சிங்கப்பூர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் (பாகம் 2)

39
Singapore

சிங்கை மக்கள் சாதுவானவர்கள், வேலை வாங்குவதில் கறார் பேர்வழிகள்.

நம்ம ஊரில் ஒரு சிலரை பொது இடங்களில் பார்த்தால் ரவுடி தோற்றத்துடன் கொஞ்சம் பயப்படும்படியான தோற்றத்தில் இருப்பார்கள், இங்கே அவ்வாறு யாரும் தெரிவதில்லை (நான் பார்த்த வரை). Image Credit

வேட்டி கட்டி இருந்தாலும் சரி புடவை கட்டி இருந்தாலும் சரி. தமிழ் கலாச்சாரம் இவர்களுக்கு புதிது அல்ல.

அடுத்தவர்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள்.

இவர்களை போலச் சாப்பாடு சாப்பிட்டு நான் யாரையும் பார்த்தது இல்லை. சொத்தைத் தின்றே தீர்த்து விடுபவர்கள் போல அந்த அளவுக்குச் சாப்பாட்டு பிரியர்கள்.

இங்கு விரைவு உணவகங்கள் அதிகம் (குறைந்த விலை, உணவு விடுதியை ஒப்பிடும் போது), எப்போதும் கூட்டமாகவே இருக்கும் அதுவும் விடுமுறை நாட்களில் இடமே கிடைக்காது

எங்கும் ஒழுங்கைக் கடைபிடிப்பார்கள், அவசர பட மாட்டார்கள்.

என்ன கூட்டம் இருந்தாலும் ரயிலிலிருந்து இறங்கிய பிறகு வெளியே செல்ல நகரும் படிக்கட்டில் பொறுமையாகவே செல்வார்கள். காலை மிதிக்கும் வேலை எல்லாம் கிடையாது.

எனக்கு மிக வியப்பளிக்கும் விஷயம் இது.

பொதுவாக பெண்கள் அலங்காரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், ரயில் பேருந்து என்று அனைத்து இடங்களிலும் டச் அப் நடக்கும் 🙂 .

இங்கே உலக அதிசயமாக எந்த ஒரு குழந்தையும் அழுவதையோ இல்லை அடம் பிடிப்பதையோ பார்க்கவே முடியாது, மிக மிகக் குறைவு.

அப்படி அழுகிறது அல்லது அடம் பிடிக்கிறது என்றால், அது கண்டிப்பாக நம்ம ஊர் குழந்தையாகத் தான் இருக்கும்

குழந்தை பெற்ற பிறகும் பெண்கள் உடல் பருமன் கூடுவதில்லை, அதற்கு அதிகளவில் சுகப்பிரசவம் ஆவதும் உடற்பயிற்சியும் ஒரு காரணமாக இருக்கலாம்

பள்ளி மாணவ மாணவிகள் பெரும்பாலும் மெல்லிய தேகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு தான் உடல் வலிமையுடன் இருக்கிறார்கள்

பொது இடங்களில் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது சர்வ சாதாரணம் (ம்ஹீம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்)

உடலை நன்றாக பேணுகிறார்கள். தொப்பையோடும் குண்டான உடம்போடும் இருப்பவர்கள் குறைவு ஆனால், இருக்கிறார்கள். இதை நம்மவர்கள் ஒட்டு மொத்த குத்தகைக்கு எடுத்து விட்டார்கள் 🙂 .

பற்களைப் படு கேவலமாக பராமரிக்கிறார்கள்.

ஆண்கள் போடும் கை வைக்காத பனியன் போட்டுக்கொண்டு நடமாடும் பெண்கள் அதிகம் (நம்பினால் நம்புங்க).

பொது இடங்களில் வரும் போது பெண்கள் பெரும்பாலும் டிராயர் அணிந்து இருப்பார்கள் (வேலைக்குப் போகாத நேரங்களில்)

இரவு 12 மணிக்குக் கூட ஜாக்கிங் ஓடிக் கொண்டு இருப்பார்கள்

பொதுவாக அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்

தலைக்கு எண்ணெய் தேய்ப்பதே இல்லை ஆண்களும் சரி பெண்களும் சரி.

ஒரு சிலர் விதிவிலக்கு [என் அம்மா எப்ப பார்த்தாலும், இவங்க தலைக்கு எண்ணெய் தேய்த்தா என்ன குறைந்தா போய்டுவாங்க இப்படி பரட்டை தலையோடு சுத்திட்டு இருக்காங்க என்று புலம்பிக் கொண்டே இருப்பார் 🙂 ].

தலைமுடியை தற்போதைய தலைமுறையினர் அலங்காரம் என்ற பெயரில் கொடுமை செய்து வைத்து இருப்பார்கள், செந்தில் ஜெய்ஹிந்த் படத்துல வருவாரே அது மாதிரி!

