நல்லாத்தான் “எழுதறீங்க” விகடன் சார்!

65
விகடன் Junior Vikatan

ஜெ சசியைப் பற்றி ஜூனியர் விகடன் வெளியிட்ட கவர் ஸ்டோரிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளை விகடன் வெளியிட்டுள்ளது.

இதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதுடன் அது தொடர்பான விளக்கத்தையும் கூற வேண்டும்.

இல்லை என்றால் 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு போடுவதுடன் பத்திரிக்கை கவுன்சலில் புகார் செய்யப்படும் என்று “ஜெ” வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

விகடன் வருத்தம்

இதனால் பயந்து போன விகடன் கீழ் கண்டவாறு கூறி மன்னிப்பு கேட்டு…. மன்னிக்கவும் “வருத்தம்” தெரிவித்துள்ளது. Image Credit

அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, அந்தச் செய்தியை நாம் வெளியிட்டோம்.

மற்றபடி, ஜூ.வி. ஒருபோதும் நடுநிலை தவறாது என்பதையும் யார் தூண்டுதலுக்கும் ஆளாகாது என்பதையும் இந்தத் தருணத்தில் மீண்டும் உறுதிபடுத்த விரும்புகிறோம்.

குறிப்பிட்ட அந்தச் செய்தி, யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இருப்பினும், குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம். இதுகுறித்து, எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒலிம்பிக்கில் எல்லோரும் போட்ட பல்டியை விட விகடன் அதிகமாகப் போட்டுத் தன் பாரம்பரிய பெருமையை நிலை நிறுத்தி உள்ளது.

விகடனுக்கு சில கேள்விகள்

  • ஜெ என்பதால் தைரியமாகக் கேள்வி கேட்டுத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன் பக்க நியாயத்தை நிரூபிக்க முடிகிறது முடிந்தது, முடியாதவர்கள் என்றால் நீங்கள் கூறியது சரி என்பது போலத் தானே ஆகி இருக்கும்.
  • ரஜினிக்கு நீங்களே எழுதிய கடிதத்தை யாரோ ரசிகர் போட்ட மொட்டைக் கடிதம் என்று பிரசுரித்தீர்களே அதே போல இதையும் யாரோ கூறிய செய்தி என்று ஜெ விடம் கூறிப் பார்ப்பது தானே? வருத்தம் தெரிவிக்காமல்.
  • ரஜினி வருத்தம் தெரிவித்ததை மன்னிப்பு என்று ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஓட்டினீர்களே இதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்
  • ஓ! மறந்து விட்டேன் நீங்க தான் ஒரு ஓரமா மன்னிப்பு, மன்னிக்கவும் “வருத்தம்” கேட்டு விட்டீர்களே உங்க நடுநிலை புத்தகத்திலே!
  • ரஜினி அடித்தது பல்டி என்றால் நீங்க அடித்தது அந்தர் பல்டியா?
  • ரஜினி தொலைக்காட்சியில் கூறியதையே மாற்றிக் கூறி விமர்சித்த உங்களுக்கு அரசியல் வட்டாரத்தில் கூறியதாகக் கூறுவதா சிரமம்!
  • குறிப்பிட்ட அந்தச் செய்தியால் செல்வி ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் மனம் புண்பட்டிருப்பதாக அறிகிறோம் என்று கூறி இருக்கீங்க.
  • சரி! எப்ப அறிந்தீங்க! 10 கோடி வழக்கு போட்ட பிறகா! மற்றவர்கள் மனம் புண்படுகிறது என்பதை அறிந்து எப்படித் துடித்துப் போய் விடுகிறீர்கள்!
  • ஜெ வழக்கு போட்டதாலே, மனம் புண்பட்டு இருக்கு என்று தெரிகிறது. உங்களோட கப்சா செய்திகளால வழக்கு போடாதாவங்க அல்லது போட முடியாதவங்க எத்தனை பேர் மனம் புண்பட்டு இருக்குன்னு தெரிய வாய்ப்பில்லலை பாவம்.
  • அப்புறம் “நடுநிலை” “நடுநிலை” னு வாய் ஓயாம கூறிட்டு இருக்கீங்களே அப்படின்னா என்னங்க? இரண்டு பேருக்கு நடுவில் நிற்பதா?

அப்படியா விகடன்!

யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரசுரிக்கப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்

அப்புறம்.. பொழுது போகலைனு இதைப் போட்டீங்களா? இல்ல இதை எல்லாம் எங்க கண்டுக்கப் போறாங்க அப்படின்னு வழக்கம் போல இருந்துட்டீங்களா?

ஜெயமோகன் தன் வலை தளத்தில் எம்ஜிஆர் பற்றிக் கூறியதை, பரபரப்பாகக் கூறுவதற்குச் செய்தி இல்லாமல் எடுத்துப் போட்டு, பின் திரைத்துறையினரிடம் வாங்கிக் கட்டி கொண்ட பிறகு கேட்டீர்களே அதற்குப் பெயர் மன்னிப்பா? வருத்தமா?

அப்புறம் எதெல்லாம் வருத்தம் எதெல்லாம் மன்னிப்புன்னு கொஞ்சம் அப்படியே உங்க நடுநிலை புத்தகத்திலே விளக்கிடுங்க, நாங்களும் தெரிந்து கொள்வோம்

நீங்க புலனாய்ந்து போடுவதாக எல்லோரும் நினைத்துட்டு இருக்காங்க, இப்ப நீங்க ஜெ கிட்ட கூறியதைப் பார்த்தால் புளுகாய்ந்து போடுவதைப் போல உள்ளதே!

பொது மக்கள் வட்டாரம்

அவதூறாகக் கூறுபவர்களை ரஜினி மாதிரி கண்டு கொள்ளாமல் இருக்காமல், நொங்கு எடுக்கிற ஜெ, கலைஞர் போன்றவர்கள் தான் உங்களைப் போல “நடுநிலை” பத்திரிகைகளுக்குச் சரியான ஆள்.

