இந்தியாவைக் கீழறக்க சில இந்தியர்கள் ஆவேசமாக உழைத்தாலும், அவமானப்படுத்தினாலும் இந்தியா தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டே இருக்கிறது.
இது இந்தியாவுக்கான காலம். Image Credit
குண்டூசியையும் தாண்டிய வளர்ச்சியில் இந்தியா
‘இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறினால், இந்தியாவால் குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது‘ என்றார் பெரியார்.
ஆனால், ஒவ்வொரு நாளும் இந்தியா ஒவ்வொரு வியப்பை மக்களுக்கு அளித்து வருகிறது.
பிரிவினைவாதிகள், இடது சாரிகள் வழக்கம் போலப் புலம்பினாலும் இந்தியா டாப் கியரில் சென்று கொண்டுள்ளது.
ஆனால், இவர்கள் கதற கதற இந்தியா அசத்துவது பார்க்க ஜாலியா தான் இருக்கு 🙂 .
ISRO
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வியாபார ரீதியாக மற்ற நாடுகளின் சேட்டிலைட்டுகளை விண்வெளிக்குக் குறைந்த கட்டணத்தில் செலுத்தி வருகிறது.
மற்ற நாடுகள் மூலமாக அனுப்பும் போது கூடுதல் செலவாகும் போது, இஸ்ரோ குறைந்த கட்டணத்தில் அனுப்ப உதவுகிறது.
இதனால், விண்வெளியில் கோலோச்சிக்கொண்டு, மோனோபோலியாக இருந்த நாடுகள் கடுப்பில் உள்ளன.
சேட்டிலைட்டை இந்தியா அனுப்பினால் போகுமா போகாதா என்று இருந்த நிலை மாறி, அசலாட்டாகச் சேட்டிலைட்டுகளை இஸ்ரோ அனுப்பி வருகிறது.
இதன் மூலம் பல ஆயிரம் கோடிகள் வருமானத்தையும் பெற்று வருகிறது.
குண்டூசி தயாரிப்பது மட்டுமல்ல, விண்ணுக்கே பிரிட்டன் செற்கைகோள்களையும் அனுப்ப முடியும் என்று இந்தியா நிரூபித்துள்ளது.
OneWeb
இங்கிலாந்து நாட்டின் தொலைத்தொடர்பு நிறுவனமான OneWeb இஸ்ரோ வழியாகத் தனது 36 சேட்டிலைட்டுகளை அனுப்பியுள்ளது.
வழக்கமாக ரஷ்யா மூலமாக அனுப்பி வந்தது ஆனால், தற்போதைய போர் காரணமாக இந்தியாக்கு வாய்ப்புக்கிடைத்தது.
இஸ்ரோ வெற்றிகரமாக 36 சேட்டிலைட்டுகளையும் விண்ணில் நிலை நிறுத்தி விட்டது.
ஏர்டெல் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெறிக்க விடும் இந்தியா
இஸ்ரோ மட்டுமல்ல ஏராளமான துறைகளில் இந்தியா வல்லரசு நாடுகளைத் திணறடித்து வருகிறது.
வெளிநாட்டு Rupee பணபரிவர்த்தனைக்காக Vostro கணக்குகளை உருவாக்கி வருகிறது. இவை டாலரின் தேவையைக் குறைத்து இந்திய ரூபாயின் வழியாகப் பரிவர்த்தனை செய்ய உதவும்.
இந்தோனேசியாவிடம் பாமாயிலை வாங்கி அதற்குப் பதிலாக ஆயுதங்களைப் பண்டமாற்று முறையில் கொடுத்து டாலரின் பயன்பாட்டைக் குறைத்துள்ளது.
இது போலக் கூற ஏராளமாக உள்ளது.
ஆனால், இங்குள்ள முன்களப்ஸ், இடது சாரிகள், திராவிடன் ஸ்டாக்குகள் இதெல்லாம் தெரிந்தும் தெரியாத மாதிரி இந்தியாவை இழிவுபடுத்திக் கொண்டுள்ளார்கள்.
இந்தியா தற்போது செய்துக்கொண்டு இருப்பது அசாதாரணமானது. மேலோட்டமாகச் செய்திகளைப் படித்துப் பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு இந்தியாவின் வளர்ச்சிகள், எதிர்காலத் திட்டங்கள் தெரியாது.
தெரிந்து கொள்ளவும் விரும்ப மாட்டார்கள் காரணம், இவர்கள் எண்ணம் முழுக்க எதிர்மறை சிந்தனைகளே!
எதையாவது குறை கூறிக்கொண்டு இருப்பதே இவர்கள் வேலை ஆனால், இந்தியா சரியான பாதையில் சென்று கொண்டுள்ளது.
