சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 1)

64
Singapore MRT சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

சிங்கப்பூர் பற்றி நான் தெரிந்து கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். புதிதாக வருபவர்கள் என்னைப் போல பல விஷயங்கள் புரியாமல் சிரமப்படாமல் இருக்க ஓரளவுக்கு உதவியாக இருக்கும். Image Credit

அனைத்து பேருந்துகளும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை.

ஓட்டுனர் மட்டுமே உண்டு, நடத்துநர் கிடையாது.

முன்கட்டண அட்டை பயன்படுத்த வேண்டும் (ATM அட்டை போல), ஏறும் போதும் இறங்கும் போதும். பயண சீட்டு கிடையாது.

முன்கட்டண அட்டையைப் பயன்படுத்தாதவர்கள் அல்லது எடுக்க மறந்து வந்தவர்கள் ஓட்டுனர் அருகில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் பண நோட்டுகளை / காசுகளைப் போட்டுப் பயணச்சீட்டு பெற்றுக் கொள்ளலாம்.

இங்கே சரியான கட்டணம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால், மீதி திரும்பக் கிடைக்காது. எனவே முன்கட்டண அட்டையே வசதியானது, கட்டணமும் குறைவு.

பயணச்சீட்டு பரிசோதகர்கள் அவ்வப்போது வருவார்கள், முன் கட்டண அட்டை பயன்படுத்துவர்களின் அட்டைகளைச் சோதனை இயந்திரத்தில் பரிசோதனை செய்வார்கள்.

பேருந்துக் கதவுகள் தானியங்கி முறையில் ஓட்டுனரால் இயக்கப்படுவை.

பேருந்துகளில் Auto Gear உள்ளதால், பொம்மை மாதிரி ஒட்டிக்கொண்டு போகிறார்கள்.

ஓட்டுனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை, மிக மிக வயதானவர்கள் கூடப் பேருந்தை ஓட்டுகிறார்கள்.

தமிழர்கள் அதிக அளவில் பேருந்து ஓட்டுனர்களாக உள்ளனர்.

குறிப்பிடத் தக்க அளவில் பெண் ஓட்டுனர்களும் உண்டு.

வழியில் எங்கேயும் ஏற இறங்க முடியாது, நிறுத்தங்களில் மட்டுமே முடியும்.

ஏறும் போது முன்பக்க கதவை மட்டுமே பயன்படுத்த வேண்டும், இறங்கும் போது இருபுறமும் செல்லலாம்.

ஏறும் போதும் இறங்கும் போதும் எந்த ஒரு தள்ளு முள்ளும் இருக்காது. பொறுமையாகவே ஏறுவார்கள் இறங்குவார்கள்.

இந்தியர்கள் மட்டும் வழக்கம் போலப் பதட்டம் காட்டுவார்கள், அவசரப் படுவார்கள்.

பேருந்துகளில் வயதானவர்களுக்கு முடியாதவர்களுக்குக் கர்ப்பிணிகளுக்கு என்று தனி இருக்கைகள் உண்டு.

பெரும்பாலான பேருந்துகள் அதிகபட்சமாக 15 நிமிட இடைவெளியில் வரும்.

பேருந்துக்குப் பயன்படுத்தும் அதே முன் கட்டண அட்டையை ரயிலில் செல்வதற்கும் பயன்படுத்தலாம்

அனைத்து ரயிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டவை, தானியங்கி கதவுகள் கொண்டது.

இதிலும் வயதானவர்களுக்குக் கர்ப்பிணிகளுக்கு தனியாக இருக்கை உண்டு.

ரயில் இருக்கும் தளத்திற்கு செல்லத் தானியங்கி படிக்கட்டைப் பயன்படுத்த முடியாதவர்கள் மின் தூக்கியை (lift) பயன்படுத்தலாம்.

ஆட்சி மொழியில் ஆங்கிலம் மாண்டரின் மலாய் மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். எந்த அறிவிப்பு எழுதி இருந்தாலும் 4 மொழியிலும் எழுதப்பட்டு இருக்கும்.

இதை முதன் முதலில் பார்த்த போது மற்றும் கேட்ட போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கும் வியப்புக்கும் அளவே இல்லை.

ரயில் நிலையங்கள் & ரயிலின் உள்ளே எதையும் குடிக்க / சாப்பிடக் கூடாது, மீறினால் அபராதம்.

ரயில் நிற்கும் இடத்திற்கு ஒரு அடி முன்பு மஞ்சள் கோட்டுக்கு (படத்தில் உள்ளது போல) முன்பே நிற்க வேண்டும் அதைத் தாண்டி நின்றால் அபராதம்.

அறிவிப்புகள் ரயில் நிலையத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

எனவே, மஞ்சள் கோடு அறிவிப்பு தற்போது இல்லை. ரயிலிலும் சாப்பிடக் கூடாது எதையும் குடிக்க கூடாது என்று அறிவித்துக்கொண்டே இருப்பார்கள்.

