மனுதர்ம சாஸ்திரம் | நீங்க நடத்துங்க ராசா!

33
மனுதர்ம சாஸ்திரம்

னுதர்ம சாஸ்திரம் நூலில் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டு இந்துக்களை விபச்சாரி மகன் என்று ராசா விமர்சித்தது சர்ச்சையானது. Image Credit

மனுதர்ம சாஸ்திரம்

இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், வழக்கங்கள், அறம், ஒழுக்க விதிமுறைகளைக் கூறும் நூலே மனுதர்ம சாஸ்திரம் ஆகும்.

மனுதர்ம சாஸ்திரம் நூல் 3000+ வருடங்களுக்கு முன்பு அப்போதைய சூழ்நிலையில் எழுதப்பட்டது. அதை யாரும் தற்போது பின்பற்றுவதுமில்லை, அதைப் பற்றிப் பேசுவதுமில்லை.

ஆனால், திராவிடர் கழகம், ராசா போன்ற திமுக பிரமுகர்கள், தொல்திருமாவளன் போன்றோர் தொடர்ந்து இதையே விமர்சித்துக்கொண்டுள்ளார்கள்.

யாருமே பின்பற்றாத ஒரு புத்தகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு இந்து மதத்தின் மீது காண்டு, அதற்கு எவரும் கண்டுகொள்ளாத புத்தகத்தை வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.

ராசா

திமுக ராசாக்கு ரத்த கொதிப்பு என்று நினைக்கிறேன். எப்ப பார்த்தாலும் சுடு தண்ணீரில் கையை விட்டது போலவே பேசும் போது அலறிட்டு இருப்பார்.

இப்படிக் கேவலமாகப் பேசி விட்டு அதைப் பெரியார் கூறினார், புத்தகத்துல இருந்தது என்று கூறுவது சரியா!

யார் வேண்டும் என்றாலும் எதை வேண்டும் என்றாலும் எழுதி வைக்கலாம். அதற்காக அதில் கூறப்பட்டதை வைத்து விமர்சிக்கலாமா?

இதே போல எவனோ எழுதினான் என்று YouTube திமுக ஆதரவாளன், சிவனைக் கேவலமாகப் பேசினான் ஆனால், அவன் மீது இந்த விடியா அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்துக்களைக் கேவலமாகப் பேசிய ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ராசா பேசியதை விமர்சித்தவர்களைச் சிறையில் தள்ளுகிறது திமுக அரசு.

இந்துக்களை எவன் என்ன பேசினாலும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காது.

பெரியார் கூறினாலே சரியா?!

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த போது, வெளியேறியவர்களை (திமுக) வேசி மகன்கள் என்று விடுதலையில் பெரியார் எழுதினார்.

மனுதர்ம சாஸ்திரத்தில் இருக்குனு பெரியார் சொன்ன மாதிரி, விடுதலையில் பெரியார் சொல்லிட்டாருன்னு, திமுகவினர் வேசி மகன்கள் என்று ராசா போல மேடையில் பேசினால் ராசா / திமுகவினர் ஏற்றுக்கொள்வார்களா?!

அதான் பெரியாரே சொல்லிட்டாரே! பிறகு என்ன சந்தேகம்?!

இதே ராசா திமுக தொண்டர்களை நாய் என்றார், தற்போது இந்துக்களை விபச்சாரி மகன்கள் என்கிறார்.

திமுக இந்துக்களுக்கு யார் என்ன கேவலப்படுத்தினாலும் சொரணை இல்லாமல் முட்டு கொடுப்பார்கள். மற்றவர்களும் அப்படியிருக்கத் தலையெழுத்தா?!

கேள்வி கேட்கத்தானே செய்வார்கள்!

மன்னிப்பு

நான் பேசியது தவறல்ல, மன்னிப்புக் கேட்கமாட்டேன்‘ என்று ராசா கூறியுள்ளார்.

சிங்கம் படத்துல சூர்யா, தன்னை இடம் மாற்றம் செய்யறேன்னு பிரகாஷ்ராஜ் சொன்னதும், ‘அது தாம்ல எனக்கு வேணும், பயந்துட்டீல!” என்று கூறுவார்.

அது போல ராசா மறந்து கூட மன்னிப்பு கேட்டு விடக் கூடாது. இதுபோலத் தொடர்ந்து இந்துக்களைக் கேவலமா பேசிட்டு இருக்கணும், அது தான் தேவை.

ஏனென்றால், பல இந்துக்கள் வெட்கம், மானம், சொரணையற்றவர்களாக உள்ளனர். இப்படிக் காறி துப்பினாலாவது கொஞ்சமாவது என்னனு பார்ப்பாங்க.

நீலகிரி உட்படச் சில மாவட்டங்களில் கடையடைப்பு நடந்ததே நம்ப முடியாத செயலா இருக்கு. இதுவரை கொண்டு வந்து விட்டதுக்கே ராசாக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

எனவே, மன்னிப்பு கேட்காமல், இன்னும் ஆவேசமா இதே போல் பேசித் திரியட்டும்.

தொல்திருமாவளன்

திருமாவை தூக்கத்திலிருந்து எழுப்பினால், எழும் போதே ‘சனாதனத்தை வேரறுப்போம்‘ன்னு தான் எழுந்திருப்பாருன்னு நினைக்கிறேன்.

எந்த மேடையில் பேசினாலும் சனாதனத்தை வேரறுப்போம்ன்னு இல்லாத ஒன்றை, யாரும் பின்பற்றாத ஒன்றை வைத்துப் பேசிட்டு இருப்பாரு.

ஆனால், இவர் கூட்டணி கட்சி திமுக அமைச்சர் இவருக்குப் பிளாஸ்டிக் நாற்காலி கொடுத்து அமர வைத்தால், மறுபேச்சு பேசாம அமைதியா உட்கார்ந்துப்பாரு.

தனது கட்சி தொண்டர்களை நிற்க வைத்தே பேசினால், கூட்டணியில் இதெல்லாம் சகஜம் கண்டுக்காதீங்க என்று தொண்டர்களுக்கு அறிவுரை வழங்குவார்.

உபில நடந்தா அடங்க மறுப்பாறு ஆனால், தமிழ்நாட்டில் பட்டியலின பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்டால், சகலமும் அடங்கி இருப்பாரு.

சமூகநீதி

மொத்த மானத்தையும் திமுக கிட்ட அடகு வைத்து அசிங்கப்பட்டால், தோழமை சுட்டுதல்னு சொல்ற திருமா, சமூகநீதி பற்றியெல்லாம் பேசலாமா?

சனாதனத்தை அறுக்கணும், நசுக்கணும்னு பேசிட்டுச் சிதம்பரம் கோவில்ல போய்ப் பூசை பண்ணுறது, வீட்டுல சனாதன வழக்கத்தில் காரியம் செய்ய வேண்டியது.

வெளியே வந்து சனாதனத்தை அறுத்துத் தள்ளிடுவோம்ன்னு பேச வேண்டியது.

தாழ்வுமனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே ராசா, திருமா போலப் பேசித் தங்களைத் திருப்தி செய்து கொள்வார்கள்.

இவருக்கெல்லாம் கொஞ்சமாவது சுயமரியாதை இருந்தால், தன்னைக் கிஞ்சித்தும் மதிக்காத திமுக தலைவர்களைக் கேள்வி கேட்டுட்டு அப்புறமா மனுதர்ம சாஸ்திரம் என்ற எவருமே கண்டுக்காத புத்தகத்தைப் பற்றித் தனியா பேசிட்டு இருக்கட்டும்.

எதிர்த்த டாஸ்மாக், நீட் ரத்து, எட்டு வழிச்சாலை எதிர்ப்பு எல்லாம் இப்ப ஏன் மாறிடுச்சுன்னு திமுகவை கேட்க வாய் வரவில்லை.

ஆனால், 3000 வருட பழைய புத்தகத்தை வைத்து ஆராரோ பாட்டு பாடிட்டு இருக்காரு அடங்கமறு, அத்துமீறு, திமிறியெழு திருமாவளவன்!

வீரமணி

வீரமணி ஊருக்கெல்லாம் புத்தி சொல்லுவாரு, எப்படி இருக்கணும்னு!

ஆனால், பெரியார் சொத்தை ஏன்யா அரசுடமை ஆக்காம வைத்து இருக்கே?ன்னு கேட்டால், சனாதனத்தை அறுக்கக் கிளம்பி விடுவார்.

பிராமணர்களைக் கேள்வி மேல் கேள்வி கேட்கும் வீரமணி, எங்கே தில்லு இருந்தா ஆதிக்கச் சாதியினரை கேள்வி கேட்கச் சொல்லுங்க பார்ப்போம்!

வாயிலேயே அடி விழும்னு தெரியும்.

பிராமணர்கள் என்ன சொன்னாலும் அமைதியாக இருப்பாங்க. அதனால் அவர்களை விமர்சிப்போம்னு வீரம் பேசுவாரு பெயரில் மட்டும் வீரத்தை வைத்துள்ள வீரமணி.

இந்து மதம்

இந்து மதம் என்பது வாழ்வியல் முறை.

அனைத்து மதங்களிலும், மத நூல்களிலும் பிற்போக்குக் கருத்துகள் இருப்பது போல இந்து மதத்திலும் உள்ளது ஆனால், காலமாற்றத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே உள்ளது.

முன்பு இருந்த மூட நம்பிக்கைகள், வழக்கங்கள் தற்போது பின்பற்றப்படுவதில்லை.

துவக்கத்திலிருந்து இதுவரை எவ்வளவோ மாற்றங்களை ஏற்று மெருகேறிக்கொண்டே உள்ளது. அப்படிப்பட்ட மதத்தில் எப்போதோ கூறியதை வைத்து வடை சுட்டுட்டு இருப்பது வெறுப்பு அரசியலன்றி வேறில்லை.

அரசியல் சாசனம்

சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மனுதர்ம சாஸ்திரம் நூலுக்குப் பல வெர்சன் உள்ளது. அவரவர் தங்களுக்குத் தகுந்த மாதிரி மொழி பெயர்ப்புச் செய்து அதை ஆதாரமாகக் காட்டிக்கொண்டுள்ளார்கள்.

எந்தப் பதிப்பாக இருந்தாலும், அதை வைத்துப் பேசிக்கொண்டு இருப்பது முட்டாள்தனம், அரசியல் மட்டுமே.

மனுதர்ம சாஸ்திரத்தை வைத்து இந்தியா நடைபெறவில்லை. அரசியல் சாசனம் என்ன கூறியுள்ளதோ அதன்படி தான் நடைபெற்று வருகிறது.

1950 இயற்றப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே கால மாற்றத்தில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

அன்று இருந்த சட்டங்கள் இன்று இல்லை. தண்டனை முறைகள் மாறியுள்ளது, குற்ற செயல்களுக்கு ஏற்பச் சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது.

நாகரீகம் நன்கு வளர்ந்த 1950 ம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்திலேயே இதுவரை ஏராளமான மாற்றங்களைச் செய்துள்ளார்கள்.

ஆனால், 3000+ வருடங்களுக்கு முன்பு எழுதிய புத்தகத்தைப் பற்றித் தற்போது பேசிக்கொண்டு இருப்பது இந்து வெறுப்பு அரசியலன்றி வேறில்லை.

தூக்கத்தில் இந்துக்கள்

அர்த்தமுள்ள இந்து மதம் நூலின் விமர்சனத்தில் கண்ணதாசன் எழுதியதில் பல பிற்போக்குக் கருத்துகள் உள்ளன ஆனால், அவர் அக்காலத்தில் நிலவிய சூழ்நிலைகளை வைத்து எழுதியது.

எனவே, அதைத் தற்போது விமர்சிப்பது சரியல்ல என்று குறிப்பிட்டு இருப்பேன்.

அதே தான் மனுதர்ம சாஸ்திரம் நூலுக்கும் பொருந்தும்.

போன வருடம் எழுதிய கட்டுரையைத் தற்போது படித்தாலே அதில் திருத்தம் தோன்றுகிறது. போட்ட டீவீட்டை அடுத்த நிமிடம் அவசரமாக நீக்குகிறார்கள்.

இவர்கள் என்னடான்னா.. என்னமோ போனவாரம் வெளியான புத்தகம் மாதிரி மனுதர்ம சாஸ்திரத்தைப் பற்றி ஆவேசமா பேசிட்டு இருக்காங்க.

கடைசியாக, நான் வேண்டிக்கொள்வது இந்து மதத்தை விமர்சிப்பதை தயவு செய்து குறைத்து / நிறுத்தி விடாதீர்கள்.

ஏனென்றால், இங்கே சிலருக்கு உரைக்க வேண்டியது இருக்கு. இந்துக்கள் தூக்கத்திலிருந்து எழுந்திருக்க இது போன்ற அதிர்ச்சி வைத்தியம் தேவைப்படுகிறது.

என்ன செய்வது! சிலர் நடப்பதை, கூறுவதை வைத்தே புரிந்து கொள்வார்கள். சிலருக்கு செவுள்ள நாலு விடுற மாதிரி கேட்டால் தான் சொரணையே வருது.

நீங்க நடத்துங்க ராசா!

தொடர்புடைய கட்டுரைகள்

கர்ம வினையும் இந்து மதமும்

அர்த்தமுள்ள இந்து மதம்

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

33 COMMENTS

 1. செம்ம கிரி👍
  காமெடி சேந்து சூப்பரா எழுதிருக்கீங்க. இவனுக கிட்ட திருக்குறள் ல இருக்கிறத கேட்டாலும் பதில் வராது 🙂

 2. Hi Giri – I am a long time follower of your blog and i must say that this blog show’s how castiest your are. You must be from a privileged community like gounder or something who has no idea about what under privileged people like SC\ST people went through and going through now. You said manusmrithi was written 3000 years before and no one cared to follow that now. If so, then why TN Governor Ravi praised about Sanathana in his recent speech. I hate to see that you are such a castiest slur !!! Shame on you !!!

