மத்திய அரசு e-Rupi என்ற புதிய மின்னணு பரிவர்த்தனையை அறிமுகப்படுத்தியுள்ளது. Image Credit
e-Rupi
e-Rupi சிறப்பு என்னவென்றால், இதைப்பயன்படுத்தத் தனிப்பட்ட விவரங்களைச் சேவையைத் தருபவரிடம் கொடுக்க வேண்டியதில்லை.
இது முன்கூட்டிய பணம் செலுத்தும் வழியாகும் (PrePaid Payment). எனவே, தடங்கல், தாமதம் இல்லாமல், உடனடியாக இச்சேவையைப் பெற முடியும்.
மற்றவருக்கு இதை மாற்ற முடியாது.
எப்படி வேலை செய்கிறது?
சேவைக்கான QR Code or SMS string-based e-voucher குறுந்தகவலாக அனுப்பும்.
அதைச் சம்பந்தப்பட்ட சேவை கொடுக்கப்படும் இடத்தில் காண்பித்தால், ஸ்கேன் செய்யப்பட்டு OTP கேட்கப்படும்.
OTP கொடுத்த பிறகு சேவை வழங்கப்படும்.
எவ்வளவு நாள் செல்லுபடியாகும் என்பதற்கான கால அளவு குறிப்பிடப்படவில்லை.
எடுத்துக்காட்டுடன் கூறவும்
கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக்கொள்ள அரசு வாய்ப்பை வழங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.
இதற்காக உங்கள் விவரங்களைப் பதிவு செய்து மொபைலுக்கு QR Code or SMS string-based e-voucher குறுந்தகவலை அனுப்பும்.
தனியார் மருத்துவமனைக்குச் சென்று மேற்கூறிய வழியில் QR code or SMS string-based e-voucher காண்பித்து சேவையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தனியார் நிறுவனத்துக்கு உடனடியாக இதற்கான கட்டணம் வந்து விடும்.
துவக்கத்தில் சுகாதாரத்துறைக்கு மட்டுமே இச்சேவை முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பின்னர் மற்ற துறைகளுக்கு விரிவுபடுத்தப்படும்.
இதை அரசு என்றல்ல, தனி நபரும் செயலியை நிறுவி மற்றவருக்கு இச்சேவையை வழங்கலாம்.
Amazon Gift Voucher போன்றது. அமேசானில் பணம் செலுத்தி எவருக்கும் Gift Voucher கொடுக்கலாம். அதே போன்ற சேவையே e-Rupi.
அமேசானில் கொடுக்கப்படுவது அமேசானில் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால், அனுமதிக்கப்பட்ட அனைத்து சேவைகளுக்கும் e-Rupi பயன்படுத்த முடியும்.
மேலும் சில தகவல்கள்
- இச்சேவையைப் பணமாகப் பெற முடியாது, சேவையாக மட்டுமே பெற முடியும்.
- அதாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியும் ஆனால், தடுப்பூசிக்கான பணத்தைப் பெற முடியாது.
- இச்சேவையைப் பணமாகப் பெற முடியாது என்பதால், இதைத் தவறாகப் பயன்படுத்த முடியாது.
- சேவையைப் பயன்படுத்தவில்லையென்றால், அரசிடமே பணம் இருக்கும்.
- e-Rupi செயலியை நிறுவி மற்றவர்களுக்குக் கொடுக்கலாம். செயலியில் இம்முறை இன்னும் (ஆகஸ்ட் 2021) செயல்பாட்டுக்கு வரவில்லை.
- இச்சேவையைப் பெற யாருடைய பரிந்துரையோ (Recommendation) உதவியோ தேவையில்லை. இடைத் தரகர்கள், வங்கிக்கணக்கு மற்ற அலுவலர்கள் தேவை இல்லாமல் பெற முடியும்.
- சாதாரண மொபைல் இருந்தால் போதுமானது. இணையம், ஸ்மார்ட் ஃபோன், செயலி (App) போன்றவை தேவையில்லை.
- ஏற்கனவே தொகை செலுத்தப்பட்டு இருப்பதால் (PrePaid Payment) சேவையை உடனடியாகப் பெற முடியும்.
- யார் / எவ்வளவு பேர் பயன்படுத்தினார்கள் என்ற தெளிவான கணக்கு இருக்கும்.
- இச்சேவையைத் தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
- சேவையாக மட்டுமே பெற முடியும் என்பதால், பணமாகக் கொடுத்தால் அதை மற்ற செலவுகளுக்குப் பயன்படுத்தி விடுவார்கள் என்ற கவலையில்லை.
- செலவு செய்த பிறகு Claim செய்யும் வசதி தனியார் நிறுவனங்களில் உள்ளது ஆனால், e-Rupi யில் நம் பணம் தற்காலிகமாக முடங்குவதில்லை.
- மிகப்பெரிய வெற்றி பெற்ற UPI பணப்பரிவர்தனையை உருவாக்கிய NPCI நிறுவனமே e-Rupi வசதியையும் உருவாக்கியுள்ளது.
இம்முறை முழுமையான பயன்பாட்டுக்கு வர, மக்களுக்குப் பழகக் காலம் எடுக்கும்.
UPI பணப்பரிவர்த்தனை போல மக்களுக்குப் பழகி விட்டால், மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
UPI அறிமுகப்படுத்தப்பட்ட போது கிண்டலடித்த பலர் தற்போது தங்களது பெரும்பான்மை செலவுகளை UPI மூலம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய கட்டுரைகள்
மின்னணு பரிவர்த்தனை வெற்றியா தோல்வியா?! FAQ
UPI பரிவர்த்தனை பரிந்துரைகள் | மிரட்டும் வளர்ச்சி
PhonePe Google Pay Paytm எது சிறந்தது?
ICICI Vs HDFC Vs SBI வங்கிகளில் சிறந்தது எது?
HDFC Credit Card Vs ICICI Credit Card Vs SBI Credit Card எது சிறந்தது?
சிபில் ஸ்கோர் என்றால் என்ன? [FAQ]
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
கிரி, இதுவரை அறியாத தகவல்.. தற்போது சில கேள்விகள் உள்ளன.. சேவையை முழுமையாக பயன்படுத்தி பார்க்கும் போது தான் தெரியும்.. பயன்படுத்திய பிறகு கேட்கிறேன்… பகிர்ந்தமைக்கு நன்றி..