Ee adutha Kaalathu படம் தெளிவான ஸ்கிரிப்ட், திரைக்கதை, இயல்பான நடிப்பு என்று தூள் கிளப்பி இருக்கிறார்கள்.
இந்தப்படத்தை இயக்கிய “அருண்குமார் அரவிந்தை” கை வலிக்கும் வரை குலுக்க வேண்டும் போல இருக்கிறது. Image Credit
Ee Adutha Kaalathu
ஒரு படம் பார்த்து நமக்கு முடிவில் சோகம், மகிழ்ச்சி, கோபம், வெறுப்பு, கடுப்பு என்று பல்வேறு மன நிலைகள் இருக்கும்.
இந்தப்படம் பார்த்து அப்படியொரு “திருப்தி”!
இப்படம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என்று இருந்தாலும் திரும்பப் பார்த்தாலும் ரசிக்க முடியும் என்ற அளவில் இதற்குத் திரைக்கதை அமைத்து இருக்கிறார்கள்.
பல கிளை கதைகள் ஆனால், அனைத்தும் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் இணையும் போது இயக்குனரைப் பாராட்டாமல் இருக்கவே முடியவில்லை.
நமக்கு டென்ஷன் ஏற்றி, டென்ஷன் ஏற்றிக் குறைப்பார்கள். சும்மா பேய் படம் மாதிரி மொக்கையா பயமுறுத்துவதில்லை.
உண்மையாகவே வொர்த்தான டென்ஷன் 🙂 நம்ம பிரஷர் டாப்ல போகும் போது அப்படியே சூப்பரா குறைப்பார்கள்.
சில படங்கள்ல சஸ்பென்ஸ் த்ரில்லர் என்கிற பெயரில் பயமுறுத்துவார்கள்.. கடைசில பார்த்தால் சப்புன்னு இருக்கும் ஆனால், இதில் தரமான சஸ்பென்ஸ்.
தரமான திரைக்கதை
ஏகப்பட்ட கதை பிரிவுகள் வருகிறது ஆனால், அத்தனையையும் எந்த வித குழப்பமும் இல்லாமல் இணைக்கிறார்கள்.
சிறந்த ஸ்கிரிப்ட்க்கு இது போல ஒரு படத்தை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாத திரைக்கதை.
மிகப்பெரிய வியப்பு இத்தனை கிளைக்கதைகளும் ஒன்றுடன் ஒன்று ஏதாவது ஒரு விதத்தில் தொடர்பு கொண்டு உள்ளது அதோடு, எந்த வித நெருடலும் இல்லாமல் அழாகாகப் படமாக்கி இருக்கிறார்கள்.
இந்தப்படத்தில் ஒரு விஷயம் (ஒரு பிரிவுக் கதை) மட்டும் கூற விரும்புகிறேன் மற்றதை படம் பார்த்துத் தெரிந்துக்குங்க.
கணவன் மனைவிக்குள் சண்டை இருக்கும். கணவன் மீது தான் அனைத்து தவறும் இருக்கும்… இதனால் அந்தப் பெண் மனதளவில் சோர்ந்து இருப்பார்.
இந்தச் சமயத்தில் ஒருத்தன் இவரிடம் “அக்கா” என்று பழகிக் கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் நெருங்கி அவரை எப்படி பிக்கப் செய்ய முயற்சிக்கிறான், பின் அதை எப்படி தவறாகக் கையாள்கிறான் என்று வரும்.
பெண்கள் இது போல நபர்களிடம் ரொம்ப எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காரணம், இது போல நபர்கள் ஏகப்பட்ட பேர் நம்மிடையே இருக்கிறார்கள்.
கொஞ்ச நேர சபலம் நம்மை வாழ்க்கை முழுவதும் சிக்கலில் விட்டு விடும்.
இந்த விஷயம் படத்தில் ஒரு பகுதியாக வருகிறது. இதில் நடித்த அனைவருமே அப்படியே அவர்கள் கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார்கள்.
கதாப்பாத்திர தேர்வு அருமை. படம் பார்க்கும் போது நமக்கு வரும் அத்தனை கேள்விக்கும் இதில் விடை இருப்பது இதன் சிறப்பு.
கதையே நாயகன்
இந்தப்படத்தில் ஹீரோயிசம் எல்லாம் துளி கூட இல்லை, குறிப்பா இதுல கதாநாயகன் என்று எவருமே இல்லை. வியப்பா இருக்குல்ல! 🙂 ஆனால், உண்மை.