  • Giri don’t follow any priest custom while doing house warming ceremony.

   Giri don’t follow any customs as mentioned if anyone passed away in his family.
   He don’t call any priests and the priests chanting sanskrist verses don’t happen.

   Those priests don’t follow Manusmiriti at all. They chant mantras on their own without following any book.

   Giri don’t see any castism in hometown. The houses are arranged such that all different caste people located next to each other and all live like brothers and sisters.

   Giri see hinduism as a way of life.
   Islam/Christianity is religion. But hinduism is a way of life.

   Correct Giri?

   • கவி, உங்களின் கருத்துக்களை மதிக்கிறேன். நீங்கள் எவ்வாறு இந்த புரிதலுக்கு வந்தீர்கள் என புரிந்து கொள்ள விரும்புகிறேன். நேரம் கிடைத்தால் கீழே உள்ள என் கேள்விகளுக்கு பதில் கூறவும்.

    1. மதத்திற்க்கான வரையறை என்ன? தொகை மதத்திற்கும் , செமிட்டிக் மதத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

    2. சம்ஸ்கிருத மந்திரங்கள் ஸ்மிரிதி இருந்து வருகிறது என்று நினைக்கிறீர்களா ?

    2.ஹிந்து வாக பிறந்தாலே அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் செய்ய வேண்டும் என கட்டாயம் உள்ளதா?

    3. ஹிந்துவுக்கு புனித நூல் என்று ஒன்று உண்டா ? அவன் அதனை கடைப்பிடுக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா?

    4. அனைத்து சடங்குகளும் சம்பிரதாயங்களும் மதத்திலிருந்து மட்டும் வந்ததா ? ஆம் என்றால், தொல் குடிகளின் சம்பிரதாயங்களை இப்போது உள்ள எந்த குடிகளும் பின்பற்றவில்லை என்று நினைக்கீறீர்களா?

    5. இந்து மதத்தில் உருவ வழிபாடு மட்டும் தான் இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? வேதாந்தி என்ற கருதுகோளை கேள்வி பட்டதுண்டா?

    6.சாதியின் உட்பிரிவுகள் , அடுக்குகள் இந்து மதத்தில் மட்டும் உள்ளதா? ஆம் என்றால், எந்த ஹிந்து நூலில் மேல் கீழ் ஜாதிகளின் முழு பட்டியல் உள்ளது ?

    7.தலித் மக்களுக்குள் மேல், கீழ் சாதிகள் உள்ளதா ? இல்லை என்றால் சேரிகளில் ஏன் ஒன்றுக்கு மேற்பட்ட மாரியம்மன் கோவில்கள் உள்ளன.

    8. இதுவரை உலகத்தில் பெரும் இன அழிப்பு , கொலைகள் செய்தவர்கள் யார் ? அவர்கள் பின்பற்றிய மதங்கள் எவை ?

 3. கிரி, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவதில் அரசியவாதிகள் கில்லாடிகள். சிறுபான்மையினர் ஓட்டுக்காக பேசுகிறார்கள் அவ்வளவே. அவர்களிடம் ஸ்மிரிதிக்கும் ஸ்ருதிக்கும் வித்தியாசம் என்னவென்று கேளுங்கள், பதில் வராது. அதற்க்கான புரிதல் மக்களீடையே இருந்தாலே இவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள். பொது மக்களிடம் இருக்கும் ஒரே ஆயுதம் ஓட்டு மட்டுமே. ஆனால் அரசியல்வாதிகள் தேர்தல் நேரங்களில் மட்டும் கோவில்படிகளில் ஏறுவார்கள், திருநீறு பூசுவார்கள், பலில்லிப்பார்கள். குமட்டல் தான் வருகிறது. மக்கள் மறக்காமல் இருந்து வோட்டு செலுத்தினால் மட்டுமே இங்கே மாற்றம் வரும், இவர்களும் கொஞ்சம் போக்கை மாற்றுவார்கள்.

 4. @Akash

  “I am a long time follower of your blog and i must say that this blog show’s how castiest your are.

  Oh! is it? can you point out a single line where I wrote like that? YOU MUST POINT OUT and I will explain my stand.

  “You must be from a privileged community like gounder or something who has no idea about what under privileged people like SC\ST people went through and going through now. ”

  If you are a long-time follower of my blog then you must have read all my articles.

  If not then it’s your problem.

  Here are a few sample posts. Read it!

  https://www.giriblog.com/asura-tale-of-the-vanquished-book-review/

  https://www.giriblog.com/untouchability/

  https://www.giriblog.com/periyar-book-review/

  ” If so, then why TN Governor Ravi praised about Sanathana in his recent speech.”

  He is not the authority of Hindus.

  I understand that there might be bad things in the book as I mentioned in the article but I’m sure a lot of good things also will be.

  Governor might be pointed out those good things since he didn’t mention specifically anything like Rasa.

  “I hate to see that you are such a castiest slur !!! Shame on you !!!”

  If you don’t want to see the things which you hate there is an option for everyone which is called “IGNORE”

  Jus ignore my blog and keep reading those who are writing as you like which is good for you.

  I know what I’m doing so I don’t need your certificate. Keep it with you.

  I’m strong enough to accept if I made mistakes.

  I have already explained about myself who I’m so I don’t need to hide anything. It’s up to you whether to follow my blog or not.

  Pls have a look https://www.giriblog.com/neautral-is-possible-or-not/

  It’s not my duty to satisfy everyone and strictly I don’t want to be a person like that.

  So you are free to choose your choice and enjoy your peaceful mind as you wish.

  Thank You!

 5. @Kavi

  “Giri don’t follow any priest custom while doing house warming ceremony.

  Giri don’t follow any customs as mentioned if anyone passed away in his family.

  He don’t call any priests and the priests chanting sanskrist verses don’t happen.”

  I’m following all and not only myself those who are having belief in god. Nothing to hide.

  “Those priests don’t follow Manusmiriti at all. They chant mantras on their own without following any book.”

  I know its sanskrit but I don’t know those priests are following Manusimiriti Mantras or not. Mantras and Manusmiriti both are different I believe.

  but my intenion is praise god. Nothing more.

  Its not only myself and everyone who are praying god but not as you think.

  “Giri don’t see any castism in hometown. The houses are arranged such that all different caste people located next to each other and all live like brothers and sisters.

  Jus refer the links which I shared with Akash.

  “Giri see hinduism as a way of life.”

  Exactly. No doubt about it.

  “Islam/Christianity is religion. ”

  Yes. You have to ask the concerned religions persons so that they will help you to explain.

  I can’t comment it and its not correct as well since I don’t know how they are considering it.

  I jus said about myself and others might have a different opinion.

  I’m part of Hinduism so I jus expressed my religion and what I felt. I didn’t degrade / comment any religion here.

  “Correct Giri?”

  Sorry Kavi, wrong understanding.

  Nobody is following Manusmiriti in real life. I’m not sure what is mentioned in the priest book and even am not sure which is related to Manusmiriti or not.

  Even if it’s the Manusmiriti also, its not in our day-to-day life. I’m not against anyone and I never thought as well.

  Hindus ( I meant common Hindus) are not referring to this book to proceed or talk about anything.

  Actually, the majority of Hindus don’t know what is Manusmiriti.

  (Hope) Every Hindu knows what is Geethai but not Manusmiriti. Only politicians are talking about for their politics but not the general public.

  I should thank Rasa, Thiruma and Hindu haters because I had 0% interest in Manusmirti or advanced Hindu religion subjects.

  since I’m a common Hindu person which means jus pray to god and trust.

  but they are creating curiosity to read all about Hinduism so I’m planning to read and learn the advanced version of Hinduism and will try to explain it in my blog with simple terms.

  Manusmiriti might be a tough one for me (No patience) so am not sure but will explore other things.

  I have a mindset to accept mistakes so it will be easy for me to proceed with anything.

  Thank You!

 6. @மணிகண்டன்

  “கிரி, உணர்ச்சிகளை தூண்டிவிட்டு வாக்குகளை பெறுவதில் அரசியவாதிகள் கில்லாடிகள்.”

  இது நிச்சயம் ஒரு நாள் Backfire ஆகும்.

  “அவர்களிடம் ஸ்மிரிதிக்கும் ஸ்ருதிக்கும் வித்தியாசம் என்னவென்று கேளுங்கள், பதில் வராது. அதற்க்கான புரிதல் மக்களீடையே இருந்தாலே இவர்கள் அமைதி ஆகிவிடுவார்கள்.”

  மக்களுக்கு இது பற்றி எதுவுமே தெரியாது அதனால், இவர்கள் விருப்பத்துக்குப் பேசிகொண்டுள்ளார்கள்.

  “மக்கள் மறக்காமல் இருந்து வோட்டு செலுத்தினால் மட்டுமே இங்கே மாற்றம் வரும், இவர்களும் கொஞ்சம் போக்கை மாற்றுவார்கள்.”

  இதைத்தான் முன்பு இருந்து கூறி வருகிறேன்.

  வாக்களிக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வந்தால், இது போல கீழ்த்தரமாக பேசப்படுவது நிறுத்தப்படும்.

  இந்தக் கோபமே இக்கட்டுரையிலும் உள்ளது.

 7. கிரி, ரொம்ப இந்த பதிவை கிட்டத்திட்ட ஒரு ஐந்து முறைக்கு படித்து இருப்பேன்.. என் பார்வையில் உங்களின் கோபம் நியாயமானது.. காரணம் எல்லோருக்கும் அவரர் மதத்தின் மீதும், சடங்குகள் மீதும், முன்னோர்களின் வாழ்வியில் மீதும் நம்பிக்கை இருக்கிறது..இது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை தொடர்வதும், தொடராமல் போவதும் தனிப்பட்ட நபரின் விருப்பம். மற்றவர்களின் பார்வையில் அது சரியாக இருக்கலாம் இல்லை தவறாக தோன்றலாம்..

  நான் எதை பின்பற்ற வேண்டும், எதை செய்ய வேண்டும் என்று முடிவு செய்பவன் நானகதான் இருக்க வேண்டும் . அடுத்தவர்களின் வார்த்தைக்கு இங்கு வேலையே இல்லை. அப்படி இருக்கும் போது யாருடைய மதத்தையும், யாரும் தவறாக பேசுவதோ, தவறான கருத்துக்கள் பதிவிடுவதையோ, பரப்புவதையோ ஆதரிக்க கூடாது.. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இது போல பிரச்சனைகள் அடிக்கடி எழுந்த வண்ணம் இருக்கிறது..

  அரசு நிச்சயம் இது போன்ற நிகழ்வுகளை கண்டிக்க வேண்டும்.. ஆனால் பிரச்சனையே இவர்கள் புறத்திலிருந்து வரும் போது என்ன செய்வது???? மக்கள் தங்களின் எதிர்ப்புகளை நிச்சயம் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

 8. ப்பா. ஆரம்பத்தில் ஓரளவு திமுக ஆதரவாக இருந்த உங்களுக்கே திமுகவின் தகிடுதத்தங்கள் புரிந்து சில வருடங்கலாக நீங்கள் தீவிர இந்து மத பற்றாளறாக எழுதுவதை பார்க்க முடிகிறது. திமுகவின் பிராமண எதிர்ப்பு கொள்கை தோல்வி அடைந்து வருவதை இது காட்டுகிறது. 4 ,5 .வருடங்கள் முன்பு உங்கள் கட்டுறையில் பிராமண எதிர்ப்பு நன்றாக தெரியும். நீங்களே திமுகவின் உண்மை முகம் தெரிந்து இவ்வளவு மாறி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. உங்களின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? சொல்ல முடியுமா?

 9. அந்தக்காலத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்று ராசா போன்றவர்கள் பிடித்து தொங்கிக்கொண்டு இருந்தவர்களை பார்த்து நாக்கை பிடிங்கிக்கொள்வது போல கேள்வி கேட்டுள்ளீர்கள் – “திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த போது, வெளியேறியவர்களை (திமுக) வேசி மகன்கள் என்று விடுதலையில் பெரியார் எழுதினார்.” இதற்கு என்ன பதில் தரப்போகிறார்கள்? பெரியாரை விட்டு வெளியேற இவர்கள் தயாரா?

  என்னுடைய மனவோட்டத்தை இந்த பதிவு நூறு சதவீதம் பிரதிபலிக்கிறது கிரி. மனுதர்மம், sanathanam போன்றவை எல்லாம் பல நூறு வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது. அவற்றில் என்ன எழுதி உள்ளது என பெரும்பாலான ஹிந்துக்களுக்கு தெரியாது. அதை பற்றி படிக்கவும் நமக்கு அவசியம் இல்லை. என்றோ எழுதப்பட்ட ஒன்றை, இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஹிந்துக்கள் பின்பற்றாத ஒன்றை பேசி மக்களிடையே குழப்பத்தையும் அமைதியின்மையையும் மீண்டும் மீண்டும் உருவாக்க முயற்சிக்கிறார்கள். இன்றைய ஹிந்து மதம் பல மாற்றங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறது. நச்சு எண்ணம் படைத்தவர்கள் நஞ்சை துப்பிக்கொண்டு தான் இருப்பார்கள். நாம் பெரும்பாலான ஹிந்துக்கள் இன்றும் கோவிலுக்கு சென்றுகொண்டு இருக்கிறோம். திருவிழாக்களை கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். மாரியம்மன் பாடல்களில் இருந்து புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடிக்கொண்டுதான் இருக்கிறோம். பொங்கலுக்கும், தீபாவளிக்கும், கார்த்திகைக்கும் ,இன்னும் பிற பண்டிகைகளையும் கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறோம். நம்மை சூழ்ச்சியால் பிரிக்க நினைக்கிறார்கள் நச்சு எண்ணம் பொருந்தியவர்கள். நயவஞ்சகர்களின் எண்ணம் என்றும் என்றும் ஈடேறாது.

