தட்கால் திருட்டுக்கு IRCTC வைத்த ஆப்பு

2
தட்கால் திருட்டுக்கு IRCTC

IRCTC யில் தட்கால் முறையில் முன்பதிவு பண்ணுறவங்க எல்லோருமே புலம்பும் ஒரு விஷயம், ‘எப்படி வேகமா முன்பதிவு செய்தாலும் பயணச்சீட்டு கிடைப்பதில்லை‘ என்பது தான்.

ரயில்வே துறை, அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்குக் கொடுத்து விடுகிறார்கள் என்பது குற்றச்சாட்டாக இருந்தது.

தட்காலில் முன்பதிவு செய்பவர்கள் ‘இன்னைக்கு மட்டும் முன்பதிவு செய்துட்டேன்.. ஜெயிச்சுட்டேன்‘ என்பதாகத்தான் இருக்கும் 🙂 . அந்த அளவுக்கு வெறுப்பில் இருப்பார்கள்.

ஓரிரு நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலுக்கு வந்து விடும்.

சட்டவிரோத மென்பொருள்

தற்போது RPF (Railway Protection Force) அமைப்பு, தட்கால் முன்பதிவை சட்டவிரோத மென்பொருள் மூலமாக முன்பதிவு செய்து வந்த 60 முகவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

இவர்கள் முன்பதிவு செய்யும் போது Captcha / OTP என்று அனைத்தையும் தாண்டி விடுகிறார்கள்.

சராசரி பயணி பயணச்சீட்டை முன்பதிவு செய்ய 2:55 நிமிடங்கள் ஆகிறது என்றால், இவர்கள் மென்பொருள் மூலம் 1:48 நிமிடங்களில் முன்பதிவு செய்து விடுகிறார்கள்.

₹50 – ₹100 கோடி

சட்டவிரோத முன்பதிவு மூலம் ஆண்டுக்கு ₹50 – ₹100 கோடி சம்பாதித்து வந்துள்ளார்கள்.

அதிகாரி அருண் குமார்,

சட்டவிரோத மென்பொருள்கள் அனைத்தையும் முடக்கி விட்டோம், இனி வந்தாலும் கடுமையாகக் கண்காணிக்கப்படும்.

தற்போது ஒரு பயணச்சீட்டு கூடச் சட்டவிரோதமாக முன்பதிவு செய்யப்படுவதில்லை என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்‘ என்றார்.

தட்கால் முன்பதிவை முகவர்கள் செய்யக் கூடாது ஆனால், செய்து வருகிறார்கள்.

நாம் பல வழிகளில் நேரங்களைக் குறைத்து வேகமாக முன்பதிவு செய்ய முயற்சித்தால், இத்திருடர்கள் மென்பொருள் மூலமாக எளிதா செய்து வந்துள்ளார்கள்.

தட்கால் எப்போது முன்பதிவு செய்தாலும் எனக்கு 1 / 5 வாய்ப்புகளில் தான் கிடைக்கும்.

எளிதான தட்கால் பயணச்சீட்டுகள்

தற்போது தட்கால் முன்பதிவு பயணச்சீட்டுகள் சில ரயில்களுக்கு 10 நிமிடங்களும், சில ரயில்களுக்கு மணி நேரங்களைக் கடந்தும் கிடைப்பதாகக் கூறியுள்ளனர்.

இதன் பிறகு நண்பர் தட்கால் முன்பதிவு செய்தார், அவருக்குக் கிடைத்தது.

நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் 🙂 .

தொடர்புடைய கட்டுரைகள்

அசிங்கப்பட்ட IRCTC தளம்!

IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

IRCTC அட்ராசிட்டிஸ்

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

https://www.facebook.com/giriblog

2 COMMENTS

  1. சட்டவிரோத முன்பதிவு மூலம் ஆண்டுக்கு ₹50 – ₹100 கோடி சம்பாதித்து வந்துள்ளார்கள். இந்த செய்தியை கேட்கும் போது கண்ணை கட்டுது!!!

  2. உண்மையில் நானும் அதிர்ச்சியாகி விட்டேன் ஆனால், பல ஆயிரம் புழக்காட்டம் உள்ள இடத்தில் 50 / 100 கோடி என்பதை ஒப்பிட்டால் அப்படித்தோன்றவில்லை.

    தனியாகப் பார்த்தால் மிகப்பெரிய தொகை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here