ஃபேஸ்புக் கிளப்பிய தகவல் திருட்டு சர்ச்சையில் பயனாளர்கள் அனைவரும் அரண்டு போய் இருக்கிறார்கள். ஃபேஸ்புக் எப்படியெல்லாம் தகவலைத் திரட்டுகிறது என்பதைக் கண்டறிந்து அதைத் தடை செய்து வருகிறார்கள்.
இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக வருகிறது.
ரொம்ப நாளா ஆளையே காணோம்?!
நீங்கள் ஃபேஸ்புக் உள்ளே ஒரு வாரம் நுழையவில்லை என்றால், என்ன ஆச்சு? என்று கேட்கும், யாராவது நட்பு அழைப்பு கொடுத்தால், மின்னஞ்சல் அனுப்பிக் கூறும்!
புதிய வசதிகள் வந்தால் தெரிவிக்கும், நீங்கள் படிக்காத நிலைத்தகவலை (status) நினைவுபடுத்தும். Image Credit
ஆனால்,
உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு இருக்கிறோம் என்று என்றாவது கூறி இருக்கிறதா? இருக்கலாம்.. சும்மா “Policy Changes” என்று புரியாத வகையில்.
நீங்களும் எதோ கூறுகிறது என்று கவனிக்காமல் இருந்து இருக்கலாம்.
ஆனால், இது தான் நமக்கு வைத்த ஆப்பு!
ஃபேஸ்புக் எப்படியெல்லாம் நம் தகவலை நாம் அறியாமல் எடுத்துக் கொண்டு இருக்கிறது என்று நீங்கள் அறிந்தால், கிறுகிறுத்து விடுவீர்கள்.
எப்படி நம் தகவலைப் பாதுகாப்பது?
ஃபேஸ்புக்கில் நுழைந்த பிறகு Settings –> Apps செல்லுங்கள். அதில் உங்களுக்கே தெரியாமல் ஏகப்பட்ட Apps இருக்கும்.
அதில் தேவையில்லாதது எதுவோ அவற்றை நீக்கி விடுங்கள். இவை தான் உங்கள் தகவல்களை நீங்கள் அறியாமல் திருடிக்கொண்டு இருக்கின்றன.
இவற்றை வைத்துதான் 5 கோடி பயனாளர்கள் தகவல்கள் திருடப்பட்டன.
இதில் சில Apps நீக்கினாலும் “சம்பந்தப்பட்ட App நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு முழுத் தகவலையும் நீக்கிக்கொள்ளுங்கள்” என்று ஃபேஸ்புக் கூறுகிறது.
அதாவது, நீங்கள் Apps நீக்கினாலும் நீக்கவில்லை, வரும் ஆனால் வராது மாதிரி. நீக்கியும் அவர்கள் உங்கள் தகவலை வைத்துக்கொண்டு இருப்பதாகத்தான் அர்த்தம்.
சுருக்கமாக, ஒருமுறை உங்கள் தகவலைத் தாரைவார்த்து விட்டீர்கள் என்றால், அவ்வளோ தான்.
Ads
இதெல்லாம் பரவாயில்லை, Apps க்கு கீழேயே Ads என்று இருக்கிறது பாருங்கள். அதை க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால், உங்களுக்குத் தலை சுற்றிவிடும்.
ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தால், “என்ன சனா! தலை சுத்துதா?! இப்ப சுத்தும் பாரு!” என்பது போல இருக்கும்.
உங்க மொத்த ஜாதகமும் இங்கே தான் உள்ளது. இதுவரை என்ன பார்த்தீர்கள், உங்கள் ரசனை என்ன? எதை விரும்புவீர்கள்? யாரை நேசிக்கிறீர்கள்? என்று மொத்தமும் இங்கே உள்ளது.
இவற்றை வைத்துத்தான் விளம்பரங்கள் வருகின்றன. இப்பகுதியை நான் தற்போது தான் காண்கிறேன், அதிர்ச்சியும் அடைந்தேன்.
தேவையற்றதை உடனடியாக நீக்குங்கள்
இதில் உள்ளவற்றை வைத்தே உங்களுக்கான பரிந்துரையும் வருகிறது. இதில் எவை தேவையில்லையோ அவை அனைத்தையும் நீக்கி விடுங்கள்.
இவற்றையெல்லாம் செய்தால், பாதுகாப்பாகி விடலாமா! என்றால், இல்லை என்று தான் கூற வேண்டும். புதை குழியில் இறங்கி விட்டால், வெளியே வருவது எளிதல்ல.
நண்பர்களிடம் தெரிவித்து அவர்களையும் எச்சரிக்கையாக இருக்கக் கூறுங்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
ஃபேஸ்புக் நடத்திய உளவியல் தாக்குதல் [FAQ]
என்னது.. ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.