அமேசானில் குறைந்த விலையில் வாங்குவது எப்படி?

5
அமேசானில் குறைந்த விலையில்

மேசானில் குறைந்த / தள்ளுபடி விலையில் பொருட்களை எப்படி வாங்குவது என்பது பற்றிப் பாப்போம்.

Keepa

அமேசானில் பொருட்கள் விலை மாறிக்கொண்டே இருக்கும். நாம் கவனிக்காத நேரத்தில் குறைவான விலை இருந்து இருக்கும் ஆனால், தவற விட்டு இருப்போம்.

இதையவே பார்த்துட்டே இருக்க முடியுமா?! நடைமுறையில் சாத்தியமில்லை.

ஆனால், இதற்காகவே (Tracking) செயலி (App) உள்ளது, அது தான் Keepa.

எப்படிப் பயன்படுத்துவது?

  • உலவியில் (Browser) Keepa நீட்சியை (Extension) நிறுவிக்கொள்ள வேண்டும்.
  • இதுவரை குறிப்பிட்ட பொருளின் விலை எவ்வாறு விலை ஏறி இறங்கியுள்ளது என்பதைப் (History) பார்க்கலாம்.
  • தேவையான பொருள் / புத்தகம் (Non Kindle) எதையும் இதில் இணைக்கலாம்.
  • நமக்குத் தேவையான விலை வந்தவுடன் தெரிவிக்கச் செய்யலாம்.
  • இவையல்லாது, Deals ஏதாவது வந்தாலும் தெரிவிக்கும்.
  • நமக்கு Notification வர மின்னஞ்சலை இணைத்தால் போதுமானது.
இம்முறை பொருளை அவசரம் இல்லாமல் பெற நினைப்பவர்களுக்கு மட்டுமே. அதாவது காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்றால்.

எப்படியுள்ளது?

இதைப்பயன்படுத்திப் புத்தகம் வாங்கியுள்ளேன்.

மின்னஞ்சல் வருவதால், எளிதாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

நமக்கு கட்டுப்படியாகும் விலையை நிர்வகிக்கலாம். எனவே, நிர்ணயித்த விலை வரும் வரை காத்திருக்கலாம் என்பதால் பிரச்சனையில்லை.

இதற்கு, வாங்கும் பொருளின் History யைப்பார்க்க வேண்டும். இதுவரை எவ்வளவு குறைந்துள்ளது என்பதைப்பார்த்தால், நிர்ணயிக்க வேண்டிய விலை புரியும்.

நம் விருப்பத்துக்கு மிகக்குறைவாக நிர்ணயித்தால், பயனில்லை. எவ்வளவு குறைக்கலாம் என்பதை History தான் முடிவு செய்யும்.

எனவே, விருப்பப்படுகிறவர்கள் இவசதியை செயல்படுத்திக் குறைந்த விலையில் பொருட்களை வாங்கலாம் 🙂 .

க்ரோம் உலவியில் நிறுவ இங்கே செல்லலாம். தள முகவரி https://keepa.com/

தொடர்புடைய கட்டுரைகள்

ரயில் முன்பதிவு அமேசானில் செய்வது எப்படி?

அமேசான் Kindle ஏன் வாங்க வேண்டும்?!

5 COMMENTS

  1. கிரி.. இதுவரைக்கும் நான் அறியாத புதிய தகவல் இது.. நீங்கள் கூறுவது போல் நிதானமாக வாங்கி கொள்ளலாம் என்று இருக்கும் பொருட்களை இந்த சேவையை பயன்படுத்தி வாங்குவது சரியாக இருக்கும்.. நான் பொதுவாக ஆன்லைன் இல் எதுவும் வாங்குவது கிடையாது.. மிக மிக அரிதான தருணங்களில் மட்டுமே ஆன்லைன் சேவையை பயன்படுத்துவேன்.. வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே..

    ஆனால் நிறைய புத்தகங்கள் வாங்க வேண்டி குறிப்பு வைத்துளேன்.. அவற்றை மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக வாங்க வேண்டும்.. கிண்டல் கருவி இருந்தாலும், அச்சில் உள்ள புத்தகங்கள் மட்டும் மட்டுமே படிக்க பிடிக்கிறது.. இந்தியாவுக்கு வரும் முன்னே சில திட்டங்கள் இடுவது வழக்கம்..

    ஆனால் அவற்றில் 20% கூட பூர்த்தி செய்ய முடியவில்லை.. ஆனால் திருமணத்திற்கு முன்பு இரண்டு முறை விடுமுறையில் வந்த போது போட்ட திட்டத்தில், 120% திட்டம் முழுமையாக வெற்றியடைந்தது.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. @சக்திவேல் 🙏

    @யாசின்

    “நிதானமாக வாங்கி கொள்ளலாம் என்று இருக்கும் பொருட்களை இந்த சேவையை பயன்படுத்தி வாங்குவது சரியாக இருக்கும்.”

    ஆமாம் யாசின். உடனே வாங்க நினைப்பவர்களுக்கு பயனில்லை.

    @ஹரிஷ்

    டெலிகிராம் அனைவரும் பயன்படுத்துவதில்லை. இதைச் செயல்படுத்துவது எவருக்கும் எளிது என்பதால், இம்முறையை பரிந்துரைத்துள்ளேன்.

    இதிலும் டெலிகிராம் பயன்படுத்தும் வசதி உள்ளது.

    டெலிகிராம் வசதி ஏற்கனவே எனக்குத் தெரியும், அக்கா பையன் அழைத்தான் ஆனால், செல்லவில்லை.

    இது போன்ற டெலிகிராம் வசதிகளில் குழுவில் இணைய வேண்டும் என்பதால், Privacy காரணமாக இம்முறையை தேர்வு செய்ய விருப்படுவதில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here