் தெரியாமல் விழித்த போது நான் தினசரி செய்தித்தாளை வாசிக்கும் பழக்கம் இருந்ததால் குத்து மதிப்பாக தெரிந்ததை சொன்னேன்.. ஆசிரியர்க்கு உண்மையில் ஆச்சரியம்..VISA CARD / MASTER கார்டு என்று உதாரணம் வேறு!”
அப்பவே கூறி இருக்கிறீர்கள்.. 🙂 பெரிய விஷயம் தான். உங்கள் சக மாணவர்கள் வியப்படைந்ததில் வியப்பில்லை.
நீங்க 12 ம் வகுப்பு என்றால் தோராயமாக 90’s இறுதி. அப்பவே இதை பற்றி தெரிந்து வைத்துள்ளீர்கள் என்பது பெரிய விஷயம் தான்.
நண்பர் கிரி, கடன் அட்டையை UPI செயலியுடன் இணைப்பது பயனுள்ளதாக இருக்கலாம், ஆனால் கடன் அட்டையால் ஏற்கனவே பல இளைய தலைமுறைகள் குடும்ப பொறுப்பை மறந்து சேமிப்பின் தேவையை உணராமல் கடனட்டையைப் பயன்படுத்தி பல தேவையில்லாத பொருட்களை வாங்கி சீரழிந்து வருகின்றார்கள், கடன் வாங்குவதை ஏதோ பெருமையான விசயம் போன்ற உணர்வை இந்த கடனட்டை ஏற்படுத்திவிட்டது. அவசியத் தேவைக்கு கடன் வாங்குவது என்பது போய் ,இப்போது டீ, காபி சாப்பிடுவதற்கு கூட கடன் என்பது இளைஞர்களை கட்டுப்படில்லாமல் செலவு செய்ய தூண்டும். சில வருடங்களுக்கு முன் தெரிந்த இளைஞர் ஒருவர் குறைந்த சம்பளம் வாங்கிய போது குடும்பப் பெறுப்புடன் சிக்கனமாக செலவு செய்தார், ஆனால் இப்போது சம்பளம் சற்று கூடுதலான உடன் கடனட்டையை பெற்று தாறுமாறாக, அவசியமற்ற பொருட்களை வாங்கி செலவு செய்வதைப் பார்க்கும் போது மனதைக் கடினமாககுகின்றது.