இது போல “பொது மக்கள் வட்டாரத்துல” கிண்டலாகக் கூறுகிறார்களே அவர்களுக்கு ஒரு கவர் ஸ்டோரி(கதை!) போட்டு மன்னிப்பு கேட்க வைக்கலாமா? இல்லை வருத்தம் கேட்க வைக்கலாமா?

பொது மக்கள் வட்டாரம் என்பதால் யார் அவங்க என்று கண்டு பிடிப்பது தான் சிரமம். இதற்கு உங்க புளுகாய்வை மன்னிக்கவும் புலனாய்வை பயன்படுத்தலாம்.

நீங்க பாரம்பரிய பத்திரிகை என்பதால் உங்களுக்குப் பல விஷயங்கள் தெரிந்து இருக்கும், “பத்திரிகை தர்மம்” “பத்திரிகை தர்மம்” ன்னு எல்லோரும் சொல்றாங்களே அப்படின்னா என்னங்க?

மேலே கேட்ட கேள்விகள் யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கேட்கப்படவில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இருப்பினும், நான் கேட்ட கேள்விகளால் விகடன் மற்றும் விகடனை சார்ந்தவர்களின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக நான் வருத்தம் (மன்னிப்பல்ல) தெரிவித்துக்கொள்கிறேன்.

Read : விகடன் வீழ்ச்சிக்குக் காரணம் என்ன?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

65 COMMENTS

  1. விகடன்.காமில் ஃப்ளாஷ் நியுஸ், விகடனை புண்படுத்தியதால் மன்னிப்பு கேட்டார் கிரி! நாளை நமது நேயர் ஒருவர் இதைப்பற்றி மொட்டைக்கடுதாசி எழுதுவார்

  2. //narsim said…
    நெத்தி!//

    நன்றி நரசிம். உங்கள் ப்ரோபைல் ல இருக்கிற படம் நீங்களா! ஜூனியர் என் டி ஆர் மாதிரி கலக்கலா இருக்கீங்க

    =================================================================

    //மோகன் Mohan said…
    விகடன்.காமில் ஃப்ளாஷ் நியுஸ், விகடனை புண்படுத்தியதால் மன்னிப்பு கேட்டார் கிரி! நாளை நமது நேயர் ஒருவர் இதைப்பற்றி மொட்டைக்கடுதாசி எழுதுவார்.//

    அய்யயோ! நான் தான் முன்னமே “வருத்தம்” கேட்டு விட்டேனே..முன் ஜாமீன் மாதிரி :-)))

  3. //அய்யயோ! நான் தான் முன்னமே “வருத்தம்” கேட்டு விட்டேனே..முன் ஜாமீன் மாதிரி :-)))//என்ன கிரி, இன்னுமா புரியலை? நீங்க தெரிவித்த வருத்தத்தை தான் நாங்கள் மன்னிப்பு என்று போட்டு உள்ளோம்(எல்லாம் ஒரு பரபரப்புக்காகத்தான்)

  4. //மோகன் Mohan said…
    என்ன கிரி, இன்னுமா புரியலை? நீங்க தெரிவித்த வருத்தத்தை தான் நாங்கள் மன்னிப்பு என்று போட்டு உள்ளோம்(எல்லாம் ஒரு பரபரப்புக்காகத்தான்)//

    ஹி ஹி ஹி நாங்க விகடன் மாதிரி, புரிஞ்சாலும் புரியாத மாதிரி சொல்லுவோம் ஒரு பரபரப்புக்காக :-))))))))))))))

  5. //Vidhya said…
    கிரி பயங்கர கோவத்துல இருக்கீங்க போல ஜூ வி மேல :-)//

    :-))) வித்யா பயங்கர கோவம் என்பது சாதாரண வார்த்தை. சரி! எங்க ரொம்ப நாளா ஆளை காணோம்.

    ==========================================================

    //முரளிகண்ணன் said…
    சூப்பர்//

    நன்றி முரளிகண்ணன் உங்கள் வருகைக்கும் சேர்த்து 🙂

  6. //Mahesh said…
    நல்லா கேட்டிங்க கிரி…. //

    நன்றி மகேஷ்

    //வெல்டன்னானாம் வெள்ளக்காரன் …//

    இது என்னங்க புதுசா இருக்கு! நேரம் கிடைக்கும் போது இதக்கு அப்படியே விளக்கம் சொல்லுங்க ..சொல்றதுக்கு நல்லா இருக்கு :-))

    //பத்திரிக்கை தர்மம்னா , தர்மத்துக்கு யார்ப் பத்தி வேணாலும், எத வேணாலும் எழுதறது… அப்பிடி தர்மத்துக்கு எழுதினதை மக்களை காசு குடுத்து வாங்கி படிக்க சொல்றது…//

    ஹா ஹா ஹா பாருங்க இதுக்கு தான் நான் அவங்களையே கேட்டுட்டேன், நீங்களே தெளிவா இதுக்கு அர்த்தம் சொல்லுகன்னு..அப்புறம் நாம குழம்ப தேவையில்லை பாருங்க 🙂

    உங்கள் வருகைக்கு நன்றி மகேஷ் பதிவர் சந்திப்புக்கு வரமுடியாதுன்னு சொல்லி சோகமாக்கிட்டீங்க 🙁 அடுத்த முறை கண்டிப்பா வர முயற்சி செய்யுங்க

  7. //முரளிகண்ணன் said…
    நர்சிம் ரித்தீஷ் மாதிரி இருக்கிறார் கண்ணாடி அணிந்தால் என பதிவர் சந்திப்பில் பலர் கூறினர். நீங்கள் !!!!!!!!!!!//

    ஹா ஹா அப்படியா! ஒருவேளை நேரில் பார்த்தால் அப்படி தெரியுமோ என்னவோ. இதற்காக நரசிம் கிட்ட “வருத்தம்” தெரிவித்து கொள்கிறேன் :-))

  8. ஜு.வி. Follow up : கிரி அடித்த பல்டிவிகடனிடம் மன்னிப்பு கேட்டார் கிரி!!!;-)

  9. //யோசிப்பவர் said…
    ஜு.வி. Follow up : கிரி அடித்த பல்டி
    விகடனிடம் மன்னிப்பு கேட்டார் கிரி!!!
    ;-)//

    ஹி ஹி ஹி. வாங்க யோசிப்பவர் நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க, உங்கள் வருகைக்கு நன்றி.

