கடந்த வருடம் (2019) சென்னை மெட்ரோ நிர்வாகம் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பொறுப்பை ஏற்றப் பிறகு சில மாற்றங்களை முன்னெடுத்தார்கள் அதில் குறிப்பிடத்தக்கது, மெட்ரோ தூண், சுவர்களில் விளம்பரம் செய்யக் கூடாது என்பது.
சுவரைப் பார்த்தால், நாய் காலைத் தூக்குவது போலச் சுவரைக் கண்டால் அரசியல் கட்சியினரும், திரைத்துறையினரும் சுவரொட்டியை ஒட்டி நாசம் செய்து விடுவார்கள்.
குறைந்த பட்சம் அரசுச் சுவர்கள், பாலங்களிலாவது கட்டுப்பாடுகளை அரசு நடைமுறைப்படுத்தலாம். அறிவிக்கிறார்கள் ஆனால், வழக்கம் போலக் கதை தான்.
மெட்ரோ அறிவிப்பு
மெட்ரோ அறிவிப்பு தனியார் கட்டுப்பாட்டில் இருந்ததால், இதில் மாற்றம் இருக்கலாம் என்று நம்பிக்கை வந்தது. அதற்குத் தகுந்த மாதிரி அபராதம் விதித்துச் செய்திகள் வந்தன.
சமீபத்தில் மெட்ரோ தூண்கள் பாதை வழியாகப் பயணம் செய்த போது மெட்ரோ தூண்களில் விளம்பரம் இல்லாமல் இருந்ததைக் காணும் போது மகிழ்வாக இருந்தது.
குறிப்பாகக் கிண்டியில் இருந்து விமான நிலையம் செல்லும் பகுதி முக்கியப்பிரமுகர்கள் செல்லும் பாதையால் பூங்கா அமைத்து இன்னும் மெருகேற்றியுள்ளார்கள்.
மெட்ரோ தூண்கள் பகுதியை இன்னும் மேம்படுத்த, அழகுபடுத்த, சரியான வகையில் பயன்படுத்த மெட்ரோ நிறுவனத்துக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
தற்போது தான் ஆரம்பித்துள்ளார்கள் என்பதால், வரும் காலங்களில் இதற்கான முயற்சியை முன்னெடுப்பார்கள் என்று நம்புவோம்.
கொசுறு
சென்னை சென்ட்ரல், MRTS, Suburban Train, மெட்ரோ ரயில் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ‘சென்னை மத்திய சதுக்கம் (Chennai Central Square)’ என்று மாற்றி மிகப்பெரிய அளவில் கொண்டு வரும் திட்டம் ‘ஜெ’ ஆட்சியில் கொண்டுவரப்பட்டது.
தற்போது இதற்கான வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது.
MRTS, Suburban, Metro, Central ஆகிய நிலையங்களின் சுரங்க நடைபாதையை இணைத்துச் சிறப்பாக மாற்றி இருப்பதாகக் கூறினார்கள், இன்னும் பார்க்கவில்லை.
இன்னும் ஓரிரு வருடங்களில் உலகத்தரத்துக்கு இணையாகச் சென்னை சென்ட்ரல் பகுதி இருக்கும் என்று நம்பலாம்.
இங்குச் சென்று நிழற்படங்களை எடுத்து ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று விருப்பம். நண்பர்கள் யாரிடமாவது DSLR வாங்கிச்சென்று எடுத்துப் போட வேண்டும்.
சென்னையில் எனக்கு ரொம்பப் பிடித்த இடங்களில் சென்னை சென்ட்ரல் முக்கிய இடம் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
சென்னை மெட்ரோ பயணிகள் அட்ராசிட்டிகள் 🙂
தட்கால் திருட்டுக்கு IRCTC வைத்த ஆப்பு
IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?
ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?
புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!
இதுவரை சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்ததில்லை, என் மகனுக்கு ரயில் பயணம் என்றால் தனி பிரியம்.. கடந்த முறை ஊருக்கு சென்றிருந்த போது, மனைவி குழந்தை பெற்றிருந்ததால் நானும், அவனும் மட்டும் ரயிலில் நிறைய பயணங்கள் மேற்கொண்டோம்.. எனக்கும் ரயில் பயணம் பிடிக்கும் என்பதால், இருவரும் நிறைய கதைகள் பேசிக்கொண்டு சென்ற அனுபவம் இன்று நினைத்தாலும் மனதுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது.. குழந்தைகள் கண் முன்னே சட்டென்று வளர்த்து,. அவர்களுக்குள் முதிர்ச்சி வந்து விடுகிறது.. அடுத்தமுறை ஊருக்கு வரும் போது மெட்ரோ ரயில் குடும்பத்துடன் பயணிக்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
வாங்க வாங்க. சென்னை மெட்ரோ உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙂