அந்நியன் படத்தின் அந்நியன் விக்ரம் காட்சிகளை (அம்பி, ரெமோ தவிர்த்து) Web Series போல எடுத்தால் எப்படி இருக்கும்? அது தான் Taxi Driver. Image Credit
Taxi Driver
கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் நீதியின் தண்டனையில் தப்பித்தால், அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் குழுவாக இணைந்து பழி வாங்குகிறார்கள்.
கொலை செய்ய மாட்டார்கள் ஆனால், அடைத்து வைத்து விடுவார்கள்.
இனி தவறு செய்யவே மாட்டேன் என்று உணர்ந்து கதறினால், விடுவிப்பதை பற்றிப் பரிசீலிப்பார்கள். இவர்கள் ஒரு நாள் தப்பித்துவிட சிக்கலாகி விடும்.
மிகக் கொடூரமானவர்கள், அடைத்து வைத்த வெறியில், கடும் கோபத்தில் இருப்பவர்கள் தப்பினால், இக்குழுவினர் நிலை?! இது தான் Taxi Driver.
உடல் பலத்தில், அதிகாரத்தில், சமூகத்தில் உள்ளவர்களால் பாதிக்கப்படும் போது நம்மால் எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலையில் இருப்போம்.
எதுவும் செய்ய முடியவில்லையே என்று அவமானத்தாலும், இயலாமையாலும் கையறு நிலையில் மனதில் வெந்து புலம்புவோம்.
இந்நிலையில் உள்ளவர்களுக்கு மறைமுகமாக நீதி கிடைத்தால்..!
அது தான் Tax Driver.
கொரியா
(தென்)கொரியன் படங்களை அதிகம் பார்ப்பவன் என்ற முறையில் சில சமூகச் சூழல்களை உணர முடிகிறது. காரணம், திரைப்படங்கள் என்பவை அங்குள்ள சமூகச் சூழ்நிலைகளையே பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன.
தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் இருந்த போது அதையொட்டி படங்கள் வந்தன, வன்முறைகள் அதிகரித்த போது அது போலப் படங்கள் வந்தன.
அது போலக் கொரியாவையும் புரிந்து கொள்கிறேன், என் எண்ணங்கள் தவறாகவும் இருக்கலாம்.
கேங்ஸ்டர்கள், பணக்காரர்கள் நினைத்தால் எதையும் செய்ய முடிகிறது, நீதியை விலைக்கு வாங்க முடிகிறது. சில பள்ளி மாணவர்களே மிக மோசமாக உள்ளனர்.
பொய் குற்றம் சுமத்தி சிறையில் தள்ள முடிகிறது.
இது போலச் சில சமூகப் பிரச்சனைகள் உள்ளதாக அறிகிறேன். இதையொட்டியே Taxi Driver கதையும் அமைந்துள்ளது.
அந்நியன்
கிட்டத்தட்ட அந்நியன் போலவே உள்ளது.
இக்குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் யாரோ ஒருவரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற மையக்காரணியாலே இணைந்து பணி புரிகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்கள் இணையத் தளம் வழியாக பழிவாங்க விண்ணப்பித்தால், அவற்றின் உண்மைத்தன்மையைப் பரிசீலித்துப் பழிவாங்குகிறார்கள்.
இறுதி வரை பழிவாங்கலாமா? இல்லை வேண்டாமா என்று சம்பந்தப்பட்டவர் முடிவெடுக்கும் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
இக்குழுவின் தலைவராக Taxi நிறுவனத்தை நடத்தும் Kim Eui-sung. இங்கே பணி புரிந்து கொண்டே பழிவாங்கும் பணியைச் செய்பவர் Lee Je-hoon.
இவரே இக்குழுவில் முக்கியமான நபராக உள்ளார். இவர் அல்லாமல் மற்றவர்களுக்கும் ஒவ்வொரு பொறுப்புகள் உள்ளன.
குற்றம் செய்தவர்கள் திடீர் என்று காணாமல் போவதை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக Esom.
குற்றங்கள்
பள்ளி மாணவர்கள் செய்யும் தவறுகளை அவர்கள் வழியிலேயே சென்று சரி செய்வது அட்டகாசம். வயதுக்குரிய மிரட்டல்கள் அசத்தல்.
அடிதடி நிறுவனராகவும், ஊழியர்களிடம் கடுமையாக நடந்து கொள்பவரைக் கதற விடும் சம்பவங்கள் அதிரடி 🙂 . வித்யாசமான கதாப்பாத்திரங்களாக உள்ளனர்.
அதாவது, இப்படியும் சிலர் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
வில்லியாக வருபவர் துவக்கத்தில் சாதாரணமாக இருந்து இறுதியில் ரணகளமாக நடித்துள்ளார், செம்ம நடிப்பு. அதிலும் காரில் சிரித்தபடி மிரட்டுவது கலக்கல்.
தமிழ் படங்களைப் போலவே, குற்றவாளிகள் தைரியமாக விசாரணை இடத்திலேயே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள்.
கொடூரமான கொலைகளை, குற்றங்களைச் செய்தவனை ஏன் செய்தாய் என்று கேட்டால், பொழுது போகலைனு செய்தேன் என்பான். பல வருடங்களாகச் சிறையில் இருந்தும் தன் தவறை உணரவே மாட்டான்.
ஆனால், இவனையும் தவறை உணர வைப்பது பட்டாசு.
யார் பார்க்கலாம்?
சண்டை மற்றும் த்ரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் பார்க்கலாம். அதோடு பழிவாங்கும் கதைகளில் ஆர்வம் உள்ளவர்கள் தவறவிடக்கூடாத சீரீஸ்.
8 எபிசோடு இருக்கும் என்று நினைத்து இருந்தால், 16 எபிசோடு உள்ளது. ஒரு வாரம் சேர்ந்து பார்த்தேன் 🙂 . ஓரிரு எபிசோடுகள் குறைத்து இருக்கலாம்.
மேற்கூறியது Season 1. Season 2 இன்னும் வரவில்லை. NETFLIX ல் காணலாம்.
Based on The Deluxe Taxi (Red Cage) by Carlos and Lee Jae-jin
Written by Season 1 Oh Sang-ho (Ep. 1–10) Lee Ji-hyun (Ep.11–16)
Starring Lee Je-hoon, Esom, Kim Eui-sung, Pyo Ye-jin
Music by Kim Seung-yul
Country of origin South Korea
Original language Korean
Producers Hong Seung-chang, Kim Young-bae, Lee Ok-gyu
Camera setup Single-camera
Running time 70 minutes
ReleaseOriginal network SBS TV
Picture format 1080i (HDTV)
Audio format Dolby Digital
Original release April 9, 2021
தொடர்புடைய திரை விமர்சனம்
I Saw The Devil (2010) | கொடூர வில்லன்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.