    ==============================================================

    //Vidhya said…
    அதிக வேலைப்பளு 🙂 ஹிஹிஹி//

    என்னது வேலைப்பளுவா அவ்வ்வ்வ்வ் வித்யா நிஜமாத்தான் சொல்றியா!

  10. /வெண்தாடிதாசன் said…
    அய்யோ பாவம்.//

    அடடா! வெண்தாடிதாசன் எனக்காக எவ்வளோ பரிதாபடுறாறு!!!!! நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லவரு

    //இன்னும் காண்டு அடங்கவில்லையா? //

    உங்களுக்கு இன்னும் வயித்தெரிச்சல் தீரவில்லையா?

    //கவல படாதீங்கப்பு//

    அப்படியே! நீங்களும் … 🙂

    //உங்க தலீவர் கட்சி ஆரம்பித்ததும் விகடன் கவர் ஸ்டோரி போடும்//

    நீங்க ஏன் அது வரை எல்லாம் போறீங்க. அது தான் புத்தகம் விற்கலைனா ரஜினி தும்முனா கூட அதையும் கவர் ஸ்டோரியா போட்டு காசு பார்க்கறாங்களே! இனிமே பாருங்க கொஞ்சம் வெட்கம் இல்லாம ரோபோ பற்றி வாராவாரம் இவங்களே பட தாயாரிப்பாளர் மாதிரி பேசிட்டு இருப்பாங்க.

  11. //சரவணகுமரன் said…
    அப்படி கேளுங்க கிரி, கேள்வியை…//

    வாங்க சரவணகுமரன். இவங்க கிட்ட கேள்விய கேட்பது செவிடன் காதுல சங்கூதுன மாதிரி தான். எதோ என் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறேன்.

  12. //கார்க்கி said…
    கிரி, கலக்கறீங்க..//

    நன்றி கார்க்கி

    //கார்க்கி said…
    இதுல ஏதோ ஒரு உள் குத்து இருக்கிற மாதிரி தெரியுது..//

    நீங்க என்னங்க விகடன் மாதிரி பேசுறீங்க…ஒரு குத்தும் இல்லை, உண்மையாகவே தான் கூறினேன்..நீங்க சொன்னா இதற்க்கு “வருத்தம்” தெரிவித்துக்கொள்கிறேன் :-))))))

    உங்கள் வருகைக்கு நன்றி கார்க்கி

  13. //வெண்தாடிதாசன் said…
    எனக்கு வயத்தெரிச்சல் இல்லீங்கோ. உங்கள் மாதிரி விசிலடிச்சான் கேசுங்களுக்கு தான் அது வரும்//

    அப்படியா! புது மாதிரியா இருக்கு 🙂 நான் கூட இது எல்லோருக்கும் வரும் என்று நினைத்து இருந்தேன். பெரிய ஆளா இருக்கீங்க. சும்மாவா சொன்னாங்க நீங்கெல்லாம் விசலடிக்காத குஞ்சுன்னு :))

    //தலீவரு பேரையோ, படத்தையோ விகடன் குழுமம் use பண்ண கூடாது. அப்படி செய்தால் வழக்கு போடுவேன் என்று லதாஜி அவர்களை வாய்ஸ் உட சொல்லுங்களேன் (பாபா படம் எடுத்த போது விட்ட மாதிரி).//

    அவ்வ்வ்வ்வ்வ் முடியல..வெண்தாடி தாசன் என்னை விட்டுடுங்க ஸ்ஸ்ஸு எனக்கு இப்பவே கண்ணை கட்டுது. லதாவ சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால்!!! வெண்தாடி தாசன் சொன்னாருன்னு கூறி, சீக்கிரமா வழக்கு போடுங்கன்னு சொல்லிடுறேன் போதுமா!

  14. //கார்க்கி said…
    சொல்றத எல்லாம் சொல்லிட்டு வருத்தம் சொல்ற நீங்க விகடன் மாதிரி பேசறீங்களா? இல்ல நான் பேசறேனா? வாங்க கோவியானந்தா, மண்ணிச்சுக்கோங்க கோவியாரையே போய் கேட்போம்//

    ஹா ஹா ஹா ஹா கோவி கண்ணன் ஆத்திகம் நாத்திகம் பதிவுல ரொம்ப பிசி

  15. //நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க, உங்கள் வருகைக்கு நன்றி//கிரி,நீண்ட நாட்களுக்கு பிறகெல்லாம் இல்லை. அவ்வப்பொழுது உங்கள் பதிவை(கிட்டத்தட்ட ரெகுரலரா!!) படிச்சுகிட்டுதான் இருக்கேன். பின்னூட்டம் போட கொஞ்சம் சோம்பேறித்தனம். அவ்வளவுதான்;-)

  16. உங்களோட கப்சா செய்திகளால வழக்கு போடாதாவங்க அல்லது போட முடியாதவங்க எத்தனை பேர் மனம் புண்பட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்ல பாவம்.நெத்தி அடி

  17. //யோசிப்பவர் said…
    கிரி,
    நீண்ட நாட்களுக்கு பிறகெல்லாம் இல்லை. அவ்வப்பொழுது உங்கள் பதிவை(கிட்டத்தட்ட ரெகுரலரா!!) படிச்சுகிட்டுதான் இருக்கேன். பின்னூட்டம் போட கொஞ்சம் சோம்பேறித்தனம். அவ்வளவுதான்;-)//

    அப்படியா! ரொம்ப நன்றிங்க யோசிப்பவர். பின்னூட்டம் எதுவும் வரவில்லை என்பதால் சரி நீங்க ரொம்ப நாள் கழித்து வருகிறீர்களோ என்று நினைத்தேன். உங்கள் தொடர் வருகைக்கு என் நன்றிகள்.

