CRED | Credit Card Management App

3
CRED

Freecharge என்ற நிறுவனத்தை உருவாக்கிப் பின்னர் Snapdeal நிறுவனத்துக்கு விற்று, பின் CRED நிறுவனத்தை உருவாக்கி, பெரிய நிறுவனமாக்கி வருகிறார் Kunal Shah.

CRED என்ன வகையான நிறுவனம்?

கடனட்டைகளை (கிரெடிட் கார்டு) மேலாண்மை செய்யும் செயலியாக (App) உள்ளது.

CRED இந்திய நிறுவனம். 2020 IPL Sponsor களில் ஒரு நிறுவனமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. Image Credit

CRED வசதிகள் / சேவைகள்

  • சிபில் ஸ்கோர் 750+ க்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே இணைய முடியும். எனவே, தரமான பயனாளர்கள் மட்டுமே உள்ளார்கள் என்ற நிலையாகிறது.
  • சிலருக்கு இதை விடக் குறைவான ஸ்கோர் இருந்தாலும் ஏற்றுக்கொள்கிறது.
  • மொபைல் எண்ணைக் கொடுத்தால் (OTP), நம் மொத்த கிரெடிட் கார்டு விவரங்களும் வந்து விடும்.
  • கிரெடிட் கார்டு கட்டணத்தைச் செலுத்துவது எளிது.
  • HDFC / ICICI / SBI / AXIS வங்கி கார்டுகளில் உடனடியாகப் (Instant Credit) பணம் செலுத்தப்படும்.
  • செலுத்தப்படும் பணம் ஒவ்வொரு ரூபாய்க்கும் CRED COINS என்று வழங்கப்படும். இதை Scratch Card போலப் பயன்படுத்தி Voucher பெற முடியும்.
  • கடனட்டை பரிவர்த்தனைகள், மாதம் எவ்வளவு செலவு, எந்தப் பிரிவில் செய்துள்ளோம் என்பதைக் காணலாம்.
  • 24 மாதங்களுக்கான மாதக் கட்டண விவரங்கள்.
  • கிரெடிட் கார்டுகளுக்கு உள்ள சலுகைகள், தள்ளுபடி விவரங்கள்.
  • ஒரே இடத்தில் அனைத்து கார்டுகளுக்கும் சலுகைகள் விவரங்கள் கிடைப்பதால், செலவு செய்யும் முன்பே இங்கே ஒருமுறை பார்த்துக்கொள்வது பயனளிக்கும்.
  • CRED COINS பயன்படுத்தி மாதம் ஒரு முறை இலவசமாகச் சிபில் ஸ்கோர் பார்க்க முடியும்.
  • CRED Protect வசதியைச் செயல்படுத்தினால், நம் மின்னஞ்சல் கணக்கை ஆராய்ந்து அதன் வழியாகப் பரிந்துரைகளை நமக்கு அளிக்கும்.
  • மறைமுகக்கட்டணம் (Hidden Charges), தாமதக்கட்டணம் செலுத்தியுள்ளோமா உட்படப் பல தகவல்களைக் கூறும்.
  • சிபில் ஸ்கோர் ஏன் குறைகிறது? வேறு என்ன பிரச்சனைகள் உள்ளது? என்பதை இதன் மூலம் அறிந்து நம் தவறுகளைத் தவிர்த்துச் சிபில் ஸ்கோர் உயர்த்தலாம்.
  • CRED Protect பாதுகாப்பில்லை என்று கருதினால், தவிர்த்து விடலாம். ஏனென்றால், மின்னஞ்சல் கணக்கைப் படிக்கும் முழு அதிகாரத்தை வழங்குகிறீர்கள்.
  • பாதுகாப்போடு பயன்படுத்த, இன்னொரு Backup மின்னஞ்சலுக்கு இந்த மின்னஞ்சல்களை Forward செய்து, பதிவு செய்தால், பிரச்சனையில்லை.

