Kala (2021 மலையாளம்) | நாய்க்காக ஒரு பழிவாங்கல்

5
Kala movie

நாய்க்காக ஒரு பழிவாங்கல் கதை தான் Kala. Image Credit

Kala

தனிமையான பகுதியில் குடும்பத்துடன் வசிக்கும் Tovino, பிரச்சனையை எதிர்கொள்கிறார். இதைக் கடந்து வந்தாரா இல்லையா என்பது தான் Kala.

இதுவொரு உண்மைக்கதை என்று கூறப்பட்டுள்ளது.

Tovino Thomas

மலையாள திரையுலகில் குறிப்பிடத் தக்க நடிகராக வளர்ந்து வரும் Tovino, வழக்கமாக நாயகர்கள் எடுக்கத் தயங்கும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

மிலிட்டரியில் இருந்த தனது அப்பா லால் கட்டுப்பாட்டில், அதிகாரத்தில் வளர்ந்ததாலோ என்னவோ, அவர் பொறுப்பற்று இருப்பதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியான கண்டிப்பு, உனக்கு எதுவும் தெரியாது என்பன போன்ற தொடர் வார்த்தைகளால் இயல்பிலேயே அவருக்கு எதுவும் சரியாக அமைவதில்லை, குடும்பத்தைத் தவிர.

பெரும்பாலும் அதிகக் கண்டிப்புடன் வளர்ப்பவர்கள் சிலரே சரியான முறையில் பயணப்படுகிறார்கள். பெரும்பாலும் எதிர்விளைவுகளையே கொண்டு வரும்.

அப்படிப்பட்ட ஒரு கதாப்பாத்திரமாக Tovino.

Tovino Thomas மனைவியாக வரும் Divya இக்கதாப்பாத்திரத்துக்குச் செமையாகப் பொருந்துகிறார். குறிப்பாக, இறுதியில் அதிர்ச்சியை வெளிப்படுத்தும் விதம் சிறப்பு.

ஒரு ரொமான்டிக் முத்தத்தில் இருவரும் கிறுகிறுக்க வைக்கிறார்கள். Tovino வின் உடற்பயிற்சி உடல் பெண்களைத் தொல்லை செய்து விடும் 🙂 .

Sumesh Moor

படத்தில் வில்லனாகவும், நாயகனாகவும் வருபவர் Sumesh Moor. தன் நாய்க்காகப் பழிவாங்கும் கதாப்பாத்திரத்தில் மிரட்டியுள்ளார்.

பன்றி வேட்டையாடுபவர் என்பதால், இயல்பிலேயே மூர்க்கத்தனம் மிக்கவராகக் காட்டியுள்ளார்கள்.

ஆனால், என்ன அடி வாங்கினாலும் களைப்படையாமல் இருப்பது மட்டும் உறுத்துகிறது. அதோடு இறுதி சண்டைக்காட்சிகள் இவ்வளவு நீட்டித்து இருக்க வேண்டாம் என்றும் தோன்றுகிறது.

‘அதிசய மனிதன்’ என்ற படத்தில் அஜய் ரத்னம் என்ன நடந்தாலும் பிழைத்து வருவது போல Sumesh Moor உள்ளார் 😀 .

குறைந்த கதாப்பாத்திரங்கள்

மலையாளத்தில் 10 பேரை வைத்து ஒரு படத்தையே எடுத்து முடித்து விடுகிறார்கள் 🙂 . இப்படத்தில் அதிகபட்சம் 10 பேருக்கும் குறைவானவர்களே நடித்துள்ளனர்.

அதிலும் 5 கதாப்பாத்திரங்கள் தான் முக்கியக் கதாப்பாத்திரங்கள்.

சம்பவம் நடக்கும் இடமும் தனியாகக் காட்டினுள் உள்ளது. எனவே, வேறு கதாப்பாத்திரங்களின் தேவையே இல்லை.

மலையாள படங்களில் கவனித்தீர்கள் என்றால், தமிழர்களை அவ்வப்போது இலைமறைவு காயாக இழிவுபடுத்துவார்கள்.

குறிப்பாகப் பாண்டி என்ற பதத்தைப் பயன்படுத்துவார்கள்.

வில்லனாக, படிப்பறிவற்றவராக, குற்றங்கள் செய்பவராகவே காட்டுவார்கள். இதிலும் அப்படி வருகிறது.

