Home (2021 மலையாளம்) ஐந்து நிமிடம் பேசலாமா?

4
Home Movie Malayalam

ன்றைய மொபைல் தலைமுறையும், இது பற்றி எதுவுமே தெரியாத அவர்களுடைய அப்பாவுக்கும் இடையே நடக்கும் கதையே Home. Image Credit

Home

இயக்குநரான மூத்த பிள்ளை ஸ்ரீநாத் வெற்றிப்படத்துக்குக் கதை எழுதியவர் ஆனால், தனது அடுத்தப் படத்துக்கு எழுத முடியாமல் Writer’s Block ல் தவிக்கிறார்.

முதல் கதை எங்கே எழுதினாயோ அங்கேயே சென்று எழுதத் தயாரிப்பாளர் கூற, தன் வீட்டுக்கு வருகிறார்.

இங்கேயும் கதை எழுதவதற்கான சூழ்நிலை அமைவதில்லை, இடையில் அப்பாவுடன் பிரச்சனை என்ற சென்ற நிலையில் பெரிய திருப்பம் நடக்கிறது.

அத்திருப்பம் ஸ்ரீநாத் வாழ்க்கையையே மாற்றுகிறது. அது என்ன என்பதே Home.

இந்திரன்

படத்தின் நாயகன் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் ஸ்ரீநாத் தந்தை இந்திரன் தான். தனது இயல்பான அப்பாவி நடிப்பில் பட்டையைக் கிளப்பியுள்ளார் மனுசன்.

2021 வருடத்துக்கான கேரளா திரைப்பட விருதில் இவர் பெயர் நிச்சயம் இருக்கும்.

ஸ்மார்ட் மொபைல், ஃபேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் பற்றி எதுவுமே தெரியாமல் ஆனால், தெரிந்து கொள்ள விரும்பும் கதாப்பாத்திரமாக இந்திரன்.

முதன் முதலில் சராசரி நபர் ஃபேஸ்புக், வாட்சப் பற்றிக் கேள்வி கேட்கும் கேள்விகளையும், அவற்றினால் கிடைக்கும் வசதிகளைக் கேட்டு வியப்படைவதும் என்று தூள் கிளப்பியுள்ளார்.

உடல் மொழி அட்டகாசம்.

இப்படம் பார்க்கும் ஒவ்வொருவருவருக்கும் அவரவர் வீட்டில் உள்ள அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி நினைவு வந்து செல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஐந்து நிமிடங்கள்

மகனிடம் ஒரு ஐந்து நிமிடம் பேசக் கேட்கத் தயங்குவதும், சூழ்நிலை அமையாததும், அமைந்தும் ஏமாற்றம் அடைவதும் என்று அசத்தலாக நடித்துள்ளார்.

அப்பா ஒரு சுவாரசியமில்லாத மனிதர் என்று தன் வருங்கால மாமனாரை ஒப்பிட்டு ஸ்ரீநாத் பேசும் போது தன்னிடமும் ஒரு சுவாரசியம் உள்ளது என்று அவர் கூற முயற்சிப்பது அழகு.

அந்த ஒரு சுவாரசியம் யாருமே ஊகிக்க முடியாத அதிரடித் திருப்பமாக வருவது கலக்கல்.

குடும்பம்

ஸ்ரீநாத் எப்போதும் மொபைல் கையுமாக இருக்கும் கதாப்பாத்திரம். ஸ்ரீநாத் தம்பி வழக்கமாகத் தற்போது இளசுகள் செய்யும் YouTube Vlogger.

காணொளி எடுத்து அதை YouTube ல் போட்டு Like பண்ணுங்க, Subscribe பண்ணுங்க, Bell Button யை அமுக்குங்க என்று உயிரை எடுக்கும் வேலை.

இவர்களை மேய்க்கும் வேலை அம்மாக்கு. உடன் இவர்களின் வயதான, முடியாமல் இருக்கும் தாத்தா.

தன் உண்மையான உளவியலை மறைத்து மற்றவர்களுக்காகத் தன்னை வெளிப்படுத்தும் கதாப்பாத்திரம் ஸ்ரீநாத்.

மொபைல் பயன்படுத்துவதில் தற்கால இளைஞர்களை (சில பெரியவர்களையும்) அப்படியே கொண்டு வருகிறார்.

எப்போதும் மொபைல் பார்த்துக்கொண்டே அடுத்தவரிடம் பேசுவது, Notification வந்தால், உடனே எடுத்துப்பார்ப்பது என்று பலரை பிரதிபலிக்கிறார்.

ஒளிப்பதிவு

படம் துவங்கும் போது வரும் காட்சிகளே பளிச்சுனு அவ்வளவு அழகாக உள்ளது.

படம் முழுக்க அவர்கள் வீட்டையும், மற்ற பகுதிகளையும் பசுமையாக அழகாகக் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர்.

கதையோட்டத்தை, திரைக்கதையைப் பாதிக்காத அளவில் பயணிக்கும் இசை.

மலையாள இயக்குநர்களுக்கு எங்க இருந்து தான் இப்படிப்பட்ட கதை கிடைக்குமோ! புதுசு புதுசா ஆனால், இயல்பான கதையைக் கொண்டு வருகிறார்கள்.

இப்படத்தின் பலமே நம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கதாப்பாத்திரமாகப் பிரதிபலிப்பது தான். சுருக்கமாக, நம் Home தான் இந்த Home.

படத்துக்கு இந்திரன் மிகப்பெரிய பலம்.

தனது மிகையில்லாத இயல்பான நடிப்பால் நம்மை ஈர்த்து விடுகிறார். அப்பாவியாகக் கேட்கும் போது, நடந்து கொள்ளும் போது என்று சிறப்பான நடிப்பு.

இவரை எங்கேயோ பார்த்துள்ளோமே என்று யோசித்தால், Ee Adutha Kaalathu படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் வருவார்.

ரொம்பச் சிறு கதாப்பாத்திரம் ஆனால், இன்னும் மறக்கவில்லை.

இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

Amazon Prime ல் காணலாம். பரிந்துரைத்தது பாபு.

Directed by Rojin Thomas
Written by Rojin Thomas
Story by Rojin Thomas
Produced by Vijay Babu
Starring Indrans, Sreenath Bhasi, Srikant Murali, Manju Pillai, Johny Antony
Cinematography Neil D’Cunha
Edited by Prejish Prakash
Music by Rahul Subramanian
Distributed by Amazon Prime Video
Release date August 19, 2021
Running time 161 minutes
Country India
Language Malayalam

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Kettyolaanu Ente Malakha (2019 மலையாளம்) | இல்லற வாழ்க்கை

The African Doctor (2016 French) | யாருமே வரலையே!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக எந்த படமும் பார்க்கவில்லை.. படத்தை பார்த்து விட்டு என் கருத்தை பகிர்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!