கூடுதல் வசதிகள்

  • கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்ட முடியும், இதற்கு 1 – 1.5% வரை (Transaction fee) கட்டணம் வசூலிக்கிறார்கள்.
  • கடனட்டை கட்டணத்தைச் செலுத்துவதற்கான Reminder செயல்படுத்தலாம். கட்டணத்தை 3 (Due date) நாட்களுக்கு முன் செலுத்துவது நல்லது.
  • Auto Debit வசதி மூலம் பணத்தைத் தானியங்கியாகச் செலுத்தலாம்.
  • புதிய நபரைப் பரிந்துரைத்தால், அவர் செலுத்தும் முதல் கிரெடிட் கார்டு கட்டணத்தில் இருவருக்கும் Cashback கிடைக்கும்.
  • ஒவ்வொரு முறை ₹1,000, ₹5,000, ₹10,000, ₹1,00,000 என்று கிரெடிட் கார்டு கட்டணம் செலுத்தும் போதும் கட்டணத்துக்குத் தகுந்தபடி Cashback கிடைக்கும்.
  • இவையல்லாமல் Internet, Phone, Gas போன்ற சேவைகளின் கட்டணங்களைச் செலுத்தினாலும் Cashback கிடைக்கும்.

CRED UPI

UPI வசதியை CRED அறிமுகப்படுத்தியுள்ளது. அறிமுகச்சலுகையாக ₹4 முதல் ₹7 வரை cashback ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வழங்குகிறது.

முதல் பரிவர்த்தனைக்குக் கூடுதலாக வழங்குகிறது. எனவே, கொஞ்சம் பெரிய தொகையாக (₹100) முயற்சித்துப்பாருங்கள் 🙂 .

CRED Store

அமேசான் போலப் பொருட்களை வாங்க, பொருட்கள் விற்பனையை அதிகப்படுத்தி வருகிறது. துவக்க நிலையில் நிறுவனங்களுக்கு 0% commision என்றுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் முயற்சித்துப்பார்க்கலாம். பெரும்பாலும் ஆடம்பரப்பொருட்களே கண்ணில் படுகிறது. பின்னாளில் மேலும் விரிவுபடுத்தப்படலாம்.

CRED Store என்று தனி செயலியை உருவாக்கி அதில் இவற்றைச் சேர்க்கலாம். முதன்மை சேவையான நிதி சேவையில் இதைச் சேர்ப்பது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அதோடு, எதற்கான செயலி என்ற தெளிவை கொடுப்பதில்லை. எனவே, அனைத்தையும் ஒரே செயலியில் கொடுக்காமல் பிரிப்பது நல்லது.

சேவையின் தரம்

தற்போது கொடுக்கப்படும் சலுகைகள் / Cashback பின்னாளில் குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம் ஆனால், சேவையின் தரம் குறையாது என நம்பலாம்.

CRED நிறுவனம் துவக்கத்தில் தன்னை நிலை நிறுத்த / மேம்படுத்தப் பணத்தைச் செலவழித்ததால் இலாபம் ஈட்டவில்லை, சொல்லப்போனால் நட்டத்தில் இருந்தார்கள்.

தற்போது, இலாபம் ஈட்டும் காலத்துக்கு வந்துள்ளார்கள்.

பயன்படுத்தியவரையில் CRED சிறப்பாக உள்ளது. கடனட்டை வைத்துள்ளவர்கள் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.

தொடர்புடைய கட்டுரைகள்

சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]

கிரெடிட் கார்டு பயன்கள் என்ன?

கிரெடிட் கார்டில் வாடகை செலுத்துவது இலாபமா?

HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?

HDFC கடனட்டையின் பாதுகாப்பான பரிவர்த்தனை

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. தகவலுக்கு நன்றி கிரி, உங்கள் பரிந்துரை படி நான் பயன்படுத்தி cash back ரூ 30 வரை பெற்று உள்ளேன் கிரி ? நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here