இன்ஸ்டாகிராம் தெரிந்து கொள்ளுங்கள்

7
இன்ஸ்டாகிராம்

ளையவர்களிடையே இன்ஸ்டாகிராம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. Image Credit

இன்ஸ்டாகிராம்

நிழற் படத்தை, எந்த வண்ணம், வடிவம் பிடிக்கிறதோ அந்த முறையில் படத்தை மாற்றிச் சேமித்துக் கொள்ளலாம். சுமாரான படத்தைக்கூட அழகாக்கலாம்.

இதைச் செய்யத் தொழில்நுட்ப அறிவு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பல மில்லியன் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள்.

ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்துகிறவராக இருந்தால், இன்ஸ்டாகிராமைப்  பயன்படுத்திப் பாருங்கள், உங்களுக்கும் பிடிக்கலாம்.

பயன்கள் என்ன?

  • ட்விட்டர் போல அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
  • அனைவரும் தங்கள் நிழற்படங்களை, காணொளிகளைப் பகிர்கிறார்கள். இதற்கு மற்றவர்களிடையே வரவேற்பு காணப்படுகிறது.
  • பிரபலங்கள் பெரும்பாலானவர்கள் இதில் கணக்கு வைத்துள்ளார்கள். சிலர் தங்களைப் பிரபலப்படுத்தவும், சிலர் இதன் மூலம் வாய்ப்புகளைப் பெறவும் பயன்படுத்துகிறார்கள்.
  • மற்றவர்கள் இதில் கிடைக்கும் பாராட்டுக்காகவும், லைக்குக்காகவும் பயன்படுத்துகிறார்கள்.
  • 60 நொடி காணொளிகளை இதில் இணைக்க முடியும். கூடுதல் நிமிட காணொளிக்கு IGTV வசதியைப் பயன்படுத்தலாம்.
  • ஃபேஸ்புக் பயன்படுத்திய இளையோர் தற்போது இன்ஸ்டாகிராமுக்கு நகர்ந்து வருகிறார்கள், எதிர்காலம் இன்ஸ்டாகிராம் தான்.
  • மீம் காணொளிகள், நிழற்படங்கள் அதிகம் பகிரப்படுகின்றன.
  • படிப்பதை விடப் பார்ப்பதற்கே அனைவரும் விரும்புவதால், பலர் இதை விரும்பக் காரணம்.
  • TikTok அதிகளவில் பிரபலமானதே இதன் மூலம் தான்.
  • பதிவேற்றும் நிழற்படத்தை மேம்படுத்தி அழகுபடுத்த முடியும் என்பதால், பலரும் விரும்புகிறார்கள்.
  • பெரிய பிரபலங்கள் தங்கள் கணக்கில் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.
  • பயன்படுத்த எளிது என்பதால், அனைவரையும் எளிதில் அடைந்து விட்டது.

இன்ஸ்டாகிராமை கூகுள் விலைக்கு வாங்காமல் தவற விட்டது, மிகப்பெரிய இழப்பு.

தொடபுடைய கட்டுரைகள்

இன்ஸ்டாகிராம் வருமானம் $20 பில்லியன்!

என்னது.. ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. Apps – விளக்கம் பலருக்கும் பயன்படும்…

    கொசுறு : பல தகவல்களுக்கு மிக்க நன்றி…

  2. தகவலுக்கு நன்றி…சமீப காலமாக நானும் புகைப்படங்களை எடுக்க கற்றுக்கொண்டு இருக்கிறேன்… நேரமிருந்தால் எனது படங்களையும் பார்த்து உங்களது கருத்துகளை பதியுமாறு கேட்டு கொள்கிறேன்……

    http://vtthuvarakan.blogspot.co.uk/search/label/My%20Clicks

  3. Welcome To Instagram!

    The Best Camera Is The One That’s With You.

    உங்களது படங்கள் எல்லாம் நல்ல இருக்கு. இன்னும் எடுத்து கலக்குங்க.

  4. குறிப்பு: இதில் ஒன்றிரண்டு அடல்ட் படங்களும் உண்டு.

    —————————–
    எங்கே அது ? 😛

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!