    ==============================================================

    //வெங்கட்ராமன் said…
    நெத்தி அடி//

    நன்றி வெங்கட்ராமன் உங்கள் வருகைக்கும் சேர்த்து 🙂

  18. நல்லா கேட்டிங்க கிரி…. வெல்டன்னானாம் வெள்ளக்காரன் …

    பத்திரிக்கை தர்மம்னா , தர்மத்துக்கு யார்ப் பத்தி வேணாலும், எத வேணாலும் எழுதறது… அப்பிடி தர்மத்துக்கு எழுதினதை மக்களை காசு குடுத்து வாங்கி படிக்க சொல்றது…

  19. நர்சிம் ரித்தீஷ் மாதிரி இருக்கிறார் கண்ணாடி அணிந்தால் என பதிவர் சந்திப்பில் பலர் கூறினர். நீங்கள் !!!!!!!!!!!

  20. அய்யோ பாவம்.

    இன்னும் காண்டு அடங்கவில்லையா? கவல படாதீங்கப்பு. உங்க தலீவர் கட்சி ஆரம்பித்ததும் விகடன் கவர் ஸ்டோரி போடும். அப்போ எல்லாம் சரியாகிவிடும்.

  21. //நர்சிம் ரித்தீஷ் மாதிரி இருக்கிறார் கண்ணாடி அணிந்தால் என பதிவர் சந்திப்பில் பலர் கூறினர். நீங்கள் !!!!!!!!!!!//

    அப்படியா? அப்போ இனிமேல் நீங்கதான் எங்க சின்னதல..

  22. //நன்றி நரசிம். உங்கள் ப்ரோபைல் ல இருக்கிற படம் நீங்களா! ஜூனியர் என் டி ஆர் மாதிரி கலக்கலா இருக்கீங்க /

    இதுல ஏதோ ஒரு உள் குத்து இருக்கிற மாதிரி தெரியுது..

  23. //ARUVAI BASKAR said…
    பத்திரிக்கையாவது தர்மமாவது ?
    அது எல்லாம் எப்பயோ மலை ஏறி விட்டது !
    இப்போ எல்லாமே வியாபாரம் தான் !//

    அனைவரும் பணத்திற்காக தான் செய்கிறார்கள் என்றாலும், இவர்கள் அடுத்தவர்களை தவறாக கூறியே பணம் சம்பாதிப்பது தான் கஷ்டமாக உள்ளது.

    //உங்களிடம் தான் கேட்க முடியும் எனென்றால் நீங்கள் ஒரு ஆள் தான் பிரபலம் ஆன பிறக்கும் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் பதில் கூறுகிறீர்கள் !//

    உங்கள் அன்பிற்கு நன்றி, பிரபலம் எதுவம் இல்லைங்க நான் வந்து 6 மாதம் தான் ஆகிறது. ஒருவேளை அதிக பின்னூட்டத்தால் அனைவருக்கும் பதில் கூற முடியாமல் இருக்கலாம். நான் பின்னூட்டத்திற்கு பதில் கூற காரணம் என்னையும் மதித்து ஒருவர் பின்னூட்டம் போடும் போது அதற்க்கு பதில் கூறுவது தானே மரியாதை.

    //தேன் கூடு என்ன ஆச்சு ?
    அட்ரஸ் மாறிவிட்டதா ? தயவு செய்து விளக்கவும் !//

    எனக்கும் தெரியலைங்க பாஸ்கர். நானும் நீண்ட நாட்களாக முயற்சித்து கொண்டு இருக்கிறேன், ஏதாவது தொழில்நுட்ப பிரச்சனையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். தளம் சரியாக இருந்தால் நான் உங்களுக்கு கண்டிப்பாக தகவல் தருகிறேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி பாஸ்கர்.

  24. எனக்கு வயத்தெரிச்சல் இல்லீங்கோ. உங்கள் மாதிரி விசிலடிச்சான் கேசுங்களுக்கு தான் அது வரும்.

    தலீவரு பேரையோ, படத்தையோ விகடன் குழுமம் use பண்ண கூடாது. அப்படி செய்தால் வழக்கு போடுவேன் என்று லதாஜி அவர்களை வாய்ஸ் உட சொல்லுங்களேன் (பாபா படம் எடுத்த போது விட்ட மாதிரி).

  25. இருப்பினும், நான் கேட்ட கேள்விகளால் விகடன் மற்றும் விகடனை சார்ந்தவர்களின் மனம் புண்பட்டு இருந்தால் அதற்காக நான் வருத்தம் (மன்னிப்பல்ல) தெரிவித்துக்கொள்கிறேன்.//பிரமாதமாக சொன்னீர்கள்;

  26. //
    நீங்க என்னங்க விகடன் மாதிரி பேசுறீங்க…ஒரு குத்தும் இல்லை, உண்மையாகவே தான் கூறினேன்..நீங்க சொன்னா இதற்க்கு “வருத்தம்” தெரிவித்துக்கொள்கிறேன் :-))))))//

    சொல்றத எல்லாம் சொல்லிட்டு வருத்தம் சொல்ற நீங்க விகடன் மாதிரி பேசறீங்களா? இல்ல நான் பேசறேனா? வாங்க கோவியானந்தா, மண்ணிச்சுக்கோங்க கோவியாரையே போய் கேட்போம்

  27. //ஆர்.கே.சதீஷ்குமார் said…
    பிரமாதமாக சொன்னீர்கள்//

    நன்றி சதீஷ் குமார்

    =============================================================

    //Tamil Short Film said…
    Tamilmanam.net kkum adikkadi ennamo aagudhe.. adhaik kavanicheengala?//

    அப்பப்ப தொங்கி விடுகிறது அதை கூறுகிறீர்களா?

