IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?

4
IRCTC Powered by Paytm

னைவருக்குமே பண்டிகை காலங்களில் ரயிலுக்கு முன் பதிவு செய்வது என்பது பெரிய தலைவலி. மூன்று நிமிடங்களில் அனைத்து பயணச்சீட்டுகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும்.

இதில் நான் கூறப்போவது பண்டிகை காலங்களுக்கான முன்பதிவுக்கு மட்டுமல்ல அனைத்து காலங்களுக்குமானது. Image Credit

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது மூன்று பணிகள்

ஒன்று

IRCTC Rail Connect செயலியை (App) நிறுவ வேண்டும்.

இரண்டு

https://www.irctc.co.in –> My Profile –> Masters List க்கு சென்று உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயர், வயது, இருக்கை / படுக்கை தேர்வு (UB,MB,LB,SLB), ஆதார் எண் போன்றவற்றைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

ஆதார் எண் என்றல்ல, அனுமதித்துள்ள எந்த அடையாள விவரங்களையும் பதிவு செய்யலாம்.

மூன்று

நமக்கு மிகவும் நேரம் எடுக்கும் செயலாக இருப்பது பணம் செலுத்தும் பகுதி தான்.

எனவே, அதைத் தவிர்க்க IRCTC யில் உள்ள eWallet ல் நாம் ஊருக்குச் செல்வதற்கான பணத்தின் அளவை இதில் முன்பதிவு செய்வதற்கு முன்பே சேர்த்து விட வேண்டும்.

நான் இதற்குப் பதிலாக Paytm பயன்படுத்துகிறேன் காரணம், Paytm ல் உள்ள மீத பணத்தை நான் வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்த முடியும் ஆனால், IRCTC eWallet ல் முடியாது.

எனவே, Paytm வைத்து இக்கட்டுரையை விளக்குகிறேன், IRCTC eWallet நான் பயன்படுத்துவதில்லை என்பதால், அது குறித்து எனக்குத் தெரியாது.

எப்படிப் பயணச்சீட்டு முன்பதிவு செய்வது?

மேற்கூறியவற்றைச் செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் விரைவான முன்பதிவுக்குத் தயாராகி விட்டீர்கள்.

தற்போது IRCTC Rail Connect செயலியில் முன்பதிவு நேரத்துக்கு 2 நிமிடங்களுக்கு முன்னரே உங்கள் பயனர் கணக்கைப் பயன்படுத்தி நுழைந்து கொள்ளுங்கள்.

காரணம், சரியான நேரத்தில் நுழைந்தால், கடினமான Captcha காரணமாகத் தாமதம் ஆகலாம்.

நீங்கள் செல்லும் இடம், தேதி, ரயிலைத் தேர்வு செய்த பிறகு, பயணம் செய்பவர்கள் பற்றிய விவரங்கள் பகுதி வரும்.

இதில் மேலே வலது புறத்தில் கூட்டல் குறியுடன் Add Existing  இருக்கும், அதைச் சொடுக்க வேண்டும்.

அதில் நீங்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காண்பிக்கும்.

இதில் இருக்கும் Radio Button தேர்வின் மூலம் யார் பயணிக்கிறார்களோ அவர்களது பெயர்களைத் தேர்வு செய்து Done கொடுத்தால் போதுமானது.

இந்த முறை மூலம் இரு பயன்கள்

ஒன்று, இரு நொடிகளில் பயணிப்பவர்கள் பெயர்களை இணைத்து விடலாம்.

இரண்டாவது, அவசரத்தில் தட்டச்சு செய்யும் போது எழுத்து / வயது பிழைகளைத் தவிர்க்கலாம்.

இவற்றை முடித்து உங்கள் பயண விவரங்களைச் சரிபார்த்து Payment பகுதிகளுக்கு வந்த பிறகு, உங்களுக்கு இரு தேர்வுகள் இருக்கும்.

1.  Pay through Credit & Debit Card / Net Banking / Wallets

2. Pay through BHIM/UPI

முதல் வசதியான Pay through Credit & Debit Card / Net Banking / Wallets தேர்வு செய்யவும்.

அதற்குக் கீழே  Travel Insurance வேண்டுமா வேண்டாமா என்பதை தேர்வு செய்யவும்.

இதன் பிறகு உங்களுக்கு இரு வாய்ப்புகள் இருக்கும்.

1. Wallets 

2. Multiple Payment Options 

இதில் Wallets க்ளிக் செய்து Paytm தேர்வு செய்தவுடன் உங்கள் மொபைலுக்கு OTP எண் வரும். அதைத் தட்டச்சு செய்த பிறகு பணத்தை செலுத்தி விடலாம்.

