தற்போது நம் அனைவருக்கும் ஆதார் மிக முக்கிய அடையாள சான்றாகப் பயன்படும் ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி? என்று பார்ப்போம்.
முன்பு அரசாங்கம் தொடர்பான சேவைகளுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைச் சான்றிதழைக் கேட்டுப் பொதுமக்களைத் தலைசுத்தலில் விடுவார்கள்.
தற்போது நிலை முற்றிலும் மாறி இருக்கிறது. Image Credit
ஆதார் முகவரி
அரசாங்கம் தொடர்பான சேவையாக இருந்தால், ஆதார் இருந்தால், எளிதாக நம் பணியை முடித்து விடலாம் எனும் அளவுக்கு நிலை மாறியிருக்கிறது.
கடந்த வாரம் எங்க ஊர் கோபியில் இரு சக்கர வாகனம் வாங்கிய போது RTO அலுவலகத்தில் ஆதார் முகவரி சான்றிதழ் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
என் ஆதார் முகவரியோ சென்னை முகவரியில் இருந்தது. இதனால் சிக்கல் ஏற்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை கூட ஏற்றுக்கொள்வதில் சிக்கலானது.
பின்னர் “affidavit” வாங்கி இதைச் சரி செய்து கொள்ளலாம் என்று அறிவுறுத்தினார்கள்.
ஆதார் பெயரே எங்கும் இருப்பது நல்லது
எனக்கு இன்னொரு சிக்கல், பதிவு செய்யப்படும் வாகன உரிமையாளர் பெயராக என் ஆதாரில் உள்ள பெயராக முழுப் பெயரும் வேண்டும் என்று விரும்பினேன்.
ஆதாரில் என் பெயர், அப்பா பெயர் என்று இருக்கும். வாக்காளர் அடையாள அட்டையில் என் பெயர் மட்டும் இருக்கும்.
வாக்காளர் அடையாள அட்டை மூலமாக ஒரு முறை ஒரு வாகனத்தைப் பதிவு செய்து என்னால் Digi Locker, Parivaahan செயலியில் இணைக்க முடியவில்லை.
எனவே, ஆதாரில் என்ன பெயர் உள்ளதோ அதன் படியே வாகன உரிமம், ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். அப்போது தான் மின்னணு சேவையில் இணைக்க முடியும்.
இச்சேவையை இணைத்தால், போக்குவரத்துக் காவலர்கள் சோதனையின் போது உங்கள் திறன்பேசியில் இருந்தே காட்டி விட முடியும், இதற்காகக் காகித சான்று வைத்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
ஆதார் முகவரியை மாற்றுவது எப்படி?
என்னடா செய்வது?! என்று குழம்பிய நிலையில், சரி ஆதாரில் கோபி முகவரிக்கு மாற்றிப் பார்ப்போம் என்று முடிவு செய்தேன். 15 நாட்கள் ஆகும் என்று நினைத்தேன்.
காலை 10 மணிக்கு முகவரி மாற்ற ஆதார் இணையத்தில் (https://uidai.gov.in/) வாக்காளர் அடையாள அட்டை சான்று கொடுத்துக் கோரிக்கை வைத்தேன்.
மதியம் 2.30 மணிக்கு உங்கள் கோரிக்கை ஏற்கப்பட்டது (Approved), விரைவில் மாற்றம் செய்யப்படும் என்று குறுந்தகவல் வந்தது.
அட! அதற்குள்ள கோரிக்கை ஏற்கப்பட்டதா என்று வியப்பாக இருந்தது!
அடுத்த நாள் முகவரி புதுப்பிக்கப்பட்டதா என்று சோதித்தால், புதிய முகவரி மாற்றப்பட்டு விட்டது.
மணி நேர கணக்குப்படி பார்த்தால், 24 மணி நேரம் முன்பே இப்பணி செய்து முடிக்கப்பட்டு விட்டது.
இதை நாம் ஆதார் சேவையில் ₹50 மின்னணு முறையில் கட்டணம் செலுத்தினால், 5 – 10 வேலை நாட்களுக்குள் நமக்கு Print Out துரித அஞ்சலில் வந்து விடும்.
நமக்கு அவசரம் என்றால், நம் ஊரிலேயே இதற்கென்று உள்ள ஆதார் சேவை, தனியார் மையங்களில் ₹30 கொடுத்தால், Print Out எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
வேலை முடிந்தது 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
ஆதார் கை ரேகையை பாதுகாப்பது எப்படி?
KYC க்கு ஏற்ற அடையாள அட்டை எது?
ஆதார் PVC அட்டை பெறுவது எப்படி?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Superb கில்லாடி. சரியான சான்று இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ளலாம்.
ஆதார் சப்போர்ட் நல்லா செய்யுறாங்கன்னு சொல்லுங்க. பதிவுக்கு நன்றி
🙂