    இருவரின் முதல் வருகைக்கும் நன்றி.

  28. //பத்திரிக்கை தர்மம்” “பத்திரிக்கை தர்மம்” னு எல்லோரும் சொல்றாங்களே//பத்திரிக்கையாவது தர்மமாவது ?
    அது எல்லாம் எப்பயோ மலை ஏறி விட்டது !
    இப்போ எல்லாமே வியாபாரம் தான் !

    கிரி இடுகைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி !
    உங்களிடம் தான் கேட்க முடியும் எனென்றால் நீங்கள் ஒரு ஆள் தான் பிரபலம் ஆன பிறக்கும் அனைவரின் பின்னூட்டங்களுக்கும் பதில் கூறுகிறீர்கள் !
    தேன் கூடு என்ன ஆச்சு ?
    அட்ரஸ் மாறிவிட்டதா ? தயவு செய்து விளக்கவும் !
    அன்புடன்,
    பாஸ்கர்

  29. //தேன் கூடு என்ன ஆச்சு ?
    அட்ரஸ் மாறிவிட்டதா ? தயவு செய்து விளக்கவும் !//

    Tamilmanam.net kkum adikkadi ennamo aagudhe.. adhaik kavanicheengala?

  30. //Vaanathin Keezhe… said…
    உண்மையில் நெத்தியடிதான் கிரி… அருமை. மிகுந்த நிறைவுடன் படித்த ஒரு பதிவு உங்கலுடையது… வாழ்த்துக்கள்!//

    நன்றி வானத்தின் கீழே.

  31. ***(1)*** ரஜினி அரசியலுக்கு வந்துவிட்டால் அரசியல் வாதி நாய்களுக்கு பயம்!(ஜெயிக்கிரொ இல்லையோ , ஓட்டுக்கள் கன்னாபின்னாவென்று சிதறும்) ***(2)*** ரஜினி அரசியலுக்கு வரவில்லையென்றால் பத்திரிகைகளுக்கு பயம்! (அவரின் படத்தை அட்டையில் போட்டு கல்லாகட்டிய ஈனத்தனமான பத்திரிகைகளுக்கும் அக்சாணி ‍ குமுதத்தில் வாந்தியெடுக்கும் நாய், சொரிகுமார், சூ.ராஜி இவங்களுக்கு அடுத்தவெளை சாப்பாடு கிடைக்காது)***(3)*** ரஜினி அரசியலுக்கு வரமாட்டாரா!? வந்தால் நாமும் நாலு காசு பார்க்கலாமெ என்று ரசிகன் போர்வையில் சில குள்ளனரிகள் ***(4)*** ரஜினி மாதிரி ஒருவர் வந்தாலாவது மாற்றம் வராதா என்று விரும்புவர்கள் சிலர்… எது எப்படியோ என் தனிப்பட்ட கருத்து, ‘ரஜினி மேஜிக்’கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை… சுதந்திரம் பெற்ற நாள் முதல் பல கற்பனையான காரணங்களை கூறி வயிறு வளர்த்த அரசியல் வாதிகள், பத்ரிகைகள் (ரஜினி பெயரைச்சொல்லி வியிறுவளர்த்தவர்கள்)இவர்களுக்கு மத்தியில் ஒரு மூன்று மணி நேரம் உலகவாழ் தமிழர்களை ஒன்று சேர்த்த பெருமை ரஜினிக்கு மட்டுமெ.. ‍ இப்படிக்கு ரஜினி ரசிகன்

  32. இப்பத்தான் ”குமுதத்தை” ஒரு பிடி பிடிச்சேன்… அதுக்குள்ள.. விகடன் வந்துட்டாய்ங்க.ஏண்டா நீங்க சோத்தைதான் திங்கறீங்களா? இல்ல வேறெதாச்சுமானு கேட்டா “no only புட்”னு பதில் சொல்வீங்க!.கிரி, நல்லா சொல்லியிருக்கீங்க! 🙂

  33. உண்மையில் நெத்தியடிதான் கிரி… அருமை. மிகுந்த நிறைவுடன் படித்த ஒரு பதிவு உங்கலுடையது… வாழ்த்துக்கள்!

  34. அடி பின்னி எடுத்துட்டீங்க தலைவா …இந்த வருத்தம் (!!) குறித்து நான் அளித்த கருத்தை விகடன் பிரசுரிக்கவில்லை. எப்படா இந்த subscription முடியும் என்று காத்திருக்கிறேன். ஷங்கர்

  35. //Raj said…
    ‘ரஜினி மேஜிக்’கை அரசியலுக்காக இழக்க தயாரில்லை… //

    உங்களுடைய இந்த கருத்தே என்னுடையதும். உங்கள் முதல் வருகைக்கு நன்றி ராஜ்

    ==================================================================

    //Vijay said…
    கிரி, நல்லா சொல்லியிருக்கீங்க! :)//

    நன்றி விஜய்

  36. //Shankar said…
    அடி பின்னி எடுத்துட்டீங்க தலைவா//

    நன்றி ஷங்கர்

    //இந்த வருத்தம் (!!) குறித்து நான் அளித்த கருத்தை விகடன் பிரசுரிக்கவில்லை. எப்படா இந்த subscription முடியும் என்று காத்திருக்கிறேன்.//

    அந்நியன் ஷங்கர் மாதிரி கொந்தளிச்சுட்டீங்களா :-))))) இதுல இவங்க நடுநிலை னு வேற கூறி நம்மை வெறுப்பேத்திட்டு இருக்காங்க.

