Kettyolaanu Ente Malakha (2019 மலையாளம்) | இல்லற வாழ்க்கை

7
Kettyolaanu Ente Malakha

ல்லற வாழ்க்கையில் சொதப்பியதால் ஏற்படும் பிரச்சனைகளை மென் நகைச்சுவை கலந்து சுவாரசியமாகக் கூறுவதே Kettyolaanu Ente Malakha. Image Credit

Kettyolaanu Ente Malakha

Sleevachan க்கு நான்கு அக்காக்கள், அப்பா இல்லை. வயதான அம்மாவுடன் வசிப்பவர். 35 வயதை கடந்தும் திருமணத்தில் ஆர்வம் இல்லாதவர்.

Sleevachan இல்லாத வேளை அம்மா மயக்கமடைய, யாராவது வீட்டில் துணைக்கு வேண்டும் என்று திருமணத்துக்குச் சம்மதிக்கிறார்.

திருமணம் ஆனாலும், உடலுறவு கொள்வதில் உள்ள பயம், சந்தேகங்களால் அவர்கள் முதலிரவு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது.

ஒரு நாள் நண்பர்கள் கூறியதை கேட்டு Sleevachan அதிரடியாகச் செயல்பட விவகாரமாக முடிந்து விவாகரத்து வரை சென்று விடுகிறது.

இதன் பிறகு என்ன ஆகிறது என்பதே Kettyolaanu Ente Malakha.

Sleevachan

அடிப்படையில் நல்லவரான, நட்பானவரான Sleevachan, துவக்கத்தில் இருந்தே அம்மா, அக்கா என்று வளர்ந்து வந்ததால், பெண்களிடம் விலகியே இருப்பார்.

என்னதான் பெண்கள் பழக்கம் இல்லையென்றாலும், விவகாரமாகச் செயல்படுவது மிகைப்படுத்தலாக உள்ளது.

திரைக்கதையில் வேறு மாதிரி நம்பும்படி மாற்றி இருக்கலாம்.

இது மட்டுமே படத்தில் உறுத்தல், மற்றபடி அனைவரும் ரசிக்கும்படியான படம்.

மற்றவர்களிடம் Sleevachan பழகும் முறை, வயதானவர்களிடம் காட்டும் அன்பு, பிரச்சனைகளை எளிதாக ஏற்றுக் கொள்வது என்று சிறப்பான கதாப்பாத்திரம்.

என்னதான்யா செய்து வைத்தே?!

Sleevachan அம்மாவாக வருபவர் நடிப்பு அபாரம். நம்ம அம்மா போலவே ஒரு உணர்வு.

Sleevachan இரவில் செய்த ரணகளத்தைக் கண்டு அவர் அம்மா அடிப்பதும், அதைத் தொடர்ந்து வரும் சம்பவங்களில் பக்குவமாகப் பேசுவதும் என அனைவர் மனங்களிலும் இடம் பிடிக்கிறார்.

இடைவேளையில் Sleevachan வெளியே வந்து அப்படி என்ன நான் செய்து விட்டேன் என்று குழம்புவது ரசிக்கும்படி இருக்கும்.

என்னதான்யா செய்து வைத்தே! என்று நமக்கே தோன்றும் 😀 .

ஏன் பேசவே மாட்டேங்குறார்? ஏன் விலகிப் போகிறார்? என்று குழம்புவதும், பொறுமை இழந்து பொங்குவதும் என்று மனைவியாக வரும் Rincy நல்ல நடிப்பு.

Sleevachan செய்த செயலை மற்றவர்கள் என்ன ஏது என்று விசாரிக்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குடும்பத்தினர் விழிப்பது செம.

இச்சம்பவத்தை அனைவரும் பேசுவது, இயல்பாகக் கடந்து செல்வது என்று வியப்பாக உள்ளது. அக்காக்களாக வருபவர்கள் நடிப்பு இயல்பு.

