கூகுள் ஃபேஸ்புக்கை மிரட்டும் TikTok

2
கூகுள் ஃபேஸ்புக்கை மிரட்டும் TikTok

ற்போது கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு TikTok நிறுவனம் குடைச்சலை கொடுத்து வருகிறது, வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு. Image Credit

கூகுள் ஃபேஸ்புக்கை மிரட்டும் TikTok

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் TikTok செயலி (App) தடை செய்யப்பட்டாலும், மற்ற நாடுகளில் சக்கைபோடு போடுகிறது.

குறிப்பாக அமெரிக்காவில் அதிரிபுதிரி வெற்றி.

TikTok அதற்குண்டான நோக்கத்தில் மட்டும் வெற்றி பெற்று இருந்தால், பேச்சில்லை ஆனால், தேடல், செய்தி, காணொளி என்று பலவற்றைக் கபளீகரம் செய்து வருகிறது.

கூகுள்

தலைவன் கூகுளின் தேடல் சேவையிலேயே TikTok கை வைத்துள்ளது தான் தற்போதைய பரபரப்பு.

முன்னர் YouTube க்குப் போட்டியாக உள்ளது என்ற பேச்சால், YouTube Shorts என்று சேவையைக் கூகுள் துவங்கியது.

காணொளிகளை உருவாக்குபவர்களுக்கு வருமானத்தை அள்ளிக்கொடுத்துக் கூகுள் தன் பக்கம் ஈர்த்து வருகிறது.

இருப்பினும் TikTok வளர்ச்சி மலைக்கும் மடுவுக்குமானதாக உள்ளது.

Shorts வைத்துச் சமாளிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தால், தேடலிலும் கை வைத்து விட்டது TikTok.

அடிமடியிலேயே கை வைத்ததால் கூகுள் கதிகலங்கி விட்டது.

தற்போது தங்களுக்குத் தேவையான கடைகளை, இடங்களைத் தேட பலரும் TikTok, இன்ஸ்டாகிராம் தான் பயன்படுத்துகிறார்கள்.

காணொளியாக இருப்பதால், எளிதாக உள்ளது என்று இதற்குப் பலரும் வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

அதோடு TikTok பயன்படுத்துபவர்கள் செய்திகளைப் பார்க்கவும் அதிகரித்து வருகிறார்கள்.

என்ன தான் செய்திகளைப் பார்க்க TikTok பயன்படுத்தினாலும், YouTube இன்னும் அதே பயனாளர்கள் எண்ணிக்கையில் குறையாமல் வெற்றி நடைபோடுகிறது.

அதாவது இன்னமும் செய்திகளைத் தெரிந்து கொள்ளப் பலரும் YouTube தான் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால், கூகுள் தன் எதிர்காலப் பிரச்சனையை உணர்ந்து தேடலில் மாற்றம் செய்ய முயன்று வருகிறது.

சுருக்கமாகக் கூறினால் (Search & Map) Visual ஆக மாற்ற முயன்று வருகிறது.

ஃபேஸ்புக்

ஏற்கனவே இளம் பயனாளர்களை ஃபேஸ்புக் தொடர்ச்சியாக இழந்து வருகிறது.

அதாவது ஃபேஸ்புக் நடுத்தர மற்றும் வயதானவர்களுக்கான தளமாக மாறி வருகிறது.

இளம் தலைமுறையினர் TikTok, இன்ஸ்டாகிராம், Shorts, Snapchat, Reels போன்றவற்றைத்தான் விரும்புகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் என்ற ஒன்றை ஃபேஸ்புக் வாங்கவில்லையென்றால், ஃபேஸ்புக் நிலைமை இந்நேரம் பரிதாபத்துக்குரியதாக மாறி இருக்கும்.

ஏற்கனவே, வருவாய் குறைந்து வருவதாக ஃபேஸ்புக் கலக்கத்தில் உள்ளது.

  • 2016: Facebook is valued at $350 billion
  • 2021: Facebook is valued at $1 trillion
  • 2022: Facebook is valued at $350 billion

பங்குச்சந்தையில் 25% சரிந்துள்ளது (2022 அக்டோபர் இறுதி வாரம்).

WhatsApp நிறுவனத்தில் இருந்தும் பெரியளவில் வருமானம் இல்லை. எனவே, இன்ஸ்டாகிராமைதான் முழுமையாக நம்பியுள்ளது.

YouTube, Android வாங்கியது எப்படிக் கூகுளின் தரமான செயலோ, அதே போலச் செயல் தான் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராமை வாங்கியது.

கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்ட கூகுள் இன்று வரை இழப்பைச் சரிசெய்ய முடியவில்லை.

தற்போது கூகுள், ஃபேஸ்புக் இரு நிறுவனங்களுக்கும் தலைவலியாக TikTok மாறி விட்டது, இதற்கே TikTok இந்தியாவில் இல்லை.

இந்தியாவில் TikTok இருந்தால், இந்நேரம் கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்கள் பெரிய சிக்கலில் மாட்டி இருக்கும் காரணம், இந்தியா மிகப்பெரிய சந்தை.

கூகுள் Vs ?

கால மாற்றத்தில், மக்களின் ரசனைக்கு ஏற்ப மாற்றங்கள் நடந்து கொண்டே உள்ளது. இவற்றைத் தவிர்க்கவே முடியாது.

எதிர்காலத்தில் TikTok போட்டியாக வேறு நிறுவனம் வரலாம், யார் கண்டது!

எத்தனை நிறுவனங்கள் வந்தாலும், இதுவரை கூகுள் Vs “-” என்று வந்து, எதிர்ப்புற நிறுவனங்கள் மட்டுமே மாறிக்கொண்டுள்ளது.

தொடர்புடைய கட்டுரைகள்

அடிபட்டும் திருந்தாத கூகுள்

ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா!

15 நொடி காணொளிகள் | YouTube அதிரடி

கூகுள் Vs ஃபேஸ்புக்

ஃபேஸ்புக் தகவல் திருட்டை தடுப்பது எப்படி?

கூகுள் : வெற்றிக்கதை | எளிமை தரம் வேகம்

YouTube கோட்டையைத் தகர்க்கும் TikTok

ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. கிரி, உண்மையில் படிக்கும் போது சில தகவல்கள் அதிர்ச்சியாகவும், அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருக்கிறது.. வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.. இந்த பஞ்ச லைக் பண்றேன்.. எத்தனை நிறுவனங்கள் வந்தாலும், இதுவரை கூகுள் Vs “-” என்று வந்து, எதிர்ப்புற நிறுவனங்கள் மட்டுமே மாறிக்கொண்டுள்ளது. உண்மை தான்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. @யாசின்

    “வல்லவனுக்கு வல்லவன் வையகத்துள் உண்டு.. இந்த பஞ்ச லைக் பண்றேன்.”

    🙂

    தலைவன் கூகுள் பிரச்சனைகள் இருந்தாலும் தற்போதைய நிலைக்குப் பலமாக தான் இருக்கிறான் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!