அனைவரும் படிக்கவேண்டிய முக்கியக் கட்டுரையாக எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுத்தும் இழப்புகள் கட்டுரையைக் கருதுகிறேன். Image Credit
பல பிரச்சனைகளுக்குத் தீர்வு நம்மிடமே இருப்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.
ஏதாவது விசயத்தில் அடிபட்டு அல்லது வேறு அனுபவத்தில் தெரிந்த பிறகு அடடா! இது தெரியாம போச்சே! என்று நினைப்போம்.
Read: நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?
இங்கே நான் கூறுவது அனைத்துமே என்னுடைய அனுபத்தில் நானாகத் தெரிந்து கொண்டவை தான். எனவே, என்னை நீங்கள் நம்பலாம் 🙂 .
எதிர்மறை எண்ணங்கள்
முன்னோர்கள் “நல்லதையே நினைக்க வேண்டும், நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று கூறி இருக்கிறார்கள். இதெல்லாம் பொய்யில்லை 100% உண்மை.
“எண்ணம் போல வாழ்வு” “இதுவும் கடந்து போகும்!” என்பவை முன்னோர் வாக்கு.
“நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்” என்பது புத்தரின் கூற்று.
ப்ரூஸ் லீ கூறியது போல “அனைத்துமே கிடைக்கும் வாழ்க்கையை வேண்டாதீர்கள், பிரச்சனை வந்தால் அதை எதிர்கொள்ளும் பலத்தை வேண்டுங்கள்“.
இவற்றைப் பின்பற்றுங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளும்.
பெரும்பாலானவர்களுக்கு,
“அடுத்தவன் எப்ப நாசமா போவான்? அவன் மகிழ்ச்சியாகவே இருக்கானே? நம் செயல் தோல்வி அடைந்து விடுமா? நாம எங்க உருப்படப் போறோம்!
ம்ஹீம் இது சரிப்பட்டு வராது. அடப்போங்கப்பா! இதெல்லாம் ஆகறதுக்கு இல்ல, என்னால் முடியாது, இது நடக்கவே நடக்காது.”
என்று இது மாதிரி ஆயிரம் எதிர்மறை எண்ணங்களைத் தினமும் சுமந்து கொண்டு இருக்கிறோம்.
இதெல்லாம் எவ்வளவு மோசமான எண்ணங்கள் தெரியுமா?
எதிர்மறை எண்ணங்கள் (Negative thought) பலவீனப்படுத்தும்
எதிர்மறை எண்ணங்கள் நம்மை முன்னேற்றம் அடையச் செய்யாது. அனைத்தையும் தோல்வி ஆக்கி விடும். மனதை சோர்வடையச் செய்து விடும்.
கடுமையான மன உளைச்சலில் தள்ளி நம் நிம்மதியை முற்றிலும் குலைத்து விடும். மகிழ்ச்சியை தொலைத்து எப்போதுமே ஒரு சோக மனநிலையில் இருப்போம்.
நம் மற்றும் அடுத்தவர் எண்ணங்களுக்குப் பலம் அதிகம். வேதாத்ரி மஹரிஷியின் நூல்களில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் எதிர்மறை எண்ணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். “முடியாது, கிடைக்காது, நடக்காது” போன்ற வார்த்தைகளை முற்றிலும் ஒதுக்க வேண்டும்.
எப்போதோ நடக்கப்போவதை எண்ணி இன்றே கவலைப்படக் கூடாது. எது நடந்தாலும் நம்முடைய நன்மைக்கே என்று எண்ண வேண்டும்.
சிரமமான தருணங்களில் எங்கே இருந்தாவது நமக்கு உதவி கிடைக்கும் அதனால், கவலைப்பட வேண்டியதில்லை என்பதை முழுமையாக நம்ப வேண்டும்.
Read: கர்ம வினையும் இந்து மதமும்
பயப்படுவதால் பிரச்சனை தீராது என்ற நிதர்சனத்தை உணர வேண்டும். எனவே, “என்ன நடந்து விடும்!” என்ற தைரியத்துடன் இருக்க வேண்டும்.
அடுத்தவரைப் பற்றிப் பேசிச் சுகம் காணுவது தவறான செயல்.
அனைத்தையும் பேசிவிட்டு “நமக்கெதுக்கு அடுத்தவன் விசயம்” என்று கூறுவது அனைத்தையும் விட மோசமானது.