அதோடு மற்ற கதாப்பாத்திரங்களும் துணை கதாப்பாத்திரங்களும் தங்கள் இருப்பை நியாயம் செய்கிறார்கள்.

இறுதியில் என்ன ஆனது? இணைந்தார்களா? பிரிந்தார்களா? என்பதே கதை.

நகரம் குறைவாகவும், கிராமம் அதிகமாவும் உள்ளது அழகு.

வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு மலை, ஆறு என்று நம்மைக் கடுப்பேத்துவதற்கென்றே படம் எடுக்கிறார்களோ என்று சந்தேகமாக உள்ளது.

பளிங்கு மாதிரி தண்ணீர், சுற்றிலும் பசுமை, கூட்டமே இல்லை. இங்கே குளியலை போட்டுட்டு வந்தால் எப்படி இருக்கும்?! சொர்க்கம்ல.

என்னமோ போங்க. இவங்க படங்களைப் பார்த்தாலும் பொறாமையா இருக்கு, ஊரைப்பார்த்தாலும் பொறாமையா இருக்கு.

என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்கிறார்கள்!

யார் பார்க்கலாம்?

அனைவரும் பார்க்கலாம்.

திருமணம் ஆனவர்களும் ஆகப்போகிறவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

₹3 கோடியில் உருவாகி ₹35 கோடி வசூலித்துள்ளது. முதலீட்டை விட 10 மடங்கு அதிக இலாபம். உண்மையான பிளாக்பஸ்டர்.

பரிந்துரைத்தது விஸ்வநாத். Amazon Prime ல் காணலாம்.

Directed by Nissam Basheer
Produced by Listin Stephen, Justin Stephen, Wichu Balamurali
Written by Aji Peter Thankam,
Starring Asif Ali, Veena Nandakumar
Music by William Francis
Cinematography Abhilash Sankar
Edited by Noufal Abdullah
Release date 22 November 2019
Running time 135 minutes
Country India
Language Malayalam

தொடர்புடைய திரை விமர்சனம்

Badhaai Ho (2018 இந்தி) ஆமா.. இப்ப என்னங்குற?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. கிரி, கோவையில் பணிபுரிந்த போது QC DEPTஇல் ஒரு மலையாளி பணி புரிந்தார். மலையாளம் கலந்து தமிழ் பேசுவார்.. முதல்முதலில் அவருடன் பேசும் போது சில மலையாள வார்த்தைகள் என்னை கவர்ந்தது.. மலையாளம் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆசையும் இங்கு தான் துளிர் விட்டது.. நான் வெளிநாடு இங்கு வந்த புதிதில் அதற்கான வாய்ப்பும் அமைந்தது.. ஆனால் கூட பணி புரிந்த மலையாள நண்பர்களின் பழக்க வழக்கத்தால் இனி வாழ் நாளிலே இவர்களுடன் உறவு கொள்ள கூடாது.. இவர்கள் மொழியையும் கற்க கூடாது என்று முடிவெடுத்து 10 / 12 வருடங்களுக்கு மேல் ஆகி போனது..

    இடையில் வெகு அரிதாக சில சொற்ப எண்ணிக்கையில் மலையாள படங்களை மட்டும் (நீங்கள் பரிந்துரைத்தது like Adaminte Makan Abu [2011] மற்றும் சில படங்கள்) மட்டும் பார்த்தேன்.. ஆனால் கடந்த வருடம் lockdown சமயத்தில் நான் பார்த்த ஐயப்பனும் கோஷியும் படம் என்னை நான் எனக்குள் 10 / 12போட்டு வைத்திருந்த தடைகள் அனைத்தையும் உடைத்து விட்டது.. porinchu mariam jose படம் என்னை வேறு உலகிற்கு கொண்டு சென்றது.. கடந்த சில மாதமாக நான் பார்ப்பது முற்றிலும் மலையாள படங்கள் மட்டுமே!!! தற்போது பாடல்களும் கேட்ட துவங்கி உள்ளேன்..

