அசிங்கப்படுவோம் என்று தெரிந்தே திமிருக்குனே ஆங்கிலத் தளத்தில் இந்தியை நுழைத்தது IRCTC. இந்திக்கு என்று தனித்தளம் இருக்கையில், IRCTC யின் செயல் பலரை கடுப்படித்தது.
அசிங்கப்பட்ட IRCTC
நாம் செல்ல வேண்டிய ஊரைத் தட்டச்சு செய்யும் போது இந்தியிலும் தகவல்கள் வந்து கொலைவெறியாக்கியது.
IRCTC தளம் இதைச் செய்ததுமே கடுப்பான கே.கே.டி.ஆர்.யு.ஏ. எனப்படும், “கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கம்” IRCTC க்குக் கடிதம் எழுதியது.
1976 ம் ஆண்டின் விதி “C” யைக் குறிப்பிட்டு வாதாடியதால், அசிங்கப்பட்ட IRCTC தளம் தற்போது இந்தியை ஆங்கிலத்தளத்தில் நீக்கியுள்ளது.
இதன் பெயர் திணிப்பு
இதைப்படிக்கும் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது இது வழக்கமாக நீங்கள் நினைக்கும் இந்தி எதிர்ப்பு கட்டுரையல்ல.
இந்திக்கு என்று தனித்தளம் இருக்கையில் ஆங்கிலத் தளத்திலும் இந்தி திணிப்பை செய்ததால் ஏற்பட்ட கோபமே!
தனக்குச் சாப்பிட ஒரு தட்டில் அனைத்தும் இருக்கும் போது அருகில் உள்ளவன் தட்டிலும் கையை வைப்பது எவ்வளவு கீழ்த்தரமான வேலையோ அதைத் தான் IRCTC தளமும் செய்தது.
இந்தியை கண்மூடித்தனமாக எதிர்ப்பது வேறு இந்தி திணிப்பை எதிர்ப்பது என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
எந்த மொழியும் மற்ற மொழிக்குக் குறைந்தது அல்ல, ஒவ்வொரு மொழியும் தனித்தன்மை வாய்ந்தது.
IRCTC தளத்துக்குச் சரியான பதிலடி கொடுத்து நம் பக்க நியாயத்தை நிலை நாட்டிய கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத்துக்கு மிக்க நன்றிகள்.
தொடர்புடைய கட்டுரைகள்
இவற்றைப் பார்க்கும் போது கடுப்பாகுமா ஆகாதா?!
IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?
புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!
முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்
கொசுறு 1
IRCTC என்ற பெயரை மாற்றப்போகிறார்களாம். என்ன பெருசா வைக்கப் போறானுக, யோஜனா, கஜானா, உஜ்வல்ன்னு ஏதாவது வடா தோசா பேரு வைக்கப்போறானுக. பார்த்துட்டே இருங்க!
இந்தியிலேயே அனைத்து அரசாங்க சேவைப் பெயர்களையும் வைத்து என்னை வெறியாக்கிட்டு இருக்காங்க. இவர்களுக்கு மற்ற மொழிகளெல்லாம் கண்ணுத் தெரியாதா?!
இதுக்கு ஒரு கட்டுரை அப்புறமா எழுதறேன். அப்பத்தான் கொஞ்சம் கடுப்பு குறையும்.
கொசுறு 2
புதிய தளம் IRCTC பயன்படுத்த எளிதாக இல்லை. https://www.irctc.co.in
தளத்தை மேம்படுத்துவதே, ஏற்கனவே உள்ள பிரச்சனைகளைக் களைவதற்காகத்தான் ஆனால், இங்கேயோ ஏற்கனவே இருந்ததே பரவாயில்லை எனும் நிலை தான் உள்ளது.
தளத்தை IRCTC தற்போதைக்கு மேம்படுத்தும் என்று எனக்குத் தோன்றவில்லை. எப்படியோ தளம் மொக்கையாக இருந்தாலும், அவர்கள் சேவை மேம்பட்டு உள்ளது.
கிரி, இதுவரை இந்த தளங்களை பயன்படுத்தியது கிடையாது.. நண்பர் சக்தி தொடர்ச்சியாக இந்த தளங்களை பயன்படுத்தி வருகிறார்.. விருப்பம் என்பது வேறு.. திணிப்பு என்பது வேறு.. விருப்பம் என்பது நாமாக விரும்பி ஏற்றுக்கொள்வது.. இது ஒவ்வொருவருக்கும் வேறுபடலாம்… ஆனால் திணிப்பு என்பது.. நீ விரும்பினாலும், விரும்பாவிடினும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தவறு.. நிறைய கேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்..
யாசின் நீங்க ஊருக்கு வந்தால், இந்த தளம் பயன்படலாம் 🙂