    ==============================================================

    //jeyananth said…
    Really good on!!! that too signing off was too good…//

    இவங்களுக்கு தான் நக்கல் அடிக்க தெரியுமா நமக்கெல்லாம் தெரியாதா? அது தான் சுருக்குனு போட்டேன் 🙂

    //it was a real whip on Vikatan…may be kumudam & Sun ll ve its day soon…//

    இவங்கெல்லாம் என்றும் திருந்த மாட்டாங்க. அடுத்தவனை அநியாயமாக விமர்சித்தும் சம்பாதிக்கும் பணமும் ஒரு பணமா?

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி ஜெயந்த்

  37. “நீங்க நல்லாத்தான் “எழுதறீங்க” கிரி சார்!”கலக்கிட்டிங்க கிரி,

  38. Dear Giri,Good one from you. Got the link from our sundarji’s onlyrajini.com. I also want to know what they mean by “அரசியல் வட்டாரத்தில்”. Where is it?. Is it the corner tea shop?. So all the news comes from the concerned Vattaram9cinema vattaaram, vilayatu vattaram etc).

  39. கிரி அவர்களே, இது குறித்து நானே ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். நான் போட நினைத்ததை நீங்கள் போட்டுவிட்டீர்கள். ஆனால் இந்த சப்ஜெக்ட்டை உங்களைவிட பெட்டராக என்னால் எழுதமுடியாது. சும்மா பிச்சு உதறிட்டீங்க. எனது வலைதளத்தில் அமிதாப் குறித்த பதிவில் உங்களின் இந்த பதிவை நேரடியாக லிங்க் கொடுத்திருக்கிறேன். நன்றி.- சிம்பிள் சுந்தர்

  40. கிரி கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க, பின்னி பெடல் எடுக்கறிங்க,
    எப்படி இப்படிலாம் ,
    நான் ஏதும் தப்ப சொல்லிடலேயே ,
    அப்படி எதாவுது இருந்தா வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்……

  41. //இளவேனில் said…
    கிரி கிழி கிழின்னு கிழிச்சிட்டிங்க, பின்னி பெடல் எடுக்கறிங்க,//

    யாரு கிழிச்சாலும் கிழியும் னு இவங்களுக்கு தெரியாது போல :-). நன்றி சக்தி.

    //எப்படி இப்படிலாம்//

    ஹி ஹி தானா வருது 🙂

    //நான் ஏதும் தப்ப சொல்லிடலேயே ,
    அப்படி எதாவுது இருந்தா வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்//

    போட்டு தாக்குங்க 😉

  42. //pradeep said…
    Dear Giri,
    Good one from you.//

    நன்றி பிரதீப்

    //I also want to know what they mean by “அரசியல் வட்டாரத்தில்”. Where is it?. //

    விகடன் அலுவலகத்தில். ஐ மீன் அவங்களே ஒரு குத்து மதிப்பா போட்டுக்குவாங்கன்னு சொல்ல வந்தேன் 🙂

    //So all the news comes from the concerned Vattaram9cinema vattaaram, vilayatu vattaram etc//

    ஹி ஹி ஹி ஆர்யா நடித்த வட்டாரம் சினிமாவா!

    உங்கள் முதல் வருகைக்கு நன்றி பிரதீப்

  43. //Simple_Sundar said…
    கிரி அவர்களே, இது குறித்து நானே ஒரு பதிவு போடலாம் என்றிருந்தேன். நான் போட நினைத்ததை நீங்கள் போட்டுவிட்டீர்கள்.//

    நன்றி சுந்தர்.

    //ஆனால் இந்த சப்ஜெக்ட்டை உங்களைவிட பெட்டராக என்னால் எழுதமுடியாது. சும்மா பிச்சு உதறிட்டீங்க. //

    நாங்க எப்போதாவது நீங்க எப்போதுமே 🙂

    //எனது வலைதளத்தில் அமிதாப் குறித்த பதிவில் உங்களின் இந்த பதிவை நேரடியாக லிங்க் கொடுத்திருக்கிறேன்//

    தொடுப்பு கொடுத்தமைக்கு நன்றி, உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

  44. //Raj said…
    “நீங்க நல்லாத்தான் “எழுதறீங்க” கிரி சார்!”
    கலக்கிட்டிங்க கிரி,//

    நன்றி ராஜ்.

    ================================================================

    //A.MOHAN said…
    Dear Giri,nice post.Tks to Sunder for introduce ur blog.
    Pls keep ur great work.ALL THE BEST//

    நன்றி மோகன்.

    இருவரின் முதல் வருகைக்கும் என் நன்றிகள்.