என்னதான் உண்மைக்கதை என்றாலும், சில வசனங்களைத் தவிர்த்து இருக்கலாம்.

தமிழ் திரைப்படங்களில் மலையாள பெண் கதாப்பாத்திரங்களைக் கவர்ச்சிக்கு பயன்படுத்துவது போல மலையாளத்தில் இப்படி.

சில இடங்களில் தேவையே இல்லாமல், பயமுறுத்துவது போலக் காட்டுகிறார்கள் ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையெனத் தெரிய வரும் போது கடுப்பாகிறது.

ஒளிப்பதிவு பின்னணி இசை

இப்படத்தில் குறிப்பிடத் தக்க அம்சம் ஒளிப்பதிவும், பின்னணி இசையுமாகும்.

குறிப்பாக ட்ரோன் வழியாகக் காட்சிகளைக் காட்டுவது, த்ரில்லர் படங்களுக்குக் கூடுதல் அழகைத்தரும். இப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

உயரத்திலிருந்து மரங்களைப் பார்க்கும் போது காலிபிளவர் போல உள்ளது.

பச்சை பசேல் என்று பரந்து விரிந்த காடுகளை உயரத்திலிருந்து பார்ப்பது பரவசமாக உள்ளது.

காட்சிகளின் பரபரப்பைக் கூட்ட பின்னணி இசை வெகுவாக உதவியுள்ளது. இசை தனித்துள்ளது (uniqueness). தரமான ஒலிபெருக்கியில் கேட்டால் பட்டாசாக இருக்கும்.

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம். த்ரில்லர் படங்களை விரும்புவர்கள் தவிர்க்கக் கூடாத படம்.

நாய் என்றால் ரொம்பப் பிடிக்கும் எனக்கு இப்படம் பிடித்ததில் வியப்பில்லை. இறுதி முடிவு மிகப்பொருத்தமாகவும் தரமான முடிவாகவும் இருந்தது.

மூன்று மாதங்களிலேயே படத்தை எடுத்து முடித்து விட்டார்கள், செலவும் இல்லை.

தமிழில் நாலு கரண்டி நெய் விட்டு, இட்லி பொடியை மழைச்சாரல் மாதிரி தூவிட்டு இருந்தால், மலையாளத்தில் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்னு முடித்துட்டு போய்டுறாங்க 🙂 .

Amazon Prime ல் காணலாம்.

பரிந்துரைத்தது விஸ்வநாத், பாபு & யாசின்.

Directed by Rohith V. S.
Produced by Siju Mathew, Navis Xaviour, Tovino Thomas, Rohith V. S., Akhil George
Written by Yadhu Pushpakaran, Rohith V. S.
Starring Tovino Thomas, Sumesh Moor, Lal Paul, Divya Pillai, Pramod Velliyanad
Music by Dawn Vincent
Cinematography Akhil George
Edited by Chaman Chakko
Release date 25 March 2021
Running time 130 minutes
Country India
Language Malayalam

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

I Care A Lot (2020) | அவசரப்பட்டு தூக்கிட்டோமோ!

Joji (2021 மலையாளம்) | A Psychological Thriller

Nayattu (2021 மலையாளம்) | பரபர த்ரில்லர்

Boy Missing (2016 Spanish) | பையனைக் கடத்தியது யார்?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. Dear Giri,

    Visited your blog after long time Corona issues ! !

    i stopped watching malayalam movies long time ago as they continously degrade tamil people unnecessarily . once i watched a movie called bhramaram a mohanlal starrer in that mohanlal takes his ex class mate from Coimbatore back to his village to clear mohanlal’s name in a murder case in the middle of night the bus stops for tea and then there ensures a fight with tamil totally unnecessary for the film but mohanlal has to beat up tamil speaking anti socials …
    i stopped from that …. how ever good they can make movies but this is too much

  2. கிரி, படம் என்பார்வையில் தாறுமாறு!!! ஒரு சில சிறிய குறைகள் இருந்தாலும், படத்தில் என்னை கவர்ந்த நிறைய விஷியங்கள் இருந்ததால் எனக்கு படம் மிகவும் பிடித்து போனது… படத்தில் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிகவும் சிறப்பாக இருந்தது..