ஒவ்வொரு நிறுத்தத்தின் போதும் எந்த இடம் என்று அறிவிப்பு செய்யப்படும் அதே போல அடுத்த நிறுத்தமும் கூறப்படும். LCD Display லையும் இந்த அறிவிப்பு தெரியும் (காது கேட்காதவர்களுக்காக).

ரயில் எத்தனை நிமிடங்களில் வரும் என்பதை அங்கே உள்ள அறிவிப்பு கண்ணொளியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

ரயில் நிலைய வாசலிலும் இந்த அறிவிப்பு இருக்கும். எனவே, நம் தேவைக்குத் தகுந்த மாதிரி நம் நடை வேகத்தைக் கூட்டவோ குறைக்கவோ முடியும்.

மூன்றடுக்கு ரயில் தளங்கள் கூட உண்டு (நிலத்திற்கு அடியில்)

முன் கட்டண அட்டையைத் தானியங்கி இயந்திரத்தின் மூலம் நாமே புதுப்பித்துக்கொள்ளலாம்

விமான நிலையத்தில் இருந்து நகரத்துக்கு ரயில் மூலமே வந்து விடலாம்.

ரயிலில் மட்டும் வழியை மறைத்துக்கொண்டு நம்ம ஊரைப் போலக் கதவின் வெளியே நிற்பார்கள். ரயிலில் இருந்து வெளியே வரும் போது எரிச்சலுடனே வெளியே வர முடியும்.

மண் தரையே கிடையாது முழுவதும் புற்கள் இருக்கும் அதனாலேயே சாலைகளில் மண்ணை எங்கும் காண முடியாது.

நடைபாதை முழுவதும் சிமெண்ட் தரையாக இருக்கும் மண் பாதை கிடையாது.

இங்கு அடிக்கடி மழை பெய்யும், பல மணி நேரம் தொடர்ந்து மழை பெய்வது இங்குச் சர்வசாதாரணம். அதனால் நமது பையில் குடை வைத்து இருப்பது நல்லது.

சாக்கடை மற்றும் மழை நீர் வடிகால் சிறப்பான முறையில் இருப்பதால் அதிகபட்சமாக 15 நிமிடத்தில் என்ன மழை பெய்தாலும் வடிந்து விடும்.

மழை பெய்ததற்கான அடையாளமே இருக்காது. சாலை எந்த வித பாதிப்பும் இல்லாமல் தரமாக இருக்கும்.

புதிதாகச் சாலை போடப்படுகிறது என்றால் ஏற்கனவே இருக்கும் சாலையின் குறிப்பிட்ட பகுதி வெட்டி எடுக்கப்பட்டு புதிதாகப் போடப்படும்.

இதன் மூலம் ஏற்கனவே இருந்த சாலையின் உயரம் தொடர்ந்து அதிகரிக்காமல் அதே உயரத்தில் பராமரிக்கப்படும்.

சாலை அமைக்கும் பணியாளர்கள் பெரும்பாலும் பங்களாதேஷி & இந்தியர்களே குறிப்பாகத் தமிழர்கள்

சாலை அமைக்கும் பணி பெரும்பாலும் இரவில் நடைபெறும், பகலில் என்றால் யாருக்கும் தொந்தரவு இல்லாமல் சாலை சரி படுத்தப்பட்டு அமைக்கப்படும்

இதுவே அதிகம் ஆகி விட்டதால் இன்னும் பல சுவராசியமான விஷயங்கள், சிங்கப்பூர் மக்கள் பற்றி அடுத்த இடுகையில் கூறுகிறேன்.

Updated on 20-02-2014

இரண்டாம் பாகம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

64 COMMENTS

  1. //புதுகை.அப்துல்லா said…
    அப்பாடா! அடுத்த மாசம் சிங்கப்பூர் வர்றப்ப சுத்திக்காட்ட கைடு கிடைச்சாச்சு. :))//

    ஹா ஹா ஹா வாங்க அப்துல்லா உங்களுக்கில்லாமையா 🙂

  2. //முரளிகண்ணன் said…
    \நடத்துனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை
    ஓட்டுனர் தானே?//

    சுட்டியமைக்கு நன்றி முரளிகண்ணன் மாற்றி விட்டேன் 🙂

    //நானும் விரைவில் சிங்கை வருகிறேன் (கிரியிருக்க கிலியேன்?)//

    வாங்க வாங்க இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். விஜய டி ராஜேந்தர் மாதிரி வசனம் பேசுறீங்க ஹா ஹா ஹா

  3. தெரிந்ததை எல்லாம் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறோம்.