  45. ஆமா நண்பரே…ரொம்ப கடுப்பா போச்சு இந்த விகடன் மற்றும் குமுதம் போன்ற பத்திரிகைகளின் தரம் இப்படி ஆச்சே…என் அப்பா சொல்வர் …திரு.எஸ் ஏ பி /திரு பார்த்தசாரதி அவர்கள் நேரத்தில் இருந்த குமுதம் எங்கே …இப்போ இப்படி…இதே போன்று தான் அமரர் வாசன் அவர்கள் காலத்து விகடன் எப்போ மஞ்சள் பத்திரிக்கை ஆகிவிட்டது….. நாம இந்த மாதிரி வெளி தேசத்தில் இருக்கிறோமே…சரி பத்திரிகைகள் இவ்வளவு கேவலமா ஆயிட்டுதே என்ற கோபம் தான்…துக்ளக் ஒன்றுதான் உருப்படி. பார்போம் …இந்த விகடன் கும்பல் என்னதான் பண்ணுகிறது என்று…..நன்றி ஷங்கர்

  46. Hi Giri,
    Ur thoughts about vikatan are really true.This is the first time i am visiting ur blog.Ur blog is really good and today alone i ve read about 10-15 of ur old blogs along with comments. I really like the way u reply for each and every comments

  47. குமுதத்தில போன வாரம் ரஜினி மேஜிக்னு ஒரு அந்தர் பல்டி அடிச்சானுங்க !! விகடன் இந்த வாரம் அடிக்காமையா போய்ட போறாங்க ?? அமெரிக்கா ல ஷூட்டிங் முடிஞ்சு இங்க வந்த உடனே திருட்டு தனமா ஸ்டில் எடுத்து போடுவானுங்க …..

  48. //Shankar said…
    துக்ளக் ஒன்றுதான் உருப்படி.//

    துக்ளக் மீதும் பல குற்றச்சாட்டுகள் உண்டு. தற்போது அனைத்து பத்திரிகைகளும் போட்டியால் தங்கள் தரத்தை குறைத்து கொண்டுள்ளன. இதற்க்கு மக்களும் தான் காரணம், மக்கள் ஆதரவு இல்லாமல் எந்த ஒரு பத்திரிக்கையும் வெற்றிகரமாக வர முடியாது. இதுவும் சினிமாவை போல தான் நல்ல படங்களுக்கு மட்டுமே ஆதரவு கொடுத்தால் என் கேவலமான படங்கள் வர போகிறது. மக்கள் எண்ணங்கள் மாறாத வரை இதை போல நடப்பதை தவிர்க்க முடியாது.

    உங்கள் வருகைக்கு நன்றி ஷங்கர், உங்களுக்கு மின்னஞ்சல் செய்துள்ளேன்.

  49. //Gokul said…
    Hi Giri,
    Ur thoughts about vikatan are really true.This is the first time i am visiting ur blog.Ur blog is really good and today alone i ve read about 10-15 of ur old blogs along with comments. //

    நன்றி கோகுல்

    //I really like the way u reply for each and every comments//

    முடிந்த வரை பொறுமையாகவே அனைவருக்கும் பதில் தருகிறேன், எதிர் மறையான கருத்துக்களுடன் வருபவர்களும் கோபத்துடன் சண்டை போட்டவர்களும் கூட பெரும்பாலான நேரங்களில் அமைதியாகவும் நண்பர்களாகவும் தான் செல்கிறார்கள். நான் யாரையும் எதிரியாக நினைத்து பதில் தருவது கிடையாது.

    ==================================================================

    //ees said…
    அமெரிக்கா ல ஷூட்டிங் முடிஞ்சு இங்க வந்த உடனே திருட்டு தனமா ஸ்டில் எடுத்து போடுவானுங்க//

    தெரிந்த விஷயம் தானே ஈஸ்! 🙂 பழிக்கவும் ரஜினி பிழைக்கவும் ரஜினி

    இருவரின் முதல் வருகைக்கும் நன்றி.

  50. இதுக்கெல்லாம் நாண்டுகிட்டு சாகாம பத்திரிகை தர்மம் பண்றாங்களாம் இவுக!ச்சே என்ன பொழைப்பு!

  51. //VSK said…
    இதுக்கெல்லாம் நாண்டுகிட்டு சாகாம பத்திரிகை தர்மம் பண்றாங்களாம் இவுக!
    ச்சே என்ன பொழைப்பு!//

    இப்பெல்லாம் யாரும் வெட்கப்படுவதில்லை. உங்கள் முதல் வருகைக்கு நன்றி VSK உங்க ப்ரோபைலில் உள்ள முருகன் படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். எந்த ஒரு அலங்காரமும் இல்லாத எளிமையான படம்.

    ==================================================================

    ஷங்கர் உங்கள் பதிவு ஐ டி க்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன், கிடைக்கவில்லை என்றால் உங்கள் ஐ டி யை எனக்கு பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்(வெளியிடமாட்டேன்)

  52. திரு. கிரி ஐயா அவர்களே,

    உங்கள் பதிவை பார்த்தேன் சரியான கேள்விகள் சரியான கோபம்.. ஆனால் உங்கள் வார்த்தைகள் வாதங்கள் மற்றும் கோபங்கள் அனைத்தும் ஜூனியர் விகடன் செய்த, செய்து கொண்டு இருக்கிற தவறுகளை சுட்டி காட்டும் நோக்கமாக இல்லை உங்களுக்கு பிடித்த நீங்கள் ரசிக்கிற யாரோ ஒரு மனிதர் செய்த தவறை அடையாளம் காட்டி விட்டார்கள் அந்த கோபத்தில் அவர்களை பழி வாங்க நீங்கள் சரியான நேரம் காத்து இருதார் போல தான் உள்ளது உங்கள் பதிப்பு. இப்டி சுயநல போக்கில் யோசிக்கும் உங்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் தெரிய வில்லை.

    கண்டிப்பாக நான் உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் அதனால் நான் மன்னிப்பு கேக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன்.

  53. //புதுவை தமிழன் said…
    திரு. கிரி ஐயா அவர்களே,//

    :-)) எனக்கு வயது குறைவு தாங்க.

    // உங்களுக்கு பிடித்த நீங்கள் ரசிக்கிற யாரோ ஒரு மனிதர் செய்த தவறை அடையாளம் காட்டி விட்டார்கள் அந்த கோபத்தில் அவர்களை பழி வாங்க நீங்கள் சரியான நேரம் காத்து இருதார் போல தான் உள்ளது உங்கள் பதிப்பு//

    சந்தேகமே வேண்டாம், யாரோ ஒருவர் அல்ல அது ரஜினி தான்.

