ஆதார் பலருக்கு முக்கிய ஆவணமாகவும், அடையாளமாகவும் உள்ளது. இடையில் நெகிழி (பிளாஸ்டிக்) அட்டையை நிறுத்தி வைத்த UIDAI அமைப்புத் தற்போது ஆதார் PVC அட்டை வழங்கும் முறையைத் திரும்பக் கொண்டு வந்துள்ளது.
கட்டணம்
PVC அட்டையை மிக எளிதாக எவரும் பெற முடியும். Image Credit
கட்டணம் ₹50 மட்டுமே! வரி & தபால் செலவு உள்ளடக்கியது. அனைத்தும் உள்ளடக்கி ₹50 என்பது மிகக்குறைவான கட்டணமே!
ஆதார் PVC அட்டை பெறுவது எப்படி?
- https://uidai.gov.in/ Link தளத்துக்குச் செல்லுங்கள்
முகப்பில் உள்ள, PVC அட்டை விவரங்களை க்ளிக் செய்தால், பின்வரும் வசதி வரும்.

- இதில் ஆதார் எண், Security Code களைப் பதிவு செய்து, Send OTP கொடுத்தால், ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP யைக் கொடுத்து உறுதி செய்ய வேண்டும்.

- ஆதார் விவரங்களைச் சரி பார்த்த பிறகு, Make Payment க்ளிக் செய்து, அதில் உள்ள பரிவர்த்தனை வழிகளில் கட்டணம் ₹50 யைச் செலுத்தலாம்.

UPI பரிவர்த்தனையைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.
இதை முடித்த பிறகு மொபைலுக்கு விவரங்கள் குறுந்தகவலாக வரும் அல்லது அதே பக்கத்தில் விவரங்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதை வைத்து அட்டை எப்போது கிடைக்கும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
ஆதாரில் என்ன முகவரி உள்ளதோ, அந்த முகவரிக்குத் தான் தபாலில் செல்லும்.
https://uidai.gov.in/ தளத்துக்குச் சென்று அட்டையைப் பெறுங்கள் 🙂 .
கிரி, எளியமையா புரியும் படி விளக்கமா சொல்லி இருக்கீங்க.. பகிர்ந்தமைக்கு நன்றி..
சிறப்பு
Good 👍