Wild Tales (2014 Spanish) | கோபத்தால் என்ன ஆகும் தெரியுமா?

3
Wild Tales

பாவக்கதைகள் (Anthology) போலச் சிறு கதைகளின் தொகுப்பு Wild Tales.

Wild Tales

விமானத்தில் அமரும் ஒருவர் அருகில் உள்ள மாடலிடம் பேசும் போது அவருடைய முன்னாள் காதலர் பற்றி இவருக்குத் தெரியவருகிறது. Image Credit

இவர்கள் இருவர் பேசுவதைக் கேட்ட அருகில் உள்ள பெண் தனக்கும் அவரைத் தெரியும் என்று கூறி சில சம்பவங்களைக் கூறுகிறார்.

இவர்கள் பேசுவதைக் கேட்டு இன்னொருவரும், அவர் ஒரு “சைக்கோ” என்பது போலப் பேச, முதலில் ஆரம்பித்தவருக்குச் சந்தேகம் வந்து அங்குள்ளவர்கள் அனைவரிடமும் கேட்க அனைவரும் ஒன்றையே கூறுகிறார்கள்.

எதோ விவகாரமாக இருக்கும் போலையே என்று நினைக்கும் போது, பணிப்பெண் அலறிக்கொண்டு வர நமக்கும் பதட்டமாகிறது.

இதன் பிறகு என்ன ஆனது? என்பதே Wild Tales.

கோபம் அவசரம்

மொத்தம் ஆறு கதைகள் வருகிறது. அனைத்து கதைகளிலும் மையக்கருத்தாகக் கோபம், அவசரப்படுதல் காரணமாக ஏற்படும் இழப்புகளைக் கூறுகிறார்கள்.

இவற்றோடு நேர்மையாக இருப்பதால் ஏற்படும் பிரச்சனைகள், விமர்சனங்கள் என்று வரும் பகுதியும் சுவாரசியம்.

இறுதி திருமணக்கதையில் வயது வந்தோருக்கான சில நொடி காட்சிகள் உள்ளது. எனவே, எப்படிப்பார்ப்பது என்று திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகையில் சுவாரசியமாக உள்ளதால், நேரம் போவதே தெரியவில்லை.

உலகத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை இத்திரைப்படம் பெற்றுள்ளது. முதலீட்டை விட 10 மடங்கு அதிகம் வசூலித்துள்ளது.

Amazon Prime ல் காணலாம். பரிந்துரைத்தது விஸ்வநாத்.

Spanish Relatos salvajes
Directed by Damián Szifron
Written by Damián Szifron
Cinematography Javier Juliá
Edited by Pablo Barbieri Carrera, Damián Szifron
Music by Gustavo Santaolalla
Distributed by Warner Bros. España
Release date 17 May 2014 (Cannes), 21 August 2014 (Argentina), 17 October 2014 (Spain)
Running time 122 minutes
Countries Argentina, Spain
Language Spanish

தொடர்புடைய திரை விமர்சனங்கள்

Ishq (2019 மலையாளம்) | காதலர்களுக்கு எச்சரிக்கை!

4L (2019 Spanish) | பாலைவனப் பயணம் போகலாமா?!

I Care A Lot (2020) | அவசரப்பட்டு தூக்கிட்டோமோ!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. கிரி, இந்த படத்தை பற்றி இதுவரை கேள்விப்பட்டதில்லை.. பதிவை படித்த பிறகு யூடூப்பில் படத்தின் முன்னோட்டம் மட்டும் பார்த்தேன்.. ரசிக்கும் படி இருந்தது.. கண்டிப்பாக இந்த வார இறுதிக்குள் பார்த்து விடுவேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. கிரி, நேற்றிரவு Wild Tales படத்தை prime ல பார்க்கலாம் என்று உட்கார்ந்த போது Sardar Udham ஹிந்தி படத்தோட அறிவிப்பு வந்தது.. சரி சுதந்திர போராட்ட கதை களம் என்பதால் இந்த படத்தை பார்த்தேன்.. படத்தின் நாயகன் Vicky Kaushal – (Uri: The Surgical Strike படத்தில் நடித்தவர்) படம் உண்மையில் தாறுமாறு.. 100 வருடங்களுக்கு முந்தி நடக்கும் காட்சிகளை எப்படி படம் பிடித்தார்கள் என பிரமிப்பாக இருக்கிறது..

    அதுவும் குறிப்பாக லண்டன் காட்சிகள்.. பழமையான இங்கிலாந்தை கண் முன்னே எப்படி கொண்டு வந்தார்கள் என்பதை தற்போது நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது கிரி..நீங்க முன்பு அமெரிக்கா செல்ல வேண்டியது எனக்கு விருப்பமாக இருக்கிறது என்று சொன்னிங்க!!! எனக்கு அது போல விருப்பம் எப்போதும் வந்தது இல்லை..

    ஆனால் படத்தை பார்த்த பிறகு சத்தியமாக வாழ்வில் ஒரு முறையாவது இங்கிலாந்து கண்டிப்பாக செல்ல வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டுவிட்டது.. படத்தை பாருங்க கிரி .. படம் பட்டாச இருக்கிறது..ஒரு ஆபாசம் இல்லை.. படத்தில் அனைவரது நடிப்பும் அற்புதம்.. எல்லாம் யதார்த்தமாக இருக்கிறது.. படம் பார்த்த பிரம்மிப்பு இன்னும் என்னை விட்டு விலகவில்லை…

  3. @யாசின்

    Sardar Udham படம் இந்திய தரப்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்படுகிறது என்று நினைக்கிறேன். அவசியம் பார்க்கிறேன், குறித்து வைத்துள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here