    தமிழர்களை அவ்வப்போது இலைமறைவு காயாக இழிவுபடுத்துவார்கள் : கடந்த சில மாதமாக தான் நான் மலையாள படங்களை பார்க்கிறேன்.. வெகு சொற்ப படங்களில் மட்டும் இதை உணர்கிறேன்..

    சில இடங்களில் தேவையே இல்லாமல், பயமுறுத்துவது போலக் காட்டுகிறார்கள் ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லையெனத் தெரிய வரும் போது கடுப்பாகிறது : என்ன கிரி நீங்களே இப்படி சொல்லிடீங்க!!! படம் பார்க்கும் போது ஏற்படுகிற சுவராசியமே அது தான்!!!!

    காட்சிகளின் பரபரப்பைக் கூட்ட பின்னணி இசை வெகுவாக உதவியுள்ளது. இசை தனித்துள்ளது (uniqueness). தரமான ஒலிபெருக்கியில் கேட்டால் பட்டாசாக இருக்கும் : உண்மை தான்.. படத்தோட பின்னணி இசை செமையா இருக்குது.. நல்ல ஒலி பெருக்கி BRAND பற்றி உங்களுக்கு தெரியுமானால் அதை பற்றி கூறவும்.. ரொம்ப நாட்களாக வாங்க வேண்டும் என்ற ஆசை உண்டு..

    மூன்று மாதங்களிலேயே படத்தை எடுத்து முடித்து விட்டார்கள், செலவும் இல்லை. : படத்தின் இறுதி காட்சியின் போது டேவினோ தாமஸ் சண்டை காட்சியில் அடிபட்டு, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்.. குணமான பிறகு மீண்டும் வந்து படத்தை நடித்து முடித்தார்.. இந்த தாமதம் இல்லாமல் இருந்தால் படம் இன்னும் சீக்கிரம் வெளியாகி இருக்கும்..

    தமிழில் நாலு கரண்டி நெய் விட்டு, இட்லி பொடியை மழைச்சாரல் மாதிரி தூவிட்டு இருந்தால், மலையாளத்தில் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்னு முடித்துட்டு போய்டுறாங்க : மலையாளத்தில் நான் வியப்பது, கதையின் கரு.. எப்படி, எப்படி எல்லாம் யோசித்து கதையின் கருவை வடிவமைக்கிறார்கள்.. கண்டிப்பா மிக சிறந்த எழுத்தாளர்கள் மலையாளத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்..

    தமிழில் பழைய இயக்குனர்கள் சில பேர் கூற கேட்டு இருக்கிறேன் இங்கு எழுத்தாளர்கள் தற்போது குறைந்து விட்டார்கள், அதே சமயத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் சரியாக கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.. பெரிய படங்களின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் நாயகனுக்கு சம்பளமாக வழங்கப்படும் போது, மீதி பணத்தை வைத்து கொண்டு இயக்குனர் எப்படி தான் விரும்பும் வண்ணம் படம் எடுக்க முடியும்.. எதிர்காலத்தில் திரைத்துறையில் நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக நிகழும் என நினைக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @sarav

    Yeah agree. they were / are doing it purposefully, but now it has reduced.

    @யாசின்

    “கடந்த சில மாதமாக தான் நான் மலையாள படங்களை பார்க்கிறேன்.. வெகு சொற்ப படங்களில் மட்டும் இதை உணர்கிறேன்”

    அதனால் தான் உங்களுக்கு தெரியவில்லை யாசின். தொடர்ச்சியாக கவனித்து வருபவர்களுக்கு தெரியும்.

    சமீபத்தில் மூன்று படங்களில் தமிழர்களை இழிவுபடுத்தியிருந்தார்கள் அதில் Kala ஒன்று.

    “என்ன கிரி நீங்களே இப்படி சொல்லிடீங்க!!! படம் பார்க்கும் போது ஏற்படுகிற சுவராசியமே அது தான்!”

    அது தவறு யாசின். தேவையற்று பயமுறுத்த கூடாது, அது எரிச்சலையே தரும்.

    Ee adutha Kaalathu படம் பாருங்க, அதில் மிகத்தரமான பயமுறுத்தல் இருக்கும். பார்வையாளனை தவறாக ஏமாற்றக்கூடாது.