இந்தியா யாரையும் அழிக்க நினைப்பதில்லை ஆனால், அழிக்க நினைப்பவர்களை விடுவதில்லை.
பொருளாதார வளர்ச்சிக்கு என்ன தேவையோ அதற்கான தொலைநோக்கு நடவடிக்கைகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இதற்கான பலனை அனைவரும் தெரிந்து கொள்ளும் காலம், மிரட்டலாகவும் பெருமையாகவும் இருக்கும்.
தொடர்புடைய கட்டுரை
அமெரிக்க டாலர் மதிப்புக் குறையாதது ஏன்?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, எந்த ஒரு செயலையும், காரியத்தையும் தடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கும் போது, தடைகளை உடைத்து அது வெளிவரும் போது அதன் வீரியமானது இன்னும் அதிக அளவில் இருக்கும்.. இந்தியாவும் அது போல தான்!!! ஊடகங்களின் துணை கொண்டு எவ்வளவு தான் நம்மை கீழிறக்க நினைத்தாலும் இந்தியாவின் வளர்ச்சி என்பது , மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகுமே தவிர.. கிழிருங்க வாய்ப்பேயில்லை..
கடந்த 10/15 ஆண்டுகளில் நமது நாடு மிக பெரிய நிகழ்வுகளை கடந்து மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.. வளர்ச்சி அடைந்த நாடுகளே 2008/2009 காலகட்டத்தில் பொருளாதார சிக்கலில் மாட்டி கொண்டு இருந்த போதும் இந்தியா திடமாக இருந்தது..அமெரிக்காவில் மட்டும் எத்தனை வங்கிகள் அந்த நேரத்தில் மூடப்பட்டது.. இந்தியா கொரோனாவின் தாக்கத்தையும் மிக சிறப்பாக கையாண்டு, மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது..
முதன்முதலில் இந்தியாவில் ரயில்வேயை கொண்டு வரலாம் பிரிட்டிஷ் அரசாங்கம் முயற்சித்த போது, அதற்கு இங்கிலாந்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது .. காரணம் ஒன்று திட்டத்துக்கான அதிகப்படியான முதலீடு, அடுத்து இந்தியர்கள் நடந்தும், கால்நடைகளிலும் பயணம் மேற்கொள்கின்றனர்.. ரயிலில் காசு கொடுத்து பயணிப்பார்களா?? என்ற கேள்வி இருந்துள்ளது.. இதையெல்லாம் மீறி இன்று இந்திய ரயில்வே மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது..
இந்தியாவை விட்டு பிரிட்டன் வெளியேறினால், இந்தியாவால் குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது‘.. பெரியார் சொல்லி 60/70 வருடங்கள் ஓடி விட்டது.. இடைப்பட்ட காலத்தில் பல சாதனைகளை நமது நாடு நிகழ்த்தியுள்ளதை எல்லோரும் அறிந்ததே… !!! எதிர்காலத்தில் இது இன்னும் தொடரும்.. தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.. நம்நாடு அதையெல்லாம் புறம் தள்ளி வளர்ந்து கொண்டே இருக்கட்டும்…
மோடி அரசின் பலன் இப்போது சிலருக்கு புரியாமல் இருக்கலாம். உண்மையிலேயே மோடி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். அவர் இன்னும் 15 ஆண்டுகளாவது இந்தியாவை ஆளவேண்டும். இந்தியாவில் 2014 பிறகு தீவிரவாத குண்டுவெடிப்பு தாக்குதல்கள் முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது கூட கோவையில் மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதல் தீபாவளி அன்று நடத்த திட்டமிடப்பட்டு இறைவன் கருணையினால் அது முன்னரே அதிகாலையில் வெடித்து மக்கள் தப்பித்தார்கள். விசாரணையில் அவர்கள் ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வருகிறது. திமுக போல முஸ்லிம் ஓட்டு வங்கி அரசியல் கட்சியின் ஆட்சியால் இந்த அளவு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. நம்மை காப்பாற்ற திமுக கட்சி இருக்கிறது என்ற தைரியம் தீவிரவாதிகளுக்கு வந்துவிட்டதா? இவ்வளவுபெரிய இந்தியாவில் அவர்கள் தமிழகத்தை அதுவும் கோவையை ஏன் தேர்வு செய்தார்கள்? திமுக அரசின் உளவுத்துறை என்ன செய்கிறது? தமிழ்நாட்டின் மீது மோடி அரசு அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த திமுக அரசு மக்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை போய்விட்டது
கோவை கார் குண்டு வெடிப்பு பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லையே. திமுக இந்த விஷயத்தில் செய்யும் அக்கிரமங்களை பற்றி எழுதுங்கள்
@யாசின்
“ஊடகங்களின் துணை கொண்டு எவ்வளவு தான் நம்மை கீழிறக்க நினைத்தாலும் இந்தியாவின் வளர்ச்சி என்பது , மேலும் மேலும் வளர்ந்து கொண்டே போகுமே தவிர.. கிழிருங்க வாய்ப்பேயில்லை..”