வில்லனாக யாரையும் குறிப்பிட முடியாது ஆனால், இவை எதுவும் இல்லாமல் நம்மைக் கட்டிப்போடுவது திரைக்கதை மட்டுமே, லாஜிக் இடறல்களும் இல்லை.
இவ்வளவு திருப்தியாகப் படம் பார்த்து நாட்கள் ஆகிறது. குறைகள் இருந்தாலும் தேடித்தான் பார்க்க வேண்டும், எனக்குத் தெரிந்து குறை என்று எதுவுமில்லை.
இப்படத்தை தமிழில் செய்தால் நன்றாக இருக்கும் ஆனால், இது போல வருமா! என்பது சந்தேகமே. இந்தப்படத்தை பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன் 🙂 .
Directed by Arun Kumar Aravind
Produced by Raju Malliath
Written by Murali Gopy
Starring Indrajith, Murali Gopy, Anoop Menon, Nishan, Mythili, Tanusree Ghosh
Music by Gopi Sunder
Lyrics Rafeeq Ahamed
Cinematography Shehnad Jalaal
Editing by Arun Kumar Aravind
Studio Ragam Movies
Release date(s) February 24, 2012 (Kerala)
Running time 130 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய கட்டுரை
Andhadhun [இந்தி – 2018] ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
எனக்கு மலையாளம் தெரியாது……..இதனை தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளார்களா?????????????
வினோத் சப்டைட்டில் உடன் பாருங்கள். மொழி மாற்றம் செய்யப்படவில்லை. மலையாளம் புரியவில்லை என்றாலும் படம் பார்த்தால் கதை புரியும். சப்டைட்டில் இல்லாமல் கூட பார்க்கலாம்.
நன்றி. நானும் தவறாது நல்ல மலையாள படங்களை பார்ப்பவன். சுரேஷ் கோபி நடித்த கமிஷனர் போல பல நல்ல படங்கள் உண்டு.
“கிரி! நீ இந்தப்படங்களும் பாரு நன்றாக இருக்கும்” என்று ஒரு பட்டியல் கொடுத்தான். ”
தயவு செய்து அந்த பட்டியல தர முடியுமா? மேலும் பல நல்ல படங்களை பார்க்க விருப்பம்
உண்மை – அப்படின்னு மம்முட்டி படம் அதுக்கப்புறம் சமீபத்துல உருமி – ஆகியவையே நியாபகத்தில் வைத்திருக்கும் படங்கள். பொதுவாக பதிவுலகில் பரிந்துரைக்கும் படங்களையே சமீபகாலமாக பார்த்து வருகிறேன். வேறு மொழிகளில் த்ரில்லர் மற்றும் ஹாரர் படங்களை தேடி தேடி பார்ப்பது என் வழக்கம். பரிந்துரைத்ததர்க்கு நன்றி பார்த்துவிடுகிறேன்.
பிகு: கொரியனில் – வெல்கம் டு டங்க்மாகொல் மற்றும் ஹலோ கோஸ்ட் பார்த்திருக்கிறீர்களா (ரெண்டும் யுடுபில் கிடைக்கும்) சற்றே நகைச்சுவை கலந்தவை.
மலையாள படம் பார்க்க முயற்சிக்கிறேன் கிரி
கார்த்தி படம் சிறுத்தை எனக்கு பிடித்த படம்
கார்த்திக்கின் படங்கள் பார்க்க எனக்கு பிடிக்கும் இருந்தும் சகுனி என்னை கவரவில்லை
பார்ப்போம் அலெக்ஸ் பாண்டியன் ?
“இதை வைத்தும் DTH பற்றியும் ஒரு கட்டுரை எழுதினேன் ஆனால், நான் ரஜினி ரசிகன் என்பதால் சாதாரணமாகக் கூறினால் கூட அது வேறு முறையில் புரிந்து கொள்ளப்படும்”
எதிர்ப்பு வரும் பகுதிகளை மட்டும் நீக்கிவிட்டு, அட்லீஸ்ட் DTH பத்தியாவது எழுதலாமே? DTH ரிலீஸ் பத்தி கொஞ்சம் எழுதுங்கள் கிரி. எனக்கு அதபத்தி ஒன்னும் புரியல.
நானும் இப்போதான் இந்த படங்களை பார்க்க பிளான் பண்ணி இருக்கேன்.