    //ஓரமாக நிற்க கூறி அங்கு அறிவுறத்தப்பட்டு இருக்கும் ஆனால் அதை பெரும்பாலனவர்கள் பின் பற்றமாட்டார்கள் !//

    அப்பாடா! ஏதாவது ஒரு விஷயத்திலாவது ஏறுக்குமாறா இருக்கட்டுமே. இல்லாவிடில் திருஷ்டியாகிடப் போகுது:))!

  4. //ராமலக்ஷ்மி said…
    தெரிந்ததை எல்லாம் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறோம்//

    தெரிந்ததை மட்டுமே சொல்வேன்..கவலையே படாதீங்க :-))

    //அப்பாடா! ஏதாவது ஒரு விஷயத்திலாவது ஏறுக்குமாறா இருக்கட்டுமே. இல்லாவிடில் திருஷ்டியாகிடப் போகுது:))!//

    ஹா ஹா ஹா இவர்களிலும் தவறுகள் செய்கிறார்கள்..அது பற்றி அடுத்த பதிவுகளில் கூறுகிறேன் 🙂

    உங்கள் வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

  5. //ஜோசப் பால்ராஜ் said…
    கிரி, அருமையானப் பதிவு.
    ஒரு வருடம் முடிந்தமைக்கு வாழ்த்துக்கள். படங்களோட பதிவு நல்லா இருக்கு.//

    நன்றி ஜோசப் பால்ராஜ். ஒரு வருடம் விரைவாக போய் விட்டது 🙂

  6. //கார்க்கி said…
    எழுதுங்க.. எழுதுங்க.. அங்க ஏதோ ஒரு இடம் இருக்காமா காலாங்கோ கேலாங்கோ அதுக்கு எப்படிங்க போனும்?//

    குசும்போ குசும்புங்க உங்களுக்கு. இந்த மாதிரி இடம் எல்லாம் நல்ல்ல்ல்ல்ல்லா கேளுங்க 🙂 இதை எல்லாம் அடுத்த பதிவுகளில் கூறுகிறேன்

  7. //கீ – வென் said…
    கிரி…
    அங்கே பஸ் ஓட்டுற தமிழர்கள் சிங்கபூரர்கள் அல்லது மலேசியர்களே..இந்தியா வில் இருந்து வந்தவர்களுக்கு சிங்கை அரசாங்கம் பஸ் ஓட்ட அனுமதி கொடுப்பதில்லை.. அவர்கள் நிரந்திர வாசிகல்லே இருந்தால் ஒழிய//

    நன்றி வெங்கி. அதனால் தான் என் பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

    //மேலும் நல்ல பதிவு இது..தொடருங்கள்.. மீண்டும் வருவேன்.. :)//

    நன்றி வெங்கி. ரொம்ப நாளைக்கு பிறகு வந்து இருக்கீங்க? அப்பப்ப வந்து எட்டி பாருங்க.

  8. //மோகன் Mohan said…
    நல்ல உபயோகமான இடுகை, கிரி.//

    நன்றி மோகன்.

    //முடிந்தால் ஒரு வேலை வாங்கிக் கொடுங்களேன் ;)//

    என் வேலைய பிடுங்காம இருந்தா போதும்னு இருக்கேன் ஹா ஹா ஹா

    //இது, இது தான் நம்ம ஊரு ஸ்டைல். :)//

    :-))

    //நான் இன்றைக்கு ஒரு இடுகை போட்டுள்ளேன். வந்து எட்டிப் பாருங்க//

    மோகன் இதை பார்த்துட்டேன்..நிஜமாவே சூப்பர் தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க கிண்டல் செய்யவில்லை நிஜமாகவே.

    உங்கள் வருகைக்கு நன்றி மோகன்

  9. //கலையரசன் said…
    The system is similar to West European cities. //

    நான் ஐரோப்பா போனதில்லை..நான் சென்ற ஒரே வெளிநாடு சிங்கை மற்றும் இந்தோனேசியா மட்டுமே.

    நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வருகைக்கு நன்றி கலையரசன்.

    =================================================================

    //புதுகை.அப்துல்லா said…
    அண்ணே டுபாக்கூர் இல்லண்ணே. உண்மையிலேயே வர்றேன் :))//

    சிங்கை பதிவர்கள் அன்புடன் வரவேற்கிறோம் 🙂

  10. //வெண்தாடிதாசன் said…
    காசுகள் மட்டுமா? நோட்டுகளையும் போடலாம். ஆனால் மீதி சில்லறை கிடைக்காது. மாத கட்டண அட்டையையும் பயன் படுத்தலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கான கட்டண சலுகையை பற்றி குறிப்பிட்டு இருக்கலாம்//

    வாங்கோ! வாங்கோ!! வெண்தாடிதாசன்..இன்னைக்கு தான் என்னை திட்டறதுக்கு வராம சாதாரணமா வந்து இருக்கீங்க..நன்றி நன்றி நன்றி :-)))

    கட்டண சலுகை பற்றி நான், நீங்கள் கூறியதை குறிப்பிடலாம் என்று தான் இருந்தேன்..ஆனால் இதே போல நம்ம ஊரிலும் இருப்பதால் மற்றும் இது அனைத்து ஊரிலும் சகஜம் என்பதால் மட்டுமே குறிப்பிடவில்லை.