முன்னரே கூறியபடி, நீங்கள் ஏற்கனவே பணத்தை Wallet ல் போட்டுத் தயாராக வைத்து இருந்தால், உடனே பணம் செலுத்தப்படும்.

இல்லையென்றால் உங்கள் கடனட்டை மூலம் செலுத்த வேண்டும். இது உங்களுக்குக் கூடுதல் வேலை, விரைவில் நடந்து விடும் என்றாலும், சில நொடிகள் கூடுதலாகும்.

ஒவ்வொரு நொடியும் முக்கியம்

சில நொடிகள் தாமதத்தில் கூட நீங்கள் பயணசீட்டை இழக்க வேண்டியது வரும். எனவே, ஒவ்வொரு நொடியும் முக்கியம்.

பணம் செலுத்தப்பட்டவுடன் உடனடியாக உங்கள் பயணச்சீட்டு முன்பதிவு முழுமையடைந்து, வழக்கம் போல உங்களுக்கு IRCTC யிலிருந்து குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வந்து விடும்.

அதிகபட்சம் 65 / 75 நொடிகள்

மேற்கூறிய அனைத்தும் அதிகபட்சம் 65 / 75 நொடிகளில் செய்து விடலாம் 🙂 . உங்கள் இணைய இணைப்பு சரியான வேகத்தில் இருக்க வேண்டியது அவசியமானது.

பற்று அட்டை, கடனட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு நம் விவரங்களை அளிக்க வேண்டும் என்பதால், இதற்கு நேரம் எடுக்கும். இம்முறை அவசர முன்பதிவுக்குச் சரி வராது.

கூடுதல் நேரமெடுக்கும் பற்று, கடனட்டைகள் (Debit & Credit Cards) & Net Banking

Net Banking வழியாகச் செலுத்துவதற்கு உங்கள் பயனர் கணக்கு விவரங்களை அளித்து நுழைந்து, பணத்தை அனுமதித்துச் சில நேரங்களில் OTP வருவதில் தாமதம் ஏற்படுகிறது.

பற்று / கடனட்டைகள், Net Banking முறைகள் கூடுதலாக 20 முதல் 45 நொடிகள் வரை எடுத்துக்கொள்ளும், நீங்கள் தட்டச்சு செய்யும் வேகத்தைப் பொறுத்து. இதில் வரும் எழுத்து மற்றும் எண் பிழைகள் நேரம் தனி.

எனவே தான் நான் Paytm பரிந்துரைக்கிறேன்.

இதில் நீங்கள் தட்டச்சு செய்யும் வேலை இல்லை. உங்களுக்கு Paytm கணக்கு இல்லையென்றால் உருவாக்கி Paytm செயலியை நிறுவிக்கொள்ளுங்கள்.

விரைவாக IRCTC யில் முன்பதிவு செய்ய, உங்களுக்கு இக்கட்டுரை பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கொசுறு

ஆதார் பதிவு செய்து இருந்தால் RCTC பயனர் கணக்கு மாதத்துக்கு அதிகபட்சம் 24 முறை முன்பதிவு செய்ய அனுமதிக்கும்.

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கிரி, வெளி ஊரில் இருப்பதால் எனக்கு இது வரை இந்த சேவை பயன்படவில்லை. எதிர்காலத்தில் பயன்படும் என்று நினைக்கிறேன். நண்பர் சக்தி சில சமயங்களில் தொலைதூர ரயில் பயணம் மேற்கொள்ளுவதால் அவருக்கு நிச்சயம் பயன் அளிக்கும். பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. நல்ல பல தகவல்களை கொடுத்துக்கொண்டிருக்றீர்கள்.
    தொடர்ந்து தங்களின் பதிவுகளை படிப்பவர்களில் நானும் ஒருவன்.
    paytm பற்றி என் அனுபவம்.
    IRCTC E wallet மூலம் அவசர நேரத்தில் பதிவு செய்ய முடியாது.அந்நேரத்தில் OTP
    வருவதற்கு மிகுந்த நேரம் எடுத்துக்கொள்ளும்.அதில் பதிவு செய்ய முடியாத அனுபவம் எனக்கு உண்டு.என் அனுபவத்தில் paytm-ல் மற்றதைவிட சீக்கிரம் முடிவதுடன் charge-ம் சற்றே குறைவு.
    நன்றி

  3. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @விபுலானந்தன் Railway E Wallet நான் பயன்படுத்தியதில்லை..எனவே நீங்கள் கூறியது சரியாக இருக்க வாய்ப்புள்ளது. Paytm எனக்கு நன்கு வேகமாக உள்ளது. பெரும் உதவியாக அதுவே OTP யையும் தயாராக வைத்துள்ளது வசதியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!