கவுண்டர் கூட டேய்! என்னடா தலை மேல கீரி புள்ளை படுத்துட்டு இருக்குதுன்னு கலாய்ப்பாரே அது மாதிரி எல்லாம் பார்த்தேன் ஆனால், இவர்களுக்கு அது அழகாகவே உள்ளது.

அப்புறம் கவுண்டர் ஒரு படத்துல செந்திலை டேய்! கலர் கம்பி தலையா! என்னடா இது தலையிலன்னு கேட்டதும், அதற்கு செந்தில் “பிளிச்சுன்னே!” னு கூறியதும் டேய்! நாயே! அதுக்கேன்டா மூஞ்சில எச்சி துப்புற!

மக்களே பாருங்க இந்த மாதிரி தான் நாட்டுல பல பேர் அலையறாங்க இங்கே கொஞ்சம் ப்ளீச் அங்கே கொஞ்சம் ப்ளீச்னு பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி பண்ணி வைத்து இருக்கானுக ன்னு கிண்டல் பண்ணுவார் அதே மாதிரி பல பேர் சுத்திட்டு இருக்காங்க.

நம்ம ஊர்ல பேருந்துல கிறுக்கி வைப்பார்களே ( ” * ” love you) அதே போல மாணவர்கள் இங்கேயும் செய்வது உண்டு ஆனால், ரொம்பக் குறைவு

இங்கு PSP என்ற வீடியோ கேம் ரொம்ப பிரபலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதைக் கையில் வைத்துக்கொண்டு இடியே விழுந்தாலும் கண்டுக்காமல் ரொம்ப ஆர்வமா! விளையாடிட்டு இருப்பாங்க.

தற்போது அனைவரும் ஸ்மார்ட் ஃபோன் க்கு மாறி விட்டார்கள்.

அனைவர் கையிலும் இதே இருக்கும். பெரியவர்கள் உட்பட.

அலுவலகம் செல்பவர்கள், மாணவர்கள் என்று அனைத்து தரப்பினரும் IPod அல்லது ஏதாவது ஒன்றில் பாட்டு கேட்டுக் கொண்டே செல்வார்கள்

இங்கே நம்ம ஊர் பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் ரொம்ப பெரிய சோகமான விஷயம்.. இங்கு இருக்கும் பொண்ணுக மற்றும் பசங்க யாரையும் சைட் அடிக்க மாட்டார்கள்.

நம்ம ஊர் பொண்ணுகளுக்கு தான் ரொம்ப பிரச்சனை, பின்ன.. பசங்க பார்க்கலைனா எத்தனை பேர் ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க பாவம் 🙂 .

பசங்களுக்கு எப்படியும் பொண்ணுக நம்மைப் பார்க்கமாட்டாங்கன்னு தெரியும் (திருட்டுத்தனமா பார்ப்பது இந்தக் கணக்கில் வராது).

அதுனால இதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜொள்ளு விடுவதே என் கடமை என்று வழக்கம் போல இருந்து விடுவார்கள்

ஒரே ஒரு முறை சிங்கப்பூர் பெண்ணை இங்கே உள்ள சிங்கப்பூர் பசங்க பார்த்து ஜொள்ளு விட்டதை பார்த்தேன். என்னை பற்றி கேட்க வேண்டாம் 🙂 .

இவர்கள் பேசும் ஆங்கிலத்தை ஆங்கிலம் கண்டு பிடித்தவர் தற்போது உயிருடன் இருந்து கேட்டு இருந்தால் தூக்கு போட்டுத் தொங்கி விடுவார்.

மிக வேகமாக பேசுவார்கள், அவர்கள் பேசுவது பாதி புரியாது. அதுவும் எண்கள் கூறும் போது சரியாக கேட்டுக் கொள்வது நலம்.

நான் வந்த புதியதில் என்னோட பிளாக் எண் 809 சேர்த்து கூறி கார் ஓட்டுனர் வேறு மாதிரி புரிந்து வேறு எங்கோ போய் விட்டார்.

அதன் பிறகு 8… 0… 9 என்று தனித்தனியாக தான் கூறுவேன் .

நாம் எவ்வளோ தான் தெளிவாகக் கூறினாலும் அவர்கள் பல முறை திரும்பக் கேட்பார்கள், நமக்கே சந்தேகம் வந்து விடும் நாம் சரியாக தான் கூறுகிறோமா என்று.

டாக்சி ஓட்டுனர்கள் சரியான சில்லறையை மீதி கொடுத்து விடுவார்கள், தலையைச் சொறிகிற வேலை எல்லாம் கிடையாது.

அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால் யாரும் ஏமாற்ற மாட்டார்கள், தைரியமாக செல்லலாம்.

முக்கிய நேரத்தில் (காலை மாலை அலுவலக நேரம் மற்றும் இரவு நேரம்) கட்டணங்கள் வேறுபடும்.