    //ஆங்கிலம், மான்டரின், மலாய் மற்றும் தமிழ்//

    நீங்க சிங்கையில் தான் இருக்கீங்களா? இல்லை இருந்தீங்களா? இருக்கிறீர்கள் என்றால் ஏன் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை? இங்கே இருக்கிறீர்கள் என்றால் இந்த மாதம் 20 ம் தேதி நடக்கும் பதிவர் சந்திப்பிற்கு வந்து விடுங்கள்.

    உங்கள் வருகைக்கு நன்றி வெண்தாடிதாசன் தொடர்ந்து வாங்க இதை போல சுட்டிக்காட்டுங்க.

  11. எதை பற்றி மட்டும் வேணுமானால் எழுதுங்கோ.. ஆனால் லிட்டில் இந்தியாவை பற்றி மட்டும் எழுதாதீங்கோ, அதை விட சென்னை மேல்…

  12. \\நடத்துனருக்கு ஓய்வு பெறும் வயது என்ன என்று தெரியவில்லை\

    ஓட்டுனர் தானே?

    நானும் விரைவில் சிங்கை வருகிறேன் (கிரியிருக்க கிலியேன்?)

  13. //Vidhya said…
    கிரி ஒரு வருடம் முடிந்தமைக்கு வாழ்த்துகள்… //

    நன்றி வித்யா.

    //காலச்சக்கரம் வேகமா ஓடுது… //

    தாறுமாறா ஓடுது 🙂

    //சிங்கையில் கிரி அப்படினு ஒரு பதிவு போடலாம் நீங்க :-)//

    இப்படி போட்டா சொல்வதற்கு ஒன்றும் பெரிதா இல்லை..சிங்கப்பூர் பற்றி என்றால் நிறையா இருக்கு :-))

  14. //புதுகை.அப்துல்லா said…
    அப்பாடா! அடுத்த மாசம் சிங்கப்பூர் வர்றப்ப சுத்திக்காட்ட கைடு கிடைச்சாச்சு. //

    அப்துல்லா அண்ணா,
    என்ன இது ?

  15. //வடுவூர் குமார் said…
    கிரி
    இந்த மின்வண்டியில் இறங்குவதற்கு முதலில் வழிவிடவும் என்ற அறிவிப்பை பல முறை சொன்னாலும் யாரும் மதிப்பதில்லை அதுவும் மெத்த படித்தவர்கள் கூட அப்படித்தான்.//

    ஆமாங்க வடுவூர் குமார். செம கடுப்பா இருக்கும் முழுவதும் வழியை மறைத்து கொண்டு முன்னால் நிற்ப்பார்கள். உள்ளே இருந்து எப்படி வெளியே வர முடியும் என்ற யோசனை கூட இல்லாமல் முன்னாடி நிற்ப்பாங்க. இதில் மட்டும் ஏன் கேவலமா நடந்துக்கறாங்கன்னு எனக்கு புரியல

    //சாப்பிடுவது/குளிர்பானம் குடிப்பது அவ்வளவாக கட்டாயப்படுத்துவது இல்லை போல் தோன்றுகிறது.ஐஸ்கிரீம் இதில் எந்த வகை என்று தெரியாததால் பலர் சாப்பிட பார்த்திருக்கேன்//

    நானும் பார்த்து இருக்கிறேன். எதற்கு வம்பு என்று செய்வதில்லை ஹி ஹி அப்புறம் இவனுகளுக்கு யாரு டாலர் ல அபராதம் கட்டறது..அதுவும் இல்லாம நாம பொழைக்க வந்து இருக்கோம்..எதற்கு தேவை இல்லாத வீராப்பு :-)))

    உங்கள் வருகைக்கு நன்றி.

  16. // A Blog for Short Films said…
    படங்கள் அருமை.//

    நன்றி A Blog for Short Films உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

    ===================================================================

    //கூடுதுறை said…
    கலக்குங்க…கிரி..
    மேலும் எழுதுங்கள்…//

    நன்றி கூடுதுறை. இந்த வாரம் சிங்கப்பூர் வாரம் தான் :-))) பல சுவாராசியமான விவரம் கூறுகிறேன் படியுங்கள்.

  17. //’டொன்’ லீ said…
    எதை பற்றி மட்டும் வேணுமானால் எழுதுங்கோ.. ஆனால் லிட்டில் இந்தியாவை பற்றி மட்டும் எழுதாதீங்கோ, அதை விட சென்னை மேல்…//

    ஹா ஹா ஹா லிட்டில் இந்தியா வை பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ளட்டுமே! சிங்கப்பூர் க்கே திருஷ்டி பரிகாரம் போல உள்ளது அதே சமயம் முக்கிய வியாபார தளமாகவும் உள்ளது.

