சமூகத்தளங்களின் உளவியல் சுவாரசியம், எரிச்சல், வியப்பு, கடுப்பு என்று அனைத்து உணர்வுகளையும் ஒருங்கே கொண்டுள்ளது.
சமூகத்தளங்களின் உளவியல்
மனிதர்களின் குணங்களை, எண்ணங்களை, முகங்களை இரு வகையாகப் பிரிக்கலாம். Image Credit
ஒன்று வழக்கமான வாழ்க்கையில் பிரதிபலிக்கும் இயல்பான எண்ணங்கள். இரண்டாவது, சமூங்கதளங்கள் வழியாகப் பிரதிபலிக்கும் இன்னொரு முகம்.
நேரடியாகப்பேசும் போது இயல்பாக இருப்பவர்கள் சமூகத்தளங்களில் சந்திரமுகியாகி விடுகிறார்கள்.
நண்பர்களிடையே பேசும் போது இயல்பான விவாதத்தில் இருப்பவர்கள் சமூகத்தளங்களில் போராளியாக மாறி இன்னொரு முகத்தைக் காட்டுவார்கள்.
அவரா இவர்?! என்பது போல வியப்பாக இருக்கும்.
ஃபேஸ்புக் கட்டுரை கருத்துகள்
எதிர்மறை எண்ணங்களின் ஊற்று என்றால் அது ஃபேஸ்புக் தான்.
இதற்குப் பிறகே ட்விட்டர் வரும்.
எந்தக் கட்டுரை என்றாலும் அதற்கு எதிரான கருத்துகளே இருக்கும். அது என்ன மாதிரியான செய்தியாக இருந்தாலும் பொருட்டல்ல.
ஒரு அரசியல் கட்சித் தலைவரைக் கருத்துப்பகுதியில் கழுவி ஊத்தி இருப்பார்கள். அவரையே இன்னொரு அரசியல்வாதி விமர்சித்து இருப்பார்.
தற்போது விமர்சித்தவரை காய்ச்சி எடுத்து முதலில் கூறியவருக்கு ஆதரவாகப் பேசி இருப்பார்கள் 🙂 . முரணாக இருக்கும்.
சுருக்கமாக, யார் என்ன கூறினாலும் அதற்கு எதிராக விமர்சிப்பதே அனைவரது வழக்கம், எந்தக் கட்சியாக / நபராக இருந்தாலும் விதிவிலக்கல்ல.
வெகுசில கட்டுரைகளில் மட்டுமே இது போல இருக்காது.
Ha Ha Ha
நகைச்சுவைக்காகக் கொடுக்கப்பட்ட ஸ்மைலி பலரை கடுப்படிக்கவே பயன்பட்டு வருகிறது 🙂 .
அதாவது ஒருத்தர் சீரியஸாக எழுதி இருந்தால், அதற்கு Ha Ha Ha ஸ்மைலி போட்டு வெறுப்பேற்றி இருப்பார்கள்.
இது கூடத் தங்கள் எண்ணங்களை இதுபோல வெளிப்படுத்தச் செய்கிறார்கள் என்று எடுத்துக்கொண்டாலும், சகிக்கவே முடியாதது, இறப்பு, கொலை, வன்முறை செய்திகளுக்கும் இதே ஸ்மைலி போட்டு வைத்து இருப்பார்கள்.
உளவியல் ரீதியாகச் சிக்கலில் உள்ளவர்களால் மட்டுமே இது போல அடுத்தவர் துன்பத்தில் சிரிக்க முடியும்.
கருத்துரை பகுதியில், ‘இதுக்கு எதுக்குடா சிரித்து வைத்து இருக்கீங்க?‘ என்ற எரிச்சலான கருத்துகளையும் காண முடியும்.
குறிப்பிட்ட சில கணக்குகள்
குறிப்பிட்ட காலத்துக்குக் குறிப்பிட்ட சிலர் கருத்துகளே முன்னணியில் இருக்கும். பெரும்பாலும் அனைத்துக் கட்சி சார்ந்த கட்டுரைகளிலும் காணப்படும்.
100% ஏதாவது ஒரு கட்சியை ஆதரிப்பவராக / எதிர்ப்பவராக இருப்பார்.
தனக்குப் பிடிக்காத கட்சியின் கட்டுரைகளில் எதிராகக் கருத்திடுவார்கள். யாரும் கருத்திடும் முன்பு சுவாரசியமாகக் கருத்திட்டால் அதிக லைக்ஸ் பெறும்.
எனவே, பெரும்பாலும் இவர்களே பெரும்பாலான கருத்துப் பகுதியில் கவனம் பெற்று இருப்பார்கள், 90% போலி கணக்காகவே இருக்கும்.
இவ்வாறு வருகிறவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருப்பார்கள், பின்னர் என்ன ஆவார்கள் என்று தெரியாது, அதன் பிறகு காண முடியாது.
கருத்துப்பகுதியில், ‘எங்கே பார்த்தாலும் இவனே சுற்றிட்டு இருக்கான்‘ என்ற கிண்டலான கருத்துகளையும் காண முடியும் 🙂 .
கருத்து கூறுவது கட்டாயமா?
கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் இடமாகச் சமூகத்தளங்கள் உள்ளன.
ஆனால், அதற்காக அனைத்துக்கும் கருத்துகளைக் கூறியே ஆக வேண்டும் என்பதில்லை. நாளடைவில் இதுவே நெருக்கடியாகி விடும்.
விருப்பமில்லாத சம்பவத்திலும், கருத்து கூற வேண்டிய கட்டாயத்தில் இருப்போம்.
பின்னர் ‘அதற்குக் கருத்து சொன்னீங்க, இதற்குச் சொல்லல‘ என்பது போல விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும்.
இது நம்மைப் போலியாக மாற்றவும், விருப்பம் இல்லாமல் கருத்தைக் கூற வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்குகிறது.
எனவே, சமூகத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களை வளர்த்து அனைவருடனும் பகைமை பாராட்டாதீர்கள்.
தொடர்புடைய கட்டுரைகள்
என்னது.. ஃபேஸ்புக் வயதானவர்களுக்கா?!
ஃபேஸ்புக் தகவல் திருட்டை தடுப்பது எப்படி?
facebook “முகநூல்” என்றால் Lady Gaga “பெண் காகா” வா?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, சமூக வலைத்தளங்களில் அதிகம் ஈடுபாடு இல்லாதவன் நான்.. நான் தொடர்ச்சியாக கருத்திடுவது உங்கள் ஒரு தளம் மட்டுமே.. சமூகத்தளங்களை பொறுப்புடன் பயன்படுத்துங்கள். எதிர்மறை எண்ணங்களை வளர்த்து அனைவருடனும் பகைமை பாராட்டாதீர்கள். நன்றாக சொல்லி இருக்கீங்க!!! பகிர்வுக்கு நன்றி கிரி.
யாசின் நானும் சமூகத்தளங்களில் இல்லை. 2014 ம் ஆண்டே வெளியேறி விட்டேன் 🙂 .