ACT 1978 (2020 கன்னடம்) | அதிகார துஷ்பிரயோகம்

2
ACT 1978

னக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டு தொகையை 10 மாதங்களாக அலைந்தும் பெற முடியாத விரக்தியில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடிக்கிறார் கீதா. இறுதியில் என்ன ஆகிறது என்பதே ACT 1978.

சுமாரான படங்களாக எடுத்துக்கொண்டு இருந்த கன்னட திரையுலகம் சமீபமாக நல்ல திரைப்படங்களை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ACT 1978. Image Credit

ACT 1978

இலஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றால் வெறுத்த ஒரு சாதாரணப் பொதுஜனம் தனக்கு நீதி கிடைக்க வேண்டி இந்நிலைக்குத் தள்ளப்படுவதே இக்கதையின் மையக்கருத்து.

கர்ப்பிணியாக வரும் கீதா உண்மையாகவே கர்ப்பமாக இருக்கும் போதே படத்தை எடுத்து விட்டார்களோ என்று எண்ண வைக்கும்படி அவரது நடிப்புள்ளது 🙂 .

இறுதி வரை கர்ப்பிணியின் உடல்மொழிகளை, களைப்பை அட்டகாசமாக வெளிப்படுத்தியுள்ளார். எங்குமே குறை காண முடியாத ஆகச் சிறந்த நடிப்பு.

கொலைகாரன் முதல், இலஞ்சம் வாங்குபவர் வரை அவரவர் தவறுகளுக்கு நியாயம் வைத்து இருப்பார்கள்.

பிணையக்கைதிகளான அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கஷ்டத்தைக் கூறி தங்களை விடுவிக்கும்படி வேண்டுவதும், தங்கள் நியாயத்தை முன் வைக்கும் போது கீதா கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் விழிப்பது செம.

அரசியல்வாதிகள் செய்தால் மட்டும் கண்டுக்க மாட்டீங்குறீங்க ஆனால், எங்களை இப்படிப் பண்ணுறீங்களே?‘ என்ற கேள்விகளும் கீதாக்கு வருகின்றன.

காலக்கெடு

மாலை 5 வரை நேரம் கொடுத்து, தன் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால், வெடிகுண்டை வெடிக்க வைத்து விடுவேன் என்று மிரட்டியிருப்பார்.

பிணையக்கைதிகளை விடுவிப்பது, சூழ்நிலையைச் சமாளிப்பதை விவாதிக்கும் உயரதிகாரிகள், அரசியல்வாதிகள் செயல்பாடுகள் எரிச்சல் வரும்படியுள்ளது.

அதாவது, சூழ்நிலையின் தீவிரம் உணராமல் சாவகாசமாகப் பேசுவதும், சாப்பிட்டுக்கொண்டு இருப்பதும் கடுப்பை வரவழைக்கிறது.

அரசு இயந்திரம்

ஒரு நாட்டின் மாநிலத்தின் முதுகெலும்பு அரசு ஊழியர்கள் ஆனால், விருப்பப்பட்டோ, நெருக்கடியாலோ ஊழல் இலஞ்சத்தில் திளைத்து விடுகிறார்கள்.

இது போல இலஞ்சம் வாங்காத ஒருவர், ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை, ஒரு ருபாய் கூட இலஞ்சம் வாங்கியதில்லை‘ என்று பரிதாபமாகக் கூறுவதற்குக் கீதா கூறுவது நெத்தியடி பதில்.

ஒளிப்பதிவு

ஒளிப்பதிவு மிகச்சிறப்பாக இருந்தது. துவக்கத்தில் வரும் பாடலில் வரும் மான்டேஜ் காட்சிகள் அனைத்துமே அழகு.

அதோடு படம் முழுக்கக் காட்சிகளின் கோணம் சிறப்பு. வித்யாசமான கோணத்துக்காகவே நிறைய உழைத்துள்ளார்கள்.

பெரும்பாலும் ஒரே இடத்தில் சம்பவங்கள் நடைபெறுவதால், ஒளிப்பதிவில் வித்யாசம் காட்டுவதற்கான வாய்ப்புகள் குறைவு ஆனால், கிடைத்த வாய்ப்பைத் தவறவிடாமல் திறமையைக் காட்டியுள்ளார்.

இறுதியில் சில காட்சிகள் Cliché வாக இருந்ததைத் தவிர்த்து இருக்கலாம்.

வித்யாசமாகப் படத்தை முயற்சித்து விட்டு, இறுதி அரசு ஊழியர் காட்சிகளையும் அப்படியே தொடர்ந்து இருக்கலாம்.

படம் முடிந்தும் எதோ ஒன்று இறுதியில் குறைவது போல உள்ள உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. இலஞ்சம் வாங்குபவர்கள் பார்த்தால், சுருக்குனு இருக்கும் 🙂 .

ACT 1978 அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

வழக்கமான மசாலா படமல்ல. எனவே, இதற்கான கண்ணோட்டத்தில் படம் பார்க்கவும்.

பரிந்துரைத்தது பிரதீப். Amazon Prime ல் உள்ளது.

Directed by Mansore
Produced by Devaraj R
Written by Mansore, Veerendra Mallanna, Dayanand TK
Starring Yagna Shetty, Shruti, Sanchari Vijay
Music by Rahul Shivakumar
Cinematography Satya Hegde
Edited by Nagendra K. Ujjani
Release date 20 November 2020
Language Kannada
Running time 127 minutes

தொடர்புடைய கட்டுரைகள்

கே ஜி எஃப் [2018] முதல் அத்தியாயம்

Lucia [2013] நான் பார்த்த முதல் கன்னடத் திரைப்படம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. படத்தோட கதை கரு புதிதாக இருக்கிறது.. முன்பு நீங்க சொன்ன சில படங்களையே இன்னும் பார்க்கவில்லை.. முதலில் அவற்றை பார்த்து விட்டு தான் இந்த படங்களை பார்க்க வேண்டும்.. பகிர்வுக்கு நன்றி கிரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here