    உங்கள் வருகைக்கு நன்றி ‘டொன்’ லீ

  18. எழுதுங்க.. எழுதுங்க.. அங்க ஏதோ ஒரு இடம் இருக்காமா காலாங்கோ கேலாங்கோ அதுக்கு எப்படிங்க போனும்?

  19. கிரி…
    அங்கே பஸ் ஓட்டுற தமிழர்கள் சிங்கபூரர்கள் அல்லது மலேசியர்களே..இந்தியா வில் இருந்து வந்தவர்களுக்கு சிங்கை அரசாங்கம் பஸ் ஓட்ட அனுமதி கொடுப்பதில்லை.. அவர்கள் நிரந்திர வாசிகல்லே இருந்தால் ஒழிய.. மேலும் நல்ல பதிவு இது..தொடருங்கள்.. மீண்டும் வருவேன்.. 🙂

  20. நல்ல உபயோகமான இடுகை, கிரி. முடிந்தால் ஒரு வேலை வாங்கிக் கொடுங்களேன் 😉

    ////ஓரமாக நிற்க கூறி அங்கு அறிவுறத்தப்பட்டு இருக்கும் ஆனால் அதை பெரும்பாலனவர்கள் பின் பற்றமாட்டார்கள் !//
    இது, இது தான் நம்ம ஊரு ஸ்டைல். 🙂
    நான் இன்றைக்கு ஒரு இடுகை போட்டுள்ளேன். வந்து எட்டிப் பாருங்க.
    மோகன்

  21. //ஜோதிபாரதி said…
    நல்லா எழுதுறீங்க கிரி!
    தொடர்ந்து எழுதுங்கள்!//

    நன்றி ஜோதிபாரதி.

    //ஆங்கிலம், சீனம்(மாண்டரின்), மலாய் மற்றும் தமிழ் என்று சொல்வது சரியாக இருக்கும்.//

    நன்றி ஜோதிபாரதி, வெண்தாடி தாசன் அவர்களும் இதையே கூறினார். அடுத்த முறை திருத்திக்கொள்கிறேன். இனி வரும் பதிவுகளிலும் ஏதாவது தவறு இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்.

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி.

  22. //தானியங்கி இயந்திரத்தில் காசுகளை (மட்டுமே) போட்டு பயணசீட்டு பெற்று கொள்ளலாம்.//

    காசுகள் மட்டுமா? நோட்டுகளையும் போடலாம். ஆனால் மீதி சில்லறை கிடைக்காது. மாத கட்டண அட்டையையும் பயன் படுத்தலாம். பள்ளி மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கான கட்டண சலுகையை பற்றி குறிப்பிட்டு இருக்கலாம்.

    //ஆட்சி மொழியில் ஆங்கிலம் சீனா(சிங்கப்பூர்) மலேசியா மற்றும் தமிழ் உள்ளது.//

    ஆங்கிலம், மான்டரின், மலாய் மற்றும் தமிழ்.

  23. கிரி ஒரு வருடம் முடிந்தமைக்கு வாழ்த்துகள்… காலச்சக்கரம் வேகமா ஓடுது… சிங்கையில் கிரி அப்படினு ஒரு பதிவு போடலாம் நீங்க 🙂

  24. //ச்சின்னப் பையன் said…
    அருமையான பதிவு… நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.. நன்றி..

    உங்களுக்கும் நன்றி ச்சின்னப் பையன்.

    //என்ன ஆச்சரியம் பாருங்க.. நானும் இன்னிக்கு ஒரு பதிவு போட்டேன்… அது இந்த பதிவைப் போலவே இருக்குன்னு மக்கள் சொல்றாங்க…. :-))//

    ஒய் ப்ளட் சேம் ப்ளட் :-)))

    ================================================================

    //Hari Raj said…
    அருமையானப் பதிவு!!!!//

    நன்றி ஹரி ராஜ் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

  25. கிரி
    இந்த மின்வண்டியில் இறங்குவதற்கு முதலில் வழிவிடவும் என்ற அறிவிப்பை பல முறை சொன்னாலும் யாரும் மதிப்பதில்லை அதுவும் மெத்த படித்தவர்கள் கூட அப்படித்தான்.இதை சுவாரஸ்யமாக பார்க்க சிறந்த இடம் ஜூரோங் ஈஸ்ட் – மத்திய தடம்.பூன்லே நோக்கிப் போகும் வண்டியில் இருந்து இறங்கும் மக்கள் ஓடிவருவதை பார்க்கவேண்டும்,100 மீ ரேஸ் தோற்றுவிடும்.
    வண்டியின் உள்ளே சாப்பிடுவது/குளிர்பானம் குடிப்பது அவ்வளவாக கட்டாயப்படுத்துவது இல்லை போல் தோன்றுகிறது.ஐஸ்கிரீம் இதில் எந்த வகை என்று தெரியாததால் பலர் சாப்பிட பார்த்திருக்கேன்.

