கடனட்டை (கிரெடிட் கார்டு) பயன்படுத்துபவர்களின் Credit Limit யை வங்கிகள் குறைத்து வருகிறார்கள். Image Credit
Credit Limit (உச்ச வரம்பு)
வங்கிகள் கடனட்டை பயன்படுத்தும் அனைவருக்கும் துவக்கத்தில் அவரவர் வருமானத்துக்கு ஏற்ப Credit Limit கொடுப்பார்கள்.
பயன்படுத்துவதன் அளவைப் பொறுத்து, உச்சவரம்பு மாற்றியமைக்கப்படும். பெரும்பாலும் உயர்த்தப்படும்.
Credit Limit என்பது ஒரு கடனட்டையை பயன்படுத்தி எவ்வளவு செலவு செய்ய முடியும் என்பதற்கான உச்ச வரம்பு.
எடுத்துக்காட்டுக்கு ஒரு கடனட்டைக்கு உச்சவரம்பு ₹1,00,000 என்று கொடுத்து இருந்தால், ஒரு சுழற்சிக்கு (50 நாட்கள் கணக்கு) அதிகபட்சம் ₹1,00,000 வரை கடனட்டை வழியே செலவு செய்யலாம்.
₹1,00,000 முழுக்கப் பயன்படுத்தலாம் என்றாலும், தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்துவது CIBIL மதிப்பெண்ணைப் பாதிக்கச் செய்யும்.
எனவே, அனுமதிக்கப்பட்ட அளவில் 25% செலவு செய்வது நல்லது. 1,00,000 என்றால் 25,000 செலவு செய்வது நல்லது.
மேலும் விவரங்களுக்குக் கிரெடிட் கார்டு பயன்கள் என்ன? கட்டுரையைப் படிக்கலாம்.
குறைக்கப்பட்ட உச்ச வரம்பு
கடந்த ஓரிரு மாதங்களாகக் கடனட்டை உச்சவரம்பை வங்கிகள் குறைத்து வருகின்றன. கிட்டத்தட்ட 10% முதல் 80% வரை குறைத்து வருகின்றன.
எதனால் இப்படிக் குறைக்கிறார்கள் என்பதற்கான சரியான விளக்கம் இல்லை.
கொரோனா காலம் என்பதால், அதிகச் செலவு செய்து வருமானம் இல்லாததால் திரும்பக் கட்ட முடியாமல் போகலாம் என்பதால் இதைச் செய்யலாம்.
சிலர் அதிக உச்ச வரம்பு இருந்தாலும் குறைவாகத் தொடர்ந்து பயன்படுத்துவது.
எடுத்துக்காட்டுக்கு, ₹7,00,000 உச்சவரம்பு இருக்கும் ஆனால், தொடர்ந்து செலவு செய்வது சராசரியாக ₹20,000 என்பதாக இருக்கலாம்.
எனவே, தேவை குறைவு என்பதாலும் உச்சவரம்பைக் குறைப்பதற்கான வாய்ப்புள்ளது.
எனவே, உங்கள் கடனட்டை உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளதா என்பதைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
தெரியாமல் அதிகம் செலவு செய்து விட்டால், CIBIL மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தொடர்ச்சியாக Account Statement பரிசோதிப்பது நல்லது.
தொடர்புடைய கட்டுரைகள்
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]
வீடு நிலம் அடமானம் வைக்கிறீர்களா?
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?
