DuckDuckGo | கூகுள் தேடுதலுக்கு மாற்று

4
DuckDuckGo

கூகுள் தேடுதல் தன்னை மேம்படுத்தப் பயனர் தகவல்களைப் பயன்படுத்துவதாகக் கூறினாலும், விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. கூகுளுக்கு மாற்றாக Microsoft Bing, Yahoo, Yandex போன்றவை இருந்தாலும் DuckDuckGo தளமும் வளர்ந்து வருகிறது.

DuckDuckGo

DuckDuckGo (DDG) தேடுதல் தளம் 2008 ல் துவங்கப்பட்டது. Image Credit

தகவல் திரட்டுப் பிரச்சனை கூகுள் மட்டுமல்ல, அனைத்து இணைய நிறுவனங்களிடமும் உள்ளது.

எனவே, கூகுள் தேடுதல் பிடிக்காதவர்கள் DDG பயன்படுத்தலாம்.

தன் தளத்தை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று DDG கூறியதை விட, கூகுளை ஏன் பயன்படுத்தக் கூடாது என்பதை விளக்கியுள்ளது.

கூகுள் போலவே DDG உள்ளது. பயன்படுத்தும் போது நம் தகவல்கள் வேறு சேவைக்காகப் பயன்படுத்தப்படாது, என்ற எண்ணம் வந்து செல்கிறது.

கூகுள் தளத்தில் விட, DuckDuckGo தளத்தில் giriblog கட்டுரைகள் முன்னணியில் உள்ளது. தளக் கட்டுரை எதைத் தேடினாலும் பெரும்பாலும் வருகிறது 🙂 .

DuckDuckGo தள வசதிகள்

  • Instant Answers
  • Infinite Scroll for Images, Videos, and Shopping
  • Infinite Scroll
  • Units of Measure
  • Auto-Suggest
  • New Window
  • Advertisements (On / Off)
  • Page Break Numbers
  • Language (Tamil Available)
  • Safe Search

DuckDuckGo பயன்படுத்தக் காரணங்கள்

  • கூகுள் அனைத்து தகவல்களையும் பின் தொடர்கிறது, Incognito mode (Private Browsing) ஆக இருந்தாலும் ஆனால், DDG செய்வதில்லை.
  • Google trackers கிட்டத்தட்ட 75% முன்னணி இணையத் தளங்களைத் தொடர்கிறது மீதி ஃபேஸ்புக். DDG இதில் எதையும் செய்வதில்லை.
  • இதுவரை பயன்படுத்திய தளங்கள், விருப்பங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை வைத்துத் தேடுதல் முடிவுகள், விளம்பரங்கள் கூகுள் & Bing ல் வருகின்றன.
  • சுருக்கமாக, Privacy என்று வரும் போது DuckDuckGo தளம் முன்னணியில் உள்ளது.

DuckDuckGo தளம் பாதுகாப்பு என்று கூறினாலும், வளர்ந்தால் இவர்களும் இதையே தான் செய்வார்கள் 🙂 . இணையம் என்று வந்து விட்டால், யாரையும் நம்ப முடியாது.

கூகுள் போல மற்ற சேவைகள் எதுவும் DDG க்கு இல்லாததால், தற்போது பிரச்சனையில்லை, பின்னாள் புதிய சேவைகளைத் துவங்கினால், இணைக்கலாம்.

உலகில் ஒவ்வொரு இலவசத்தின் பின்பும் இலாபம் இருக்கும்.

கூகுள் ஒப்பீடு சரியா?

முடிவாக, கூகுளுடன் ஒப்பிடுவது மலைக்கும் மடுவுக்குமானது. இருப்பினும், DDG வளர்ந்து வரும் தளம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உலக இணையத் தேடுதல் சந்தையில் 95% கூகுள் வசம் உள்ளது.

தற்போது கூகுளுக்கு அடுத்த இடங்களில் இருந்த Bing, Yahoo, Yandex யை முந்தி அமெரிக்க மொபைல் தேடுதல்களில் DuckDuckGo தளம் வந்துள்ளது.