  26. நல்லா எழுதுறீங்க கிரி!
    தொடர்ந்து எழுதுங்கள்!

    //ஆட்சி மொழியில் ஆங்கிலம் சீனா(சிங்கப்பூர்) மலேசியா மற்றும் தமிழ் உள்ளது. எனவே தமிழிலும் ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்வார்கள். எந்த அறிவிப்பு எழுதி இருந்தாலும் 4 மொழியிலும் எழுத பட்டு இருக்கும் (எனக்கு இதை முதன் முதலில் பார்த்த போது மற்றும் கேட்ட போது நான் அடைந்த சந்தோசத்திற்கும் ஆச்சர்யத்திற்கும் அளவே இல்லை)//

    ஆங்கிலம், சீனம்(மாண்டரின்), மலாய் மற்றும் தமிழ் என்று சொல்வது சரியாக இருக்கும்.

  27. //Ganeshkanth said…
    சிங்கப்பூர்ல நீ எடுத்துண்ட போடோஸ் எல்லாம் ஒரு ஆல்பமா போடுப்பா. நானும் சிங்கப்பூரை நினைவு படுத்திக்கிட்ட மாதிரி இருக்கும்.//

    இது எந்த கணேஷ் காந்த்துன்னு தெரியலையே 🙂 சரி வேற யாராவதா இருந்து திட்டிட்டா வம்பா போய்டும் :-)))

    என்னோட வலைதளத்தில் My LInk ல் இருக்கிற Picasa ஆல்பம் க்ளிக் செய்தால் மேலும் படங்களை பார்க்கலாம்

  28. //மோகன் இதை பார்த்துட்டேன்..நிஜமாவே சூப்பர் தொடர்ந்து இது மாதிரி எழுதுங்க கிண்டல் செய்யவில்லை நிஜமாகவே.//

    கிரி, தங்கள் பாராட்டுக்கு நன்றி. கிண்டல் செய்யவில்லை என்றே எடுத்துக் கொள்கிறேன் 😛

    உங்கள் வருகைக்கு நன்றி மோகன்//

    ஒவ்வொரு தடவையும் என் வருகைக்கு நன்றி சொல்லாதீர்கள் 🙂

    மோகன்

  29. சிங்கப்பூர்ல நீ எடுத்துண்ட போடோஸ் எல்லாம் ஒரு ஆல்பமா போடுப்பா. நானும் சிங்கப்பூரை நினைவு படுத்திக்கிட்ட மாதிரி இருக்கும்.

  30. //நான் கண்டதை .. கிரியின் பதிவிற்கு எதிர் பதிவாக பின்னர் போடுகிறேன்.. :))//

    ஏற்கனவே போட்டுடாங்க 🙂 வெங்கி நீங்கள் பல வருடம் சிங்கையில் வசித்தவர் உங்களுடன் என்னை ஒப்பிடவே முடியாது. உங்களுக்கு பல அனுபவங்கள் இருக்கும், என்னை விட சிறப்பாக எழுதக்கூடிய அளவுக்கு உங்களுக்கு பல விவரங்கள் தெரியும்.

    //கிரி,
    கேலாங் , டெஸ்கர் லேன் பற்றி எழுதவே இல்லையே ??//

    ஏங்க! வெங்கி ஒரு பதிவிலேயே எப்படிங்க அனைத்தையும் கூறுவது..அடுத்த பதிவுகளில் வரும்..ஆனால் எனக்கு கேலாங், டெஸ்கர் லேன் பற்றி அதிகமாக தெரியாது அதுவும் டெஸ்கர் பற்றி சுத்தமாக தெரியாது..நீங்கள் எழுதும் போது அது பற்றி குறிப்பிடுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன்.

  31. மேலும்… அன்பர்களுக்கு.. முக்கியமாக லிட்டில் இந்தியா விற்கு..சனிக்கிழமை மாலை 4 மணிக்கு மேல், ஞாயிற்றுக்கிழமை முழுவதும்..குடும்பத்தோடு செல்வது என்றால்..யோசித்து செல்லவும்.. நானும் என் மனைவியும் இரண்டு முறை பிக்-பாக்கெட் திருடர்களுக்கு என் பர்ஸ் மற்றும் என் மனைவியின் கைப்பை..ஆகியவற்றை களவு கொடுத்து இருக்கிறோம்..ஸ்பெஷல் பாஸ் மற்றும் கள்ளக்குடியேறிகள் (இந்தியர், பங்களா தேஷியர்) அடிக்கும் கொட்டம்..அதிகம்.. இதில் நான் கண்டதை .. கிரியின் பதிவிற்கு எதிர் பதிவாக பின்னர் போடுகிறேன்.. :))

    கிரி,
    கேலாங் , டெஸ்கர் லேன் பற்றி எழுதவே இல்லையே ??