CRED | Credit Card Management App
UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி
PhonePe Google Pay Paytm எது சிறந்தது?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, இதுவரை கடனட்டை பயன்படுத்தவில்லை.. எதிர்காலத்தில் பயன்படுத்துவேனா என்று தெரியவில்லை.. இங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில் அப்பா வயதுள்ள கூட பணிபுரியும் ஒருவர் சொன்னது.. இருப்பதை கொண்டு எப்படி வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கற்று கொள்.. சின்ன வயது என்பதால் பார்ப்பதை எல்லாம் வாங்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே வரும்.. வெளிநாட்டில் உறவினர் யாரும் இல்லாத போது (தட்டி கேட்க ஆள் இல்லாத போது) வரும் ஆசையை தடுக்க முடியாது.. ஆனால் உன் பொருளாதாரத்திற்கு ஏற்ப உன் வாழ்க்கையை அமைத்து கொள்ளவது, உன்னிடம் மட்டும் உள்ளது என ஆலோசனை சொன்னார் .. கடனில்லாத வாழ்க்கை நிம்மதியை தரும் என்றார்.. (தலைவர் ஸ்டைல்ல சொன்னா “உன் வாழ்க்கை உன் கையில்”).. அவர் சொல்படி வாழ முயற்சி செய்து வருகிறேன்..
மற்றொன்று கூட பணிபுரிந்த பல நண்பர்கள் தங்களில் தகுதிக்கு மீறி செலவு செய்து, கடன் வாங்கி, கடனட்டையை முறையாக பயன்படுத்த தெரியாமல்.. சொல்லாமல் கொள்ளாமல் ஊரை விட்டு ஓடி சில நண்பர்களையும் பார்த்து இருக்கிறேன்.. இந்த மாதிரி நடந்து கொண்ட நண்பர்களிடம் இருந்து எதேச்சையாக அலைப்பேசியில் எதாவது மெசேஜ் வந்தாலே நமக்கு கிலியாகி விடும்..
தற்போது வரை பெரிய அளவில் சேமிப்பு இல்லையென்றாலும் கடன் இல்லாமல் இருக்கிறேன்.. இந்த நிலை எதிர்காலத்தில் தொடர்ந்தாலே நல்லது என நினைக்கிறேன்.. அதனால் கடனட்டை பக்கம் செல்ல மாட்டேன் என்று நினைக்கிறேன்.. உங்களை போல் சரியாக கடனட்டை பயன்படுத்தினால் எந்த பிரச்சனையும் வர வாய்ப்பில்லை..
கடனட்டை பயன்படுத்துவதில் நீங்கள் முக்கியமாக கையாளும் யுக்தி (உங்களின் திட்டமிடல்) என்ன??? நீங்கள் 15 வருடங்களுக்கு மேல் கடனட்டையை பயன்படுத்தியும் ஒரு ரூபாய் கூட நட்டமடையாமல், சிறப்பாக கையாண்டு வருவது உண்மையில் ஒரு மிக பெரிய சாதனை !!!! அதன் ரகசியத்தை சுருக்கமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே??? பகிர்வுக்கு நன்றி கிரி..
@யாசின்
“கடனட்டை பயன்படுத்துவதில் நீங்கள் முக்கியமாக கையாளும் யுக்தி (உங்களின் திட்டமிடல்) என்ன?
1. மாதக்கட்டணத்தை சரியான தேதிக்கு முன்பாக தவறாமல் கட்டி விட வேண்டும்.
2. நம்மால் இந்த மாத கட்டணத்தை கட்ட முடியும் என்றால் மட்டுமே அதற்கான செலவைச் செய்ய வேண்டும்.
3. இரு முறைகளில் கட்டணம் செலுத்தலாம். முழுமையாக அல்லது குறைந்த பட்சக்கட்டணம்.
குறைந்த பட்சக்கட்டணம் செலுத்தினால், வட்டி கட்ட வேண்டும். இத்தவறை மட்டும் செய்யவே கூடாது.
4. கடனட்டை உள்ளது என்று கண்டபடி செலவு செய்யக் கூடாது. இதுவே கடனை ஏற்படுத்திச் சிக்கலில் விட்டு விடும்.
5. கடனட்டையில் கட்டுப்பாடு இல்லாதவர்கள் கடனட்டை பயன்படுத்தக் கூடாது.
6. கட்டுரையில் கூறியுள்ளது போல சரியான முறையில் கடனட்டையை பயன்படுத்தினால், இலாபம் மட்டுமே!