பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்குப் புத்தகத்தில் தகவல்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன், அதிலிருந்து 12 வது கட்டுரை. Image Credit
இறைவனை ஏன் உணர முடிவதில்லை?
கடவுளை நம்புவர்களுக்கு கடவுளை உணர வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். அது ஒரு அதீத ஆர்வம் காரணமாகவோ அல்லது கடவுளின் மீதுள்ள அன்பின் காரணமாகவோ இருக்கலாம்.
ஆனால், கடவுளைத் தீவிரமாக வழிபடுபவர்களுக்கு கடவுளை உணர முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும்.
மனக்கட்டுப்பாடு
மனிதர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்துவது மிகச் சவாலான செயலாகவே உள்ளது. வெகு சிலரே மனதை கட்டுப்படுத்தி தங்கள் கட்டுப்பாட்டினுள் வைக்கிறார்கள்.
ஆனால், ஒவ்வொருவரும் மனதை ஒருமுகப்படுத்தும் திறமை கொண்டவரே என்பதை உணருவதில்லை, நம் திறமையை அறியாமலே இருக்கிறோம்.
எடுத்துக்காட்டுக்கு, குழந்தைகளிடம் மொபைலில் விளையாட்டு விளையாடும் போது அவர்களுக்கு அருகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது.
கவனம் முழுவதும் விளையாட்டிலேயே இருக்கும். எனவே, மனதை ஒருமுகப்படுத்துவதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை.
முதன் முதலாக கார் ஓட்டப் பழகுவதாக வைத்துக்கொண்டால், நம் கவனம் முழுவதும் அதிலேயே இருக்கும், வேறு எதிலும் கவனம் திரும்பாது.
மொபைலைப் பார்த்துக்கொண்டிருந்தால் முழு கவனமும் அதிலேயே இருக்கும். எனவே, மனதை ஒருமுகப்படுத்துவதை செய்து கொண்டு தான் உள்ளோம்.
கடவுளை உணர
ஒரு ஊசியில் நூலை நுழைக்க வேண்டும் என்றால், அதன் பிரிந்துள்ள இதழ்களை ஒன்றிணைத்தால் மட்டுமே நூலை நுழைக்க முடியும்.
இல்லையெனில் தனித்துள்ள ஓர் இதழ், நூலை நுழைக்கத் தடையாக இருக்கும். எனவே, அனைத்து நூல் இதழ்களையும் முறுக்கி ஒருங்கிணைத்துக் கவனமாக நுழைத்தாலே நூல் உள்ளே செல்லும்.
அதே போல இறைவனை உணர வேண்டும் என்றால், நம் அனைத்துக் கவனச் சிதறல்களையும் அமைதியாக்கி, ஒருங்கிணைத்தாலே கடவுளை உணர முடியும்.
கடவுளை வணங்கும் போது தான் கடைக்குப் போக வேண்டியது, பணம் கொடுக்க வேண்டியது, உணவைப் பற்றியெல்லாம் சிந்தனை செல்லும்.
இவற்றைக்கட்டுப்படுத்தி, மனதை ஒருமுகப்படுத்துவது எளிதான காரியம் அல்ல. எவ்வளவு முயன்றாலும், கவனம் வேறு பக்கம் திரும்பி விடும்.
‘ச்சே! எப்படி முயன்றும் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லையே!‘ என்ற எரிச்சலே மேலிடும். பல முறை எனக்கு நடந்துள்ளது, நடக்கிறது.
கடவுளை உணருவது எளிதல்ல என்பதே இதன் மூலம் அறிய வருவது.
இதைத்தான் சுவாமி சச்சிதானந்தா குறிப்பிடுகிறார்.
UPSC தேர்வு எழுத வேண்டும் என்றாலே, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்பு, பயிற்சி, கவனச் சிதறாமல் இல்லாமை ஆகியவை தேவைப்படுகிறது.
கடவுளை உணர வேண்டும் என்றால், எத்தனை தடைகளைத் தாண்ட வேண்டியது இருக்கும்?! எனவே, அர்ப்பணிப்புடன் முயன்றால் கடவுளை உணர முடியும்.
