செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

2
mistake-is-lesson செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா

லகில் தவறு செய்யாதவர்கள் என்று எவருமே இருக்க முடியாது. செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா? வருந்துவது வீண். Image Credit

தவறு செய்தால், வருத்தப்படுபவர்கள், புறக்கணிப்பவர்கள், கண்டுகொள்ளாமல் இருப்பவர்கள், பாடம் கற்பவர்கள் என்று பலவகை உண்டு.

செய்த தவறுக்காக வருந்துகிறீர்களா?!

எவருமே பிறக்கும் போதே அனைத்து அனுபவங்களையும் கற்று / பெற்று வருவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் கிடைக்கும் அனுபவங்களைப் பொறுத்து நம்மை மேம்படுத்திக் கொள்கிறோம்.

தவறு செய்து விட்டோமே” என்று அதையே நினைத்து, கவலைப்பட்டு, மன நிம்மதியற்று, புலம்பிக்கொண்டு இருப்பதால் பயனில்லை.

நடந்ததை மாற்ற முடியாது

வருத்தப்படுவதால் பிரச்சனை சரியானதா என்று யோசித்துப்பாருங்கள். உங்களுக்கே முட்டாள்தனமாக இருக்கும். நடந்தது நடந்தது தான், அதை மாற்ற முடியாது.

அதையே நினைத்து வருத்தப்படுவதால் மன உளைச்சல் மட்டுமே ஏற்படும்.

நேர்மறை சிந்தனை

எதையும் நேர்மறையாகச் சிந்தியுங்கள்.

தவறு நேர்ந்தால், அதை நம் தவறை திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக, அனுபவமாக நேர்மறையாகக் கருதுங்கள். உங்களுக்குப் பதட்டமோ, கவலையோ இருக்காது.

அடுத்த முறை அத்தவறை செய்யாமல் கவனமாக இருங்கள், போதும்.

தவறே செய்யாமல் ஒரு மனிதன் 100% சரியாக இருப்பது என்பது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்பதை உணர வேண்டும்.

நான் கூறுவது, தவறில் இருந்து பாடம் கற்றுக்கொள்பவர்களுக்குத் தான் 🙂 .

அதற்காக ஒவ்வொரு முறையும் அதே தவறை செய்து, அது குறித்துக் கண்டுகொள்ளாமல், திருத்திக் கொள்ளாமல் இருப்பது மிகப்பெரிய தவறு.

சுருக்கமாக, ஒரு தவறை ஒரு முறைக்கு மேல் செய்தால், உங்களால் அனுபவங்களைப் பெற்று வாழ்க்கையைச் சீர் படுத்த முடியாதவர் என்று அறிந்து கொள்ளலாம்.

மனித இயல்பு

தவறு செய்வது மனித இயல்பு ஆனால், அதையே தொடர்ச்சியாகச் செய்தால், அனுபவங்களில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்.

அனுபவங்கள் என்பது வயதினால் கிடைப்பதல்ல, எவ்வளவு தவறுகளை நீங்கள் உணர்ந்து உங்களை நீங்கள் மாற்றிக்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே.

எனவே, செய்த தவறுக்காக வருந்தாதீர்கள், அதை மாற்ற முடியாது. அத்தவறை திருத்தக் கிடைத்த ஒரு வாய்ப்பாக நேர்மறையாகக் கருதி, கடந்து செல்லுங்கள்.

மகிழ்ச்சியை எங்கும் தேட வேண்டாம், அது நம்மிடமே உள்ளது 🙂 .

தொடர்புடைய கட்டுரை

நேர்மறை எண்ணங்கள் என்றால் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

2 COMMENTS

  1. “மகிழ்ச்சியை எங்கும் தேட வேண்டாம், அது நம்மிடமே உள்ளது” – சரியான வார்த்தை கில்லாடி ???

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!