ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா என்பது பலரால் விவாதிக்கப்படுகிறது. Image Credit
சமீபத்தில் ஒரு பெண் வெறுத்துப் போய் ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார். இவர் என் நண்பர் அல்ல ஆனால், என்னுடைய நண்பருக்கு நண்பர்.
அந்தப் பெண்ணுடைய ஸ்டேட்டசில் என்னுடைய நண்பர் கமெண்ட் போட்டதால் என்னுடைய Timeline ல் தெரிந்தது.
கொஞ்சம் சூடாக இருந்ததால், சரி! என்னவென்று பார்க்கலாம் என்று படித்தேன்.
“பெண்ணியவாதிகள் என்ற பெயரில் சிலர் இருக்கிறார்கள் ஆனால், மோசமாக நடக்கிறார்கள். கேவலமான கமெண்ட் போடுகிறார்கள், அதையும் சிலர் லைக் செய்கிறார்கள்.
தான் பெரிய ஆள் என்பதை நிரூபிக்க ஏதேதோ செய்கிறார்கள். சிலர் பெண்கள் பெயரில் வந்து ஏமாற்றுகிறார்கள். பெண் என்ற போர்வையில் செக்ஸ் பற்றி பேசுகிறார்கள்.
ஒரு சில பெண்கள் தாங்கள் தான் அழகு என்பது போல நடந்து கொள்கிறார்கள். இதனால் ஃபேஸ்புக் என்றாலே வெறுப்பாகி விட்டது” .
இது போல எழுதி இருந்தார், இப்படியே அல்ல, இந்தப் பொருள் வரும்படி.
இவர் கூறி இருந்ததில் மாற்றுக்கருத்தில்லை. இதைப் படித்துக்கொண்டிருப்பவர்களில் சிலர் கூட இது போல ஒரு மோசமான வேலையைச் செய்து கொண்டு இருக்கலாம்.
ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா!
எங்கேயும் நல்லவர்களும் இருக்கிறார்கள், மோசமானவர்களும் இருக்கிறார்கள். இதை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நம் நிம்மதி அடங்கி இருக்கிறது.
ஃபேஸ்புக்கில் நண்பர்களிடையே அரசியல் இருக்கிறது உண்மை தான், ஆனால் அதெல்லாம் சமாளிக்கக்கூடிய ஒன்று தான்.
எல்லோருக்கும் லைக் போடுறாங்க, எனக்குப் போடுலையே, நம்மை யாரும் கண்டு கொள்ளவில்லையே.
நாம லைக் பண்ணுறோம் ஆனால், நம்ம எதுவும் போட்டால் லைக் பண்ண மாட்டேங்குறாங்களே என்று இது போலச் சின்னச் சின்ன மனத்தாங்கல்கள் மட்டுமே தவிர்க்க முடியாதது.
ஃபேஸ்புக் எப்படி அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வசதி தருகிறதோ, அதே அளவிற்கு நம்மைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி கொடுக்கிறது.
Friend Request / Block / Unfollow
நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை…
யார் Friend Request அனுப்பினாலும் கண்ணை மூடிட்டு Approve பண்ண வேண்டியது, அப்புறம் அவன் இப்படி சொல்றான், இவன் அப்படி சொல்றான்னு புலம்ப வேண்டியது.
ஒழுங்கா பேசாமல் அநாகரிகமாகக் கமெண்ட் போடுறாங்களா? உனக்குப் பிடிக்காத விசயங்களைப் பேசுகிறார்களா? Block / Unfollow பண்ணு.
உன்னை யாரு தொடர்ந்து அனுமதிக்கச் சொன்னது?
அலப்பறை பண்ணிட்டு இருக்காங்களா, அசிங்கமா பேசுறானா, பெண் பெயரில் வந்து உங்களைப் போட்டு வாங்கறான் என்று தோன்றுகிறதோ அத்தனை பேரையும் Block பண்ணுங்க. அவ்வளோ தான் விஷயம்.
யார் தவறு?
உங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களோட நட்பைத் தொடருங்க. எதுக்கு தேவையில்லாம பதட்டம் ஆகிட்டு, ஃபேஸ்புக்கை திட்டிட்டு இருக்கணும்.
ஃபேஸ்புக் நல்லதையும் தருகிறது கெட்டதையும் தருகிறது.
இதில் நீங்கள் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கான உரிமை. நான் கெட்டதை எடுத்துப்பேன் அப்புறம் கதறிக் கதறி அழுவேன் என்றால் அது யார் தவறு?
நம்மை நாலு பேரு புகழ வேண்டும், நாற்பது பேர் லைக் பண்ணனும், பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அதே வேளையில் இது போலச் சங்கடங்களையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.
