போக்குவரத்து விதிமீறல் அபராதம் உடனே செலுத்த வேண்டுமா?

2
போக்குவரத்து விதிமீறல் அபராதம்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் தற்போது இணையம் வழியாகவும் பணம் செலுத்தலாம் என்பது பலருக்குத் தெரியவில்லை. Image Credit

போக்குவரத்து ஆவணங்கள்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. முன்பு ரொக்கமாக மட்டுமே கொடுக்க முடியும் அதோடு அதற்குண்டான ரசீதும் பெரும்பாலான நேரங்களில் கிடைக்காது.

கொடுக்கப்படும் பணம் அரசுக்குச் செல்லும் என்பதற்கான உத்தரவாதமும் இல்லை.

இதுகுறித்துப் புகார்கள் அதிகரித்ததால் மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அபராதத்துக்குச் செயல்படுத்தியது.

அதோடு ஆவணங்களை Digi Locker அல்லது Parivahan செயலிகளைப் (App) பயன்படுத்திக் காண்பிக்கலாம் என்ற சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

அதாவது உங்கள் ஆவணங்களை இத்தளங்களில் இணைத்து விட்டால், காகித ஆவணங்கள் தேவையில்லை.

ஓட்டுநர் உரிமம், RC, காப்பீடு ஆகியவை இதிலேயே இணைக்கப்பட்டு விடும். காப்பீடு புதுப்பிக்கப்பட்டால் தானாகவே இதிலும் புதுப்பிக்கப்பட்டு விடும்.

எனவே, காகித ஆவணங்கள் தேவையில்லை, Parivahan செயலி இருந்தாலே போதுமானது. உங்கள் வாகனத்தை வேறொருவர் பயன்படுத்தும் போது தான் தேவை.

போக்குவரத்து விதிமீறல் அபராதம்

விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் போது காவலர் வைத்துள்ள POS இயந்திரத்திலோ, Paytm / UPI மூலமாகவோ பணத்தைச் செலுத்தலாம்.

இம்முறையில் செலுத்த முடியவில்லையென்றால், பின்னர் இணையம் வழியாகச் செலுத்த முடியும்.

இக்கட்டுரை எழுதக்காரணமே தெரிந்தவர்களுக்கு ஏற்பட்ட சம்பவமே.

No Parking பகுதியில் வாகனத்தைத் தெரிந்தவர்கள் நிறுத்தினார்கள் என்று அபராதம் விதிக்கப்பட்டது ஆனால், அங்கு No Parking பலகை எதுவுமில்லை.

முன்னர் இருந்தது ஆனால், தற்போது அது இல்லையெனக் காரணம் கூறப்பட்டது. இதற்கு சண்டையிட்டால் அபராதம் செலுத்தாமல் தப்பிக்க வாய்ப்புண்டு காரணம் இது நமது தவறில்லை.

மருத்துவமனைக்குச் சென்றதால் அங்கே டோக்கன் எண் அழைத்து விட்டதால், அங்கே செல்ல வேண்டி இருந்தது ஆனால், அபராதம் செலுத்தக் கூட்டமாக இருந்தது.

எனவே, அங்கே இருந்த காவலர் ‘அபராதம் ₹200 மேலே ₹20 கொடுத்துச் செல்லுங்கள் நான் கட்டி விடுகிறேன்‘ என்று கூறி இருக்கிறார்.

இவர்களும் நேரமில்லையாததால் வேறு வழி இல்லாமல் கொடுத்துச் சென்றார்கள் ஆனால், காவலர் பணத்தை செலுத்தாமல் அவரே வைத்துக்கொண்டார்.

இரு வாரங்கள் கடந்தும் செலுத்தாதால் இனி அவர் செலுத்த மாட்டார் என்று கருதி இணையம் வழியாக அபராதம் செலுத்தினேன்.

இதில் என்ன பிரச்சனையென்றால் இவர்களுக்கு இணையம் வழியாகப் பின்னர் செலுத்தலாம் என்பது தெரியாது. எனக்கு என்ன வியப்பு என்றால், எதற்கு மற்றவர்கள் வரிசையில் நின்று கொண்டு இருந்தார்கள் என்பது!