ஒரு முறை நான் இறங்கும் இடத்தில் ஒரு பேருந்து நின்றதால் கொஞ்சம் தள்ளி நிறுத்தினார் டாக்சி ஓட்டுனர்.

அந்த கொஞ்ச தூரத்திற்கும் சேர்த்து கொஞ்சம் cent பில்லில் வந்து விட்டது, நான் எவ்வளோ வற்புறுத்திக் கூறியும் அதை வாங்க மறுத்து அதிகமாக வந்ததை திருப்பிக் கொடுத்து விட்டார்.

தமிழர்களும் சிங்குகளும் நிறைய டாக்சி ஓட்டுகிறார்கள்.

இரு சக்கர வாகனங்கள் குறைவு நான்கு சக்கர வாகனங்களே அதிகம். இங்குச் சைக்கிள் ஓட்டுபவர்கள் அதிகம், சைக்கிளையே மடித்து பேருந்தில் கொண்டுவந்து விடுவார்கள் 🙂

நம்மவர்கள் லிட்டில் இந்தியா மற்றும் சிங்கப்பூர் சட்ட திட்டங்கள் பற்றிய பல சுவாரசியமான தகவல்களை வரும் பதிவுகளில் கூறுகிறேன்.

Updated on 20-02-2014

முதல் பாகம் மூன்றாம் பாகம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

39 COMMENTS

  1. //ஜோசப் பால்ராஜ் said…
    என்ன கிரி தவறான தகவல கொடுத்திட்டீங்க?
    இங்க பேசுறதுக்கு பேரு இங்கிலிஷ் இல்லங்க, சிங்கிலிஷ் தானே பேசுறாங்க. //

    ஹா ஹா ஹா ஹா மன்னிக்கவும் அடுத்த முறை மாற்றி கொள்கிறேன்

    //பேசி களைச்சு போயி நிப்பாட்டுணா, சாரி , கம் அகெய்ன் அப்டினு ரொம்ப கூலா சொல்லி கொலை வெறியேத்திட்டானுங்க.//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஜோசப் பால்ராஜ் செம காமெடி போங்க பயங்கரமா சிரித்து விட்டேன் ஹா ஹா ஹா

    //Sorry Bhaiya, i many many time waiting bhaiya , many many 51 coming one 21 no coming. 21 no good lah //

    ஹா ஹா முடியல

    செம காமெடி .உண்மையா சொல்ல போனா எனக்கும் பல அனுபவங்கள் இந்த மாதிரி உண்டு ஆனால் இந்த பதிவு தகவல்கள் பற்றிய பதிவு எனபதால் அது பற்றி கூறவில்லை :-)))))))))))

  2. //சிங்கப்பூர்தமிழர்கள் குடியேறியவர்கள் என்றால் ,சீங்கப்பூர் சீனர்களும் அதே நேரத்தில் இங்கே குடியேறியவர்கள் தான்//

    நான் தமிழ் பேசுகிறவர்கள் பற்றி கூறியதால் அவ்வாறு குறிப்பிட்டேன். அடுத்த முறை மாற்றி கொள்கிறேன் ஜோ நன்றி.

    நீண்ட நாட்களுக்கு பிறகு வந்து இருக்கீங்க அதற்கும் ஒரு நன்றி 🙂

  3. //முரளிகண்ணன் said…
    சிங்கை வரும் ஆவலை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

    😉 வாங்க வாங்க

    //சின்னப்பையன் எதிர்ப்பதிவையும் எதிர்பார்க்கிரேன்//

    🙂

    ==================================================================

    //பங்களா தேஷிகள் நமக்கு சூப்பர் இங்கிலீஷ் கத்து குடுப்பார்கள்… ஆங்கில உரையாடல் கண்டு பிடித்த Dr. ஜான்சன் இருந்தால்..நாண்டுகொண்டு செத்து விடுவார் இவர்களிடம்..//

    ஹா ஹா ஹா வெங்கி போட்டு தாக்குங்க..நம்மவர்கள் இந்த அளவுக்கு மோசம் இல்லை

  4. //Bleachingpowder said…
    பனியனை போட்டுக்கொண்டா இல்லை பனியனை மட்டும் போட்டுக்கொண்ட்டா. சீக்கிரம் சொல்லுங்க டிக்கட் புக் பண்ணனும்//

    ரொம்ப தான் நினைப்பு உங்களுக்கு :-))

    //பெரியோர்களே தாயிமார்களே, நம்ம கிரி சொல்றத மனசுல வச்சிகிட்டு கவுண்டமணி மாதிரி, “இந்த எந்த ஊர்…சிங்கப்பூர்ர்ர்ர்ர்” சொல்லு எந்த ஒரு முடிவுக்கும் வந்துராதிங்க.//

    ஹா ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க :-))

    //இனிமேல் தான் சிங்கபூர்ல இருக்கும் லிட்டில் இந்தியாவ பத்தி எழுத போறாரு, அது படிச்சுட்டு சொல்லுங்க அது சிங்கபூரா இல்ல ரங்கநாதன் தெருவானு :))//

    ஹா ஹா ஹா நீங்க சொல்வது உண்மை தான்

  5. //பொதுவாக அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்//

    இது பலர் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். பெங்களூரில் பெரும்பாலும் பெரிய கடைகள் காலை பதினொரு மணியளவில்தான் திறப்பார்கள்.