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி. Credit card UPI தற்போது பல கடைகளில் வேலை செய்வதில்லை. நான் முன்பு உபயோகித்த கடைகளில் கூட தற்போது கிரெடிட் கார்டு UPI வேலை செய்யவில்லை. நீங்கள் கவனித்தீர்களா? CREDIT CARD UPI ஐ பல கடைகளில் OFF செய்து வைத்துள்ளார்கள். இது PHONEPE UPI PAYMENT FAILED ஆனால் வருகிறது. நாம் CREDIT CARD UPI மூலம் செலுத்தும் பணம் அவர்களுக்கு உடனடியாக வரவு வைக்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் CREDIT CARD UPI OFF செய்கிறார்கள். வங்கிகளும் CREDIT CARD UPI மூலம் நஷ்டம் என சொல்கிறார்கள். இதை பற்றி தெரிந்தால் சொல்லுங்க
கிரி.. உண்மையில் இது சற்று (இறைவனை உணர்வது என்பது) சிரமனான ஓன்று அதே வேளையில் சிக்கலான ஒன்றும் கூட.. ஆனால் உணர்ந்தவர்கள் வெகு சிலரே.. முதலில் மனதை ஒருமுகப்படுத்தினால் தான் நாம் இறைவனை உணர முடியும்.. மனமே இங்கு நிலையில்லாமல் அல்லாடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இறைவனை உணர்வது என்பது பலருக்கு சாத்தியம் இல்லை என்பது என் கருத்து..
நீங்கள் கூறியது போல் (கடவுளை வணங்கும் போது தான் கடைக்குப் போக வேண்டியது, பணம் கொடுக்க வேண்டியது, உணவைப் பற்றியெல்லாம் சிந்தனை செல்லும்.) உண்மை. இது போன்ற சிந்தனைகளை தவிர்க்க தான் மனதை ஒரு முகப்படுத்துதல் அவசியமாகிறது.. ஆனால் இது சற்று கடினமான ஒன்று தான்.. ஆனால் எல்லோராலும் நிச்சயம் முடியும்.
கல்லூரி பருவத்தில் விடுமுறை நாட்களில் கூட பொது நூலகமே கதி என்றிருந்தேன். மதிய உணவு / தேனீர் இடைவேளை எல்லாவற்றையும் துறந்து, பல நாட்கள் நூலகத்தில் கழித்து இருக்கிறேன்.. காரணம் மனம் அமைதியாக இருந்தது.. ஒரு தேடல் இருந்தது.. அது பசியையும் வென்றது.. ஆனால் அதே சமயம் வகுப்பில் 5 நிமிடம் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது.. ஆயிரம் எண்ணங்கள் வந்து போகும்..
Very Easy. First feel your brain is separate from your body. Brain is directly connected with SPRTIUAL . For example say in the mind “om” when your long breath.
@ஹரிஷ்
UPI யில் MDR எனப்படும் Merchant Discount Rate கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலுத்தினால் அதிகம். எனவே, கடைகள் குறிப்பாக சிறு கடைகள் இதைத் தவிர்க்கின்றன.
QR Code ல் இதைத்தடுக்க முடியும் என்பதால், இதைச் செயல்படுத்தி வருகிறார்கள்.
வங்கி பரிமாற்றம் போலவே கிரெடிட் கார்டு UPI பரிமாற்றத்துக்குக் கட்டணம் நிர்ணயிக்கவில்லை என்றால், இதனால் எந்தப்பயனும் இல்லை.
பெரும்பாலான கடைகள், சிறு மருத்துவமனைகளில் தற்போது கிரெடிட் கார்டு UPI வேலை செய்வதில்லை.
அரசாங்கம் இதற்கான முடிவை எடுக்கவில்லை என்றால், கிரெடிட் கார்டு UPI தோல்வியடைந்த சேவையாகவே கருதப்படும்.
@யாசின்
“மனமே இங்கு நிலையில்லாமல் அல்லாடி கொண்டிருக்கும் இந்த தருணத்தில் இறைவனை உணர்வது என்பது பலருக்கு சாத்தியம் இல்லை என்பது என் கருத்து”
பலமுறை முயற்சித்தும் முடியவில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ செல்கிறது.
இதற்கு கடவுளின் மீது முழுமையான பக்தி இல்லாமையே எனக்குத் தோன்றுகிறது. மொபைல் பார்க்கும் போது இருக்கும் மனம் ஒருமுகப்படுத்துதல் எதனால், கடவுளை வணங்கும் போது இல்லை.
காரணம், வணங்குவதில் முழுமையான எண்ணங்கள் செல்வதில்லை.
“அதே சமயம் வகுப்பில் 5 நிமிடம் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது.. ஆயிரம் எண்ணங்கள் வந்து போகும்”
ஆமாம், அதே பிடித்த வகுப்பாக இருந்தாலும் முழு கவனமும் இருக்கும் 🙂 .
@Gokulakkannan k
It’s not easy for me. I’m not saying I can’t but I didn’t try enough. Sure later I can.
I have an interest but it is not enough to achieve the goal (feel the god).