நம்மைப் பற்றிப் பிறர் விமர்சித்தால், புறம் கூறினால் தலைவர் கூறிய செவுட்டுத் தவளையாக இருந்து விட வேண்டும்.
ஒரு செயலை முடிவு செய்து நடக்கவில்லையென்றாலும் நன்மைக்கே என்று நேர்மறையாகக் கருத வேண்டும்.
யார் யார் எல்லாம் எதிர்மறையாகப் பேசுகிறார்களோ அவர்களை விட்டு விலகி இருக்க வேண்டும்.
நம் நம்பிக்கை அனைத்தையும் குலைத்து நம்மை உருப்படாமல் போக வழிவகைச் செய்ய நினைப்பவர்கள் இவர்கள்.
எவையெல்லாம் நம்முடைய நிம்மதியை குலைக்கிறதோ, எதிர்மறை எண்ணங்களைத் தருகிறதோ அவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
நாம் தினமும் பயன்படுத்தும் WhatsApp ல் நம்மிடம் எதிர்மறை செய்திகளைக் கூறுகிறார்களா? மன அழுத்தம் ஏற்படும் படி நடந்து கொள்கிறார்களா?!
கொஞ்சம் கூட யோசிக்காமல் அந்தக் குழுவில் இருந்து வெளியேறி விட வேண்டும்.
தனி நபர் என்றால் Block செய்து விடவும்.
மகிழ்ச்சியாக, உற்சாகமாக, நல்ல விசயங்களைப் பேசுபவர்கள், நல்ல ஆலோசனைகளைக் கூறுபவர்களை நண்பர்களாக்கி கொள்ள வேண்டும்.
மிகப்பெரிய பலம் நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை எண்ணங்களால் எனக்கு ஏற்பட்ட / நடந்த நல்ல செயல்களைக் கூறினால், உங்களால் நம்பவே முடியாது.
சில நேரங்களில் “ஒருவேளை நமக்கு நேரம் ரொம்ப நல்லா இருக்கோ! அதனால் இப்படி நடக்கிறதோ!” என்றும் தோன்றியிருக்கிறது.
எதை நினைத்தும் கவலைப்படுவதில்லை. நான் நேர்மையாக இருக்கிறேன் எனவே, யாருக்கும் பயப்படுவதில்லை.
என்ன நடந்து விடப்போகிறது?! “பார்த்துடுவோம்” என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது.
இதுவே என்னைத் தெளிவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
என் தளத்தில் எதிர்மறை எண்ணங்களை நான் எழுதியதில்லை.
ஏனென்றால், அவ்வாறு எழுதுவது கூட, படிக்கும் யாரையாவது மனதளவில் தைரியத்தை இழக்க வைக்கும்.
எனவே, நேர்மறையாகச் சிந்தியுங்கள், நல்லதே நடக்கும் என்று நம்புங்கள், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள்.
எதையும் சமாளிக்கலாம் என்று நம்பிக்கையாக இருங்கள்.
இதை பின்பற்றினால் உங்கள் வாழ்வில் நீங்கள் நினைத்தே இராத நல்ல செயல்கள் எல்லாம் நடக்கும்.
தொடர்புடைய கட்டுரை
நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
எதிர்மறை எண்ணங்கள் வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்கின்ற கருவிகள். எங்கேயோ படித்த ஒரு வரிகள்.. அடிக்கடி நினைவுக்கு வருவது (ஒருவன் அடைந்ததைக் கண்டு பொறாமைப்படாதீர்கள். அவன் இழந்தவை தெரிந்தால், அடைய வேண்டும் என்ற ஆசையே உங்களுக்கு வராது) சத்தியமாக வரிகள்…
தன் உழைப்பு திருடப்படுவது தெரிந்தும் விடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தேனீயை விட ஒரு உதாரணத்தை கூற இயலாது. முயற்சி இல்லாமல் முன்னேற்றம் இல்லை.
(நேர்மறையாகச் சிந்தியுங்கள், நல்லதே நடக்கும் என்று நம்புங்கள், எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களிடம் இருந்து விலகி இருங்கள், எதையும் சமாளிக்கலாம் என்று நம்பிக்கையாக இருங்கள்.) உண்மையான வரிகள்…
அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு சொத்துக்கள் விட்டு சென்றாலும் அவர்களிடம் நல்ல பழக்கங்கள், நல்ல எண்ணங்கள் இல்லையெனில் இந்த சொத்துக்கள் எதற்கும் பயன்படாது. அவர்களுக்கு நல்ல எண்ணங்களை, நல்ல சிந்தனைகளை விதைத்தோம்மானால் நிச்சயம் அவர்களுக்கு அது பயன்படும்.. நிறைவான கட்டுரை.. படித்தபின் மன நிறைவாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி கிரி.