 10. @யாசின்

  “யாருடைய மதத்தையும், யாரும் தவறாக பேசுவதோ, தவறான கருத்துக்கள் பதிவிடுவதையோ, பரப்புவதையோ ஆதரிக்க கூடாது.”

  இதைத்தான் எதிர்பார்க்கிறேன் யாசின்.

  “ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் இது போல பிரச்சனைகள் அடிக்கடி எழுந்த வண்ணம் இருக்கிறது..”

  சரியாகக்கூற வேண்டும் என்றால், திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இது போன்று தொடர்ந்து அவதூறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

  ஆனால், எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

  “அரசு நிச்சயம் இது போன்ற நிகழ்வுகளை கண்டிக்க வேண்டும்.. ஆனால் பிரச்சனையே இவர்கள் புறத்திலிருந்து வரும் போது என்ன செய்வது??”

  சரியாக கூறினீர்கள்.

  செய்வதே / ஆதரிப்பதே அவர்கள் எனும் போது யாரிடம் புகார் கொடுப்பது!

  கொடுத்த புகார் எதன் மீதும் நடவடிக்கையில்லை. நடராஜரை அவமானப்படுத்தியவன் மீது ஏராளமான புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

  அதைவிட ஸ்டாலின் கூட நின்று நிழற்படம் எடுத்துத் திமிரா போட்டுட்டு இருக்கான். இவனுக்கெல்லாம் என்ன பயம் இருக்கும்?!

  செம கடுப்பா இருக்கு யாசின்.

 11. @ஹரிஷ்

  “ப்பா. ஆரம்பத்தில் ஓரளவு திமுக ஆதரவாக இருந்த உங்களுக்கே திமுகவின் தகிடுதத்தங்கள் புரிந்து சில வருடங்கலாக நீங்கள் தீவிர இந்து மத பற்றாளறாக எழுதுவதை பார்க்க முடிகிறது”

  நான் திமுக ஆதரவா? 🙂 .

  இதில் இரண்டு விஷயங்கள் உள்ளது.

  ஒன்று

  நான் என்றுமே திமுக ஆதரவாளனாக இருந்தது கிடையாது ஆனால், அவர்கள் நல்லது செய்தால் பாராட்ட தயங்கியது கிடையாது.

  அவர்கள் செய்ததை பாராட்டியதால் உங்களுக்கு அப்படி தோன்றி இருக்கலாம்.

  நல்லது செய்ததை செய்யலை என்று என்னால் நானே நினைத்தாலும் கூற முடியாது. கூறாமல் தவிர்க்கலாம் ஆனால், செய்யவில்லை என்று பொய்யாக கூற முடியாது.

  எனவே, திமுக என்றில்லை யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். ஏனென்றால், தமிழகத்தை இந்தியாவை அதிகம் நேசிக்கிறேன்.

  தமிழகம் இந்தியாக்கு அப்புறம் தான் மற்றதெல்லாம்.

  நான் ஆதரவாக தொடர்ச்சியாக எழுதியது என்றால், ரஜினி மட்டுமே! தனிப்பட்ட முறையில் வேறு யாருக்கும் ஆதரவாளன் கிடையாது.

  இரண்டு

  துவக்கத்தில் நான் சராசரி இந்து தான். அதாவது, மத ரீதியான கட்டுரைகளை எழுதுவதையோ, ஆவேசமாக பேசுவதையோ செய்தது கிடையாது.

  நான் உண்டு நான் வணங்கும் கடவுள் உண்டு என்று இருந்தவன்.

  ஆனால், திக, திமுக, இடதுசாரிகள், இந்து வெறுப்பாளர்கள், ஊடகங்கள் தொடர்ந்து இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசும் போது ஆத்திரமாகி இப்படி மாறி வருகிறேன்.

  நடுநிலையா இருக்க வேண்டிய ஊடகங்களே இந்து வெறுப்பாக நடக்கும் போது யாராக இருந்தாலும் கோபம் வருமில்லையா?

  இந்துக்களுக்கு இருக்கும் ஒரே நாடு இந்தியா (நேபாள் இருந்தாலும்) இங்கேயும் பிரச்சனை / வன்மம் என்றால், கோபம் வராதா?

  எங்கே தான் போவது?!

  எனக்கு சொரணை உள்ளது. எனவே, கோப்படுகிறேன்.

  விமர்சித்தால் எல்லோரையும் விமர்சிக்க வேண்டும், இல்லையென்றால் யாரையும் விமர்சிக்க கூடாது.

  ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்றால் எப்படி?

  ” திமுகவின் பிராமண எதிர்ப்பு கொள்கை தோல்வி அடைந்து வருவதை இது காட்டுகிறது.”

  இருக்கலாம் ஆனால், அவர்களுக்கு இது தான் ஆயுதம்.

  இது பற்றி பின்னர் விரிவான கட்டுரை எழுதும் திட்டமுள்ளது.

  “4 ,5 .வருடங்கள் முன்பு உங்கள் கட்டுறையில் பிராமண எதிர்ப்பு நன்றாக தெரியும்.”

  தவறான புரிதல்.

  எங்குமே பிராமண எதிர்ப்பு என்றில்லை எந்த மதத்தையும், சாதியையும் சம்பந்தமே இல்லாமல் விமரிசித்தது கிடையாது.

  ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டு இருந்தால், அது குறித்த விமர்சனம் இருக்குமே தவிர, தனிப்பட்ட தாக்குதல் இருக்காது.

  கட்டுரைக்காக என் அனுபவங்களை கூறி இருப்பேன் ஆனால், சம்பந்தமே இல்லாமல் எழுதியது கிடையாது.

  எதிர்ப்பு என்றால், திக, திமுக, இடது சாரிகள், இந்து வெறுப்பாளர்கள், தமிழக ஊடகங்கள் மட்டுமே.

  வேறு எவரையும் வன்மமாக எதிர்த்தது கிடையாது.

  நான் கூறிய அனுபவங்கள் பிராமணர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதால், ஒருவேளை உங்களுக்கு அப்படி தோன்றியிருக்கலாம்.

  ஆனால், நீங்கள் நினைக்கும் எண்ணத்தில் விமர்சித்தது கிடையாது. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்.

  என் நெருங்கிய நண்பர்களில் பிராமண நண்பர்களும் உள்ளனர். எனவே, எனக்கென்ன வெறுப்பு அவர்கள் மீது இருக்கப்போகிறது!

  நீங்கள் நினைப்பது போல எண்ணம் இருந்தால், நான் எப்படி அவர்களுடன் நண்பனாக இருக்க முடியும்?!

  இவ்வளவுக்கும் சிலர் 20+ வருடங்களாக நண்பர்கள். அடிக்கடி சந்திக்க கூடியவர்கள்.

  ஒரு கட்டுரைக்கு என்ன தேவையோ அது தொடர்பான சம்பவங்களை / என் தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே குறிப்பிட்டு இருப்பேன்.

  என்னை முன்னர் திமுக ஆதரவு என்று நினைத்தது எப்படி தவறான புரிதலோ அது போன்றது தான் பிராமண எதிர்ப்பு.

  நல்லது செய்தால் பாராட்டுவேன், விமர்சனம் இருந்தால் விமர்சிப்பேன். அவ்வளவே.

  “நீங்களே திமுகவின் உண்மை முகம் தெரிந்து இவ்வளவு மாறி இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.”

  திமுக எப்படிப்பட்டது என்று எனக்கு தெரியும். எனவே, இது புதிதில்லை.

  இதன் பிறகும் திமுக ஏதாவது நல்லது செய்யும் போது பாராட்டத்தான் செய்வேன். சமீபத்தில் கூட செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியைத் திமுக அரசு சிறப்பாக நடத்தியதை பாராட்டி எழுதி இருந்தேன்.

  என் மனசாட்சிக்கு விரோதமாக நான் என்றும் எழுதியதில்லை, என்னால் எழுதவும் முடியாது.

  “உங்களின் இந்த மாற்றத்திற்கு காரணம் என்ன? சொல்ல முடியுமா?”

  அரசியல் கட்சிகளின், போராளிகளின், ஊடகங்களின் கண்மூடித்தனமான இந்து மத எதிர்ப்பு.

 12. @பயபுள்ள

  “என்னுடைய மனவோட்டத்தை இந்த பதிவு நூறு சதவீதம் பிரதிபலிக்கிறது கிரி.”

  நன்றி 🙂 .

  “அவற்றில் என்ன எழுதி உள்ளது என பெரும்பாலான ஹிந்துக்களுக்கு தெரியாது.”

  இதைச் சொன்னால் சனாதனத்தை அழிப்போம்னு கிளம்புகிறார்கள். இவர்கள் செய்வது நல்லதுக்கு தான்.

  “நம்மை சூழ்ச்சியால் பிரிக்க நினைக்கிறார்கள் நச்சு எண்ணம் பொருந்தியவர்கள். நயவஞ்சகர்களின் எண்ணம் என்றும் என்றும் ஈடேறாது.”

  இவர்கள் சாதாரண இந்துவான என்னைப்போன்றவர்களையும் தீவிர இந்துக்களாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

  பெரும்பான்மை இந்துக்கள் விரைவில் இவர்களின் இரட்டை வேடங்களைப் புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன் காரணம், இவர்களின் மோசமான அணுமுறை தான்.

  எது நடந்ததோ நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது.

  எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்.

  எல்லாம் மேல இருக்கிறவன் பார்த்துப்பான் 🙂 .

 13. அண்ணா வணக்கம். உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ எதிர்ப்பர்க்கல அண்ணா. இதுக்கு முன்னாடிலாம் உங்க பதிவுல எதோ ஒரு நியாயம் இருக்கும். ஆனா இது ரொம்ப மோசம். நீங்க முழுசா மனுதர்ம சாஸ்திரம் நூலை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

  அதில் நீங்கள் கூறியது போல இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், வழக்கங்கள் இருக்கும். ஆனால் இந்த அறம், ஒழுக்க விதிமுறைகளை பற்றி எங்கே சொல்லி இருக்குன்னு சொன்னிங்கனா நானும் பின்பற்ற நல்லா இருக்கும். ஏன்னா என்கிட்ட இருக்கிற நூல்ல அறம் ஒழுக்கத்த பத்தி ஒன்னுமே இல்லனா.

  //அதை யாரும் தற்போது பின்பற்றுவதுமில்லை// உங்க ஊர்ல எல்லாரும் ஜாதி பாக்காம ஒற்றுமையா அன்னம் தண்ணி பழகிட்டு இருக்கிங்களா அண்ணா? குழந்தை திருமணம் நடத்தாம இருக்காங்களா அண்ணா? கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாம நடந்த முடியுதா அண்ணா? இன்னும் நிறைய அடிமைத்தனமும் பிற்போக்குதனமும் அந்த நூல்ல இருக்கு. அந்த நூலை முழுசா படிச்சிட்டு உங்க ஊற பாருங்க, உங்கள சுத்தி பாருங்க, அப்போ உங்களுக்கு புரியும். அது நடைமுறையில் இருக்கா இல்லையான்னு.

  //அதைப் பற்றிப் பேசுவதுமில்லை// சரிதான் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் சாங்கியம் சம்பிரதாயம்னு இன்னும் நம்மள சுத்தியும் இருக்கு.

  //யாருமே பின்பற்றாத ஒரு புத்தகத்தை வைத்து அரசியல் செய்து கொண்டுள்ளார்கள்
  மனுதர்ம சாஸ்திரத்தை வைத்து இந்தியா நடைபெறவில்லை// மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R N ரவி அவர்களின் பேச்சை கேட்டுருப்பிர்கள் என்று நம்புகிறேன்.

 14. பொன்னியின் செல்வன் உங்களோட விமர்சனத்துக்காக ஆவலாக காத்திருக்கேன் அண்ணா

 15. @கார்த்திக்

  “அண்ணா வணக்கம். உங்க கிட்ட இருந்து இப்படி ஒரு பதிவ எதிர்ப்பர்க்கல அண்ணா.”

  வணக்கம் கார்த்திக். எப்படி இருக்கே?

  அண்ணே! எல்லா கோட்டையும் அழிங்க.. முதல்ல இருந்து ஆரம்பிங்கன்னு சொல்ற .

  எப்பவுமே எதிர்பார்ப்பதை செய்தால் என்ன சுவாரசியம் இருக்கு கார்த்திக் 🙂 .

  “இதுக்கு முன்னாடிலாம் உங்க பதிவுல எதோ ஒரு நியாயம் இருக்கும்.

  அப்படியா! எனக்கு நியாயமா இருக்கும்.. மற்றவர்களுக்கும் இருக்கணும்னு நான் எதிர்பார்ப்பதில்லை, அது சாத்தியமும் இல்லை.

  “ஆனா இது ரொம்ப மோசம்.”

  ரைட்டு.

  “நீங்க முழுசா மனுதர்ம சாஸ்திரம் நூலை படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.”