    பல தகவல்களை அடுத்தடுத்து “நறுக்”கென அளித்திருப்பது சுவாரஸ்யம்.

  6. //ராமலக்ஷ்மி said…
    இது பலர் சொல்லி கேள்விப் பட்டிருக்கிறேன். பெங்களூரில் பெரும்பாலும் பெரிய கடைகள் காலை பதினொரு மணியளவில்தான் திறப்பார்கள்//

    இங்கு வெகு காலையிலே ரயில் நிரம்பி வழியும். இங்கும் ஒரு சில கடைகள் தாமதமாக திறக்கிறார்கள். ஆனால் பரபரப்பாக இருப்பார்கள்.

    //பல தகவல்களை அடுத்தடுத்து “நறுக்”கென அளித்திருப்பது சுவாரஸ்யம்//

    நன்றி ராமலக்ஷ்மி

  7. //கார்க்கி said…
    நான் சிங்கையில் பணியாற்றிய போது//

    அப்படியா! நீங்கள் சிங்கையில் இருந்தீர்களா! அப்ப உங்களுக்கு இவை அனைத்தும் பழைய செய்திகள் தான் 🙂

    //வண்டியை நிறுத்தியவர் “small boy, this one talk what? என்றார். (no parking என்று எழுதியிருந்ததை எப்படி படிக்க வேண்டும் என்பதைதான் அப்படி கேட்டார்)//

    அவர் உங்களை ஸ்மால் பாய் னு சொல்லியவுடனே நீங்க உஷார் ஆகி இருக்க வேண்டும் :-)))) நல்லவேளை நீங்க அதற்க்கு விளக்கம் சொன்னதை கேட்டு அதை நீங்க போற இடம்னு நினைத்து வேற எங்காவது விடாம இருந்தாரே! அந்த அளவுக்கு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான் :-)))

  8. என்ன கிரி தவறான தகவல கொடுத்திட்டீங்க?
    இங்க பேசுறதுக்கு பேரு இங்கிலிஷ் இல்லங்க, சிங்கிலிஷ் தானே பேசுறாங்க.

    GOOD க்கு opposite NO GOOD.
    CAN lah, இது தானே இங்க அதிகமா உபயோகிக்கிற வார்த்தைங்க.
    நாம வேகமா பேசுணா இவிங்களுக்கு ஒண்ணும் புரியாது. நான் என் முதல் நிறுவனத்துல ஒரு மீட்டிங்ல எப்பவும் பேசுற வேகத்துல ஒரு 10 நிமிசம் ஒரு ப்ராஜெக்ட்ல வந்த பிரச்சனைய பத்தி பேசுணேன், எல்லாரும் அமைதியா கேட்டுக்கிட்டே இருந்தானுங்க. பேசி களைச்சு போயி நிப்பாட்டுணா, சாரி , கம் அகெய்ன் அப்டினு ரொம்ப கூலா சொல்லி கொலை வெறியேத்திட்டானுங்க. 11 வருசமா சிங்கப்பூர்ல இருக்க என் அண்ணண் இப்ப எல்லாம் இங்கிலிஷ் பேசுனா, நாம பக்கத்துல உக்காந்து பொருமையா அவரு சொல்றத எழுதிடலாம். அவ்ளோ மெதுவா நிறுத்தி நிதானமா பேசுவாரு. ஏன்டா அண்ணண் இப்டி பேசுறாருன்னு நான் முன்னாடியெல்லாம் யேசிச்சுருக்கேன். அந்த மீட்டிங்குல தான் புரிஞ்சுது அண்ணண் ஏன் இம்புட்டு வேகமா பேசுறாருண்ணு.

    இந்த பங்களாதேஷி பையாக்கள் பேசுறது இருக்கே அது ரொம்ப சூப்பரு. ஒரு நாளு என் அலுவலகத்துல இருந்து வீட்டுக்கு போறதுக்கு பஸ்காக நின்னுகிட்டு இருக்கேன், பக்கத்துல ஒரு பையா 21 ஆன் நெம்பர் பஸ்காக காத்திருக்காரு. ஆனா அந்த வழியில நிறையா 51 வருது, ஒரு 21 கூட வரல. பையா வுக்கு அப்ப ஒரு போன் வருது, போன்ல பையா இப்டித்தான் சொன்னாரு.
    Sorry Bhaiya, i many many time waiting bhaiya , many many 51 coming one 21 no coming. 21 no good lah .