உங்களுடைய ஒவ்வொரு எழுத்தும் எனக்குள் ஒரு உந்து சக்தியை தூண்டுகிறது. என் வாழ்க்கையில் நான் இழந்தது ஏராளம். என் போன்ற படித்தவகளுக்கு நல்ல வேலை கிடைக்கும் போது எனக்கும் கிடைக்க கடவுள் எதாவது செய்யலாம் அல்லவா என்று நினைத்து நினைத்து சோர்வாகி போவேன். இப்படி பல கஷ்டங்கள் என் வாழ்க்கையில் உருண்டோடுகின்றன. என்ன செய்ய ஒரு நாள் எனக்கும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் தான் வாழ்கிறேன். இனி நான் சோர்வாக இருக்கும் போது எல்லாம்உங்களின் இந்த கட்டுரையை படித்து நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வேன். நன்றி கிரி.
@யாசின் “தன் உழைப்பு திருடப்படுவது தெரிந்தும் விடாமல் உழைத்துக் கொண்டிருக்கும் தேனீயை விட ஒரு உதாரணத்தை கூற இயலாது.”
இது இயற்கையின் அதிசயம்.
நல்ல எண்ணங்களை அடுத்த அவரும் தலைமுறைக்கு சொல்லிக்கொடுத்தாலே போதுமானது.
@மாதவன்
கஷ்டம் இல்லாதவர் என்று எவருமே இல்லை. சிலருடைய சிரமம் நேரடியாக தெரிகிறது சிலரது சிரமம் தெரிவதில்லை அவ்வளோ தான்.
எல்லோருமே போராடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
அனைத்துக்கும் நம் மனம் தான் காரணம். நாம் நம்பிக்கையை இழந்தால் அதுவே நம்மை தோல்வி அடையச் செய்துவிடும்.
தைரியமாக நம்பிக்கையாக இருங்கள். அதோடு முயற்சிகளையும் கை விடாமல் தொடருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
ஹாய் அண்ணா எப்படி இருக்கிங்க …..
ரொம்ப முக்கியமான விஷயம் னா இது ,.. நிச்சயம் எல்லாரும் பின்பற்ற வேண்டிய ஒன்று .. என் வாழ்க்கையில் நான் இது வரை கை உடைந்த பிறகு உயிர் வாழ்வதே இந்த நேர்மறை எண்ணங்களாலும் என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தான் காரணம் … இந்த நல்ல எண்ணங்கள் எனக்கு என்ன கொடுத்து இருக்கு தெரியுமா அண்ணா ஒரு அன்பான காதலியை (அப்படியே என் அம்மாவை போல இருக்கு ) . அவருடன் நான் என் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள இந்த எண்ணங்கள் தான் இது வரை உதவிக் கொண்டு உள்ளன
கார்த்தி நலம் 🙂
கார்த்தி பொண்ணு தேடிட்டு இருந்தே.. சூப்பர் பொண்ணா கிடைத்து விட்டதா? 🙂 மகிழ்ச்சி, வாழ்த்துகள் 🙂
நேர்மறை எண்ணங்களின் சிறப்புகள் என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் இந்த கட்டுரைக்கு. இன்னொரு விஷயம் சார் நாம் எப்படி நம்முடைய எண்ணங்களை கட்டுப்படுத்துவது? அனைத்து எண்ணங்களும் நமக்கு வரும் ஆனால் எந்த எண்ணங்களை செயல்படுத்துகிறோம் அல்லது எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது நம் வெற்றி, நேரம், காலம் என்பது கூட உண்மைதான் என்று சில சமயம் தோன்றுகிறது என்பதே எனது தாழ்மையான கருத்து. தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், விவாதத்தில் தான் நம்மை நாம் தெளிவு படுத்தி கொள்ள முடியும் அதனால் தான் என்னுடைய நிலைப்பாட்டை நான் எங்கு உள்ளேன் என்று அறிய இங்கு பதிவிட்டுள்ளேன்.
எப்படி சார் இந்த மாதிரி கமெண்ட் box add பண்றது. login பண்ணாம தமிழில் type பண்ற வசதியோடு, இந்த முறை மிகவும் எளிமையாக உள்ளது.