  முழுசாவா?! நான் தொடவே இல்லைனு சொல்றேன்.. இதுல முழுசா, அரைகுறையா படித்தேன்னு சொல்ல வாய்ப்பே இல்லை.

  “அதில் நீங்கள் கூறியது போல இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், வழக்கங்கள் இருக்கும். ஆனால் இந்த அறம், ஒழுக்க விதிமுறைகளை பற்றி எங்கே சொல்லி இருக்குன்னு சொன்னிங்கனா நானும் பின்பற்ற நல்லா இருக்கும்.

  ஏன் கார்த்தி இந்த புத்தகத்துல இருந்து சொன்னால் தான் பின்பற்றுவியா? மற்ற புத்தகத்துல இருந்து சொன்னா பின்பற்ற மாட்டியா?

  “ஏன்னா என்கிட்ட இருக்கிற நூல்ல அறம் ஒழுக்கத்த பத்தி ஒன்னுமே இல்லனா.”

  தெரியல கார்த்திக். இதுக்கு நிறைய வெர்சன் இருக்கிறதாம்.. ஒருவேளை நீ படித்தது வீரமணி மொழிபெயர்த்த புத்தகமாக கூட இருக்கலாம் 🙂 .

  இதுல இருந்தால் என்ன இல்லாட்டி என்ன? இதற்கு உங்களை தவிர பொதுமக்கள் யார் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்?

  தினமும் இந்தப் புத்தகம் படித்துத் தான் மக்கள் எல்லாத்தையும் செய்துட்டு இருக்காங்களா?!

  “உங்க ஊர்ல எல்லாரும் ஜாதி பாக்காம ஒற்றுமையா அன்னம் தண்ணி பழகிட்டு இருக்கிங்களா அண்ணா? குழந்தை திருமணம் நடத்தாம இருக்காங்களா அண்ணா? கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாம நடந்த முடியுதா அண்ணா?”

  மேலே Akash க்கு லிங்க் கொடுத்து இருக்கேன் பாரு.. அதுல என்ன நடந்ததுன்னு தெளிவா கூறி இருக்கிறேன்.

  “இன்னும் நிறைய அடிமைத்தனமும் பிற்போக்குதனமும் அந்த நூல்ல இருக்கு.

  இருக்கட்டும்.. அதுக்கு என்ன? நானும் அதைத்தானே சொன்னேன்.

  “அந்த நூலை முழுசா படிச்சிட்டு உங்க ஊற பாருங்க, உங்கள சுத்தி பாருங்க, அப்போ உங்களுக்கு புரியும். அது நடைமுறையில் இருக்கா இல்லையான்னு.”

  இல்லைனு நான் சொல்லவே இல்லையே!

  நான் சொல்லவந்ததை புரிந்துக்கலைனு நினைக்கிறேன்..

  யாரும் இந்த புத்தகத்தை அடிப்படையா வைத்து நடந்துகொள்ளவில்லை என்பதே நான் கூற வருவது.

  “சரிதான் அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் சாங்கியம் சம்பிரதாயம்னு இன்னும் நம்மள சுத்தியும் இருக்கு.”

  இருக்கு! அதனால தான் இன்னும் இந்து மதம் அழியாம இருக்கு.

  நல்லதை எடுத்துக்கோ.. கெட்டதை ஒதுக்கி விடு.

  “மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு. R N ரவி அவர்களின் பேச்சை கேட்டுருப்பிர்கள் என்று நம்புகிறேன்.”

  எல்லோரும் அவரையே ஏன் பிடித்துத் தொங்கிட்டு இருக்கீங்கன்னு புரியல?!

  அவர் என்ன இந்து மத தலைவரா? இல்லை அவர் தான் இந்து மதத்துக்கு அத்தாரிட்டியா?

  அவர் குறிப்பிட்டு எதுவும் சொல்லவில்லை.. பொதுப்படையா சொல்லி இருக்காருன்னு சொல்லிட்டேன்.

  நீ அவர் பேசியதில் எதைத் தவறுன்னு சொல்றேன்னு சொன்னால் அதற்கு நேரடியான பதில் அளிக்க முடியும்.

  சரி.. இந்த புத்தகத்தை வைத்து இவ்வளோ கோபப்படுறியே.. கேள்வி கேட்குறியே..

  பின்வரும் கேள்விகளுக்கு ஏன் கோபம் வரலை.. ஏன் இது பற்றி என் தளத்தில் எந்த விவாதத்துக்கும் வரவில்லை.

  உன் பேச்சுக்கே வருகிறேன். சனாதன புத்தகம் மோசம்..சரி இருக்கட்டும்.

  நீதிக்கட்சி, சமூகநீதி பற்றி ஊருக்கே பாடம் எடுக்குற திமுக எதற்கு பின்வருவனவற்றை பேசணும்? நடந்துக்கணும்?

  நீங்க தற்காலத்துல தான் இருக்கீங்க.. எல்லாம் தெரிந்து தானே இருக்கீங்க? மக்களுக்கு சம உரிமை கொடுக்குறீங்கல்ல?

  புத்தகத்தில் உள்ளதை எதிர்க்கிற கட்சி தானே! அப்புறம் எதற்கு இதையெல்லாம் பேசணும்.

  திமுக போட்ட பிச்சையில் தான் நீங்க நீதிபதி ஆனீங்க? என்று RS பாரதி ஏன் கூறினார்?

  திருமாக்கு அமர ஏன் பிளாஸ்டிக் நாற்காலி கொடுக்கப்பட்டது?

  விசிக கட்சிக்காரர்களைத் திமுகவினர் ஏன் நிற்க வைத்தே பேசினர்?

  கட்சி ஆரம்பித்து 50 வருடங்களைக் கடந்தும் சமூக நீதி பேசுற திமுகவில் ஏன் தலித் நபர் திமுக தலைவர் ஆக முடியலை?

  கவுடரா? என்று ஏன் ஸ்டாலின் கேட்டார்?

  குறவர்களை ஏன் நிற்க வைத்தே அமைச்சர் பேசினார்? நாற்காலி இருந்தும்!

  மனு கொடுத்த பெண்ணை அமைச்சர் அந்த மனுவாலையே தலையில் ஏன் அடித்தார்?

  நாங்க என்ன தாழ்த்தப்பட்டவர்களா என்று ஏன் தயாநிதி மாறன் கூறினார்?

  SC தானே! ன்னு எதற்கு மேடையில் ஒரு பெண்ணை நக்கலாக பொன்முடி கேட்டார்?

  மேடையிலிருந்து கீழே நின்ற தொண்டர்களை நாய் என்று ஏன் ராசா திட்டினார்?

  ஏன் சாதி வாரியாக திமுக வேட்பாளர்களை நிறுத்துகிறது?

  இது மாதிரி கேட்க ஆயிரம் இருக்கு கார்த்திக்.

  இப்ப நடப்பதை கேட்காமல் பழைய புத்தகத்தை ஏன் கை காட்டுறீங்க?

  உனக்கு எப்பாவது மேலே கூறியதுக்கு, இவர்கள் போலியா உள்ளார்கள் என்று திமுக மீது கோபம் வந்து இருக்கா?!

  மேற்கூறியதுக்கு கோபம் வரணுமா? அல்லது யாருமே கண்டுக்காத புத்தகத்து மேலே கோபம் வரணுமா?

  மனசாட்சி படி பதில் கூறு.

  • வணக்கம் அண்ணா . நான் நலம் அண்ணா உங்க பதிலுக்கு நன்றி.

   நான் என்றுமே நான் சார்ந்து இருக்கும் கட்சியின் பிரதிநிதிகளின் அரசியல் வாதங்களுக்கு ஆதரவு தெரிவித்தது இல்லை. ஏனென்றால் அவர்கள் என்னதான் பேசினாலும் அதில் ஒரு அரசியல் லாபம் அவர்களுக்கு இருக்கும்.

   ஆனால் இந்த மனு சாஸ்திரம் விசயம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனி மனிதன் என்னை சார்ந்த ஒரு விசயம், என் நண்பர்கள் சார்ந்த விசயம். அதனால் தான் இந்த பதிவுக்கு நான் உங்களிடம் எதிர்வினை ஆற்றினேன்.

   நீங்கள் தொட்டே பார்க்காத ஒரு புத்தகம். அதில் என்ன இருக்கு என்று கூட உங்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அந்த புத்தகத்த யாரும் பின்பற்றலன்னு சொல்றிங்க? அதனால இந்த புத்தகம் பற்றிய உங்களின் கேள்வி அல்லது பதிலுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் ஒன்று அண்ணா இந்த பதிவ ஒரு சங்கி எழுதி இருந்தா கண்டுக்காம போயிருப்பேன். ஏன் படிச்சிருக்கவே மாட்டேன். எழுதியது தாங்கள். அதனாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.

   இந்து என ஆங்கிலேயனால் பெயர் சூட்டப்பட்ட நாம் அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான். எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் அனைத்தையும் நான் எதிர்ப்பேன். அதற்கு ஆதரவானவர்களையும் நான் எதிர்ப்பேன்.

   நீங்கள் என்னிடம் கேட்ட அரசியல்வாதிகளின் செயல்கள் பற்றிய அனைத்து கேள்விகளும் சரியானதே. அவர்களின் செயல்களுக்கு நான் என்றும் எந்த தளத்திலும் முட்டு கொடுத்து நியாயபடுத்தியதே இல்லை அண்ணா.

 16. @கார்த்திக்

  “பொன்னியின் செல்வன் உங்களோட விமர்சனத்துக்காக ஆவலாக காத்திருக்கேன் அண்ணா”

  என்னுடைய தளத்தில் கொஞ்சம் Performance improvements செய்துட்டு இருக்கேன். பழைய கட்டுரைகள் OUTDATED ஆக இருப்பதை நீக்கிட்டு இருக்கேன்.

  அதோட பழைய கட்டுரைகளைப் புதுப்பித்துட்டு இருக்கேன். அதனால வேற எதுவும் எழுத முடியலை.

  நான் இன்னும் படம் பார்க்கவில்லை.

  ஊருல இருந்து குடும்பத்தினர் அனைவரும் இந்த வாரம் வருகிறார்கள். அவர்களுடன் ஒன்றாக செல்லலாம் என்று காத்துக்கொண்டு உள்ளேன்.

  அவர்களுடன் சென்று பார்த்துக் கண்டிப்பாக எழுதுகிறேன்.

  எல்லோரும் நன்றாக இருப்பதாக கூறியுள்ளார்கள். எனவே, அவசியம் பார்ப்பேன்.

  இந்த வார இறுதி அல்லது அதிகபட்சம் அடுத்த வாரம் எழுதி விடுவேன்.

  • நானும் இன்னும் திரையரங்கிற்கு சென்று பார்க்கைவில்லை அண்ணா. நேரம் கிடைக்கவில்லை. வீட்டில் குழந்தை, மனைவி என மாற்றி மாற்றி காய்ச்சல் வந்து உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதனால் இப்போதைக்கு முடியாது. telegram ல் தான் பார்த்தேன்.

   நீங்கள் பார்த்துட்டு சொல்லுங்க. உங்க விமர்சனம் படிச்சிட்டு தியேட்டர்ல பாக்கலாம்னா முயற்சி பன்னி பார்க்கிறேன்.

 17. @கார்த்திக்

  “இந்த மனு சாஸ்திரம் விசயம் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனி மனிதன் என்னை சார்ந்த ஒரு விசயம், என் நண்பர்கள் சார்ந்த விசயம். அதனால் தான் இந்தப் பதிவுக்கு நான் உங்களிடம் எதிர்வினை ஆற்றினேன்.”

  புரிந்து கொள்ள முடிகிறது கார்த்திக்.

  “நீங்கள் தொட்டே பார்க்காத ஒரு புத்தகம். அதில் என்ன இருக்கு என்று கூட உங்களுக்கு தெரியாது. அப்புறம் எப்படி அந்த புத்தகத்த யாரும் பின்பற்றலன்னு சொல்றிங்க? அதனால இந்த புத்தகம் பற்றிய உங்களின் கேள்வி அல்லது பதிலுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. ”

  சரி கார்த்திக். உன் வழிக்கே வருகிறேன்.

  நான் படிக்கவில்லை சரி.. நீ படித்து இருக்கே.. யார் (சராசரி இந்து) பின்பற்றுகிறார்கள் என்பதை நீ கூறு, நான் தெரிந்து கொள்கிறேன்.

  என் புரிதல் தவறு என்றால் ஏற்றுக்கொள்கிறேன். உன்னுடையது தவறான புரிதல் என்றால் விளக்குகிறேன்.

  ஆரோக்கியமான விவாதம் தான் எதையுமே தெளிவு படுத்தும், புரிதலை ஏற்படுத்தும்.

  சண்டைகள், விதண்டாவாதங்களால் எந்த பயனும் இல்லை.

  உனக்கு நன்கு தெரியும், நான் எப்போதுமே விவாதங்களில் ஆர்வம் உடையவன் என்று. எனவே, நீ கூறு தெரிந்து கொள்கிறேன்.

  “இந்த பதிவ ஒரு சங்கி எழுதி இருந்தா கண்டுக்காம போயிருப்பேன். ஏன் படிச்சிருக்கவே மாட்டேன். எழுதியது தாங்கள். அதனாலேயே என் கருத்தை தெரிவித்தேன்.”

  நானே பாதி சங்கி தான் கார்த்தி 🙂 .

  யார் சொல்றாங்க என்று பார்க்க கூடாது. கேட்கிற கேள்வியில் லாஜிக் உள்ளதா? சரியா விவாதம் பண்ணுறாங்களா என்று தான் பார்க்கணும்.