சமீபத்தில் 100 மில்லியன் தேடுதல்களை ஒரே நாளில் கடந்து சாதனை படைத்தது.

ஆஸ்திரேலியா சர்ச்சை

அந்நாட்டின் செய்தி நிறுவனங்களுக்குக் கூகுள் பணம் கொடுக்க வேண்டும் என ஆஸி அரசு மசோதா நிறைவேற்றப் போவதாக அறிவித்தது.

ஆனால் கூகுள்,

இம்மசோதா இயல்பான இணையச் செயல்பாட்டையே சீர்குலைப்பதாக உள்ளது.

இம்மசோதா நிறைவேற்றப்பட்டால், ஆஸியில் இருந்து கூகுள் தேடுதலை விலக்குவதைத் தவிர வேறு வழியில்லை‘ என்று கூறியது.

அனைவருக்கும் பாதிப்பு

செய்தி நிறுவனங்களுக்குப் பிரச்சனை என்றால், ஒட்டு மொத்த கூகுள் தேடுதலையும் நிறுத்தாமல், செய்தித் தளங்களை மட்டும் நீக்கி இருக்கலாம்.

ஏனென்றால், கூகுள் தேடுதலில் செய்தி நிறுவனங்கள் மட்டுமல்ல, ஏராளமான தளங்கள் கூகுள் மூலமாக வருபவர்களின் எண்ணிக்கையையே நம்பி உள்ளன.

கூகுளால் வருமானம் / வருகை பெற்று வந்த அனைவருக்கும், இது இழப்பே. கூகுள் அளவுக்கு மாற்று தேடுதல் தளங்கள் வசதிகளைத் தருவதில்லை.

கூகுள் தேடுதல் மட்டுமே

கூகுள் தேடுதல் விலகலாம் என்றால், கூகுளே விலகுவதாக அர்த்தமல்ல.

ஜிமெயில், ட்ரைவ், ஃபோட்டோஸ், YouTube போன்ற மற்ற சேவைகள் ஆஸியில் தொடரும், கூகுள் தேடுதல் மட்டும் இருக்காது.

ஒருவேளை கூகுள் தேடுதல் விலகினால், ஆஸி பயனாளர்கள் DDG, Bing  தளங்களைப் பயன்படுத்தத் துவங்கலாம்.

DuckDuckGo தளத்தைப் பயன்படுத்திப் பார்க்க விரும்புபவர்கள் செல்ல வேண்டிய முகவரி –> https://duckduckgo.com/

தொடர்புடைய கட்டுரைகள்

Microsoft Edge | கூகுள் க்ரோம் உலவிக்கு மாற்று

கூகுள் Vs ஃபேஸ்புக்

அடிபட்டும் திருந்தாத கூகுள்

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. கூகிளின் ஒவ்வொரு அசைவை கண்டும் அனுதினமும் அதிசயிப்பவன் நான்.. உண்மையில் இதன் வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் ஆச்சரியமாகவே இருக்கிறது.. 90 / 2000 வருடங்களில் பில் கேட்ஸ் என்ற ஒரு வார்த்தையை உதிக்காத உதடுகள் கிடையாது.. அதன் பின் சில வருடங்களில் நிலைமை தலை கீழாகி விட்டது.. நீங்கள் குறிப்பிட்ட செய்தி இதுவரை நான் அறியாத செய்தி.. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. யாசின் இன்னைக்கும் பில் கேட்ஸ் கெத்தாகத்தான் இருக்கிறார்… என்ன ஒதுங்கி இருக்கிறார்.

    தற்போது கூகுள், அமேசான், ஆப்பிள் போன்றவை அதிகம் பேசப்படுகிறது.

  3. கூகுளின் Adsense மூலம் தானே உங்களுடைய இணையதளத்தில் விளம்பரங்கள் காட்டப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!