DTH Safe Custody வசதி பற்றித் தெரியுமா?!

3
DTH Safe Custody

நாம் விடுமுறைக்கு ஊருக்குச் செல்வதாக இருந்தால், DTH க்குக் கட்டிய முன் பணம் யாருமே தொலைக்காட்சி பார்க்காமல் தினமும் கழிந்து கொண்டு வரும்.

கோடை விடுமுறைக்குச் சிலர் ஊருக்குச் செல்ல நேரலாம், அந்த நேரத்தில் பணத்தையும் கட்டி அதைப் பயன் படுத்தவும் முடியாமல் வீணாக்க நேரும்.

இந்த நேரங்களில் பயனளிப்பது தான் Safe Custody. Image Credit

DTH Safe Custody

Safe Custody என்பது நம்முடைய DTH கணக்கைக் கை விடாமல் தற்காலிகமாக முடக்குவதாகும்.

எடுத்துக்காட்டுக்கு, உங்கள் வீட்டில் அனைவரும் கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்கிறார்கள் என்றால், நீங்களும் தொலைக்காட்சி பார்ப்பதில்லையென்றால், இதற்காக நீங்கள் முன்பணமாகக் கட்டிய பணத்தை வீணாக்க வேண்டியதில்லை.

ஏர்டெல்லில் Safe Custody வசதி மூலம், உங்கள் DTH கணக்கைத் தற்காலிகமாக 30, 60, 90 நாட்களுக்கு முடக்கலாம். இதற்காக 30 நாட்களுக்கு ₹30  கட்டணமும் மற்ற நாட்களுக்கு அதே நாட்கள் அளவு கட்டணமும் வசூலிக்கப்படும்.

உங்களுடைய முன்பண இருப்பில் ₹500 இருப்பதாக வைத்துக் கொள்வோம்.

30 நாட்களுக்கு உங்கள் கணக்கைத் தற்காலிகமாக முடக்குவதாக வைத்துக்கொண்டால், உங்களுக்கு ₹30 மட்டுமே செலவு.

ஒருவேளை இதைச் செய்யவில்லை என்றால், தோராயமாகத் தினமும் ₹8 பிடிக்கிறார்கள் என்றால் 30 X 8 = ₹240 செலவாகும், Safe Custody என்றால் ₹30 உடன் முடிந்து விடும்.

இந்தச் சேவை டாடா ஸ்கை நிறுவனத்திலும் உள்ளது, கட்டணங்கள் வேறாக இருக்கலாம்.

திரும்ப எப்படி பழைய நிலைக்குக் கொண்டு வருவது?

உங்களுக்கு இடையிலேயே விடுமுறை முடிந்து விட்டாலும் கவலையில்லை, வாடிக்கையாளர் சேவை மையத்தை அழைத்துக் கூறினால், அவர்கள் Safe Custody Deactivate செய்து விடுவார்கள்.

வழக்கம் போல நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காண முடியும்.

ஏர்டெல்லில் இச்சேவையை ஒரு முறை செயல்படுத்தினால், திரும்ப இச்சேவையைச் செயல்படுத்த 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இன்னொரு வகையும் உண்டு.

நீங்கள் நீண்ட விடுமுறைக்குச் செல்லும் நாள் தெரிந்தால், அதற்குத் தகுந்த மாதிரி முன்கட்டணத்தில் பணம் செலுத்துங்கள். விடுமுறை காலம் வந்த பிறகு பணம் செலுத்தாமல் (Renew) விட்டு விடுங்கள், அவ்வளவு தான்.

வரும் வெள்ளிக் கிழமை (12 ஏப்ரல் 2019) பள்ளிகளுக்குக் கடைசி நாள். எனவே, கோடை விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு இச்சேவை பயனளிக்கலாம் 🙂 .

கொசுறு

உங்களுடைய Mobile Post Paid இணைப்பைக் கூட, இதே போல Safe Custody யில் வைக்கலாம். வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு இச்சேவை பயனளிக்கும்.

நான் வெளிநாட்டில் இருந்த போது என்னுடைய எண்ணை Safe Custody யில் வைத்து இருந்தேன். ஊருக்கு வரும் போது Safe Custody Deactivate செய்து விடுவேன்.

தொடர்புடைய கட்டுரை

DTH க்கு டாடா காட்டும் பயனாளர்கள்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

3 COMMENTS

  1. முற்றிலும் புதிய ஒரு தகவலாக இருக்கிறது.. முன்பே இருக்கிறது என்றாலும் நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை!!! உண்மையில் ஆச்சரியமாக இருக்கிறது.. போட்டி நிறுவனங்கள் பல இருப்பதால், ஒவ்வொரு நிறுவனமும் தன்னை நிலை நிறுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.. இன்று தான் செய்தியில் படித்தேன் BSNL நிறுவனம் பல ஆயிரம் கோடி நட்டத்தில் இயங்குகிறது என்று, செய்தி உண்மையா என்று தெரியவில்லை… இருப்பினும் வியப்பாக இருக்கிறது… பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. BSNL நட்டத்தில் தான் இயங்குகிறது அதற்கு காரணம் ஊழியர்களின் அலட்சியமும், அதிகாரிகளின் கவனக்குறைவுமே.

    இதோடு மத்திய அரசின் பாராமுகம்.

    • BSNL – லில் எனக்கு தெரிந்து 7 வருடத்துக்கு முன் இன்டர்நெட் broadband புது connection க்கு 1000 ரூபாய் லஞ்சம் கேட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here