  உனக்கு தோதான கருத்துள்ளவர்களிடம் விவாதித்தால், நீ என்ன தெரிந்து கொள்ள முடியும். நீ நினைப்பதையே அவர்களும் கூறுவார்கள்.

  மாற்று கருத்துள்ளவர்களிடம் விவாதித்தால், ஒருவேளை நம் புரிதல் தவறாக இருந்தால் சரி செய்து கொள்ளலாம்.

  எனக்கு இது போல நிறைய நடந்துள்ளது. மாற்றி இருக்கிறேன்.

  ஏன் நீ கூட ஒருமுறை முதல் பத்தி படிக்க சிரமமாக உள்ளது என்று கூறிய பிறகு, நல்ல ஆலோசனையாக எடுத்து அதை மாற்றிக்கொண்டேன்.

  எனவே, யார் கூறுகிறார்கள் என்பது முக்கியமல்ல, சொல்ல வருகிற கருத்து எப்படிப்பட்டது என்று தான் பார்க்கணும்.

  தவறு என்றால் திருத்திக்கொள்ளனும். எதிர் நபர் தவறு என்றால், புரிந்து கொள்ளும்படி விளக்கனும் அதற்காக நாம் சொல்வதை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது.

  “இந்து என ஆங்கிலேயனால் பெயர் சூட்டப்பட்ட நாம் அனைவரும் சமம் என்று நினைப்பவன் நான். ”

  இந்து என ஆங்கிலேயன் பெயர் சூட்டினாலும் அதற்கு முன்பும் அதே மதம் தான். அப்போது பெயரில்லை காரணம், அதற்கான தேவையில்லை.

  வேறு மதங்கள் வரும் போது இதற்கு பெயர் தேவைப்பட்டது அவ்வளவே.

  அனைவரும் சமம் என்று நினைப்பதில் எந்த தவறுமில்லை.

  “எங்களுக்குள் பிரிவினை ஏற்படுத்தும் அனைத்தையும் நான் எதிர்ப்பேன். அதற்கு ஆதரவானவர்களையும் நான் எதிர்ப்பேன்”

  யார் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள்? தெளிவுபடுத்தவும்.

  நான் கேட்பது உன்னுடைய தின வாழ்க்கையில் பிரிவினையை ஏற்படுத்துவது யார்?

  “அவர்களின் செயல்களுக்கு நான் என்றும் எந்த தளத்திலும் முட்டு கொடுத்து நியாயபடுத்தியதே இல்லை அண்ணா.

  நல்லது கார்த்தி. Right person in the wrong party.

 18. நான் அனைத்தும் அறிந்த ஞானி இல்லை.

  ஆனாலும் எனக்கு ஓர் கருத்து உள்ளது.

  நீங்கள் என்ன முட்டு கொடுத்தாலும் ஹிந்து மதம் வருணாசிரம் கடைபிடித்தது தவறு.

  அதனால் இவ்வுலகில் எத்தனை லட்சம் மக்கள் பிறந்து அந்த வருணாசிரம கொள்கையால் வாழ்நாள் முழுவதும் துன்பப்பட்டு மறைந்திருப்பார்கள்.

  இதற்கு என்ன விளக்கம் அளிக்க போகிறீர்கள் .

 19. @பெயர் தெரியாத பாவி

  “நான் அனைத்தும் அறிந்த ஞானி இல்லை.”

  “நீங்கள் என்ன முட்டு கொடுத்தாலும் ஹிந்து மதம் வருணாசிரம் கடைபிடித்தது தவறு.”

  முதலில் எப்படி விவாதம் செய்ய வேண்டும், கேள்விகள் கேட்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு பின்னர் மற்றதையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  அதே போல, கேள்விகள் கேட்கும் முன் கட்டுரையையும், அதில் வந்துள்ள கருத்துகளையும், அதற்கு கொடுக்கப்பட்ட பதில்களையும், Link களையும் படித்து இருந்தால், இந்தக் கேள்விக்கான அவசியமே இருக்காது.

 20. இந்து மதத்தை விமர்சித்தால் துடிக்கிறது என்றால் அதன் மூலம் ஆதாயம் அடைபவர் இருக்க வேண்டும். இல்லை அதை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும். நானும் இறை பக்தி கொண்டவன் தான். கோவில் செல்போன் தான்.

  இந்து மதம் வாழ்வியல் என்பதை நான் நம்பவில்லை. இங்கே ஒவ்வொரு சாதிக்கும், ஒரே சாதியில் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு வாழ்வியல் இருக்கிறது. பார்த்து பழகுதல் மூலம் உயர்சாதி சில வழக்கங்கள் எல்லா மக்களிடமும் ஊடுறுவியிருக்கிறது. உதாரணம் இப்போது மேல் நடுத் தட்டு மக்களின் ஆடம்பரங்களை போல்.

  அதை வைத்து இது ஒரு வாழ்வியல் என சொல்ல முடியாது. இதை போன்ற வாழ்வியல் அண்டை நாடுகளிலும் காணலாம். உடனே சங்கிகளின் அகண்ட பாரதத்தை தூக்கிட்டு வராதீர்கள்.

  வாழ்வியல் தான் முக்கியம் என்றால் கிட்டத்தட்ட இதே வாழ்வியல் பிற மதத்தவரையும் ஏற்கலாம் அல்லவா.

  கடவுள் துவேஷம் செய்கிறார்கள் என்று கோவப்படுகிறீர்கள். கடவுள் பற்றிய கதைகளில் எங்களுக்கு இருக்கும் விமர்சனங்களை வைக்கிறோம். என் கடவுள் என போற்றி பட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதை உரிமை எனக்கு என் கடவுளை பற்றி கூறியுள்ள கதை பற்றி கேட்க எங்களுக்கு உரிமை உண்டு நானும் நீங்கள் சொல்கிற இந்து தான்.

  எனக்கு ஒன்று புரியவில்லை. மத பெரியவர்கள் என்ற பெயரில் யார் எது சொன்னாலும் கேட்டு கொள்கிறீர்கள். பிராமணர் உயர்ந்தவர். சூத்திரன் படிக்க கூடாது. பெண்கள் வெளிய போக கூடாது எது சொன்னாலும் கேட்டுட்டு சும்மா இருக்கீங்க. அதே பெரியாரீஸ்ட் பேசினா உங்களுக்கு கோவம் வருது.

  நீங்க சொன்ன யூ டியூபர் அந்த வீடியோ வில் அந்த கதை எந்த புத்தகத்தில் உள்ளது யார் எழுதியுள்ளார் என தெளிவாக கூறியுள்ளார். எய்தவன் விட்டு விட்டு அம்பை குறை கூறுகிறீர்கள். நுபுல் சர்மாவோடு இதை ஒப்பிடுவது அபத்தம். ஏனென்றால் சட்டப்படி யூடியூபரும் இந்து தான். அவர் மதத்தை பற்றி அவர் விமர்சிக்கிறார். நுபுல் சர்மா இன்னோரு மதத்தை விமர்சிக்கிறார், இது மத துவேஷம். ஆனால் இதற்கு நீங்கள் முட்டு கொடுத்து யூடியூபரை கைது செய்ய சொல்கிறீர்கள்.

  இன்றும் கூட மத பேச்சாளர்கள் பலர் பிற்போக்கான பல கருத்துக்களை கூறிக்கொண்டு தான் இருக்கிறார்கள். உண்மையிலேயே இந்து மதத்திற்கு துடிக்கிறவர் என்றால் அவர்களை கண்டியுங்கள்.

  மனு சாஸ்திரம் பல உச்ச நீதிமன்ற தீர்ப்பு களில் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது. சமீபத்தில் பில்கிஸ் பானு வழக்கில் உயர் சாதி சேர்ந்தவர்கள் தவறு செய்யமாட்டார்கள் என முன் விடுதலை செய்யப்பட்டார்கள். இது மனு சாஸ்திரம் இல்லையா தகவலுக்காக சொல்கிறேன் விசாரணை கைதிகளாக பல வருடங்களாக சிறையில் இருப்பவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள், தலித் மற்றும் பழங்குடியினர்.

  இன்றும் பல ஆன்மீகவாதிகளும் பிஜேபி காரர்களும் மனு சாஸ்திரம் சட்டமாக ஆக வேண்டும் என பேசவில்லை யா? ஏன் சங்கர் கூட அந்நியன் படத்தில் மனு சட்டம் வந்தால் குற்றம் ஒழிந்து விடும் என சொல்லவில்லையா? முதலில் நீங்கள் உங்கள் பக்கத்தில் இருப்பவரிடம் கேள்வி கேளுங்கள். ஏன் மனுவை பற்றி பேசுகிறீர்கள் சாதி பற்றி பேசுகிறீர்கள். அதெல்லாம் பழசு. என்று

  பின்குறிப்பு திராவிடர் கழகம் எந்த மனு சாஸ்திரத்தை யும் மொழி பெயர்க்க வில்லை. விரமணியோ பெரியாரோ அதை மொழி பெயர்க்க வில்லை. திராவிட கழகம் புத்தகம் 1919 ஆண்டு வெளிவந்த மனு ஸ்மிருதி ஸ்கேன் பிரதி. அதில் காம புள்ளி கூட மற்றவில்லை, கூடுதலாக அந்த பற்றி ஒரு கட்டுரை வீரமணி எழுதி இருப்பார். திக மனுவை மொழி பெயர்க்க வில்லை

  படிக்காத புக்காக இருந்தாலும் சரி, ஆன்மீகவாதியோட புத்தகம இருந்தாலும் சரி பெரியாரீஸ்ட் பேசிட்டா எதிர்ப்போம். பட்டை இல்லை நாமம் போட்டு என்ன பேசினாலும் கண்டுக்க மாட்டோம். என்னா பெரியாரீஸ்ட் திமுகவினர் கிறித்தவ கை கூலிகள். அவர்களால் இந்து மதத்திற்கு ஆபத்து.

  நான் இந்து எந்த திக திமுக காரனும் என் சாமிக்கு ஆடு வெட்டாத மாடு வெட்டாத னு சொன்னதில்லை. சில இந்துக்கள் சொல்கிறார்கள்.

  நீங்க இந்து ன்னா அப்ப நாங்க யாரு?…..

 21. இந்து மத காவலரே வணக்கம்,

  சட்டத்தின் படி நானும் இந்து என்பது மட்டுமின்றி, என் குல தெய்வ வழிபாட்டில் ஈடுபாடும் கொண்டவன் என்பதை இங்கே முதலில் கூறிவிடுகிறேன்.

  //இவர்களுக்கு இந்து மதத்தின் மீது காண்டு, அதற்கு எவரும் கண்டுகொள்ளாத புத்தகத்தை வைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.//
  காண்டு கொள்வதற்கு நாங்கள் என்ன மாற்று மதத்துக்காரர்களா? உங்களுக்கு இந்த மதத்தில் உள்ள் பெருமைகளை கண்டு சிலிர்க்கும் போது, எங்களுக்கு எங்கள் மதத்தில் இருக்கும் சிறுமையை விமர்சிக்க உரிமை இல்லையா?

  இந்துகளை பற்றி வேறு மதத்துக்காரர்கள் பேசினால் தவறு. மத துவேசம். பிஜேபி காரர்களும், ஆர் எஸ் எஸ் பிரமுகர்களும், கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதத்தை பற்றி பேசிகிறார்கள், அல்லவா? அது தான் சர்ச்சைக்குரிய கருத்து. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

  யூ டியூபர் ஒரு புத்தகத்தில் இப்படி எழுதி இருப்பதாக சொன்னார். இருந்தும் அவரை கைது செய்ய வேண்டுமென கேட்கும் உங்களில் ஒருவர் கூட அந்த புத்தகத்தை பற்றியோ, அதை எழுதியவர் பற்றியோ பேச மறுக்கிறீர்களே, எப்படி? அவர் ஆன்மிகவாதி என்பதாலா?

  சரி, ராசா புத்தகத்தில் உள்ளதை தானே பேசினார். நீங்களே சொல்கிறீர்கள், அது பழைய புத்தகம் அதில் உள்ள கருத்துகள் பழையவை, தற்காலத்திற்கு ஏற்புடையதல்ல.. யாரும் பின்பற்றவில்லை என்று.

  அப்போ முதல் பத்தியில் உள்ள உங்கள் வரி சரியா? //இந்துக்கள் பிறப்பு முதல் இறப்பு வரை வாழ்க்கையில் பின்பற்றவேண்டிய சடங்குகள், வழக்கங்கள், அறம், ஒழுக்க விதிமுறைகளைக் கூறும் நூலே மனுதர்ம சாஸ்திரம் ஆகும்.// அப்போ இந்த புத்தகத்தில் உள்ளதை பின்பற்றாத நான் இந்துவா இல்லையா?

  புழக்கத்தில் இல்லாத, யாரும் கண்டுகொள்ளாதை ஒன்றை பற்றி பேசியதற்கு இவ்வளவு மெனக்கெட்டு கட்டுரை எழுதுகிறீர்கள்… நீங்கள் அதை கண்டுகொள்ளாமல் நகர்ந்திருக்கலாம் அல்லவா? ம்ம்ம்ம்.. கண்டுகொள்ளாததை பற்றி பேசினால், நீங்கள் அதை கண்டுகொள்வீர்கள்…

  பெரியார் சொல் வேதவாக்கு அல்ல. உங்கள் மதப்புத்தகம் போல… நான் சொன்னாலும் உனக்கு எது சரியென படுகிறதோ அதையே செய் என்றவர் தான் அவர்.
  பெரியாரிடமும் எங்களுக்கு சில முரண்கள் இருக்கும். அந்த முரண்களை கடந்து தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம்… ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவருடன் 100% ஒத்துக்கொண்டு, வழிபாடு செய்ய வேண்டுமென அவசியம் இல்லை.