    கொஞ்ச நேரம் யோசிச்சு அப்றம் தான் பையா என்ன சொன்னாருன்னே புரிஞ்சுது.

  9. //தமிழ் பேசுகிறவர்களும் டாக்சி ஓட்டுகிறார்கள் அதாவது இங்கேயே குடியேறியவர்கள் அல்லது முன்பு இருந்தே இங்கே இருக்கும் தலைமுறைகள் //

    இந்த ‘குடியேறியவர்கள்’-க்கு பதில் சிங்கப்பூரர்கள் என்று சொன்னால் போதுமே ? சிங்கப்பூர்தமிழர்கள் குடியேறியவர்கள் என்றால் ,சீங்கப்பூர் சீனர்களும் அதே நேரத்தில் இங்கே குடியேறியவர்கள் தான் . இப்போது அனைவரும் ‘சிங்கப்பூரர்கள்’ ..குடியேறியவர்கள் நீங்களும் நானும் தான் ..நாம் டாக்ஸி ஓட்ட முடியாது .

  10. \\ஆண்கள் போடும் கை வைக்காத பனியன் போட்டுக்கொண்டு நடமாடும் பெண்கள் அதிகம் (நம்பினால் நம்புங்க)

    பொது இடங்களில் வரும் போது பெண்கள் பெரும்பாலும் டிராயர் அணிந்து இருப்பார்கள் (வேலைக்கு போகாத நேரங்களில்\\

    சிங்கை வரும் ஆவலை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

    சின்னப்பையன் எதிர்ப்பதிவையும் எதிர்பார்க்கிரேன்

  11. பங்களா தேஷி இங்கிலீஷ் ன்னு ஒன்னு இருக்கு.. என்ன மாதிரி construction பிரிவுல வேலை பாத்து இருந்தீங்கன்னா இவனுங்க அடிக்கிற லூட்டி தெரியும்.. ஒருமுறை..ஒரு பங்களா விடம் ஒரு வேலை சம்பந்தப்பட்ட விசாரணை.. அவனுடைய சூப்பர்வைசர் ஒரு சீனன்.. நான் ப்ராஜெக்ட் தலை.. நடந்த சம்பவத்தை பங்களா விவரித்த விதம்..
    “Bhaiya !! Yesterday I Working…. No Checking….Foreman F#$#@%g !!”
    இது தான்.. இதன் உள்ளர்த்தம் புரிய அரைமணி ஆனது எனக்கும் அந்த சீன சூப்பர் வைசருக்கும்..பங்களா சொன்னதையே திரும்ப திரும்ப.. எனக்கு கடுப்பாகிவிட..பின்னர் ஹிந்தியில் சொல்லும்படி கூற..அவன் தடுமாறி சொல்லவே..கடைசியில்…சொன்னதின் அர்த்தம்…
    “நான் நேற்று வேலை செய்த பொது..செய்த வலையை சரியாக மறு சோதனை செய்யவில்லை.. எனவே என் சூப்பர் வைசர் என்னை திட்டினார்” என்பதே…

    பங்களா தேஷிகள் நமக்கு சூப்பர் இங்கிலீஷ் கத்து குடுப்பார்கள்… ஆங்கில உரையாடல் கண்டு பிடித்த Dr. ஜான்சன் இருந்தால்..நாண்டுகொண்டு செத்து விடுவார் இவர்களிடம்..

  12. இந்த ரெண்டு பதிவையும்.. அதற்க்கு வந்த பின்னூட்டங்களையும் பார்க்கும்போது.. ஒரு கும்பலே..சிங்கை வர்ற ஆசையை..முறுக்கி தோளிலே போட்டு திரியுரமாதிரி தெரியுது ? வாட் இஸ் த மேட்டர் ? எல்லோருக்கும் கிரி தான் கைடு ஆ?? மொட்டை தான்..

  13. \\ஆண்கள் போடும் கை வைக்காத பனியன் போட்டுக்கொண்டு நடமாடும் பெண்கள் அதிகம் (நம்பினால் நம்புங்க)//

    பனியனை போட்டுக்கொண்டா இல்லை பனியனை மட்டும் போட்டுக்கொண்ட்டா. சீக்கிரம் சொல்லுங்க டிக்கட் புக் பண்ணனும்

  14. பெரியோர்களே தாயிமார்களே, நம்ம கிரி சொல்றத மனசுல வச்சிகிட்டு கவுண்டமணி மாதிரி, “இந்த எந்த ஊர்…சிங்கப்பூர்ர்ர்ர்ர்” சொல்லு எந்த ஒரு முடிவுக்கும் வந்துராதிங்க. அண்ணண் இனிமேல் தான் சிங்கபூர்ல இருக்கும் லிட்டில் இந்தியாவ பத்தி எழுத போறாரு, அது படிச்சுட்டு சொல்லுங்க அது சிங்கபூரா இல்ல ரங்கநாதன் தெருவானு :))

  15. //மோகன் Mohan said…
    கிரி, காசு கொடுக்காம சிங்கப்பூர் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கு. மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். //

    நன்றி மோகன்.

