UPI பணபரிவர்த்தனையில் BHIM PhonePe Paytm போன்ற செயலிகளுக்குக் கடும் போட்டியாகக் கூகுள் பே (Google Pay) செயலி வந்தது, தற்போது அனைத்தையும் தூக்கி சாப்பிட WhatsApp Pay UPI வந்து விட்டது. Image Credit
WhatsApp Pay UPI (வாட்சப் பே UPI)
ஏற்கனவே 200+ மில்லியன் பயனாளர்களை வைத்து இருக்கும் WhatsApp கோதாவில் குதித்ததால், மற்ற நிறுவனங்களுக்குக் கடும் போட்டியாகும்.
முதற்கட்டமாக 2 கோடி பேருக்கு NPCI அனுமதியளித்துள்ளது.
ஒவ்வொரு கட்டமாகச் செயல்படுத்தி வருகிறார்கள் எனவே, அனைவருக்கும் வாட்ஸ்அப் UPI வசதி கிடைக்கச் சில நாட்கள் ஆகலாம்.
செயல்படுத்துவது எப்படி?
WhatsApp –> Click 3 DOTS –> Payments
ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்து இருந்தால், இதே போல ஒவ்வொன்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
யாருக்கு பணம் அனுப்பணுமோ அவரது பெயரைத் தேர்வு செய்து மேற்கூறிய வழிமுறைகளில் பணத்தை அனுப்ப முடியும்.
பணத்தைப் பெறுபவரும் வாட்சப் பே வசதியைச் செயல்படுத்தி இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில், மின்னணு பரிவர்த்தனை முறையே புழக்கத்தில் இருக்கும்.
UPI பணப்பரிவர்த்தனை தாறுமாறாக வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கட்டுரைகள்
கூகுள் பே செயலி பயன்படுத்துவது எப்படி?
BHIM செயலி பயன்படுத்துவது எப்படி?
UPI பரிவர்த்தனையைச் சுத்தலில் விடப்போகும் NPCI
மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
நானும் பயன்படுத்திவிட்டேன். ஈஸியாகவே உள்ளது
கிரி ஐயா..
எனது வாட்ஸ் அப்பீல் payment வரவில்லையே ஏன்?
நானும் bete தான் உபயோகிக்ர்ன்
வெர்சின். 2.18.57
இப்படி பேங்க் அக்கவுண்ட் நம்பர மறச்சிட்டீங்களே தம்பி, ஒரு பத்து லட்சம் உங்களுக்கு அனுப்பலாம்னு இருந்தேன்
@Varadaradjalou கூகுள் Tez ல் இணைப்பதை விட மிக எளிதாக உள்ளது. இதில் மொபைல் எண் ஏற்கனவே பதிவாகி உள்ளதும் ஒரு காரணம்.
@SHANMUGASUNDARAM என்னது ஐயா வா? ஏங்க இப்படி 🙂 கிரியே போதும்
இது கொஞ்சம் கொஞ்சமாக அனைவருக்கும் கொடுத்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் உங்களுக்கும் வரும்.
@Vijay Mallya கலாய்ச்சுட்டாராமா 🙂
இது சரியா? “sir அப்படிங்கற வார்த்தைக்கு அருகில் உள்ள வார்த்தை ஐயா”, வேறுஏதேனும் எளிதான வார்த்தை உள்ளதா “ஐயா”வுக்கு மாற்றாக?.
தமிழை பயன்படுத்த வேண்டி உங்களை SHANMUGASUNDARAM ஐயா என்று அழைத்தாரோ!!!
இரண்டிலுமே என்னை அழைக்க வேண்டாம். கிரியே போதும் 🙂