அந்த லிஸ்ட கொஞ்சம் ஷேர் பண்ணுங்க கிரி.
நன்றி கிரி !! நானும் Ee adutha kaalathu பார்க்க முயற்சிக்கறேன் !!
அதே போல நீங்க 22 female கோட்டயம் பார்த்து விமர்சனம் செய்ய வேண்டுகிறேன் !!
கிரி
Ustad Hotel என்றொரு மலையாள படம் போன வருடம் வெளிவந்தது மம்மூட்டியின் மகன் Dulher salman நடித்தது .மிகவும் நன்றாக இருக்கும் தவறாமல் பார்க்கவும் . திலகன் கடைசியில் நடித்து வந்த படம் .மிகவும் அருமையாக நடித்து இருப்பார் .
தல,
மம்மூட்டி படம் ஒன்னு பேரு “உண்மை” தமிழ் ல dubbing செஞ்சு ரிலீஸ் பண்ணாங்க
ராஜீவ் murder மாதிரி ஒரு கதை செம ட்விஸ்ட் இருக்கும்
கண்டிப்பா பாருங்க
இந்த படம் கண்டிப்பா பாக்கணும் தோணுது டவுன்லோட் லிங்க் தேடி பாக்குறேன்
“அந்த லிஸ்ட கொஞ்சம் ஷேர் பண்ணுங்க கிரி.”
– வழி மொழிகிறேன்
– அருண்
நன்றி கிரி நல்ல படத்தை அறிமுகபடுத்தியதற்கு.
அனைவரின் வருகைக்கும் நன்றி
@சுந்தராஜன், விஜய் & அருண்
Ee adutha kalathu
22 Female Kottaiyam
Ordinary
Indian Rupee
Thattathin Marayathu
Ustad hotel
Ividam swargamanu
Unnam
@ராஜ்குமார் நான் மேற்கூறிய படங்களை பாருங்கள் சூப்பரா இருக்கும்
@சரவணன் அலெக்ஸ் பாண்டியன் செம மொக்கையா இருக்காம்.
@கௌரி ஷங்கர் DTH பற்றி நிறைய பேர் எழுதிட்டாங்க.. நானும் எழுதினால் கடுப்பு தான் ஆவாங்க 🙂
@சிவா 22 Female Kottaiyam பார்த்துட்டேன். செம த்ரில்லர் படம். இது பற்றி நிச்சயம் எழுதுகிறேன்
@ARANANBU இந்தப்படம் இன்னும் பார்க்கலை.. லிஸ்ட் ல் உள்ளது.
@அருண் கண்டிப்பா பார்க்கிறேன்
Giri,
The last film (Malayam) was Mamooty’s one masala film .. the film was good. I do see malayalam films off late I am not watching enga thamizh padame pakkarthu illa. (Neerparavai … Naduvula konjam.. Kumki all are there ) but I never find time to watch. Malayalam films will be good.. they make realistic films for eg.Abu.. where the film is all about going to Haj and all very nice film. Normally when you say that you are watching Malayalam films pasanga kalaippanga.. parthudaa. overapoida poguthunnu.. athaan sollikarthu illa..
Kamesh
Giri
Noted the list will watch the films … (in the sense will search the net and pick them up)
Kamesh
நன்றி.நல்ல படங்களின் பட்டியல் கிடைத்தது. திட் கண்டுபிடித்து paarkkiren
சுந்தரராஜன் சே
Thanks for sharing about the movie , Na. We, all friends watched it and enjoyed. Nice narration and interaction among several characters in the story .
ிரி,
நீங்க ரவி தேஜா நடித்த ஒரிஜினல் ‘சிறுத்தை’ (ிக்ரமாற்குடு) பாருங்கள்
விடவே மாடீங்க.. அருமையான ஸ்க்ரீன்ப்ளே, எஸ் எஸ் ராஜமௌலியின் நேர்த்தியான இயக்கம், பார்த்துவிட்டு சொல்லுங்க … ப்ளீஸ் ……….கார்த்தி நடித்த சிறுத்தை அந்தளவுக்கு என்னை ஈர்க்கவில்லை …….
Giri, Semma thriller movie… Thanks for suggest
Is this movie available in Amazon Prime?
Srinivasan, It was on Amazon India but now it’s not there I guess it’s on Amazon US. You may try it.
Earlier I was watching when I feel bored 🙂 .