  32. // கீ – வென் said…
    இந்த டக்காசி வேலை எல்லாம் ஆகாது ராசா.. சிங்கையை பற்றி நல்ல மேட்டர் எழுதிடீங்க.. கொஞ்சம் நாற மேட்டர் ம எழுதனும்ல..அப்போ தான் பாலன்ஸ் ஆகும்… நான் உங்க பதிவிலேயே… பின்னூட்டமா போடுறேன்..//

    :-))) எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.. ஒரு வருடத்தில் நான் என்னங்க பெரிதா தெரிந்து கொள்ள முடியும் ..நானும் எல்லா விசயத்தையும் கவர் பண்ண தான் நினைத்துள்ளேன்..பார்ப்போம். வேண்டும் என்று எதையும் விடவில்லை.

    நீங்கள் எழுதுங்கள்.

  33. //ஏங்க! வெங்கி ஒரு பதிவிலேயே எப்படிங்க அனைத்தையும் கூறுவது..அடுத்த பதிவுகளில் வரும்..ஆனால் எனக்கு கேலாங், டெஸ்கர் லேன் பற்றி அதிகமாக தெரியாது அதுவும் டெஸ்கர் பற்றி சுத்தமாக தெரியாது..நீங்கள் எழுதும் போது அது பற்றி குறிப்பிடுங்கள், நானும் தெரிந்து கொள்கிறேன்.//

    அடிங்…ங்கொய்யாலே..நீங்க நல்ல மேட்டர் எழுதி..பெயர் வாங்கும் புலவர்.. நாங்க என்ன அட்ரா அட்ரா நாக்க முக்க வா ??

    இந்த டக்காசி வேலை எல்லாம் ஆகாது ராசா.. சிங்கையை பற்றி நல்ல மேட்டர் எழுதிடீங்க.. கொஞ்சம் நாற மேட்டர் ம எழுதனும்ல..அப்போ தான் பாலன்ஸ் ஆகும்… நான் உங்க பதிவிலேயே… பின்னூட்டமா போடுறேன்..

  34. //வெயிலான் said…
    பதிவெழுத வந்து ஒரு வருசம் ஆச்சா? இது தான் உருப்படியான பதிவா தெரியுது :)//

    வாங்க வெயிலான்..ஒரு சில நல்ல பதிவும் எழுதி இருப்பதாக இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். இது ஒன்று தான் உருப்படியா இருக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    //அடுத்த ஆனந்த விகடனில் இந்தக்கட்டுரை வெளிவர வாழ்த்துக்கள்//

    ஹி ஹி ஹி நீங்க இன்னும் இதற்க்கு முந்தைய பதிவு படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  35. பதிவெழுத வந்து ஒரு வருசம் ஆச்சா? இது தான் உருப்படியான பதிவா தெரியுது 🙂

    அடுத்த ஆனந்த விகடனில் இந்தக்கட்டுரை வெளிவர வாழ்த்துக்கள்.

  36. //Senthil Kumar said…
    நன்றாக உள்ளது .
    சிங்கப்பூர் போஅகுவரது என்று தலைப்பு வைத்து இருக்கலாம்//

    செந்தில் இது மொத்த சிங்கப்பூர் பற்றிய பதிவு ஒவ்வொரு தலைப்பில் வைத்தால் குழப்பம் ஏற்படும், அதுவும் இல்லாமல் ஒரு பதிவில் பல விஷயங்கள் இருக்க வாய்ப்புண்டு எனவே அவ்வாறு வைப்பது சிரமம்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கே 🙂

  37. ஜுரோங் பக்கம் சென்றால் குளிர் சாதன வசதி இல்லாத பேருந்துகளை காணலாம்

  38. நன்கு கவனித்து, அருமையான தகவல் தொகுப்பு. மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    பேருந்துகளில், ரூபாயும் போடலாமே !!! என்ன, மீதி சில்லரை தரமாட்டார்கள்.

    நேரம் கிடைக்கும் போது இங்கயும் வந்து பாருங்க.

    http://vazhakkampol.blogspot.com/2008/10/2008_02.html

  39. //Kaps said…
    ஜுரோங் பக்கம் சென்றால் குளிர் சாதன வசதி இல்லாத பேருந்துகளை காணலாம்//

    தகவலுக்கு நன்றி Kaps

    ====================================================================

    //சதங்கா (Sathanga) said…
    நன்கு கவனித்து, அருமையான தகவல் தொகுப்பு. மேலும் தொடர வாழ்த்துக்கள்.//

    நன்றி சதங்கா (மற்ற பதிவுகளையும் எழுதி விட்டேன்)

    உங்கள் இருவரின் முதல் வருகைக்கும் நன்றி

  40. கிரி கொஞ்சம் தாமதமான பின்னூட்டம்தான்…

    //ஆட்சி மொழியில் ஆங்கிலம் சீனா(சிங்கப்பூர்) மலேசியா மற்றும் தமிழ் உள்ளது//

    சிங்கையில் ஆங்கிலம், மலாய், மேண்டரின்(சீன மொழி),மற்றும் தமிழ் மொழி பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் சிங்கையின் தேசிய மொழி மலாய் மொழியே ஆகும். அவர்களின் தேசிய கீதமும் மலாய் மொழியில்தான் இசைக்கப்படுகிறது. “மாஜுலா சிங்கபூரா” கேட்டிருக்கீங்களா??