    எல்லாமே வித்தியாசமான கதை களங்கள், புது முயற்சிகள், புது இயக்குனர்கள், புது நடிகர்கள், நான் சமீபத்தில் கண்ட ஒரு படத்தில் கூட வெளிநாட்டில் காட்சிகள் இல்லை.. ஒரு பாடல் பதிவை கூட பார்க்க வில்லை.. அவர்களின் சில படங்களை தமிழில் எடுத்தால் நிச்சயம் ஓடாது என்று தான் தோன்றுகிறது.. சமீபத்தில் பார்த்த Ishq மலையாள படத்தின் கதையின் கருவை கண்டு தற்போதும் வியந்து போகிறேன்.. அங்கு படத்தின் நாயகன் கதை மட்டுமே..

    ஆனால் எனக்கு தற்போது ஆச்சரியமளிக்க கூடிய ஒன்று இங்கு உச்ச நடிகர்களின் புதிய தமிழ் படங்கள் (கோவிட்க்கு முன்பு) ரிலீஸ் ஆகும் போகு தமிழ் ரசிகர்களுக்கு சம அளவில் மலையாளிகளும் இருப்பார்கள்.. தற்போது நினைத்தால் வியப்பாக இருக்கிறது.. நான் முன்பு நினைத்தது அவர்கள் படங்கள் எல்லாம் சுமாராக இருக்கும் போல, ஒன்றிடன்டை தவிர்த்து, அதனால் தான் தமிழ் படத்திற்கு வருகின்றனர் என்று.. என் கணிப்பு தவறு என்று தற்போது உணர்கிறேன்.. நமது படங்கள் அவர்களையும் ஏதோ ஒரு வகையில் கவர்ந்து தான் வருகிறது..

    உண்மைய சொல்ல போனதால், நான் தற்போது தினமும் அலுவலகம் வந்து போவது ஒரு மலையாள நண்பனுடன் ஒரு 30 நிமிட பயணத்தில் முடிந்த அளவிற்கு மலையாளம் பேசி கற்று வருகிறேன்..(முன்பு நான் அவனிடம் அலுவலகத்தில் ஹிந்தியில் / ஆங்கிலத்தில் தான் பேசுவேன்.. அதுமட்டும் அல்ல முன்பு எனக்கும் அவனுக்கும் 7 ம் பொருத்தம்) என்னுடைய மாற்றத்திக்கான காரணம் மலையாளத்தை இன்னும் நன்றாக கற்க வேண்டும் என்று தான்..

    Kettyolaanu Ente Malakha படம் நான் பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது.. இன்னும் பார்க்கவில்லை.. விரைவில் பார்ப்பேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. Just now watched the movie, Giri. It is on Einthusan as well. Thanks for the recommendation.

    >>என்னதான் பெண்கள் பழக்கம் இல்லையென்றாலும், விவகாரமாகச் செயல்படுவது மிகைப்படுத்தலாக உள்ளது.

    >>திரைக்கதையில் வேறு மாதிரி நம்பும்படி மாற்றி இருக்கலாம்.

    >>இது மட்டுமே படத்தில் உறுத்தல், மற்றபடி அனைவரும் ரசிக்கும்படியான படம்.

    Exactly Giri. I totally agree with you.

  3. @யாசின்

    Adaminte Makan Abu அற்புதமான படம். சலீம் குமார் அட்டகாசமாக நடித்து இருப்பார்.

    Porinchu mariam jose இப்படத்தை அமேசான் இந்திய பகுதிக்குத் தடை செய்து விட்டது. விரைவில் வரும் என்று நினைக்கிறேன். வந்தவுடன் பார்த்து விடுவேன்.

    Ayyappanum Koshiyum செம படம். இருவருக்குமே சமமான அளவில் நடிக்க வாய்ப்புகள் இருக்கும். இருவருமே போட்டிபோட்டு நடித்து இருப்பார்கள்.