    //உங்களுக்கு பல்லு இருக்குன்னு நினைக்கிறேன். ஹிஹி//

    நம்மளோடது பல்லு இருந்தும் பல்லு செட் இருக்கிற மாதிரி தான் :-))

    //அய்யே, பெங்களூருலயும் இப்படித்தான்//

    அப்படியா! அப்பாடா நீங்கள் வயிறு எரிந்து சாகுங்கள் ஹா ஹா ஹா

    //நீங்க ரொம்ப நல்லவரா?//

    ஹி ஹி ஹி ஆமாங்க ஓரளவுக்கு நல்லவன் தான்.
    உங்கள் வருகைக்கு நன்றின்னு சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டீங்க அதனால உங்கள் வருகைக்கு நன்றி… அப்படின்னு நான் சொல்ல மாட்டேன் ஹி ஹி ஹி ஹி

  16. //நான் ஆதவன் said…
    அவ்வ்வ்வ்வ்வ்….. துபாயில இருக்கிறவனோட வயித்தெறிச்சல கொட்டிக்காதீங்க! ஆமா சொல்லிப்புட்டேன்.//

    ஹா ஹா ஹா ஏங்க! துபாயில் பல கிளப் இருப்பதாக கேள்வி பட்டேன்..மற்றும் சில்பான்ஸ் இடங்களும் இருப்பதாக கூறினார்கள், மற்ற இடங்களை ஒப்பிடும் போது துபாயில் எல்லோரும் கட்டுப்பாடுகள் குறைவு என்று கூறினார்கள்.

    என்னமோ போங்க! உங்கள் முதல் வருகைக்கு நன்றி

  17. //கூடுதுறை said…
    என்ன கிரி தங்கை ஊரில் இல்லாதாதால் ரொம்பதான் ஏங்கறீங்க போலிருக்கு?//

    ஹா ஹா என் மனைவியை கூறுகிறார்களா? இருந்தாலும் சிரமம் தான்.. :-)))) அடுத்த வாரம் ஊருக்கு வருகிறேன்.

    //நல்லா போயிட்டிருக்கு பதிவு…//

    நன்றிங்க கூடுதுறை உங்கள் தொடர் வருகைக்கு

    //நம்மவர்களை நல்லாவே ஓட்டறிங்களே…//

    இதெல்லாம் ஒன்றுமே இல்லைங்க அடுத்த பதிவில் பாருங்க ஹா ஹா ஹா

  18. நான் சிங்கையில் பணியாற்றிய போது, ஒரு நாள் இரவு வெல்டிங் கற்று கொள்ள ஆசை வந்து அதை பார்த்து விட்டேன்.. கண்கள் எரிய ஆரம்பித்துவிட்டன.. இரவு 12 மணிக்கு ஒரு சைனீஸுடன் அலெக்ஸான்ட்ரா மருத்துவமனைக்கு சென்றேன். கண்ணில் ஏதோ விழுந்து விட்டதால் என்னால் கண்ணையும் திறக்க முடியவில்லை.. எரிச்சலுடன் சீக்க்ரம் போங்க அங்கிள் என்றேன்.. வண்டியை நிறுத்தியவர் “small boy, this one talk what? என்றார். (no parking என்று எழுதியிருந்ததை எப்படி படிக்க வேண்டும் என்பதைதான் அப்படி கேட்டார்)

  19. கிரி, காசு கொடுக்காம சிங்கப்பூர் சுத்திப் பார்த்த மாதிரி இருக்கு. மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்.

    //பொது இடங்களில் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது சர்வ சாதாரணம் (ம்ஹீம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்)//
    உங்களுக்கு பல்லு இருக்குன்னு நினைக்கிறேன். ஹிஹி

    //ஆண்கள் போடும் கை வைக்காத பனியன் போட்டுக்கொண்டு நடமாடும் பெண்கள் அதிகம் (நம்பினால் நம்புங்க)//
    அய்யே, பெங்களூருலயும் இப்படித்தான்

    // நான் எவ்வளோ வற்புறுத்தி கூறியும் அதை வாங்க மறுத்து அதிகமாக வந்ததை திருப்பி கொடுத்து விட்டார்//
    நீங்க ரொம்ப நல்லவரா?

    மோகன்

  20. //பொது இடங்களில் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது சர்வ சாதாரணம் (ம்ஹீம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்)//

    அவ்வ்வ்வ்வ்வ்….. துபாயில இருக்கிறவனோட வயித்தெறிச்சல கொட்டிக்காதீங்க! ஆமா சொல்லிப்புட்டேன்.