    இது ஒரு படத்தின் தரத்தை / மதிப்பை குறைக்கும்.

    “நல்ல ஒலி பெருக்கி BRAND பற்றி உங்களுக்கு தெரியுமானால் அதை பற்றி கூறவும்”

    SONY / JBL தரமானவை.

    “படத்தின் இறுதி காட்சியின் போது டேவினோ தாமஸ் சண்டை காட்சியில் அடிபட்டு, சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தார்”

    ஆமாம். படித்தேன்.

    “கண்டிப்பா மிக சிறந்த எழுத்தாளர்கள் மலையாளத்தில் இருக்கலாம் என்று நினைக்கிறேன்”

    உண்மை தான்.. அதோடு சிறந்த கற்பனையாளர்கள் கதாசிரியர்கள் உள்ளார்கள்.

    “அதே சமயத்தில் அவர்களுக்கான அங்கீகாரமும் சரியாக கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது”

    உண்மை தான்.

    “பெரிய படங்களின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் நாயகனுக்கு சம்பளமாக வழங்கப்படும் போது, மீதி பணத்தை வைத்து கொண்டு இயக்குனர் எப்படி தான் விரும்பும் வண்ணம் படம் எடுக்க முடியும்..”

    சரியா சொன்னீங்க.. இது முதலில் மாறனும்.

    இன்னொன்னு இங்கு நாயகனை வைத்து தான் முதலீடு செய்யப்படுகிறது.. அவர்களின் வியாபாரம் பெரியது. எனவே, இது போல நிலை ஏற்படுகிறது.

    இதற்கெல்லாம் OTT எதிர்காலத்தில் பதில் கூறும்.

  4. பெரும்பாலும் அதிகக் கண்டிப்புடன் வளர்ப்பவர்கள் சிலரே சரியான முறையில் பயணப்படுகிறார்கள். பெரும்பாலும் எதிர்விளைவுகளையே கொண்டு வரும்.:
    இந்த உண்மையை என் கண்கூடாக பார்க்கிறேன் அண்ணா.

    இந்த படத்தை ஓடிடி ரிலிசு அன்னைக்கு ஓசியில் கிடைக்குது + படத்தின் டைட்டில் (கல அல்லது காலா) க்காக பார்த்தேன். எனக்கு எப்பவும் மலையாள படத்தில் பிடித்தது லொகேஷன்ஸ் + ஹீரோயின்ஸ் + கதை. எனக்கு மலையாளம் தெரியாது இருந்தாலும் பார்ப்பேன். 20 நிமிடங்களுக்குள் கதை என்ன, எதை நோக்கி நகர்கிறதுன்னு புரிய ஆரம்பித்துவிடும். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மலையாள படங்களை பார்ப்பேன்.

    இந்த படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் கணவன் மனைவிக்குள் அன்யோன்யமான காட்சி ஒன்று வரும். பகலில் அனைவரும் இருக்க கணிணியில் இந்த படத்தை பார்த்துக்கொண்டு இருந்த எனக்கு அதிர்ச்சி. கொஞ்சம் தர்மசங்கடம். இருந்தாலும் லால் இருந்ததால ஓட விட்டேன்.

    சும்மா சொல்ல கூடாது அமேசான் பிரிண்ட். சவுண்ட் + கேமரா வேர லெவல் பீலிங்க் கொடுத்தது. நீண்ட சண்டைக்காட்சிகள் எனக்கு சலிப்பை தரவில்லை. சண்டை போட்டுக்கிட்ட இரண்டு பேர் மீதும் எனக்கு மாறி மாறி பரிதாபம் வந்துகொண்டே இருந்தது. இதில் யார் நல்லவன் யார் கெட்டவன், இதனுடைய முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க செம ஆர்வம். பட் கிளைமாக்ஸ் கொஞ்ச்ம் ஏமாற்றம்.

  5. @கார்த்திக்

    “இதில் யார் நல்லவன் யார் கெட்டவன், இதனுடைய முடிவு என்னன்னு தெரிஞ்சிக்க செம ஆர்வம். பட் கிளைமாக்ஸ் கொஞ்ச்ம் ஏமாற்றம்.”

    முடிவு எதிர்பார்க்காதது என்றாலும் எனக்குப் பிடித்து இருந்தது 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here