  41. //Mailebbai said…
    சொர்கமே என்றாலும், அது நம்மூரு போல வருமா//

    சத்தியமா வராதுங்க. இது பற்றி நீங்க கூறிய அதே வார்த்தையில் ஒரு பதிவே எழுதி இருக்கிறேன் பாருங்க 🙂

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி

    ===================================================================

    //இனியவள் புனிதா said…
    கிரி கொஞ்சம் தாமதமான பின்னூட்டம்தான்…//

    புனிதா இதுல என்னங்க தாமதம் ..இந்த பதிவிற்கு எப்போது வேண்டும் என்றாலும் பின்னூட்டம் போடலாம் 🙂

    //சிங்கையில் ஆங்கிலம், மலாய், மேண்டரின்(சீன மொழி),மற்றும் தமிழ் மொழி பரவலாக பயன்படுத்தப்பட்டாலும் சிங்கையின் தேசிய மொழி மலாய் மொழியே ஆகும்.//

    அப்படியா!! தகவலுக்கு நன்றி

    //அவர்களின் தேசிய கீதமும் மலாய் மொழியில்தான் இசைக்கப்படுகிறது. “மாஜுலா சிங்கபூரா” கேட்டிருக்கீங்களா??//

    கேட்டு இருக்கிறேன்.. ஹி ஹி ஹி எனக்கு புரியாததால அது மாண்டரின் என்றே நினைத்து விட்டேன்.

  42. அருமையான தொகுப்பு. இதை விடவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் சிங்கப்பூரை பற்றி தமிழில் படித்ததில்லை. சிங்கப்பூரின் விமான நிலையத்தில் நான் அறிவிப்பாளரின் தழிழை கேட்டு முதலில் சிலிர்ப்படைந்ததை நினைவுக்கு கொண்டு வந்தது தங்கள் கட்டுரை.
    சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியாவிலும் ஸ்ரீலங்காவிலும் கூட தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையே.

  43. //R said…
    அருமையான தொகுப்பு. இதை விடவும் அழகாகவும் சுவாரஸ்யமாகவும் சிங்கப்பூரை பற்றி தமிழில் படித்ததில்லை//

    நன்றி R

    //சிங்கப்பூர் மட்டுமல்லாமல் மலேசியாவிலும் ஸ்ரீலங்காவிலும் கூட தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமையே.//

    மலேசியாவில் தமிழ் ஆட்சி மொழி கிடையாது. நான் மலேசியா பற்றியும் சிறியதாக எழுதியுள்ளேன் படித்து பாருங்கள்.

    மலேசியா இடுகை

  44. அமாம் நீங்க சொன்னது உன்னமைதான் நான் சிங்கப்புர்லத்தான் இருக்கன்

  45. வாவ் நல்ல பதிவு தேர்வு கிரி.

    அருமையான பல விசையங்களை இனி வரும் உங்கள் பதிவில் பார்க்கலாம் 🙂 .

    விரைவில் சந்திப்போம் 🙂

  46. கிங் நாடோடிப்பையன் மற்றும் சிங்கக்குட்டி இந்த பதிவு எழுதி மூன்று வருடம் ஆகிறது.. திடீர்னு இதற்க்கு கமெண்ட் வருகிறது ஒன்றும் புரியலை. நன்றி 🙂

    சிங்கக்குட்டி நீங்க இது ஏற்கனவே படித்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன்.

  47. ஆம் கிரி,

    //சிங்கப்பூர் வந்து ஒரு வருடம் ஆகி விட்டது// என்று முதல் வரியை படிக்கும் போதே நினைவில் தட்டியது.

    ஆனால், அடுத்து வரும் புதிய சிங்கை பற்றிய இடுகைக்காக மீண்டும் இப்போது இணைப்பு கொடுத்திருப்தாய் நினைத்தேன் :-).

  48. சிங்கப்பூர் 2011 .நு இப்போதைய சிங்கை யை பற்றி ஒரு பதிவு போடுங்கள் . ஆவலாய் இருக்கிறேன்

  49. //// பெரும்பாலான பேருந்துகளில் தொலைக்காட்சி இணைக்கப்பட்டு இருக்கும்/// ரொம்ப ஓவர் ………

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here