ரயிலில் ‘Boarding Point’ மாற்றுவது எப்படி?

1
IRCTC Boarding Point Change ரயிலில்

யிலில் முன்பதிவு செய்த பிறகு பல காரணங்களால், நாம் ரயிலில் ஏறும் இடம் மாறலாம். அவ்வாறு ஏறும் இடம் நாம் முன்பதிவு செய்த Boarding Point க்கு அப்புறமா வருவது என்றால் சிக்கல்.

காரணம், பரிசோதகர் வரும் போது நாம் இல்லையென்றால், நாம் வரவில்லை என்று கருதி நம் இருக்கையை வேறு ஒருவருக்குக் கொடுத்து விடுவார்.

அதன் பிறகு என்ன வாக்குவாதம் செய்தாலும், மாற்ற முடியாது.

எனவே, நாம் மற்ற பெட்டிகளில் உள்ள நண்பர்களை, குடும்பத்தினரை பார்க்க வேண்டும் என்றாலும், முதலில் நம் பயணச்சீட்டை பரிசோதகரிடம் பதிவு செய்து விட்டே செல்ல வேண்டும்.

எப்படி Boarding Point மாற்றுவது?

இதை உங்களுடைய IRCTC செயலியிலும், IRCTC இணையத் தளத்திலும் செய்யலாம்.

செயலியில் ‘My Booking’ பகுதியில் சென்று நாம் செல்ல வேண்டிய பயணச்சீட்டை தேர்வு செய்து, மேலே உள்ள மூன்று புள்ளிகளை க்ளிக் செய்து Change Boarding Point ல் நமக்குத் தேவையான நிலையத்தைத் தேர்வு செய்தால் போதும்.

இணையத்தில் ‘My Account –> My Transactions –> Booked Ticket History’ சென்று பயணச்சீட்டை தேர்வு செய்து மேற்கூறியது போல மாற்றலாம்.

இச்சேவையை 2018 ம் ஆண்டே IRCTC அறிமுகப்படுத்தி விட்டது.

சில கட்டுப்பாடுகள்

இணையம் மூலம் முன்பதிவு செய்து இருந்தால் மட்டுமே இதை மாற்ற முடியும்.

ரயில் கிளம்ப 24 மணி நேரம் முன்பு மாற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது ஆனால், அதற்கும் குறைவான நேரத்திலும் மாற்றினேன்.

தற்போது நேரங்களைக் குறைத்து இருக்கலாம்.

எப்போதுமே ரயில் கிளம்ப 4 மணி நேரங்களுக்கு முன்பே இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்பதால், முயற்சித்துப்பார்க்கலாம்.

ஒரே ஒரு முறை மட்டுமே Boarding Point மாற்ற முடியும்.

Boarding Point மாற்றப்பட்டால், துவக்கத்தில் முன்பதிவு செய்த Boarding Point ல் ஏறக் கூடாது. ஏறினால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியது வரும்.

தொடர்புடைய கட்டுரைகள்

தட்கால் திருட்டுக்கு IRCTC வைத்த ஆப்பு

அசிங்கப்பட்ட IRCTC தளம்!

IRCTC யில் விரைவாக முன்பதிவு செய்வது எப்படி?

ரயில்வே துறையில் தனியார் சரியா தவறா?

புதுப்பொலிவுடன் சென்னை சென்ட்ரல்!

IRCTC அட்ராசிட்டிஸ்

முட்டை பிரியாணியும் மீதி ஒரு ரூபாயும்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

1 COMMENT

  1. ரயில் பயணம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் நண்பர்களுக்கு நிச்சயம் இந்த தகவல் பயன்படும்.. பகிர்வுக்கு நன்றி கிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here