YouTube கோட்டையைத் தகர்க்கும் TikTok

2
Shorts Vs TikTok

மெரிக்கா, இங்கிலாந்தில் TikTok செயலி அமோகமாகப் பயன்படுத்தப்படுகிறது. YouTube பயனாளர்களையே பயன்பாட்டில் தாண்டி விட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். Image Credit

YouTube Shorts Vs TikTok

இந்தியாவில் TikTok செயலிக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு, இதைப் பயன்படுத்தியவர்கள் இன்ஸ்டாகிராம் Reels, YouTube Shorts க்கு மாறி விட்டார்கள்.

ட்ரம்ப் அதிபராக இருந்த போது அமெரிக்காவிலும் தடை போட முன்னெடுக்கப்பட்டது ஆனால், நீதிமன்ற தலையீட்டில் பாதியில் நின்றது.

பைடன் வந்த பிறகு ட்ரம்ப் விதித்த தடையை நீக்கி விட்டார்.

TikTok வளர்ச்சிக்கு காரணங்கள் என்ன?

 • ஒரு நிமிடக் காணொளி (தற்போது மூன்று நிமிடங்களாக நீட்டிக்கப்பட்டு விட்டது).
 • தனித் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு.
 • முதலீடு இல்லை.
 • எவரும் வெளியிடலாம்.
 • விளம்பர வருமானம்.
 • உடனடி புகழ்.

அமெரிக்கா இங்கிலாந்து

YouTube ஆதிக்கம் அனைவரும் அறிந்தது. உலகம் முழுக்கச் சக்கைப்போடு போடும் காணொளி தளம்.

யானையின் காதில் புகுந்த எறும்பு போல, TikTok நுழைந்து YouTube யைத் திணற வைத்து வருகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் அதிக நேரம் செலவிடும் காணொளி செயலியில் YouTube யைத்தாண்டி TikTok சென்று விட்டது.

அதிலும் இங்கிலாந்தில் YouTube க்கும் TikTok க்கும் மிகப்பெரிய வித்யாசம். இதனால் YouTube ஆடிப்போய் இருப்பது உண்மை தான்.

இதனால் YouTube Shorts Vs TikTok போட்டி இந்நாடுகளில் கடுமையாக உள்ளது.

இளையோர்

மக்கள் சுவாரசியமான, குறைந்த நேர நகைச்சுவை காணொளிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

எந்த நிறுவனமும் இளையோரை நம்பியுள்ளது. எனவே, இளையோரை அதிகம் பெற்றாலே இலாபத்தைப் பெற முடியும்.

இளையோர் TikTok போலக் குறுகிய நேர காணொளிகளையே விரும்புகிறார்கள்.

தற்போது காணொளியை 3 நிமிடங்களுக்கு மேல் பார்க்கப் பலர் தயாராக இல்லை. நேர்முகம் போன்றவற்றை பார்ப்பவர்கள் இருந்தாலும், எண்ணிக்கையில் குறைவு.

டெஸ்ட் போட்டியைக் காண்பவர்கள் இருந்தாலும், டுவென்டி 20 க்கு வரவேற்பு அதிகம் என்பது போல.

ஃபேஸ்புக்

நடுத்தர வயதினர், வயதானவர்கள் பயன்படுத்துவதாக ஃபேஸ்புக் மாறி விட்டது. இன்ஸ்டாகிராம் இல்லையென்றால் ஃபேஸ்புக் எதிர்காலம் சிக்கலாகி இருக்கும்.

இன்ஸ்டாகிராமை வாங்க கூகுள் மறுத்த நேரம் ஃபேஸ்புக் க்கு நல்ல நேரமாகி விட்டது.

இன்ஸ்டாகிராமை வாங்காமல் தான் செய்த பெருந்தவறை இன்றுவரை கூகுள் சரி செய்ய முடியவில்லை.

Shorts

TikTok வைத்த ஆப்பால் ஆடிப்போன YouTube நிறுவனம் கொண்டு வந்த புதிய சேவை தான் YouTube Shorts.

15 நொடி காணொளிகளை இதில் வெளியிடலாம். ஏராளமான பார்வைகளைப் பெற்று வருகிறது.

இந்தியாவிலும் YouTube யை விட YouTube Shorts ல் நேரம் செலவிடுபவர்கள் அதிகரித்து வருகின்றனர்.

$100 – $10000

YouTube Shorts ல் ரசிக்கும்படியான காணொளியை வெளியிடுபவர்கள் மாதம் $100 – $10000 வரை வருமானம் பார்க்கலாம் என்று YouTube கூறியுள்ளது.

இந்திய மதிப்பில் தோராயமாக மாதம் ₹7,20,000 (*செப்டம்பர் 2021).

TikTok ஆபத்தை உணர்ந்து, தன் பக்கம் அனைவரையும் இழுக்கத் தீவிரமாக YouTube இறங்கியுள்ளது.