  //‘நான் பேசியது தவறல்ல, மன்னிப்புக் கேட்கமாட்டேன்‘ என்று ராசா கூறியுள்ளார்.//
  அவர் என்ன பேசினார்? “ நான் மன்னிப்பு கேட்க தயார். எதுக்கு மன்னிப்பு கேட்கனும்ன்னு சொல்லுங்க” என்று தெளிவாக சொல்லிவிட்டார். நீங்க சொல்லுங்க, அவர் செய்த தவறு என்ன? மனு தர்மத்தில் சொல்லாத ஒன்றை சொல்லிவிட்டாரா? நீங்களே அதை ஒத்துக்கொள்ளவில்லை.. பிறகு எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்..
  நடைமுறையில் இல்லாத புத்தகத்தை பற்றி பேசிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா? எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லுங்கள்.

  //திருமாவை தூக்கத்திலிருந்து எழுப்பினால், எழும் போதே ‘சனாதனத்தை வேரறுப்போம்‘ன்னு தான் எழுந்திருப்பாருன்னு நினைக்கிறேன்.
  எந்த மேடையில் பேசினாலும் சனாதனத்தை வேரறுப்போம்ன்னு இல்லாத ஒன்றை, யாரும் பின்பற்றாத ஒன்றை வைத்துப் பேசிட்டு இருப்பாரு.//

  இல்லாத ஒன்றை பற்றி பேசினால், ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம் வருகிறது, என புரியவில்லை.

  ஆம், அப்படி இருந்தது, தவறு தான், நாங்கள் எங்கள் மதவிதிகளை திருத்திவிட்டோம் என தைரியமாக சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியது தானே.. அப்படி எந்த புத்தகத்தை திருத்துவீங்க.. யாரு திருத்துவீங்க.. யாரு ஒப்புதல் கொடுப்பாங்க.. எந்த மத அமைப்பு இருக்கிறது?

  //இந்து என ஆங்கிலேயன் பெயர் சூட்டினாலும் அதற்கு முன்பும் அதே மதம் தான். அப்போது பெயரில்லை காரணம், அதற்கான தேவையில்லை. வேறு மதங்கள் வரும் போது இதற்கு பெயர் தேவைப்பட்டது அவ்வளவே. அனைவரும் சமம் என்று நினைப்பதில் எந்த தவறுமில்லை.//

  சைவ மதம் வைணவ மதம் அவர்களுக்குள் நடந்த சண்டை, சமணர்கள் கழுவேற்றம் இதை எல்லாம் கேள்விபட்டதில்லையா? அனைவரும் சமம் என சொல்லாதது தான் பிரச்சனை. கிறித்தவ நாடுகளில் கறுப்பின பிரச்சனை இருந்தாலும், கறுப்பினத்தவர்கள் சமமானவர்கள் இல்லை என எந்த மத நூலும் போதிக்கவில்லை.

  என்னது இந்து மதம் ஒரு மதம் இல்லை, வாழ்வியல் முறையா? சரி. என்ன அந்த வாழ்வியல் முறை.. எனக்கு தெரிந்து சாதி சார்ந்த சடங்குகள், வழிபாட்டுமுறைகள் தான் இருக்கு. அதுவும் கூட இடத்துக்கு இடம் மாறுபாடு கொண்டது.. நீங்கள் சொல்வது.. எல்லாம் பார்த்துபழகுதல் போல சில பண்பாடுகள் உயர்சாதியினரிடம் இருந்து பழகி பின்பற்றி இருக்க கூடும்… அதை வைத்து இது வாழ்வியல் மதம் என்றால் என்ன சொல்வது என தெரியவில்லை.

  உண்மையிலேயே தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வாழ்வியல் முறை இந்து மதம் போதித்தது என்பது புரியவில்லை. புரிந்து கொண்ட நீங்கள் விளக்கினால் நல்லது. அதை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சொல்லுங்கள்.. எந்த புத்தகத்தில் படிக்கலாம் என்று சொல்லுங்கள். ஆனால் அந்த புத்தகம் அனைத்து இந்துக்களும் ஏற்றுக்கொண்ட புத்தகமாக இருக்க வேண்டும். இட்டுகட்டுவது போல இருக்க கூடாது.(சாதி சரி என்றும் தவறு என்றும் பலர் பல கருத்து கூறுவது போல.) உனக்கு பிடிச்சதை நீ எடுத்துக்கோ என்றால் எனக்கு பிடிக்காததை நான் சொல்லும் போது கோபம் கொள்ள கூடாது. இந்துக்களாகிய நாங்கள் எங்கள் இந்து மதத்தை பற்றியும் அதன் வாழ்வியல் முறை பற்றியும் தெரிந்துகொண்டு சுரணையுடன் எதிர்ப்போம்..

  //திமுக நீட், எட்டுவழிச்சாலை பிரச்சனைகளில் நிலை மாறிவிட்டது// தேர்தல் அப்ப இதெல்லாம் ஒரு பிரச்சனையா? எங்க கடவுள் பெருமாளை திட்டிவிட்டார்கள், முருகனை திட்டிவிட்டார்கள் அவர்களுக்கு என் ஓட்டு இல்லை என்றீர்கள். இப்போது தான் இது எல்லாம் ஒரு பிரச்சனை என்று ரோசமுள்ள இந்துக்கு உரைக்கிறதா?

  இந்து மதத்தில் சாதி உண்டு, தீண்டாமை உண்டு. அது தவறு என நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் பிராமணரை திட்டாதீர்கள் என்கிறீர்கள். ஆதிக்க சாதினரிடம் போய் நீங்கள் திண்டாமை குறித்து பேசினால், அவருக்கு மேல் நிலையில் இருக்கும் பிராமணரை தான் கை காட்டுவார். ஏனென்றால், சாதிய அடுக்கு முறையை பயிற்றுவித்தது பிராமணியம் தான். உச்சமும் மூலமும் பிராமணர்கள் என்பதால் தானே தவிர எளிய இலக்கு என்பது அல்ல.

  அவர்கள் அப்படி இன்னல்க்கு ஆளானால், ஜெர்மானியர்களை போல தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு சாதியை முறை தவறு என்றும், யாரும் யாருக்கும் மேல் இல்லை என்று சொல்லியிருப்பார்கள். இன்றும் வெகு சிலர் சாதி சரி, ஆனால் அடுக்கு நிலை தவறு என்கிறார்கள்.. பெரும்பாலனோர், பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மூளை வலிமை மிக்கவர்கள் என்ற மனநிலையில் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

  எல்லோரும் இந்து, சமம் ஆதலால் ஆகமம் பயின்று அர்ச்சகர் ஆகலாம் என்றால் கோவம் கொண்டு இந்து மதத்தை அழிக்க பார்ப்பதாக புலம்புவார்கள். இடைநிலை சாதி மக்களை ஆண்ட பரம்பரை என பெருமை பேச வைத்து சாதிய கட்டமைப்பு களையாமல் பார்த்துக்கொள்கிறார்கள். இடைநிலை சாதி இந்துகளும் சுரணையற்று இந்து என கூறிக்கொண்டு பிராமணர்களின் கீழ் வாழ பழகிவிட்டார்கள். அவர்களின் சுரணை, தனக்கு கீழ் உள்ள மக்களிடம் மட்டும் தான்.

  இடை நிலை சாதி மக்களுக்கு இதை புரிய வைக்க பிராமணர்களுக்கு புனிதமான நூலில் உங்களை எப்படி இழிவு செய்து வைத்துள்ளார்கள் பாருங்கள். என்றால், அதே இடைநிலை சாதி மக்களை வைத்து இந்து மதத்தை அசிங்க படித்திவிட்டார்கள் என கதை கட்டுகிறார்கள். பிறகு சாதியை எப்படி ஒழிப்பது.

  இந்த மத பேச்சாளர்களும், ஆர். எஸ். எஸ் பிரமுகர்களும் இந்து மதத்தின் பிற்போக்கான கருத்துகளை கூறும் போது அதை எதிர்த்து நீங்கள் பேச மாட்டீர்கள். கேட்டால் அவர் என்ன இந்து மதத்தின் அத்தாரிட்டியா என கேட்பீர்கள். உங்களுக்கு அப்போது எல்லாம் ரோசம் வராது. எனென்றால் பேசுபவர் பட்டையோ நாமமோ போட்டிருப்பார்.

  அதுவே பெரியாரிஸ்ட்களோ திமுகவினரோ ஏதாவது பேசிவிட்டால், உடனே இந்து மதத்தை தாக்கிவிட்டார், இந்து மக்களே உணர்ச்சியில்லையா என கேட்க வேண்டியது?

  நீங்கள் நடத்துங்கள் கிரி.

  பிகு: நீங்கள் திமுகவினரின் சாதிய நடவடிக்கைகளை பின்னூட்டத்தில் கேள்வி கேட்டிருக்கிறீர்கள், அதை நீங்கள் ஆ ராசா பேச்சுக்கு எதிர்வினையாக பதிவிட்டிருக்கலாம். நீங்கள் திமுகவினரை கேள்வி கேட்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நீங்கள் என் மதத்தை கேள்வி கேட்காதே, என் மதத்தின் புனிதத்தை கெடுக்காதே, என்கிறீர்கள். கேள்வி கேட்காமல் இங்கே எதையும் மாற்ற முடியாது.

 22. @கணேஷ் & Ganesh KN உங்கள் கருத்துகளை வைத்துப்பார்க்கும்போது இத்தளத்துக்கு நீங்கள் புதியவராக இருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு தேவையான கட்டுரைகளை மட்டும் படிப்பவராக இருக்க வேண்டும்.

  புதியவர் என்றால், நண்பர் அப்துல்லா கூறியதை இங்க கூற விரும்புகிறேன்.

  “பொதுவில் வந்துவிட்ட எவரையும் விமர்சிக்க நமக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில் நம்மால் விமர்சிக்கப்படும் நபரைப் பற்றி விமர்சிக்கும் முன் முழுமையாக அறிந்து கொள்ளும் கடமையும் நமக்குண்டு.”

  இதைக்கூற காரணம், உங்களின் பல கருத்துகள் நான் கூறாதது, என் எண்ணங்களுக்கு எதிரானது.

 23. @கணேஷ்

  “இந்து மதத்தை விமர்சித்தால் துடிக்கிறது என்றால் அதன் மூலம் ஆதாயம் அடைபவர் இருக்க வேண்டும். இல்லை அதை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்க வேண்டும்.”

  பற்றாளனாகவும் இருக்கலாம். நான் இந்து மத பற்றாளன்.

  “நானும் இறை பக்தி கொண்டவன் தான். கோவில் செல்போன் தான்.”

  நல்லது.

  “இந்து மதம் வாழ்வியல் என்பதை நான் நம்பவில்லை.”

  அது உங்கள் விருப்பம். நம்ப வேண்டும் என்று நான் எங்கும் கூறவில்லை.

  “இங்கே ஒவ்வொரு சாதிக்கும், ஒரே சாதியில் வெவ்வேறு பகுதியில் வெவ்வேறு வாழ்வியல் இருக்கிறது. பார்த்து பழகுதல் மூலம் உயர்சாதி சில வழக்கங்கள் எல்லா மக்களிடமும் ஊடுறுவியிருக்கிறது. உதாரணம் இப்போது மேல் நடுத் தட்டு மக்களின் ஆடம்பரங்களை போல்.”

  நான் மறுக்கவில்லையே!

  “அதை வைத்து இது ஒரு வாழ்வியல் என சொல்ல முடியாது.”

  அதை வைத்து நான் சொன்னதாக யார் உங்களிடம் கூறியது? வாழ்வியல் முறை பற்றிய உங்கள் அடிப்படை புரிதலே தவறாக உள்ளது.

  “இதை போன்ற வாழ்வியல் அண்டை நாடுகளிலும் காணலாம். உடனே சங்கிகளின் அகண்ட பாரதத்தை தூக்கிட்டு வராதீர்கள்.”

  இருக்கட்டும், நான் எதுவும் கூறவில்லையே. அகண்ட பாரதத்தை தூக்கிட்டு வருவதா உங்களுக்கு ஏன் வீண் கற்பனை?

  “வாழ்வியல் தான் முக்கியம் என்றால் கிட்டத்தட்ட இதே வாழ்வியல் பிற மதத்தவரையும் ஏற்கலாம் அல்லவா.”

  புரியவில்லை.

  “கடவுள் துவேஷம் செய்கிறார்கள் என்று கோவப்படுகிறீர்கள். கடவுள் பற்றிய கதைகளில் எங்களுக்கு இருக்கும் விமர்சனங்களை வைக்கிறோம்”

  விமர்சனங்கள் வேறு ஆபாசமாக பேசுவது வேறு.

  “என் கடவுள் என போற்றி பட உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதை உரிமை எனக்கு என் கடவுளை பற்றி கூறியுள்ள கதை பற்றி கேட்க எங்களுக்கு உரிமை உண்டு நானும் நீங்கள் சொல்கிற இந்து தான்.”

  தாராளமாக கேளுங்க.. நான் கேட்க வேண்டாம் என்று கூறவில்லையே.

  உங்களை இப்படி கேட்க இந்து மதம் சுதந்திரம் / உரிமை அளித்துள்ளது. இது தான் இந்து மதத்தின் சிறப்பு.

