பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 9 வது கட்டுரை. Image Credit
எப்படிப் பேச வேண்டும் பேசக் கூடாது?
எவ்வளவு திறமையானவராக இருந்தாலும் ஒருவருக்குப் பேசத்தெரியவில்லை என்றால், அவரால் பெரிய வெற்றியைப் பெற முடியாது. Attitude does matter.
அதே போலச் சில நேரங்களில் பேசுவதைத் தவிர்த்து அமைதியாக இருப்பதும் மிகச்சிறப்பானது.
எப்படிப் பேச வேண்டும்?
பேச்சில் தேவையற்ற கருத்துகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஒன்றை கூறுவதால் எந்தப் பயனும் இல்லையென்றால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
சிலர் வள வளன்னு பேசிக்கொண்டே இருப்பார்கள். எப்படா முடிப்பார்! என்று காத்து இருக்கும் நிலை ஏற்படும். இதுபோலப் பேசுவதை எவரும் விரும்புவதில்லை.
எனவே, இவற்றை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், வந்துட்டான்னா/ளா.. நிறுத்தாம பேசுவானே/ளே என்று நினைக்கும் படியாகி விடும்.
இதுபோலப் பேசுபவர்களின் தொலைபேசி அழைப்பு வந்தாலே, உடனே வைக்க மாட்டான்/ள் என்று தொலைபேசியை எடுப்பதையே தவிர்த்து விடுவார்கள்.
அலுவலகத்திலும் பயனற்ற பேச்சுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் நம் மீதான மரியாதை கூடும்.
நண்பர்களுடன் கலகலப்பான சூழலில் பேசுவதை இதோடு ஒப்பிட வேண்டாம். இவ்வாறு பேச வேண்டும் என்பது இடம் பொருள் அறிந்து பேச மட்டுமே!
எப்படிப் பேசக் கூடாது?
சில நேரங்களில் அமைதியாக இருப்பது பல பிரச்சனைகளைத் தவிர்க்கும்.
அலுவலகத்திலோ தனிப்பட்ட முறையிலோ ஒரு பிரச்சனையாகி விட்டால், அமைதியாக இருப்பது மிகப்பெரிய பலனைத்தரும்.
இந்நேரத்தில் கோபமாக இருப்பார்கள்.
எனவே, என்ன கூறினாலும், அது பிரச்னைக்கே இட்டுச் செல்லும். எனவே, பொறுமையாக இருந்து, பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து ஓரிரு நாட்கள் கழித்துப் பேசுவது பல சண்டைகளைத் தவிர்க்கும்.
இன்னும் சில நேரங்களில் அமைதியாக இருந்து விட்டால், எதனால் அமைதியாக இருக்கிறார் என்று தலையைப் பிய்த்துக் கொள்வார்கள் 🙂 .
திரைப்படங்களில் சில காட்சிகளில் பின்னணி இசையே எதுவும் இல்லாமல் இருக்கும் ஆனால், அந்த அமைதியும் ஒரு அர்த்தத்தை நமக்குக் கொடுக்கும்.
எனவே, தொண தொண பேச்சும் சரியில்லை, பேரமைதியும் சரியில்லை.
இவை இரண்டின் எல்லைக்குமே செல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட இடத்தில் காலம் சூழ்நிலைக்கு ஏற்ப நடந்து கொள்வது சிறப்பு.
அவ்வப்போது மௌன விரதம் இருப்பது கூட நல்லது என்கிறார் சுவாமி சச்சிதானந்தா. நடைமுறை சிக்கல்களால், பணி காரணமாக மௌனம் விரதம் இருக்க முடியவில்லையென்றாலும், தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கலாம்.
சொல்லுக சொல்லில் பயன்உடைய; சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.
என்ற வள்ளுவர் குறளையும் எடுத்துக்காட்டாகக் கூறியுள்ளார்.
எனவே, அதிகமாகவும் பேசாதீர்கள், மௌனமாகவும் இருக்காதீர்கள். சூழ்நிலை அறிந்து அதற்கேற்ப நடந்தால், அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.
கொசுறு
கோபப்பட்டுப் பேசிப் பெரிய இழப்பைச் சந்தித்து இருப்பதால், அதன் பிறகு பொறுமையாக பிரச்சனைகளைக் கையாண்டதால் பல நன்மைகளைப் பெற்றேன்.
எனவே, சுவாமி சச்சிதானந்தா அவர்கள் கூறுவது 100% சரி.
தொடர்புடைய கட்டுரைகள்
கோபம் இருந்தால் மகிழ்ச்சி இருக்காது
செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
Nan many times tried to buy this book to purchase.
If possible Can u pls share to buy any location Giri
@Moorthik
பொன்னான நிகழ்காலம் என்று இணையத்தில் தேடினாலே கிடைக்கும். நேரடி லிங்க் கொடுக்காததற்கு காரணம், அவ்வப்போது ஸ்டாக் தீர்ந்து விடுகிறது.
எனவே, கொடுத்தாலும் அந்த நேரத்தில் இருப்பதில்லை.