ஏற்கனவே, பலர் Shorts, Reels, TikTok செய்கிறேன் என்று கோமாளித்தனமான, எரிச்சல் வரும் வேலைகளைச் செய்து வருகிறார்கள். இனி, மேலும் அதிகரிக்கும்.

Shorts Reels TikTok ஆபத்துகள்

புகழ், வருமானம் அதிகம் கிடைக்கிறது என்றால், பிரச்சினை வராமல் இருக்குமா?

மது, போதை மருந்தை விட மிக ஆபத்தானது புகழும், பணமும். இதற்கு அடிமையாகி விட்டால், மீள்வது கடினம்.

இன்று பிரபலமாக இருப்பவர்கள், அதிகம் வருமானம் பெறுபவர்கள் ஏதாவது ஒரு கட்டத்தில் சரக்கு தீர்ந்ததாலோ அல்லது போட்டியாலோ கவனம் பெறத்தவறலாம்.

பார்வையாளர்கள் (Views) கொஞ்சம் குறைந்தாலும், வருமானம் சில நூறு டாலர்கள் குறைந்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்.

உலகில் கொடுமையான நிகழ்வுகளில் ஒன்று, புகழோடு இருந்து பின்னர் புறக்கணிக்கப்படுவது, கண்டுகொள்ளப்படாமல் இருப்பது தான்.

திடீர் பிரபலமாக உருவெடுத்த பலரின் வாழ்க்கையைப் பார்த்தால், பின்னாளில் பல சிக்கல்களில் இருப்பார்கள். இதில் தப்பித்தவர்கள் வெகு சிலரே.

இந்தியாவில் தற்போது TikTok இல்லையென்பது YouTube க்கு சாதகமான ஒரு அம்சம்.

YouTube Shorts உலகம் முழுக்க TikTok போட்டியைச் சமாளிக்குமா என்பது வரும் காலங்களில் தெரியும்.

கொசுறு

கூகுள் தற்போது Dark Mode யைக் கூகுள் தேடுதல் தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Dark Mode மாற்றினால் பேட்டரி, மின்சாரத்தைச் சேமிக்க உதவுகிறது என்று ஆய்வு கூறுகிறது.

உலகம் முழுக்க உள்ளவர்கள் Dark Mode க்கு மாறினால், சேமிக்கப்படும் சக்தி ஏராளமானது.

நீங்களும் Dark Mode யை முயற்சித்துப் பாருங்கள்.

தொடர்புடைய கட்டுரைகள்

15 நொடி காணொளிகள் | YouTube அதிரடி

இன்ஸ்டாகிராம் தெரிந்து கொள்ளுங்கள்

என்னது.. ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கிரி, பதிவை படிக்கும் போதே மிரட்சியாக இருக்கிறது.. இன்று எங்கு இளைய சமுதாயம் பயணித்து கொண்டிருக்கிறது என்பதை நினைத்தாலே இன்னும் பயமாக இருக்கிறது.. குறிப்பாக இன்னும் பள்ளி பருவத்தை தாண்டாமல் இருக்கின்ற என் மகன், உங்கள் மகன் வயதை ஒத்த மற்றவர்களின் எதிர்காலம் எவ்வாறு செல்லும் என கணிக்க முடியவில்லை.. இந்த மாற்றங்களின் மூலம் ஏற்படுகின்ற நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம் என நான் எண்ணுகிறேன்..விரும்பினாலும் விரும்பாவிடினும் நம் மீது திணிப்பதாகவே கருதுகிறேன்..

  மௌனம் பேசியதே படத்தில் சூரியா சொல்லும் வசனம் மிகவும் பிடிக்கும்.. (எங்கடா இருந்திங்க இவ்வளவு நாள், திடிரென்று லவ் என்றிங்க !!!… ) அது போல இவ்வளவு நாள் இதெல்லாம் எங்க இருந்துச்சி என்றே தெரியவில்லை.. நம்மை சுற்றி எதிர்பார்க்காத பல மாற்றங்கள் நடந்து கொண்டே இருக்கிறது.. இளைய சமுதாயத்தின் பெற்றோர்களே விழித்து கொள்ளுங்கள்.. இல்லையெனில் நம் கண் முன்னே நமது குழந்தைகள் அன்னியப்பட்டு நாம் தொட முடிய தூரத்திற்கு சென்று விடுவார்கள்.. காலம் கடந்து வருந்தி பயனில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

 2. @யாசின் இவற்றைத் தவிர்க்க முடியாது.

  பயன்படுத்துபவர்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்வதை தவிர வேறு வழியில்லை.

  மௌனம் பேசியதே படம் எனக்கு ரொம்ப பிடித்த படங்களில் ஒன்று 🙂 . சூர்யா கதாப்பாத்திரம் ரசிக்கும் படி இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here