    //இப்டி சுயநல போக்கில் யோசிக்கும் உங்களுக்கும் ஜூனியர் விகடனுக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் தெரிய வில்லை//

    சுயநலம் இல்லாத மனிதர் என்று எவரும் இல்லை. நான் மக்களுக்காக என்ற எண்ணத்தில் கேள்வி கேட்க இந்த வலைப்பதிவை தொடங்கவில்லை. என்னோட எண்ணங்களை கூறவே இந்த வலைப்பதிவை எழுதுகிறேன். என் மனதிற்கு எது சரி என்று படுகிறதோ அதையே எழுதுகிறேன். ஊரெல்லாம் ரஜினியை இவர்கள் என்னமோ ஒழுங்கு போல கேள்வி கேட்டார்கள் (இத்தனைக்கும் அவர் தவறாக எதுவும் கூறவில்லை), அவர்கள் அதே தவறை செய்யும் போது அவருடைய ரசிகனான நான் நியாயமான கேள்விகள் கேட்பது என்ன தவறு? இதன் பெயர் சுயநலம் என்றால் அந்த சுயலத்தை எனக்கு இந்த மாதிரி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் செய்வேன் அது நியாயமாக இருந்தால். ஒருத்தன் ஒருவனை குறை அல்லது அறிவுரை கூறுகிறான் என்றால் அந்த தவறை அவன் செய்யாமல் இருக்க வேண்டும், செய்ய கூடாது, அப்போது தான் அடுத்தவனை குறை கூற அல்லது அறிவுரை கூற தகுதியானவன் என்று நான் கூறவில்லை பெரியவர்கள் கூறி இருக்கிறார்கள்.

    //கண்டிப்பாக நான் உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்//

    நானும் உங்கள் மனதை புண்படுத்தவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    //அதனால் நான் மன்னிப்பு கேக்க வேண்டிய நிர்பந்தம் இருக்காது என்று நினைக்கிறேன்//

    அதனால் நானும் வருத்தம் கேட்க வேண்டியது இருக்காது என்று நம்புகிறேன்.

    உங்கள் வருகைக்கு நன்றி.

  54. //Ramanathan said…
    Right on target Giri. Keep it up.
    Cheers,
    Ram.//

    நன்றி ராம் உங்கள் முதல் வருகைக்கும் சேர்த்து.

    ===================================================================

    //Dear moderator, pl publish this with or without editing ( as I believe I am not using any vulgur words here)

    ************ தன்னையே விலை கொடுத்து அமைதியை நிலை நாட்டிய ரஜினி என் கண்களுக்கு ஒரு நல்ல MATURED AND GOOD ADMINISTRATOR ஆக தெரிகிறார்! அந்த அறிவாளிகளுக்கு தெரியாதா? கர்னாடகாவில் 14 தியேட்டர் வருமானம் பெருசா தமிழ்நாட்டில் 500 தியேட்டர் வருமானம் பெருசா?? இந்தனைக்கும் தயாரிப்பாளர் ரஜினி அல்ல. ரஜினி மீது இருந்த மரியாதை இப்பொழுது பல மடங்கு அதிகரித்துள்ளது. ‍இப்படிக்கு உண்மையான ரஜினி ரசிகன். என்னைப்பொறுத்தமட்டில் ரஜினி அரசியலுக்கும் வரத்தேவையில்லை, புதிதாக வேறெந்த செவையும் செய்யத்தெவயில்லை. சுதந்திரம் பெற்ற நாள் முதல் மதம், மொழி, ஜாதி, மற்றும் பல காரணங்களை கூறி ஜாதி ஒட்டுக்காகவும், வரித்தெரிச்சலுக்காகவும் அப்பாவி பொதுமக்களை பிரித்து , சுரண்டி வாழும் ஈனப்பிறவிகளை விட, அதிகபட்சமாக உலகவாழ் தமிழர்களையும் தமிழர்களல்லாதவர்களையும், இந்தியர்களையும், இந்தியரல்லாதவர்களையும், மனித பிறவிகளையும், ஈனப்பிறவிகளையும் ஒரு மூன்று மணி நேரமாவது இணைத்த ஒரு பாலம் ரஜினி! அது தான் ரஜினி மேஜிக்!! என் உழைப்பால் வந்த பணத்துக்கும் (movie ticket cost)என் மூன்று மணி நேரத்துக்கும் உழைக்கும் வர்கத்துக்கு ஒரு நல்ல குடும்ப பொழுது போக்கினை முப்பது வருடமாக‌தந்தமைக்கு திரு.ரஜினி அவர்களுக்கு நன்றி. //

    ராஜ் உங்கள் பின்னூட்டத்தை கொஞ்சம் எடிட் செய்துள்ளேன் மன்னிக்கவும். நாம் யாரையும் திட்ட தேவையில்லை அவர்களே தங்கள் செயல்களால் அவர்களை தாழ்த்தி கொள்வார்கள். நம்முடைய கருத்தை நாகரீகமான முறையில் பொறுமையாக கூறுவதே நமக்கு அழகு. புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.

  55. r.v.saravanan says

    ரஜினி மாதிரி, உங்களை போல அவதூறாக கூறுபவர்களை கண்டு கொள்ளாமல் இருக்காமல், நொங்கு எடுக்கிற ஜெ கலைஞர் போன்றவர்கள் தான் உங்களை போல "நடுநிலை" பத்திரிக்கைகளுக்கு சரியான ஆள் என்று "பொது மக்கள் வட்டாரத்துல" கிண்டலாக கூறுகிறார்களே அவர்களுக்கு ஒரு கவர் ஸ்டோரி(கதை!) போட்டு மன்னிப்பு கேட்க வைக்கலாமா?

    asathal giri

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!