சோமேஸ்வரன் நீங்கள் கேட்ட கேள்வியை யாராவது கேட்பார்கள் என்று எதிர்பார்த்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள் 🙂
நீங்கள் நினைத்ததை நானும் நினைத்தேன். நல்லதை கூறினால் கேட்பவர்களை விட கெட்டதால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்று கூறினால் தான் கவனிக்கிறார்கள். இக்கட்டுரை முக்கியமான ஒன்றாகக் கருதியதால் பலரை ஈர்க்க இதுபோல வைத்தேன்.
“நம் வெற்றி, நேரம், காலம் என்பது கூட உண்மைதான் என்று சில சமயம் தோன்றுகிறது என்பதே எனது தாழ்மையான கருத்து. ”
உண்மை தான். எனக்கும் மாற்றுக்கருத்தில்லை.
“விவாதத்தில் தான் நம்மை நாம் தெளிவு படுத்தி கொள்ள முடியும் ”
சரியே! நீங்கள் தாராளமாகக் கூறலாம். நிச்சயம் தவறாக நினைக்க மாட்டேன்.. நினைக்க ஒன்றுமில்லை.
“எப்படி சார் இந்த மாதிரி கமெண்ட் box add பண்றது. login பண்ணாம தமிழில் type பண்ற வசதியோடு, இந்த முறை மிகவும் எளிமையாக உள்ளது.”
இது WordPress தளம் என்பதால், இதில் செய்ய முடிகிறது. Blogger தளத்தில் இது போல முடியாது அல்லது கடினம்.
மேலும் தகவல் தெரிய வேண்டும் என்றால் “வோர்ட்பிரஸ் (WordPress) பற்றி ஒரு விரிவான பார்வை” கட்டுரை படியுங்கள்
https://www.giriblog.com/about-wordpress/
உண்மைதான் கிரி சார் நான் சொன்னது போல் தலைப்பு வைத்திருந்தால் நானே இந்த தளத்திற்கு வந்திருக்க மாட்டேன்.
madhipirkuria anna enakku enna payam appadinaa naan nesikum uruvukalukku edhavadhu uyirukku apadhu vandidhumo appadinu edhirmarai ennam varudhu adhu enakku romba kavalaya kodhukudhu naan enna seiyuradhu appadhinu theriyala enna porudha varaikum naan ellarum eppavum neendha ayul udan nalla irukanumdha ninaipen ennai sudri edhirmarai ennangal adhikama irukku adhai eppadi naan sari pannanumnu konjam solluinga sir please
@சிவா
இது ஒரு பெரிய பிரச்சனையில்லை அதோடு நீங்கள் மட்டுமே சந்திக்கும் பிரச்சனையும் அல்ல. இது பொதுவான பிரச்சனையே.
ஒவ்வொருவருக்கும் கூடக் குறைவு இருக்கும். அவ்வளவே!
பிரச்சனை எதுவும் நடந்து விடக்கூடாது என்ற எண்ணம் நம்மை எதிர்மறையாக சிந்திக்க வைக்கிறது.
இதே போல யாரவது எங்கேயாவது பயணித்தால், விபத்து எதுவும் நேராமல் பத்திரமாக திரும்பி வருவார்களா! என்ற கவலையை ஏற்படுத்தும்.
இவையெல்லாம் அவற்றை சார்ந்ததே.
இதற்குத்தான் இது போன்ற எண்ணங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இதை தவிர்க்க வேண்டும் என்றால், நேர்மறை எண்ணங்களை வளர்க்க வேண்டும்.
யாருக்கும் எதுவும் நேராது, அவசியமற்று கவலைப்படக் கூடாது என்று நம்மைப் பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும்.
இவையெல்லாம் உடனே சரியாக கூடிய பிரச்சனையல்ல, கடுமையாக பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் நிச்சயம் இவற்றைத் தவிர்க்கலாம்.
நானே முன்பு இது போன்ற நினைப்பேன் ஆனால், தற்போது பயிற்சியின் மூலம் முற்றிலுமாக தவிர்த்து விட்டேன்.
எனவே, நாம் மாற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரச்சனைகளை தீர்க்காது ஆனால், அதற்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
இது தவறு என்று உணர்வதே ஒரு மாற்றம் தான். எனவே, பயிற்சி செய்யுங்கள் நிச்சயம் மாற்றத்தை காணலாம்.
Sagara naal therinja valra naal naragamakidum..ipo Nan naragathula valnthuttu iruken. Itha epdi face pandrathunu therla..