  21. //வடுவூர் குமார் said…
    எப்போதும் எனக்கு வரும் 31 வெள்ளிக்கு பதிலாக அன்று 21 வெள்ளி தான் வந்தது.ஒரு சச்சரவு கிடையாது பேச்சு கிடையாது,பில்லில் என்ன தொகையோ அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.//

    எனக்கு ஒரு சில நாட்கள் இடம் தெரியாமல் சுற்றி கொஞ்சம் பில் அதிகமானதை தவிர மற்றபடி எனக்கு வருத்தம் தரும் படி எந்த நிகழ்வும் இது வரை நடக்கவில்லை.

    //பெண்கள் பனியன்/குட்டி டிராயர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்….வேண்டாம் அது என் ஏரியா இல்லை,நீங்களே நடத்துங்க. :-))))//

    ஹி ஹி ஹி அதெல்லாம் முடியாது நீங்க கருத்து கூறி தான் ஆக வேண்டும் ..கருத்து கந்தசாமி ஆகுங்க :-))))

  22. //ஜோதிபாரதி said…
    கிரி நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து எழுதுங்கள்!//

    உங்களின் உர்ச்சகப்படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ஜோதிபாரதி. இதை போல வார்த்தைகளே என்னை இதை போல எழுத தூண்டுகிறது.

    //ஒரு வருடத்துக்குள் கிரகித்ததா இவ்வளவும்!//

    பொதுவா எல்லாவற்றையும் உற்று கவனிப்பேன், வித்யாசங்களை மனதினுள் குறித்து கொள்வேன்

    //குர்மித் சிங்கை விட்டுவிடாதீர்கள்!!!(அதான் நம்ம புவா சு காங், அவர்தான் இங்க குசும்பன், விகட கவி எல்லாம்)//

    அய்யயோ! எனக்கு அது பற்றி தெரியாதே..என்னை மன்னித்து விடுங்கள்.

  23. //ச்சின்னப் பையன் said…
    அதைத்தான் விவேக் ஏதோ ஒரு படத்துலே சொல்வாரு – நம்ம ஊர்லே கண்ட இடத்திலே பிஸ் அடிக்கலாம், கிஸ் அடிச்சாத்தான் தப்பு.. அதே வெளி நாட்டுலே உல்டா – அப்படின்னு….//

    ஹா ஹா ஹா சரியா சொன்னீங்க :-))))))

    ===============================================================

    //புதுகை.அப்துல்லா said…
    ஏண்ணே சிங்கையில உங்க ஊட்ல கண்ணாடி கிடையாதா? :)))))))//

    ஹா ஹா ஹா நான் எல்லாம் ரொம்ப அப்பாவி..

    //காலை வாரும் வேலை ???//

    அனுபவப்பட்டதில்லை

    //இங்க பாருடா வயிற்றெரிச்சல :)))//

    வயிற்றெரிச்சலா! நீங்க வேற வயிற்றுக்குள்ள ஒரு பாய்லரே எரியுது நீங்க வேற… நம்மை டென்ஷன் பண்ணுறதுக்குன்னு இப்படி பண்ணுறானுக அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    இதை விட கொடுமை 8 வது படிக்கிற வயதுள்ள இரு பள்ளி மாணவ மாணவி முத்தம் கொடுத்து எடுக்கவே இல்ல ..எனக்கு காதுல புகை போய் விட்டது ..சரி இதை எல்லாம் நினைவு படுத்தி மனுசனை கடுப்படிக்காதீங்க

  24. // (ம்ஹீம் பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுறான்)

    என்ன கிரி தங்கை ஊரில் இல்லாதாதால் ரொம்பதான் ஏங்கறீங்க போலிருக்கு?

    நல்லா போயிட்டிருக்கு பதிவு…

    நம்மவர்களை நல்லாவே ஓட்டறிங்களே…

  25. போன முறை ஊரில் இருந்து திரும்பிய நேரம்….விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி எடுத்தேன்.என்னுடைய பொருட்களை டிக்கியில் வைத்துவிட்டு டிரைவர் பக்கத்தில் உட்கார்ந்தேன்,பக்கத்தில் பார்த்தால் கட்டணம் தட்டச்சு செய்யும் இயந்திரத்தில் இருந்து காகிதம் நிற்காமல் வெளியில் த்ள்ளிக்கொண்டு இருக்கிறது,மீட்டரும் ஓடவில்லை.
    என்னடா இது! இன்ன்றைய பொழுது இவரோடவா? என்று நினைத்துக்கொண்டே போய் கொண்டிருந்தது.ஓட்டுனரிடம் ஏன் இப்படி போகிறது என்றேன்.நான் ஏதோ ஒரு பட்டனை சில முறை தவறுதலாக அழுத்திவிட்டேன்,அது பேப்பர் முடியும் வரை ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லி ஓட்டிக்கொண்டு இருந்தார்.சுமார் 8 கிமீ ஓட்டிய பிறகு பேப்பர் முடிந்து புது பேப்பரை போட்டார்,அதற்குப்பிறகு தான் மீட்டர் ஓட ஆரம்பித்தது.எப்போதும் எனக்கு வரும் 31 வெள்ளிக்கு பதிலாக அன்று 21 வெள்ளி தான் வந்தது.ஒரு சச்சரவு கிடையாது பேச்சு கிடையாது,பில்லில் என்ன தொகையோ அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