  இதே விமர்சனத்தை மற்ற மதங்களில் எதிர்பார்த்தால் என்ன ஆகும் என்பதையும் யோசித்துக்கொள்ளுங்கள்.

  “மத பெரியவர்கள் என்ற பெயரில் யார் எது சொன்னாலும் கேட்டு கொள்கிறீர்கள். பிராமணர் உயர்ந்தவர். சூத்திரன் படிக்க கூடாது. பெண்கள் வெளிய போக கூடாது எது சொன்னாலும் கேட்டுட்டு சும்மா இருக்கீங்க. அதே பெரியாரீஸ்ட் பேசினா உங்களுக்கு கோவம் வருது.”

  தவறாக யார் கூறினாலும் தவறு தான். மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. என் நிலை இது தான்.

  மற்றவர்கள் கூறுவதை வைத்து என்னைக் கேள்வி கேட்க வேண்டாம். நான் கூறுவதற்கு மட்டுமே நான் பொறுப்பு.

  “நீங்க சொன்ன யூ டியூபர் அந்த வீடியோ வில் அந்த கதை எந்த புத்தகத்தில் உள்ளது யார் எழுதியுள்ளார் என தெளிவாக கூறியுள்ளார்.”

  தயவு செய்து இவனெல்லாம் ஒரு ஆளுன்னு என்கிட்டே கேள்வி கேட்காதீங்க. கடுப்புல இருக்கேன்.

  “மனு சாஸ்திரம் பல உச்ச நீதிமன்ற தீர்ப்பு களில் மேற்க்கோள் காட்டப்பட்டுள்ளது.”

  இருக்கலாம் ஆனால், அவர்கள் தவறான ஒன்றை மேற்கோள் காட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

  நல்லதை யார் கூறினாலும் எடுத்துக்கொள்ளலாம்.

  “இன்றும் பல ஆன்மீகவாதிகளும் பிஜேபி காரர்களும் மனு சாஸ்திரம் சட்டமாக ஆக வேண்டும் என பேசவில்லை யா? ஏன் சங்கர் கூட அந்நியன் படத்தில் மனு சட்டம் வந்தால் குற்றம் ஒழிந்து விடும் என சொல்லவில்லையா? ”

  தயவு செய்து அடுத்தவர் சொன்னதை எல்லாம் என்னிடம் கேட்காதீர்கள். நான் சொன்னதில் என்ன தவறோ அதை மட்டும் கேளுங்கள்.

  யார் வேண்டும் என்றால் எதையும் பேசலாம், நடைமுறையில் சாத்தியமா என்பதையும் யோசியுங்கள்.

  “திராவிடர் கழகம் எந்த மனு சாஸ்திரத்தை யும் மொழி பெயர்க்க வில்லை. விரமணியோ பெரியாரோ அதை மொழி பெயர்க்க வில்லை. திராவிட கழகம் புத்தகம் 1919 ஆண்டு வெளிவந்த மனு ஸ்மிருதி ஸ்கேன் பிரதி. அதில் காம புள்ளி கூட மற்றவில்லை, கூடுதலாக அந்த பற்றி ஒரு கட்டுரை வீரமணி எழுதி இருப்பார். திக மனுவை மொழி பெயர்க்க வில்லை”

  நல்லது.

  “படிக்காத புக்காக இருந்தாலும் சரி, ஆன்மீகவாதியோட புத்தகம இருந்தாலும் சரி பெரியாரீஸ்ட் பேசிட்டா எதிர்ப்போம்.”

  கண்டிப்பாக எதிர்ப்பேன். ஏனென்றால், அவர்கள் விமர்சனம் என்ற பெயரில் இழிவுபடுத்துகிறார்கள், ஆபாசமாக நடந்து கொள்கிறார்கள்.

  நீங்கள் நாகரீகமா கேள்வி கேட்டதால், விவாதம் செய்வதால் நானும் சரியாக பதிலளிக்கிறேன்.

  அதே நீங்கள் எதிர்கருத்து என்பதால், அநாகரீகமா கருத்து தெரிவித்து இருந்தால், என்னிடமிருந்து இது போல விளக்கமான பதில் வந்து இருக்காது.

  இது தான் விமர்சனத்துக்கும், இழிவுபடுத்துவதற்கும் உள்ள வித்யாசம்.

  நீங்கள் இக்கட்டுரைக்கு செய்வது விமர்சனம். ராசா, பெரியாரிஸ்ட் செய்வது விமர்சனம் அல்ல, இழிவுபடுத்துவது.

  பெரியாரிஸ்ட் என்பவர் அனைத்து மதங்களில் உள்ள குறைகளை விமர்சிக்க வேண்டும், இந்துமதத்தை மட்டுமே அல்ல.

  இல்லையென்றால், இந்து மதத்துக்கெதிரான பெரியாரிஸ்ட் என்று (மட்டும்) கூறி கொள்ளுங்கள்.

  பகுத்தறிவாளர் என்ற பெயரை எடுத்து விட்டு இந்துமதத்துக்கு எதிரான பகுத்தறிவாளர்ன்னு மாற்றிக்கொள்ளட்டும்.

  பகுத்தறிவு உள்ளவன் அனைத்து இடங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகளை, மூடத்தனங்களை எதிர்ப்பவன். இவர்கள் அவ்வாறு நடந்துகொள்வதில்லை.

  அப்புறம் என்ன பகுத்தறிவாளர்?!

  “என்னா பெரியாரீஸ்ட் திமுகவினர் கிறித்தவ கை கூலிகள். அவர்களால் இந்து மதத்திற்கு ஆபத்து.”

  அவர்களால் இந்து மதத்துக்கு ஆபத்தா?! திமுக கண்டு கொள்ளவில்லையென்றால் இவர்களைக் கேட்க நாதி இருக்காது.

  இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது அதற்காக இழிவுபடுத்தும் போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.

  இவர்கள் கொள்கை எல்லாம் அடுத்தவனுக்கு தான் இவர்களுக்கு, இவர்கள் குடும்பத்தினருக்கு இல்லை.

  உங்களுக்கு இந்து மதத்தை இழிவுபடுத்தினால் மகிழ்ச்சியாக இருக்கலாம் அல்லது கோபம், ரோஷம் வராமல் இருக்கலாம் ஆனால், எனக்கு அப்படியல்ல.

  “நான் இந்து எந்த திக திமுக காரனும் என் சாமிக்கு ஆடு வெட்டாத மாடு வெட்டாத னு சொன்னதில்லை. சில இந்துக்கள் சொல்கிறார்கள்.”

  ஆமாம். அவரவர் நம்பிக்கையில் கூறுகிறார்கள். எடுத்துக்கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம்.

  “நீங்க இந்து ன்னா அப்ப நாங்க யாரு?…..”

  நீங்க கூறுவதை வைத்துப்பார்த்தால் இந்து தான். வேறு எதுவும் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது, நீங்கள் தான் கூற வேண்டும்.

 24. @Ganesh KN

  “இந்து மத காவலரே வணக்கம்,”

  இந்துமதக்காவலர் என்று யாரும் கிடையாது. இந்துமதத்துக்கு தலைவர் என்றும் யாரும் கிடையாது.

  “காண்டு கொள்வதற்கு நாங்கள் என்ன மாற்று மதத்துக்காரர்களா?”

  மாற்று மதத்தவர்கள் மட்டும் தான் காண்டாவார்கள் என்று யார் கூறியது?

  “உங்களுக்கு இந்த மதத்தில் உள்ள் பெருமைகளை கண்டு சிலிர்க்கும் போது, எங்களுக்கு எங்கள் மதத்தில் இருக்கும் சிறுமையை விமர்சிக்க உரிமை இல்லையா?”

  சரியான வார்த்தை. விமர்சிக்க உரிமையுண்டு ஆனால், ஆபாசமாக விமர்சித்து சிலிர்த்துக்கொண்டால் அதற்குண்டான எதிர்வினை இருக்கும்.

  “இந்துகளை பற்றி வேறு மதத்துக்காரர்கள் பேசினால் தவறு. மத துவேசம். பிஜேபி காரர்களும், ஆர் எஸ் எஸ் பிரமுகர்களும், கிறிஸ்த்தவ, இஸ்லாமிய மதத்தை பற்றி பேசிகிறார்கள், அல்லவா? அது தான் சர்ச்சைக்குரிய கருத்து. கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.”

  இதையெல்லாம் எந்த புரிதலில் கூறுகிறீர்கள் என்றே புரியவில்லை.

  அனைத்து மதங்களிலும் ஆபாசமாக, சர்ச்சையாக பேசுகிறவர்கள் இருக்கிறார்கள் இதில் பாஜக,ஆர் எஸ் எஸ் பற்றி குறிப்பிடுவது தான் உள்நோக்கம்.

  தவறு யார் செய்தாலும் தவறு தான்.

  அனைத்து மத நபர்களிலும் இது நடக்கிறது. ட்விட்டர் எல்லாம் பார்க்கிறது இல்லையா நீங்க?

  இல்ல உங்கள் கண்களுக்கு ஆர் எஸ் எஸ் , பாஜக மட்டும் தெரிகிறதா?

  “யூ டியூபர் ஒரு புத்தகத்தில் இப்படி எழுதி இருப்பதாக சொன்னார். இருந்தும் அவரை கைது செய்ய வேண்டுமென கேட்கும் உங்களில் ஒருவர் கூட அந்த புத்தகத்தை பற்றியோ, அதை எழுதியவர் பற்றியோ பேச மறுக்கிறீர்களே, எப்படி? அவர் ஆன்மிகவாதி என்பதாலா?”

  ஏற்கனவே கூறி விட்டேன். யார் செய்தாலும் தவறு தான்.

  “அப்போ இந்த புத்தகத்தில் உள்ளதை பின்பற்றாத நான் இந்துவா இல்லையா?”

  இப்புத்தகத்தை யாரும் (சராசரி இந்து) தற்போது தங்கள் தின வாழ்க்கையில் பின்பற்றுவதில்லை. நானும் பின்பற்றுவதில்லை.

  என்னமோ நான் வரிக்கு வரி பின்பற்றிச் செயல்படுத்திட்டு இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க?!

  “புழக்கத்தில் இல்லாத, யாரும் கண்டுகொள்ளாதை ஒன்றை பற்றி பேசியதற்கு இவ்வளவு மெனக்கெட்டு கட்டுரை எழுதுகிறீர்கள்”

  இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் கட்டுரை அளவுக்கு பதிலளிக்க நினைக்கும் போது நான் மெனக்கெட்டு ஒரு கட்டுரை எழுத கூடாதா?

  “பெரியாரிடமும் எங்களுக்கு சில முரண்கள் இருக்கும். அந்த முரண்களை கடந்து தான் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம்”

  சரியா சொன்னீங்க. நேரா விஷயத்துக்கு வந்துட்டீங்க.

  இதைத்தான் நானும் சொல்லிட்டு இருக்கேன்.

  இப்ப பாருங்க.. உங்களுக்குனு வரும் போது இந்த எடுத்துக்காட்டு தோன்றுகிறது ஆனால், அதே எனக்குன்னு வரும் போது தோன்றவில்லை பார்த்தீர்களா?!

  இதே தான் மனுசாஸ்திரத்துக்கும்.

  மனுசாஸ்திரம் என்றில்லை எந்த நூலாக இருந்தாலும் இதே தான். தேவையானதை எடுத்துக்கொண்டு தேவையற்றதை புறக்கணிக்க வேண்டும்.

  “ஒருவரை தலைவராக ஏற்றுக்கொண்டால், அவருடன் 100% ஒத்துக்கொண்டு, வழிபாடு செய்ய வேண்டுமென அவசியம் இல்லை.”

  பிரச்சனை முடிந்தது. அதே தான் அனைத்து விஷயங்களுக்கும்.

  உங்க பெரியார் பற்றி கூறி இருக்கிறேன் அதில் இறுதியில் என்ன கூறியுள்ளேன் என்று போய்ப் பாருங்க. https://www.giriblog.com/periyar-book-review/

  “நடைமுறையில் இல்லாத புத்தகத்தை பற்றி பேசிவிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா? எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் சொல்லுங்கள்.”

  ராசா இருக்கும் திமுகவை, திமுக தலைவர்களை படுகேவலமாக இதே பெரியார் பேசியுள்ளார்.

  இதையே ஒவ்வொருவரும் மேடை போட்டுப் பேசினால் திமுகவினர் அமைதியாக இருப்பார்களா?!

  பெரியார் சொன்னது தானே!? அவர் சொல்லாததையா பேசப்போகிறார்கள்?!

  சொல்லுங்க.. முடியாதுல்ல. அதே தான் மற்றதுக்கும்.

  கடவுளை நம்புவான் முட்டாள் என்று பெரியார் கூறியதை கோவில் முன்பு எழுதி வைத்ததை போல திமுக, கம்யூனிஸ்ட் பற்றி பெரியார் கூறியதை அவர்கள் கட்சி அலுவலகம் முன்பு எழுதி வைத்தால் ஏற்றுக்கொள்வார்களா?

  பெரியார் கூறியது தானே! அதற்கு இனிக்கிறது. இதற்கு கசக்கிறது.

  அண்ணா பற்றிப் பாரதிதாசனோ யாரோ சொன்னதை மேற்கொள் காட்டியதுக்கே திமுக அரசு கைது செய்தார்களே! இது மட்டும் நியாயமா?!

  சில விஷயங்களை அப்படியே விடுவது தான் நல்லது. கிளறினால் அதற்கான எதிர்விளைவுகளும் இருக்கவே செய்யும், ராசாக்கு கிடைத்தது போல.