உனக்கு ஜால்ரா தட்ட நாலு பேர் இருக்கும் போது, திட்ட எட்டு பேர் இருக்கமாட்டானா?
நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது [சில விதிவிலக்குகள் உண்டு].
நீங்கள் அனுமதித்தால் மட்டுமே!
நம்மிடம் பழகுபவர்கள், நம் எதிரில் உள்ள கண்ணாடி மாதிரி தான். நாம் எப்படி இருக்கிறோமோ, அதைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள்.
நாம் அனுமதித்தால் மட்டுமே எதுவும் தொடரும்.
எனவே, மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி விட்டு நாம் ஒழுங்காக நடந்து கொண்டாலே போதுமானது. நமக்கு எந்தப் பிரச்சனையும் வராது.
இல்லை, என்னால் இப்படி எல்லாம் ஒதுங்கிப் போக முடியாது என்றால், இதனுடன் வரும் பிரச்சனையையும் எதிர் கொள்ளத் தயாராகுங்கள்.
ஃபேஸ்புக் பயன்படுத்துகிறவர்கள் கிட்ட அரசியல்வாதிகள் பிச்சை எடுக்கணும், அரசியலில் அரசியல்வாதிகளையே தூக்கிச் சாப்பிட்டு விடுவார்கள் போல.
சுருக்கமாக நம் பிரச்சனைகளுக்கு நாம் தான் காரணம் மற்றவர்கள் அல்ல. முதலில் கண்டபடி அனைவரையும் நண்பர்களாகச் சேர்ப்பதை நிறுத்துங்கள்.
பிரச்சனை செய்பவர்களைத் தயங்காமல் Block செய்யுங்கள். பிரச்சனைகள் / மன உளைச்சல்கள் தானாகவே சரியாகும். ஃபேஸ்புக் நல்லதா கெட்டதா! என்பது நீங்கள் நடந்து கொள்வதிலேயே உள்ளது.
ஃபேஸ்புக்கில் எப்படி பாதுகாப்பாக இருப்பது, எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பதைப் பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.
பிற்சேர்க்கை
குடிப்பழக்கமும் ஃபேஸ்புக் & WhatsApp பழக்கமும்
ஃபேஸ்புக் அந்தரங்கப் பாதுகாப்பு
ஃபேஸ்புக்கின் இரட்டை அடுக்குப் பாதுகாப்பு வசதி
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஃபேஸ்புக் எப்படி அனைவரையும் நண்பர்களாக ஏற்றுக்கொள்ள வசதி தருகிறதோ, அதே அளவிற்கு நம்மை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும் வசதி கொடுத்து இருக்கிறது. நம்ம ஆளுங்க கிட்ட இருக்கிற பெரிய பிரச்சனை… யார் Friend Request அனுப்பினாலும் கண்ணை மூடிட்டு Approve பண்ண வேண்டியது, அப்புறம் அவன் இப்படி சொல்றான், இவன் அப்படி சொல்றான்னு புலம்ப வேண்டியது. ஒழுங்கா பேசாமல் அநாகரிகமாக கமெண்ட் போடுறாங்களா? உனக்கு பிடிக்காத விசயங்களை பேசுகிறார்களா? Block பண்ணு. உன்னை யாரு தொடர்ந்து அனுமதிக்கச் சொன்னது?
அலப்பறை பண்ணிட்டு இருக்காங்களா, அசிங்கமா பேசுறானா, பெண் பெயரில் வந்து உங்களை போட்டு வாங்கறான் என்று தோன்றுகிறதோ அத்தனை பேரையும் Block பண்ணுங்க. அவ்வளோ தான் விஷயம். உங்களுக்கு யார் பிடிக்கிறதோ அவர்களோட நட்பைத் தொடருங்க. சப்பை விஷயம். இதுக்கு போய் எதுக்கு தேவையில்லாம டென்ஷன் ஆகிட்டு, ஃபேஸ்புக்கை திட்டிட்டு இருக்கணும். ஃபேஸ்புக் நல்லதையும் தருகிறது கெட்டதையும் தருகிறது. இதில் நீங்கள் எதை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கான உரிமை. நான் கெட்டதை எடுத்துப்பேன் அப்புறம் கதறிக் கதறி அழுவேன் என்றால் அது யார் தவறு?
நம்மை நாலு பேரு புகழ வேண்டும், நாற்பது பேர் லைக் பண்ணனும், பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அதே வேளையில் இது போல சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உனக்கு ஜால்ரா தட்ட நாலு பேர் இருக்கும் போது, திட்ட எட்டு பேர் இருக்கமாட்டானா? நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது [சில விதிவிலக்குகள் உண்டு].
////
GOOD ONE
மிக சரியான உண்மை கிரி, நல்லா பதிவு செய்து உள்ளீர்கள்.