அபராதத்தை உடனே செலுத்த வேண்டியதில்லை என்பது பலருக்கு தெரியவில்லை.

அபராதம் விதிக்கப்பட்டால், விருப்பப்பட்டால் அங்கேயே செலுத்தலாம் அல்லது இணையத்தில் செலுத்துகிறேன் என்று கூறி ரசீதை வாங்கிக்கொள்ளலாம்.

இணையத்தில் எவ்வாறு அபராதம் செலுத்துவது?

https://echallan.parivahan.gov.in/ தளம் சென்று Pay Online க்ளிக் செய்து, அங்கே கேட்கப்பட்டுள்ள விவரங்களைக் கொடுத்தால் போதுமானது.

உங்களுக்குக் கொடுத்த ரசீது அல்லது வந்த குறுந்தகவலில் (Parivahan SMS) செலான் எண் இருக்கும். அதைக் குறிப்பிட்டுச் செலுத்தலாம்.

போக்குவரத்து விதிமீறல் அபராதம் செலான் எண் தெரியவில்லையென்றாலும் வாகன விவரங்கள் கொடுத்தும் அபராதத்தொகையைச் செலுத்தலாம்.

எனவே, இது போன்ற ஒரு நிலை உங்களுக்கு ஏற்பட்டால், பதட்டப்படாமல் பின்னர் அபராதம் செலுத்திக்கொள்ளுங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

அசல் ஓட்டுநர் உரிமம் இனி தேவையில்லை!

Artificial Intelligence Traffic Signal தேவை

தலைக்கவசம் அணிந்தும் ஆபத்து!

ஹா(ர்)ரன் சைக்கோக்கள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. வெளிநாடுகளில் நீண்ட நாட்களாக கையாளப்படுகிற முறைகள் ஒவ்வொன்றாக நமது ஊருக்கு வேகமாக வந்து கொண்டு இருக்கிறது..பார்க்கும் போது மகிழ்வாக இருக்கிறது.. நிச்சயம் இது வளர்ச்சி தான்.. மாபெரும் தொழிநுட்ப வளர்ச்சி என்றே கூறலாம்.. சில குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது மிகப் பெரிய வளர்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்..அடுத்த சில ஆண்டுகளில் இது பல மடங்கு வளரும்..

    ஏனெனில் 10 / 20 லட்சம் அல்லது சில கோடிகளில் மக்கள் தொகையை வைத்து கொண்டு வளர்ச்சி அடைந்து விட்டோம்.. என நம்மை அலட்சியமாக பார்க்கும் பல மேலை நாடுகள் இருக்கின்றன.. 130 கோடிக்கு மேல் உள்ள நாட்டில், கடை கோடி கிராமம் முதல் நகரம் வரை வளர்ச்சி கண் எதிரே பார்க்கும் போது “அப்துல் கலாம், பாரதி கண்ட கனவுகள் மெய் பட தொடங்கியதாக உணர்கிறேன்… இந்த பதிவில் தெரியாத புதிய தகவல்களை தெரிந்து கொள்ள உதவியதற்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “ஏனெனில் 10 / 20 லட்சம் அல்லது சில கோடிகளில் மக்கள் தொகையை வைத்து கொண்டு வளர்ச்சி அடைந்து விட்டோம்.. என நம்மை அலட்சியமாக பார்க்கும் பல மேலை நாடுகள் இருக்கின்றன.”

    சரியா சொன்னீங்க.

    இந்தியா போன்ற 130 கோடி மக்களை வைத்து அதுவும் ஜனநாயகம் உள்ள நாட்டில் அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாட்டைக் கொண்டு செல்வது எளிதல்ல.

    சீனா போன்ற நாடுகள் பெரியது என்றாலும், கம்யூனிசம் கொள்கை கொண்டது. அவர்களைக் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் சிறை தான்.

    ஆனால், இங்கே ஒரு சாலை போடுவதென்றாலும் போராட்டம், வழக்கு என்று இருக்கும்.

    ஏராளமான நடைமுறை பிரச்னைகளைத் தாண்டி நாட்டை முன்னேற்றுவது சாதனையே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!