  26. பெண்கள் பனியன்/குட்டி டிராயர் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்….வேண்டாம் அது என் ஏரியா இல்லை,நீங்களே நடத்துங்க. :-))))

  27. கிரி நல்லா எழுதுறீங்க. தொடர்ந்து எழுதுங்கள்!
    ஒரு வருடத்துக்குள் கிரகித்ததா இவ்வளவும்!
    குர்மித் சிங்கை விட்டுவிடாதீர்கள்!!!(அதான் நம்ம புவா சு காங், அவர்தான் இங்க குசும்பன், விகட கவி எல்லாம்)

  28. ////முரளிகண்ணன் said…
    சிங்கை வரும் ஆவலை அதிகப்படுத்திவிட்டீர்கள்.

    😉 வாங்க வாங்க

    //சின்னப்பையன் எதிர்ப்பதிவையும் எதிர்பார்க்கிரேன்//

    :-)//

    முரளி -> ஏன் இந்த கொலவெறி?…. இந்த சீரிஸ் நல்லா போயிட்டிருக்கு…. அதனால் யாரையும் நிறுத்தச்சொல்லாமே நானே நிறுத்திக்கறேன்…

  29. அதைத்தான் விவேக் ஏதோ ஒரு படத்துலே சொல்வாரு – நம்ம ஊர்லே கண்ட இடத்திலே பிஸ் அடிக்கலாம், கிஸ் அடிச்சாத்தான் தப்பு.. அதே வெளி நாட்டுலே உல்டா – அப்படின்னு….

  30. //புதுகை.அப்துல்லா said…
    வந்தவுடன் வழக்கம் போல போன் பண்ணிடுங்க :)//

    கண்டிப்பாக அழைக்கிறேன் 🙂

  31. //ச்சின்னப் பையன் said…
    எனக்கும்தான் பல் இருக்கு. என்ன பிரயோசனம்…..:-(((//

    ஹா ஹா ஹா ஹா வெய் ப்ளட் சேம் ப்ளட் :-))))

    ==================================================================

    // நான் ஆதவன் said…
    க்ளப், பார்ன்னு அதெல்லாம் நிறைய இருக்கு..ஆனா ரோட்ல முத்தம் கொடுக்கிறது, சைட் அடிக்கிறது இதெல்லாம் நினைச்சுக் கூட பாக்க முடியாது//

    ஒ! அதை சொல்றீங்களா! ஹா ஹா ஹா ஆனா துபாயில் கட்டுப்பாடுகள் குறைவு என்று தான் கூறினார்கள் அதனாலே கேட்டேன்..நீங்க துபாய் பற்றி பதிவு போடுங்களேன் நாங்கெல்லாம் தெரிந்து கொள்வோம் அல்லவா? உங்கள் தொடர் வருகைக்கு நன்றி நான் ஆதவன்

  32. //ஹா ஹா ஹா ஏங்க! துபாயில் பல கிளப் இருப்பதாக கேள்வி பட்டேன்..மற்றும் சில்பான்ஸ் இடங்களும் இருப்பதாக கூறினார்கள், மற்ற இடங்களை ஒப்பிடும் போது துபாயில் எல்லோரும் கட்டுப்பாடுகள் குறைவு என்று கூறினார்கள்.

    என்னமோ போங்க! உங்கள் முதல் வருகைக்கு நன்றி//

    க்ளப், பார்ன்னு அதெல்லாம் நிறைய இருக்கு..ஆனா ரோட்ல முத்தம் கொடுக்கிறது, சைட் அடிக்கிறது இதெல்லாம் நினைச்சுக் கூட பாக்க முடியாது

  33. அவர் உங்களை ஸ்மால் பாய் னு சொல்லியவுடனே நீங்க உஷார் ஆகி இருக்க வேண்டும் :-)))) //

    அட நிஜாமாவே அப்போ நான் ஸ்மால் பாய் தாங்க..(இப்போ மட்டுமென்ன ஜஸ்ட் 25)

  34. //கார்க்கி said…
    அட நிஜாமாவே அப்போ நான் ஸ்மால் பாய் தாங்க..(இப்போ மட்டுமென்ன ஜஸ்ட் 25)//

    ரொம்ப சின்ன வயசுலேயே வந்துட்டு போய்ட்டீங்க போல 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here