Uri: The Surgical Strike (இந்தி 2019)

3
Uri: The Surgical Strike movie

ண்மைச்சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் Uri: The Surgical Strike.

Uri: The Surgical Strike

2016 ம் ஆண்டுச் செப்டம்பர் 18 ம் நாள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஊரி பகுதி படைப்பிரிவுத் தலைமையகத்தை ஆயுதமேந்திய நான்கு தீவிரவாதிகள் அதிகாலையில் தாக்கினர்.

இதில் 19 இராணுவ வீரர்கள் தூக்கத்திலேயே கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் நுழைந்து அவர்கள் முகாம்களை இந்தியப்படையினர் அழித்தனர்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்‘ என்று அழைக்கப்பட்டு உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்ட நிகழ்வு.

முதல் படம்

இயக்குநர் Aditya Dhar க்கு இப்படம் முதல் படம் என்பது வியப்பளிக்கிறது. ஏனென்றால், இது வழக்கமான காதல் படமோ, மசாலா படமோ அல்ல.

இருப்பினும் முதல் படம் என்று தோன்றாத அளவுக்கு மிகச்சிறப்பாக எடுத்துள்ளார்.

முக்கியக் கதாப்பாத்திரம் Vicky Kaushal உடல்மொழி சிறப்பாக இருந்தாலும் முகபாவனை, கதாப்பாத்திரத்தை நியாயப்படுத்தவில்லை அல்லது எனக்குத் திருப்தியளிக்கவில்லை.

ஏதோ ஒன்று இல்லை.

அல்சைமர்

Vicky Kaushal அம்மா அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார்.

இந்நோய் பாதிக்கப்பட்டவர்கள், கூறியதை உடனே மறந்து விடுவார்கள், தானே எங்காவது நடந்து சென்று, எங்கே இருக்கிறேன், தான் யார் என்பதையும் மறந்து இருப்பார்கள்.

இவரைப் பார்த்துக்கொள்ள Vicky Kaushal தன்னுடைய பணியை ராஜினாமா செய்வார் ஆனால், அவரை அவர் பகுதிக்கு மாற்றல் கொடுத்து இராணுவம் தக்க வைத்துக்கொள்ளும்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்

Vicky Kaushal தான் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கை முன்னெடுத்து, இந்திய இராணுவ அதிரடி படையில் ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் அனைவரையும் திரும்பக் கொண்டு வருவார்.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடந்தது மட்டுமே நமக்குத் தெரியும் ஆனால், அதன் பின்னணியில் நடந்த திட்டங்கள், கடினமான சூழ்நிலைகளை இப்படம் விளக்குகிறது.

பாக் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில் இவர்கள் அதிகாலையில் அதிரடியாக நுழைந்து ஒவ்வொரு இடமாகத் தாக்குவது மிரட்டலாக உள்ளது.

ஹாலிவுட் படங்களில் மட்டுமே உண்மை இராணுவ சம்பவங்களைப் பார்த்த நமக்கு இது போன்ற நம் நாட்டு இராணுவ சம்பவங்களைப் பார்க்கப் பெருமையாக உள்ளது.

குறிப்பாக, இறுதி அரை நேரம் அனைவரையும் பதட்டத்திலேயே வைத்து இருக்கும்.

25₹ கோடியில் எடுக்கப்பட்ட படம் தோராயமாக 360₹ கோடியை வசூலித்துள்ளது. அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Uri: The Surgical Strike திரைப்படத்தைப் பரிந்துரைத்த நண்பர்கள் யாசின் மற்றும் விஸ்வநாத்துக்கு நன்றி.

Zee 5 ல் காணலாம்.

Read: Article 15 (இந்தி 2019)

Theatrical release poster
Directed by Aditya Dhar
Produced by Ronnie Screwvala
Screenplay by Aditya Dhar
Starring Vicky Kaushal, Paresh Rawal, Yami Gautam, Mohit Raina, Kirti Kulhari
Music by Shashwat Sachdev
Cinematography Mitesh Mirchandani
Edited by Shivkumar V. Panicker
Release date 11 January 2019
Running time 138 minutes
Country India
Language Hindi

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, இந்த படத்தை நானும் தற்செயலாக தான் பார்த்தேன்.. ஆனால் படத்தோட பிரமிப்பிலிருந்து விலகி செல்ல சில தினங்கள் ஆனது.. படத்தில் என்னை ரொம்ப கவர்ந்தது, படத்தோட கேமரா ஒர்க் தான்.. பெரும்பான்மை பகுதிகள் செர்பியாவில் எடுத்துள்ளார்கள்.. ஆனால் பார்ப்பதற்கு இந்தியா / பாகிஸ்தான் எல்லை காஷ்மீர் போல் தான் இருக்கும்..

    தமிழிலும் இதுபோல படங்கள் வரவேண்டும் என்பது என் எண்ணம் .. சமயத்தில் படத்தோட ஹீரோவோட இடத்தில் விஜய் / சூர்யா / மாதவன் நடித்தால் எப்படி இருந்து இருக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பதுண்டு.. படம் நிச்சயம் ஓடும் என்றும் தோன்றுகிறது..

    படத்தில் என்னை கவர்ந்த பாத்திரம் இரண்டு பெண்கள் (பெண் பைலட் / ஆரம்பத்தில் நர்சாக வரும் பெண்) இரண்டுமே அழுத்தமாக பாத்திரங்கள்.. படத்தில் ஹீரோவோட சண்டை பகுதிகளை விட, அவர் பிடிக்காத பணியை அலுவலகத்தில் செய்து கொண்டிருக்கும் போது அவரின் உடல்மொழி ரொம்ப பிடித்தது.. கிட்டதிட்ட நானும் அவர் போல் தான் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி இது ஒரு சிறப்பான படம் மிகவும் பெருமையாக இருந்தது இந்திய வான் படையில் சேர முடியாத சூழ்நிலையில் வாழ்க்கை மாறி போன பிறகு இது மாதிரியான படங்களில் நண்பர் யாசின் சொன்ன மாதிரி என்னை பொருத்தி நினைத்து பார்ப்பேன். Lakshaya , பார்டர் போன்ற படங்களும் அவ்வாரே .இதில் லக்ஷய கற்பனையான கதை. பிரபுதேவா தேசிய விருது கிடைத்த படம். பார்டர் உண்மை சம்பவமான longewala battle அடிப்படையாக எடுத்த படம். 2019 ல் வந்த கேசரி -படமும் பாருங்கள். ஆனால் இது மாதிரி நம்மவர்கள் நமது வீரம் போற்றும் படங்கள் எப்போ எடுப்பர்களோ.. எனக்கு நினைவில் இருப்பது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த வீர பாண்டிய கட்டபொம்மன் மட்டுமே

  3. @யாசின்

    “பெரும்பான்மை பகுதிகள் செர்பியாவில் எடுத்துள்ளார்கள்”

    நானும் படித்தேன் ஆனால், நீங்கள் சொன்னது போல சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தது.

    விஜய் இதற்கு பொருத்தமாக இருக்க மாட்டார். சூர்யா இருக்கலாம்.

    @sarav இந்திப்படங்களுக்கு பார்வையாளர்கள் அதிகம். எனவே, அவர்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும் ஆனால், தமிழில் முதலீடு செய்து எடுப்பது சிரமம். பாகுபலி மாதிரி வந்தால் சாத்தியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!