மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கி வருவதால், அதற்கான முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. ஆதார் கை ரேகையைப் பாதுகாப்பது எப்படி என்று பார்ப்போம்.
தற்போது ஆதார் கை ரேகையைத் திருடி வங்கியிலிருந்து பணம் திருடப்படும் செயல்களும் நடப்பதால், இப்பாதுகாப்பு மிக முக்கியமாகிறது.
ஆதார் கை ரேகையைப் பாதுகாப்பது எப்படி?
- Google Play / Apple Store ல் சென்று mAadhaar செயலியை நிறுவிக்கொள்ளுங்கள்.
- உங்கள் ஆதார் எண்ணை இதில் பதிந்து, ஆதார் எண்ணை Lock செய்து கொள்ளுங்கள்.
- இதைச் செய்துவிட்டால், உங்கள் அனுமதி இல்லாமல், யாரும் உங்கள் கை ரேகையை ஆதாரில் பயன்படுத்த முடியாது.
எடுத்துக்காட்டுக்கு ஏர்டெல் அலுவலகம் சென்று உங்கள் ஆதார் எண்ணை உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்க முயற்சித்தால், ஏற்றுக்கொள்ளாது.
10 நிமிடங்கள்
செயலியைத் திறந்து UNLOCK செய்தால், 10 நிமிடங்களுக்கு UNLOCK ல் இருக்கும். இடைப்பட்ட நேரத்தில் கை ரேகையை வைத்து உங்கள் பணியை முடிக்கலாம்.

செயலியில் UNLOCK செய்தவுடன் உடனடியாக செயல்பாட்டுக்கு வந்துவிடும். எனவே, செயல்படத் தாமதமாகுமோ! என்று யோசிக்க வேண்டிய தேவையில்லை.
Paytm ஆதார் இணைப்பிற்காகக் கை ரேகை பதிய நேரிட்ட போது வேலை செய்யவில்லை. வந்தவர் “நீங்கள் ஆதார் LOCK செய்துள்ளீர்களா?” என்று கேட்ட பிறகே நினைவு வந்து UNLOCK செய்தேன்.
UNLOCK செய்த பிறகு சில நிமிடங்கள் எடுக்கும் என்று நினைத்தேன் ஆனால், உடனடியாக UNLOCK ஆனது. கை ரேகையும் எடுத்துக்கொண்டது.
இம்முறையை https://myaadhaar.uidai.gov.in/lock-unlock-aadhaar தளத்திலும் செய்யலாம் ஆனால், அவசரத்துக்குச் செயலி தான் சிறந்தது.
இம்முறை மூலம் நம் ஆதார் விவரங்களின் கை ரேகையை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பைப் தவிர்க்கலாம்.
பின்குறிப்பு
அரசு அலுவலகங்களுக்கு செல்லும் போது முன்னரே Disable செய்து வைத்துக்கொள்வது கடைசி நேர பதட்டத்தை தவிர்க்கும்.
ஏனென்றால், சில நேரங்களில் OTP வரத் தாமதமாகலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம். இது போன்று நடக்க வாய்ப்புக்குறைவு ஆனால், முன்னேற்பாடாக இருப்பது தவறில்லையே!
தொடர்புடைய கட்டுரைகள்
தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி கிரி..
நானும் ஏம் ஆதார் ர போன்ல இன்ஸ்டால் பண்ணேன் ஆனா ஆதார்நம்பர் கொடுத்து பிறகு டெக்னிகல் எரர்னு வருது என்ன ப்ரோப்லேம்