மாற்றுக்கருத்து இல்லாமல் வழிமொழிகிறேன்.
“இந்தியா கொரோனாவின் தாக்கத்தையும் மிக சிறப்பாக கையாண்டு, மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது..”
கொரோனா காலத்தில் 50 லட்சத்துக்கும் / கோடிக்கும் மேல் மக்கள் இறப்பார்கள் என்ற பொய் செய்தியைப் பரப்பிப் பயமுறுத்தினார்கள் ஆனால், எதுவுமே நடக்கவில்லை.
“இதையெல்லாம் மீறி இன்று இந்திய ரயில்வே மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.”
பிரிட்டிஷார் அவர்கள் வசதிக்கு இரயிலைக் கொண்டு வந்தாலும், நாமும் அதில் பயன்பெற்ற வகையில் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே!
தற்போது அவர்கள் விட்டுச்சென்ற பிறகு சமீப வருடங்களில் இந்திய ரயில்வே மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது.
இதைப்பற்றித் தொடரே எழுதலாம், அவ்வளவு மாற்றங்கள் நடந்துள்ளது.
“தூற்றுபவர்கள் தூற்றிக்கொண்டே இருக்கட்டும்.. நம்நாடு அதையெல்லாம் புறம் தள்ளி வளர்ந்து கொண்டே இருக்கட்டும்…”
❤️
@பாலகுமார்
“மோடி அரசின் பலன் இப்போது சிலருக்கு புரியாமல் இருக்கலாம். உண்மையிலேயே மோடி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.”
100% உண்மை. இவர் செய்துகொண்டு இருக்கும் நாட்டின் வளர்ச்சிக்கான செயல்கள் அபரிமிதமானது.
பலருக்கு இவர் செய்துகொண்டு இருப்பதே தெரியவில்லை.
“அவர் இன்னும் 15 ஆண்டுகளாவது இந்தியாவை ஆளவேண்டும்.”
15 ஆண்டுகள் வாய்ப்பில்லை என்று நினைக்கிறன். அடுத்த ஐந்து ஆண்டுகள் உறுதியாக இருப்பார். அதன் பிறகு பொறுப்பில் மாற்றங்கள் வரலாம்.
“தமிழ்நாட்டின் மீது மோடி அரசு அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.”
அவர் அக்கறை எடுத்துக்கொண்டு தான் உள்ளார். இதனாலே ஏராளமான திட்டங்கள் நமக்கு கிடைக்கிறது.
“இந்த திமுக அரசு மக்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை போய்விட்டது”
திமுக அரசு வாக்கு வாங்கி அரசியல் செய்வதே பல பிரச்சனைகளுக்கு காரணம். இதற்கு சரியான அடி விழுந்தால் மட்டுமே இவர்கள் மாறுவார்கள்.
அதற்கு பதில் தேர்தல் முடிவுகள் தான். அதுவரை இதுவே தொடரும்.
@ஹரி
“கோவை கார் குண்டு வெடிப்பு பற்றி நீங்கள் எதுவும் எழுதவில்லையே.”
அண்ணாமலையே பிரித்து மேய்வதால், மேலும் இது குறித்து எழுத விருப்பமில்லை.
ஊருக்கே தெரிந்த விஷயத்தை ஊடகங்களை வைத்துச் சிலிண்டர் வெடிவிபத்துனு சொல்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்!
ஆனால், அண்ணாமலை மட்டும் இதைக் கையில் எடுக்கவில்லை என்றால், சிலிண்டர் வெடிப்பு என்று வழக்கை முடித்து இருப்பார்கள்.
இதுவரை எடப்பாடி பழனிச்சாமி ஒரு வார்த்தை கூடப் பேசாதது அதிர்ச்சி அளிக்கிறது.
“திமுக இந்த விஷயத்தில் செய்யும் அக்கிரமங்களை பற்றி எழுதுங்கள்”
இது பற்றி எழுதும் எண்ணமில்லை ஆனால், பலரும் கண்டுகொள்ளாத, தவறான புரிதலுள்ள இந்திய ரூபாய் வீழ்ச்சி, தமிழ்நாட்டில் போதை பழக்கம் போன்றவற்றை எழுத நினைத்துள்ளேன்.
இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி அடுத்த கட்டுரை எழுதுகிறேன்.