மேலும் யாரை நண்பராகக வேண்டும், யாரை கிட்டவே அண்டவிட கூடாது என்ற தெளிவு இல்லாத போது இது போன்ற பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
அன்புடன் சிட்டிபாபு.
ரொம்ப நல்ல குறும்படம்…
சரியான பதிவு கிரி… நீங்கள் கூறிய விஷியங்கள் அனைத்தும் உண்மை தான்.. உலகில் உள்ள எல்லா காரியங்களிலும் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.. அதை நாம் எடுத்து கொள்வதை பொறுத்து தான்… அறியாமைக்கும், மூடநம்பிக்கைக்கும் வித்தியாசம் உண்டு… அது போல இதுவும்… பகிர்வுக்கு நன்றி கிரி..
///நம்மை நாலு பேரு புகழ வேண்டும், நாற்பது பேர் லைக் பண்ணனும், பாராட்ட வேண்டும் என்று ஆசைப்படும் அதே வேளையில் இது போல சங்கடங்களையும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். உனக்கு ஜால்ரா தட்ட நாலு பேர் இருக்கும் போது, திட்ட எட்டு பேர் இருக்கமாட்டானா? நம்முடைய பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம் நம்மைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது////
சரியாய் சொன்னீங்க FACEBOOK இந்த(அஜித் விஜய் சூர்யா) ரசிகர்கள் அடித்து கொள்ளுவார்கள் பாருங்கள் அதை தான் தாங்க முடியாது…
நித்தியை இன்னும் நம்புறாய்களா தாங்கமுடியலை…
good post
கிருஷ்ணா,
சாரி … கிரி நன்றாக உபதேசம் செய்திருக்கிறீர்கள் … as you rights said its the way we look and we are .. rather than blaming someone.. but I am surprised that people can feel for likes and all yaar..
Kamesh
அருமையான பதிவு நண்பா. மிகச் சரியாக ஃபேஸ்புக் பற்றி சொல்லியிக்கிறீங்க. ஒன்னு பிரச்சினைக்குள் போகாமல் ஒதுங்கிப் போகத் தெரியணும். இல்லை … மூக்கை நுழைக்காமல் இருக்க முடியாதென்றால் அதன் பின் வரும் விடயங்களை ஏற்கக்கூடிய மனப்பக்குவம் இருக்கணும். சுருக்கமா சொல்வதென்றால் அன்னப்பறவை போல் இருந்துகொண்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
கிரி சும்மா சம்மட்டி அடி போங்க!!!
வர வர உங்க போஸ்ட்ல காரம் கூடிகிட்டே இருக்கு. 🙂
இதை விட இன்னொரு கூட்டம் இருக்கு. புடிக்காத நாலு பேரு Facebook-ல இருக்கிறதுனால status போட பயப்படற கூட்டம்.
ஐயோ அவன் இந்த போட்டோவ பார்பானேன்னு ஷேர் பண்ணாத கூட்டம். அவங்களுக்கு எல்லாம் privacy settings அப்படின்னு ஒன்னு இருக்கிறதே தெரியாது.
Facebook கெட்டதுன்னு சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லை.
டிவி வந்தப்ப ஊர் உலகத்துல இருக்கிறவன் எல்லாம் டிவி பார்த்து கெட்டு போய்டாங்கன்னு சொன்னங்க.
மொபைல் போன் வந்ததுனாலதான் ஊர்ல ரொம்ப குற்றம் பெருகிடுச்சுன்னு சொன்னங்க.
இப்போ Facebook.
எந்த ஒரு புதிய கண்டுபிடிப்பையும்/முயற்சியையும் சரியாய் பயன்படுத்த தெரியலன்னா அது பயனாளர்களின் தவறு.
“நம்மிடம் பழகுபவர்கள், நம் எதிரில் உள்ள கண்ணாடி மாதிரி தான். நாம் எப்படி இருக்கிறோமோ, அதைத்தான் அவர்களும் பிரதிபலிப்பார்கள்.”
– என்ன தல ஒஸ்தி சிம்பு பாதிப்பா? 🙂
பதிவு ரொம்ப நல்லா இருக்கு
கொசுறு சூப்பர்..
😀 , pakkuradhukkum annan simbu madhiridhan slim ah irukurar
அனைவரின் வருகைக்கும் நன்றி
@ஹாலிவுட் ரசிகன் நித்தி பற்றி பேசுவது பிரயோஜனமில்லை என்பது சரி தான் 🙂
@விஜய் 🙂 நன்றி
@அருண் உங்களுக்கு சொல்ல வேற ஆளே கிடைக்கலையா! என்ன கொடுமை சார்.
@ராஜேஷ் 🙂