நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது!

3
நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது!

சிலர் எப்போதுமே “பிரச்னை பிரச்சனை” என்று புலம்பலாக இருக்கும். அவர்களிடம் தெரியாமல், “வாழ்க்கை எப்படிப் போகுதுங்க?” ன்னு கேட்டுட்டீங்க.. தொலைந்தீங்க.

அதை ஏன் கேட்குறீங்க?” என்று ஆரம்பித்து நம்ம காதுல ரத்தம் பார்க்காம விட மாட்டாங்க. Image Credit

பிரச்சனையில்லாத மனிதர் என்று உலகில் யாருமே இல்லை, அதற்காக அதையே நினைத்துப் புலம்பிக்கொண்டு இருந்தால், பிரச்சனை சரியாகி விடுமா?!

பிரச்சனைகளுக்கு தீர்வு

உண்மையில் நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நம்மிடமே தீர்வு இருக்கும்.

ஆனால், அதற்கான முயற்சிகளை எடுக்காமல் “ஐயோ! ஒரே பிரச்சனையா இருக்கே.. என்ன பண்ணுறதுன்னு தெரியலையே! நமக்கு மட்டும் இப்படி நடக்குதே!” என்று ஒப்பாரி வைத்து, வருத்தப்பட்டு எப்பவும் ஒரு கடுப்புடனே இருப்பார்கள்.

முதலில் பிரச்சனை என்னவென்று ஆராயணும், அதைச் சரி செய்ய என்ன முயற்சி எடுக்கணும் என்று யோசிக்கணும். இந்த இரண்டையும் செய்தாலே நீங்கள் விடுபட்டு விடலாம்.

சரி செய்வதற்கான முயற்சிகளை எடுக்காமலே, புலம்பிக் கொண்டு இருப்பதால், எந்தப்பயனும் இல்லை. வாழ்க்கை முழுவதும் இப்படியே தான் தொடரும்.

இது போல உள்ளவர்களின் பிரச்சனையே, பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதும், அதைச் செயல்படுத்த ஆர்வம் இல்லாமல் இருப்பதுமே காரணம்.

எடுத்துக்காட்டுக்கு, காலையில் அலுவலகம் செல்லும் போது கிளம்புகிற நேரத்தில் அவசரடியாக உள்ளதா, வீட்டில் உள்ளவர்களுடன் கோபித்துக் கொள்கிறீர்களா?

இதற்கு என்ன தீர்வு?

காலையில் 15 நிமிடங்கள் முன்னதாக எழுந்து தயார் ஆவது தான், அதைச் செய்யாமல் கிளம்பும் போது சண்டைபோட்டுக்கொண்டு இருந்தால் என்ன நடக்கும்?

நீங்கள் மாறுகிறவரை இதே தான் தொடரும்.

மேற்கூறியது உங்களுக்கு எளிதாகப் புரிந்து கொள்ளக் கூறப்பட்ட எடுத்துக்காட்டு, பிரச்சனையின் தீவிரத்துக்கு ஏற்ப உங்களுடைய நடவடிக்கைகளும் இது போல இருந்தால், பிரச்சனைகள் என்று எதுவுமே தோன்றாது!

உங்களுக்கே சந்தேகம் வந்துடும், “என்னது! நமக்குப் பிரச்சனையே எதுவுமே இல்லையா!” என்று! 🙂 . மகிழ்ச்சி வேற எங்கேயும் இல்லை, நம்மிடம் தான் உள்ளது.

எதையுமே நான் பிரச்சனையாகக் கருதுவதில்லை. கருதினால், அதைச் சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பது தான் என்னுடைய அடுத்த யோசனையாக இருக்கும்.

மனைவி கேட்பாங்க.. “ஏங்க! உங்களுக்கு எது தாங்க பிரச்னை?” என்று 🙂 .

எனவே, நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது!

தொடர்புடைய கட்டுரைகள்

நம் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?

நடுத்தர வகுப்பு மக்கள் என்பவர்கள் யார்?

“அந்த ஐந்து விழாக்கள்” ரஜினி எழுதிய தொடர்! (1996)

எதிர்மறை எண்ணங்களால் ஏற்படும் இழப்புகள்

கொசுறு

நான் கூறியது 100% உண்மை. என்னுடைய வாழ்வில் செயல்படுத்தி அதனால், பலனைத் தொடர்ச்சியாகப் பெற்று வருகிறேன். நீங்களும் இது போல முயன்றால், பிரச்சனைகள் இல்லாத நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவீர்கள்.

80% பிரச்சனைகளுக்கான தீர்வுகள் நம்மிடமே உள்ளது. நம்புங்கள்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. அருமையான பதிவு கிரி!
    //நீங்கள் மாறாமல் பிரச்சனைகள் தீராது//
    இது தனிமனிதன், சமுதாயம், இனம்,அவர்கள் பின்பற்றும் மதம்,நாடு ,இவற்றுக்கும் பொருந்தும்.

  2. கிரி, என்னை பொறுத்தவரை பொதுவாக பிரச்சனைகள் ஏற்படும் போது ஓடி ஒளியாமல் அதை நேரெதிர் கொள்வது ஒரு சுவாரசியமான அனுபவம்!!! ஆனால் நாம் ஒவ்வொரு முறை எதிர்கொள்ளும் பிரச்னைகளின் அளவுகோல் வேறு மாதிரி இருக்கும்.. வீட்டில் ஒரு விதமாகவும், அலுவலகத்தில் ஒருவிதமாகவும், சமுகத்தில் ஒரு மாதிரியும் இருக்கும்.. உண்மையில் இவைகளை கையாளுவது ஒரு வித கலை!!!

    பழைய உங்களின் பதிவுகளை படிக்க நேரிட்டால் நீங்கள் பல பதிவுகளில் விளக்கம் கொடுத்து இருப்பது உங்களின் அனுபவத்தையும், முதிர்ச்சியையும் காட்டுகிறது.. தேவையில்லாத விவாதங்களுக்கு “போடா “என்று விட்டு விடலாம்.. அதுபோல சிக்கலான பதிவுகளில் நீங்கள் கையாண்ட விதம் என்னை கவர்ந்து இருந்தது!!!

    உங்கள் அளவுக்கு நான் பொறுமைசாலி இல்லை, பிடித்தால் பேசுவேன், பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்பேன், கம்பு சுத்தும் பழக்கம் இல்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. @வேகநரி நன்றி 🙂

    @யாசின் எனக்கு தமிழ், அனுபவம், ரஜினி இந்த மூன்றும் தான் பொறுமையையும் நாகரீகமாக பதில் அளிப்பதையும் கற்றுக்கொடுத்தது.

    என்னுடைய மனசாட்சிக்கு விரோதமாக என்னால் எழுத முடியாது எனவே, எந்த கேள்வி கேட்டாலும் என்னால் பதில் அளிக்க முடியும், தவறு என்றால் ஒப்புக்கொள்ள தைரியம் உள்ளது.

    வேற என்ன வேண்டும் 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here