  “இல்லாத ஒன்றை பற்றி பேசினால், ஏன் உங்களுக்கு இவ்வளவு கோவம் வருகிறது, என புரியவில்லை.”

  அதை கூறுவதற்கு மட்டுமே கோபம் வரவில்லை, தொடர்ச்சியாக திருமா இந்துக் கடவுள்களை இழிவுபடுத்துவதால் வரும் கோபம்.

  இதைவிட கோபம், இந்துக் கடவுள்களை இழிவுபடுத்திவிட்டு வெட்கமே இல்லாமல் அதே இந்துக் கடவுள்களை வணங்குகிறார், மரியாதையை ஏற்கிறார்.

  சிலருக்கு இந்துமதத்தை, கடவுளை எவ்வளவு கேவலப்படுத்தினாலும் சொரணையற்று இருப்பார்கள், அனைவரும் அதே போல இருப்பார்களா?!

  “ஆம், அப்படி இருந்தது, தவறு தான், நாங்கள் எங்கள் மதவிதிகளை திருத்திவிட்டோம் என தைரியமாக சொல்லிவிட்டு வேறு வேலையை பார்க்க வேண்டியது தானே.”

  உங்கள் புரிதலே தவறாக உள்ளது.

  எந்த மத விதிகள்? யார் அவற்றை பின்பற்றுகிறார்கள்? ஏதாவது சட்ட நடைமுறை உள்ளதா?

  யாரோ எழுதி வைத்து இருக்காங்க, அவ்வளோ தான். அதை திருத்தி என்ன நடக்க போகிறது?

  வாழ்க்கை எப்போதும் போலத்தான் போகப்போகிறது. இதை மாற்றுவதால் அனைத்தும் மாறி விடுமா?

  அல்லது இதை மாற்ற அனைவரும் காத்து இருக்கிறார்களா?!

  “அப்படி எந்த புத்தகத்தை திருத்துவீங்க.. யாரு திருத்துவீங்க.. யாரு ஒப்புதல் கொடுப்பாங்க.. எந்த மத அமைப்பு இருக்கிறது?”

  அதைத் தான் நானும் கேட்கிறேன். யார் எதை பின்பற்றுகிறார்கள்?

  இந்து மதத்தில் அப்படியொன்றே கிடையாது. தலைவரே கிடையாது.

  யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது. விமர்சனத்தை மட்டுமே முன் வைக்க முடியும்.

  “சைவ மதம் வைணவ மதம் அவர்களுக்குள் நடந்த சண்டை, சமணர்கள் கழுவேற்றம் இதை எல்லாம் கேள்விபட்டதில்லையா? அனைவரும் சமம் என சொல்லாதது தான் பிரச்சனை. கிறித்தவ நாடுகளில் கறுப்பின பிரச்சனை இருந்தாலும், கறுப்பினத்தவர்கள் சமமானவர்கள் இல்லை என எந்த மத நூலும் போதிக்கவில்லை.”

  அவர்கள் புத்தகத்தில் இருக்கா இல்லையா என்பது எனக்குத்தெரியாது.

  ஆனால், கிறித்துவ மதத்தில் ஏற்ற தாழ்வுகள் இல்லையா? இஸ்லாம் மதத்தில் இல்லையா? பிரிவுகள் இல்லையா?

  அனைவரும் சமம் என்று எந்த மதத்திலும் கிடையாது. அனைத்து மதங்களிலும் ஏற்ற தாழ்வுகள் 100% உண்டு.

  உங்களுக்கு இந்து மதம் மட்டும் தான் கண்களுக்கு தெரிகிறது. அதற்கு நான் என்ன செய்ய முடியும்!

 25. “என்னது இந்து மதம் ஒரு மதம் இல்லை, வாழ்வியல் முறையா? சரி. என்ன அந்த வாழ்வியல் முறை..”

  கூற நிறைய இருக்கிறது. அதில் எளிதாக புரிந்து கொள்ள சிறு எடுத்துக்காட்டு மட்டும் கூறுகிறேன்.

  இந்து மதத்தின் பண்டிகைகள் வாழ்வியலோடு இணைந்தது.

  பண்டிகைகள் மக்களின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது. அனைவரும் இணைந்து கொண்டாட வழி ஏற்படுத்துகிறது.

  கால்நடைகளுக்கு, விவசாயத்துக்கு, புத்தகத்துக்கு, ஆயுதங்களுக்கென்று பண்டிகை கொண்டாடும் நிகழ்வு எங்குள்ளது?

  இதெல்லாம் தான் வாழ்வியல் முறை.

  தீபம் அன்று அது தொடர்பான தொழிலில் உள்ளவர்கள் பயன்பெறுகிறார்கள்.

  இவை ஒவ்வொன்றும் அனைவரின் தின வாழ்க்கையில் சம்பந்தப்பட்டது.

  ஒரு பண்டிகை என்றால் ஒருவரோடு முடிந்து விடுவதில்லை. அதை நம்பி பலரும் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.

  அது தொடர்பாக பலரும் வியாபாரங்கள் மூலம் பயன்பெறுகிறார்கள்.

  எடுத்துக்காட்டுக்கு தீபாவளியை எடுத்துக்கொண்டால் பல இலட்சம் குடும்பங்கள் இதனால் பயன்பெறுகிறது.

  குறிப்பிட்ட ஒரு தரப்பினர் மட்டுமல்லாது, ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் தொடர்பு கொண்டுள்ளது.

  விநாயகர் ஊர்வலம் தற்போது செயற்கையாக மாறி விட்டாலும், அதன் நோக்கம் விநாயகர் சிலையில் உள்ள களிமண்ணை ஏரி குளங்களில் கொண்டு சேர்ப்பது.

  இதன் மூலம் நீரை வற்றாமல் பார்த்துக்கொள்வது.

  திருவிழாக்கள் குடும்பங்களிடையே பிணைப்பை ஏற்படுத்த உதவுகிறது. இது பற்றி தனிக்கட்டுரையாக நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

  “என்ன வாழ்வியல் முறை இந்து மதம் போதித்தது என்பது புரியவில்லை.”

  மேற்கூறிய சிறு எடுத்துக்காட்டு கொஞ்சம் புரிதலைக் கொடுத்து இருக்கும் என்று நம்புகிறேன்.

  “அதை எங்கு தெரிந்து கொள்ளலாம் என சொல்லுங்கள்.. ”

  அதை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அனுபவித்துக்கொண்டுள்ளீர்கள் என்பதே இந்து மதத்தின் சிறப்பு.

  அனுபவிப்பதை உணராமலே அதைத் தெரியவில்லை என்று கூறிக்கொண்டுள்ளீர்கள்.

  “இந்துக்களாகிய நாங்கள் எங்கள் இந்து மதத்தை பற்றியும் அதன் வாழ்வியல் முறை பற்றியும் தெரிந்துகொண்டு சுரணையுடன் எதிர்ப்போம்..”

  எதிர்ப்பதை தவிர வேறு எதுவும் யோசிக்க மாட்டீங்க போல!

  “இந்து மதத்தில் சாதி உண்டு, தீண்டாமை உண்டு. அது தவறு என நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். ஆனால் பிராமணரை திட்டாதீர்கள் என்கிறீர்கள்.”

  கணேஷ் களைப்பா இருக்கு.. என்னை பற்றி எதுவுமே உங்களுக்கு தெரியவில்லை.

  ஒரு கட்டுரையை படித்துட்டு இப்படி கேட்டுட்டு இருக்கீங்க.

  இன்னொருத்தர் பிராமணரை திட்டுகிறேன் என்றார், நீங்க இப்படி சொல்றீங்க.

  ஆளாளுக்கு தேவையானதை எடுத்துக்கொள்கிறீர்கள் போல.

  “பெரும்பாலனோர், பிராமணர்கள் உயர்ந்தவர்கள், மூளை வலிமை மிக்கவர்கள் என்ற மனநிலையில் தான் இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.”

  அடுத்தவர்கள் நினைப்பதற்கெல்லாம் நான் பொறுப்பாக முடியாது. என்னை பற்றி மட்டும் கேட்கவும்.

  ஆனால், மூளை வலிமை மிக்கவர்கள் என்பது உண்மை தான்.

  எனவே தான் பெரியாரிஸ்ட்கள் இவர்களையே நோண்டிக்கொண்டுள்ளார்கள், உடல்பலம் அதிகம் உள்ள தேவர், கவுண்டர் பக்கம் போகாமல்.

  பிராமணர்கள் திருப்பி அடிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்.

  எனக்கு ஒரு சந்தேகம், பிராமணர்களே இல்லையென்றால், பெரியாரிஸ்ட் வாழ்க்கையெல்லாம் என்ன ஆகும்? ஏனென்றால், இவர்களை வைத்துத் தான் இவர்கள் பிழைப்பே நடக்கிறது.

  “இடைநிலை சாதி மக்களை ஆண்ட பரம்பரை என பெருமை பேச வைத்து சாதிய கட்டமைப்பு களையாமல் பார்த்துக்கொள்கிறார்கள்.”

  உங்க பெரியாரிஸ்ட் எதனால் கவுண்டர், தேவர் பற்றி பேச மறுக்கிறார்கள்? கேள்வி கேட்க வேண்டியது தானே!

  ஏன்டா ஆண்ட பரம்பரை! எதுக்குடா இப்படி பண்ணுறீங்கன்னு வீரமில்லாத வீரமணி கேட்டுத்தான் பார்க்கட்டுமே.

  பயமா?! பிராமணர்களை கேட்கத் தெரிந்தவர்களுக்கு இவர்களைக் கேள்வி கேட்க வாய் வரவில்லையே!

  இது தான் பகுத்தறிவா?

  “இடைநிலை சாதி இந்துகளும் சுரணையற்று இந்து என கூறிக்கொண்டு பிராமணர்களின் கீழ் வாழ பழகிவிட்டார்கள்.”

  உங்களுக்கு பிராமணர்கள் மீது காண்டு அதனால் விருப்பத்துக்குப் பேசிட்டு இருக்கீங்க.

  யாரும் யார் கீழவும் வாழவில்லை. வாழ வேண்டிய அவசியமுமில்லை.

  “பிறகு சாதியை எப்படி ஒழிப்பது.”

  சாதியைப் பெரியார் ஒழித்து விட்டதா கனிமொழி சொன்னாங்க. ஒழிக்கலையா?!

  “இந்த மத பேச்சாளர்களும், ஆர். எஸ். எஸ் பிரமுகர்களும் இந்து மதத்தின் பிற்போக்கான கருத்துகளை கூறும் போது அதை எதிர்த்து நீங்கள் பேச மாட்டீர்கள்.”

  யார் கூறினாலும் தவறு தான்.

  “இந்த மத பேச்சாளர்களும், ஆர். எஸ். எஸ் பிரமுகர்களும் இந்து மதத்தின் பிற்போக்கான கருத்துகளை கூறும் போது அதை எதிர்த்து நீங்கள் பேச மாட்டீர்கள். கேட்டால் அவர் என்ன இந்து மதத்தின் அத்தாரிட்டியா என கேட்பீர்கள். உங்களுக்கு அப்போது எல்லாம் ரோசம் வராது. எனென்றால் பேசுபவர் பட்டையோ நாமமோ போட்டிருப்பார்.”

  உங்களுக்கு எப்படி ராசா கூறிய போது ரோசம் வராமல் அதற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களோ, அதே போல நான் அவர்களைப் பொருட்டாக மதிப்பதில்லை.

  விமர்சிப்பதில்லை என்பதால், அவர்கள் கூறியதை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமில்லை.

  எனக்கு தோன்றுவதற்கு தான் கட்டுரை எழுத முடியும். அனைவரும் நினைப்பதற்கெல்லாம் என்னால் கட்டுரை எழுத முடியாது.

  அப்படி எழுத நான் நடுநிலையும் கிடையாது. நான் வலதுசாரி ஆதரவாளன், இந்து பற்றாளன்.

  “அதுவே பெரியாரிஸ்ட்களோ திமுகவினரோ ஏதாவது பேசிவிட்டால், உடனே இந்து மதத்தை தாக்கிவிட்டார், இந்து மக்களே உணர்ச்சியில்லையா என கேட்க வேண்டியது?”

  கண்டிப்பா கேட்பேன். இன்னும் அதிகமாக கேட்பேன். ஏனென்றால், சொரணையற்று இருப்பவர்களை அப்படித்தான் கூற முடியும்.

  “நீங்கள் நடத்துங்கள் கிரி.”

  கண்டிப்பாக.. சரியான நேரம் கிடைக்கும் போது இவர்களை நறுக்குன்னு கேள்வி கேட்பது தான் வேலையே.

  “நீங்கள் திமுகவினரை கேள்வி கேட்பதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், நீங்கள் என் மதத்தை கேள்வி கேட்காதே, என் மதத்தின் புனிதத்தை கெடுக்காதே, என்கிறீர்கள். ”

  நான் எங்க கேள்வி கேட்க வேண்டாம்னு சொல்லி இருக்கேன்? விமர்சனத்தை நாகரீகமாக முன் வையுங்கள் என்று கூறுகிறேன், அவ்வளவே.

  “கேள்வி கேட்காமல் இங்கே எதையும் மாற்ற முடியாது.”

  சரியா சொன்னீங்க.. மேலே கார்த்தி கிட்ட கூட இதைத்தான் கூறி இருக்கிறேன். அதைப் படித்து இருந்தால், இதைக் கூறி இருக்க மாட்டீங்க.

  நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here