    “எல்லாமே வித்தியாசமான கதை களங்கள், புது முயற்சிகள், புது இயக்குனர்கள், புது நடிகர்கள், நான் சமீபத்தில் கண்ட ஒரு படத்தில் கூட வெளிநாட்டில் காட்சிகள் இல்லை”

    ஆமாம். உண்மை தான்.

    Ishq பார்க்க வேண்டிய பட்டியலில் உள்ளது.

    “நமது படங்கள் அவர்களையும் ஏதோ ஒரு வகையில் கவர்ந்து தான் வருகிறது”

    சரியாகக் கூறினீர்கள்.

    அவர்களுக்கு மாஸ் படங்கள் பிடித்துள்ளது, அதற்கு நன்கு வரவேற்பும் உள்ளது. அங்கு விஜய் படங்களுக்கும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் படங்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

    “ஒரு மலையாள நண்பனுடன் ஒரு 30 நிமிட பயணத்தில் முடிந்த அளவிற்கு மலையாளம் பேசி கற்று வருகிறேன்”

    அருமை யாசின். அதிக மொழிகளை கற்றுக்கொள்வது மிக நல்லது. எனக்கு இந்தியும் தெலுங்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது விருப்பம்.

    ஆனால், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை 🙂 .

    • கிரி, நேற்று தான் இந்த படத்தை பார்த்தேன்.. உண்மையிலே படம் செம படம்.. புதுமுக இயக்குனர் தரமான ஒரு படைப்பை வழங்கி இருக்கிறார். படத்தோட கதை கரு உண்மையில் வியக்க வைக்கிறது. ஆசிப் அலியின் நடிப்பு, மிகவும் யதார்த்தமாக இருந்தது.. அதுவும் இரண்டாம் பாதியில் இன்னும் சூப்பர்.. இறுதிக்காட்சியில் கண்கலங்க வைத்து விட்டார். எல்லா நடிகர்களும் இயல்பாக நடித்து இருந்தனர்.. குறிப்பாக ரின்சி, ஆசிப் அலியின் அம்மா, வயதான துடுக்கான பாட்டி.. etc .. படத்தை பார்த்த பின் இந்த படத்தை தமிழில் எடுத்தால் ஓடுமா? இல்லை ஓடாதா?? பெரிய ஹீரோக்கள் நடிப்பார்களா? என பல சந்தேகம் வந்து போனது..

      போனவாரம் தான் Uyare படம் பார்த்தேன்.. ஆசிப் அலியோடது சிறிய பாத்திரம் தான்..நிறைவாக செய்து இருப்பார்.. இரண்டு படத்திலும் வெவ்வேறு விதமான நடிப்பு.. uyare படமும் நல்ல தரமான படம்.. நிறைய பொருட்செலவில் விமான காட்சிகளை எடுத்து இருந்தால் உலக படமாக கொண்டாடப்பட்டிருக்கலாம்.. படத்தின் கதை கரு புதுமையானது.. நேரம் இருப்பின் இந்த படத்தை பார்க்கவும்.. நடிகை பார்வதி நடிக்கிற பாத்திரத்தில் எல்லாம் அதுவாகவே வாழ்கிறார்.. ennu ninte moideen படத்தில் இவர் நடிப்பை பார்த்து விட்டு மிரண்டு விட்டேன்.. நன்றி கிரி..

  4. @ஸ்ரீனிவாசன்

    வாங்க! எப்படி இருக்கீங்க 🙂 . பல மாதங்களாக ஆளைக் காணோம்.

    • உங்களுக்கும் எனக்கும் ஒரே மாதிரியான ரசனை கிரி. நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை கண்ணை மூடிக் கொண்டு பார்க்கலாம் 🙂

      உங்கள் சேவை தொடரட்டும்.

      Please stay safe and healthy…

  5. @ஸ்ரீனிவாசன்

    நன்றி 🙂 . அடுத்து எழுதப்போகும் படமும் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here